எந்திரன் எந்திரன் எந்திரன்
ஊரெல்லாம் ஒரே பேச்சு, இந்தப்படம் அவ்ளோ செலவு பண்ணி எடுத்த படம் அது இது என சொன்னாங்க, அவ்ளோ செலவு செஞ்சவன் சும்மா இருப்பா?னா செஞ்ச செலவ எப்படியும் கறக்க என்ன வேணா பண்ணுவான்.
எனக்கென்னமோ மனசுல ஒரு பயம் வருது, இப்பத்தான் i-Robot படம் பார்த்தேன், எந்திரன் பார்கறதுக்கு இத பாக்கலாம், இதிலும் சில லாஜிக் மீறல் இருந்தாலும் படம் முடியும்போது நம்ம பயமுறுத்தாம விடல.
ரோபோட் அதும் சிந்திக்கும் அறிவோட இருந்தா என்ன ஆகும்? i-robot படம் பாருங்க, கண்டிப்பா எனக்கு தெரிஞ்சு ஐஸ்வரியா பின்னாடி போகாது, ஆனா நம்ம ஊர் ரோபோட் போனாலும் ஆச்சரியம் படறதுக்கு இல்ல.
ஏன் ரோபோட் போகிறது? என்னிக்கு நம்ம எல்லாம் பொண்ண பார்த்து அவ பின்னாடி போகாம இருந்து இருக்கோம் ? அப்புறம் நம்ம கண்டு புடிச்சு இருக்க ரோபோட் மட்டும் போகாம இருக்கனுமா?
இப்படி பட்ட நூறு மனுஷன் அளவுக்கு திறமை இருக்க ரோபோட் கண்டிப்பா ஐஸ்வர்யாக்கு எத்தன வயசுன்னு கண்டு புடிக்காத? ரத்தத்த பார்த்த உடனே அது என்ன குரூப் நு சொல்ற ரோபோட் அந்த அம்மா ஆன்ட்டி என்று கண்டுபிடிக்க எவ்ளோ நேரம் ஆகும், கருமம் இது கூட ஆண்டி பண்டாரமா இருக்கு? நம்ம தோனி கல்யாணம் செஞ்ச பொண்ண தன்னோட பள்ளித்தோழி என்று சொன்னாரே அப்படியா? அவர்க்கு 28 வயசு அந்த பொண்ணுக்கு 21 ஆம் அப்படின்னா பண்ணண்டாவது படிக்கும்போது அஞ்சாங்கிளாஸ் படிச்ச சின்ன பொண்ண ரூட் விட்ருக்கான்.
அந்த மாதிரி இந்த ரோபோட்கூட அப்படித்தான் போல (டாபிக் விட்டு எங்கயோ போய்டேன்ல?) அத விடுங்க, ஆமா நம்ம ரோபோட் இப்படிப்பட்ட அறிவோட இருக்கும் போது ஏன் அந்த ஐஸ்வர்யா பொண்ண போய் தேடனும்? அத விட அழகா இளமையா இருக்க பொண்ண பார்த்து தேடலாம், சரி அத விடுங்க இதகேட்டா நம்மள எதாவது சொல்லி திட்டுவாங்க. காதல் தெய்வீகமானது எந்த வயசுலயும் வரும் அப்படி இப்படி சொல்வாங்க.
நானும் பார்க்கறேன் எந்திரன் பார்க்காதவன எதோ கொலை பண்ணிட்ட மாதிரி பார்க்கறாங்க? நமக்கு இப்ப திடிர்னு ஒரு பாலிசி தோணிச்சு, இத முப்பெரும் வீரர்கள் எடுக்கும் எந்த படத்தையும் திரை அரங்கில் சென்று பார்க்க கூடாது என்று. இத எப்படியோ தெரிஞ்சுகிட்ட எங்க ஊர் திரை அரங்கு உரிமையாளர்கள் என்கூட சேர்ந்துகிட்டாங்க
அட ஆமாங்க எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல, நெசமாத்தான் சொல்றேங்க எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல. எங்க ஊர் எங்க ஊர் ன்னு சொல்றியே எந்த ஊர்டான்னு கேட்கறது எனக்கும் கேட்க்குது. கரூர்ல தாங்க, விநியோகிப்பாளர்க்கும் திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் சண்டை. ஆமா பின்ன இந்த படத்துக்கு ஒன்றரைக் கோடி கேட்ட தேட்டர்காரங்க நோட்டடிச்சா கொண்டுவந்து கொடுக்க? அதுவும் நாலு திரை அரங்கில் வெளியிடனுமாம். அப்படி வெளியிட்ட போட்ட பணத்த எடுக்கு கண்டிப்பா அதிக விலைக்கு டிக்கெட் விக்கணும் அப்படி வித்தா ஆள் வராது அப்படி வந்தாலும் இடைவேளைல ஏதும் வாங்க மாட்டாங்க.இப்படி பல பிரச்சன இதனால எங்க ஊர்ல படம் ரிலீஸ் அகல.
நம்ம கேபிள் அண்ணன் இத விசாரிச்சு ஊருக்கு உண்மை என்னனு வெளியிட்ட நல்லார்க்கும். எனக்கு காத்துவாக்குல வந்த சேதி சொல்லிட்டேன் உண்மை என்னான்னு அண்ணன் சொன்னா சரிதான்.
அமெரிகால ரிலேசு ஆப்ரிக்கால ரிலீசு ஆனா நம்ம ஊர்ல இல்லியா??? அப்ப பணம் ரொம்ப இருக்கவன் மட்டும் படம் பார்த்தா போதுமா?
இன்னொரு விஷயம் பல பதிவுல பார்த்துட்டேன் நிறையப்பேர் சுஜாதாவோட கதைய சங்கர் சூப்பரா எடுத்துருக்கார், கதை சுஜாதா அப்படினு எழுதி இருந்தாங்க ஆமா எனக்கு ஒரு டவுட் படத்துலயும் கதை சங்கர்னு போட்ருந்தாங்க சுஜாதவ மறந்துட்டாங்க அது நம்ம ஊர் மனித இயல்பு ஆனா கதை சங்கர் தானா, பாத்து வருசமா உருவாகின கதை டிரீம் பிராஜக்ட் அப்படின்னு எல்லாம் சொல்லிருந்தாரே அப்ப விமர்சனம் எழுதிய பதிவர்கள் எல்லோரும் உண்மையே தெரியாம எழுதிடாங்களா? இல்ல உண்மைய மறைச்சு எழுதிட்டாங்களா? எனக்கு தெரியல ஆனா இப்படி எழுதிய பதிவர்கள் விமர்சனம் எந்த அளவுக்கு தரமானதா இருக்கும் ??
இந்த கதை சுஜாதாவோட கதையா இருந்தா கண்டிப்பா கத இப்படி இருந்து இருக்காது, பத்து வருஷம் முன்னாடியே இப்ப இருக்க எந்திரன் கத மாதிரி எழுதினவரு அதாங்க ஜினோ, பாத்து வருஷம் கழிச்சு இந்த காலத்துல எப்படி எழுதி இருப்பார், தயவு செஞ்சு கதை சுஜாதாவோடது என்று சொல்லி அவர கேவலப்படுத்தாதீங்க.
எனக்கொரு டவுட்டு ஆமா எந்திரன் அந்த தீப்புடிச்ச கட்டடத்துக்குள்ள ஓடும்போது அதன் தோல் எல்லாம் எரிஞ்சு எலும்புக்கூட போயிரும் அந்த மெட்டல் heat resistant மெட்டல் அப்படின்னா அது தூக்கிட்டு ஓடும்போது மனுசங்க மட்டும் எரிய மாட்டாங்கள? இல்ல மெட்டல் மண்டையன் தோள்ல தூக்கிபோட்டு ஓடும்போது அந்த மெட்டல் மண்டையன் சுட மாட்டானா? ஏன் என்றால் இரும்பு தீக்குள்ள போட்டா ஒரு அளவுக்கு வரை ஹீட் தாங்கும் அப்புறம் உருகிடும் அது உருகும் முன்னாடி அத தொட்ட கை பழுத்துடும், அது போல இருந்த அது தோள்ல தூக்கி பொத்துக்கொண்டு வரும்போதே மனுசங்க சாவ மாட்டாங்களா? எனக்கு அறிவியல் அறிவு கொஞ்சம் கம்மி அதான் கேட்கறேன்,
இன்னும் நிறைய கேள்விங்க ஆனா படத்த பார்த்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது , நம்ம ஆள் உலகத்தரத்துல ஒரு படம் எடுத்திருக்கார் அவர பாராட்டாம பொறாமைல பேசாத என்று சொல்லலி விடுவார்கள்.
உண்மைலேயே ரோபோட் எல்லாம் இந்த அறிவோடயும் நூருபெர்க்கான பலம் கொண்டதாகவும் இருந்திருந்த அது கண்டிப்பா ஐஸ்வர்யா பின்னாடி போயிருக்காது இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்க முயற்சி செஞ்சு இருக்கும்.
விடுங்க எல்லாம் ஒரு காமெடி தான், I-ROBOT பார்த்துட்டு இத பார்த்தா ஒண்ணு சிரிப்பாவும் அதே நேரம் எரிச்சலாவும் வருது.
எங்க ஊர்ல எதிரான் ரிலீஸ் ஆகல
4 comments:
எந்திரன் பற்றி எழுதும்போதே எதையும் எதிர்பார்த்துதான் எழுதினேன், எதிர்மறை பின்னூடங்கள் எனக்கு ஒன்றும் புதிது அல்ல.
ஆனால் அது வெளி உலகத்துக்கு சொல்லும் அளவில் இருந்தால் அதை வெளியிடலாம், ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் கூடத்தில் இருந்து வந்த முதல் இரண்டு பின்னூடங்கள் இங்கு வெளியிட தகுதி இல்லாததால் அவை வெளியிடப்படவில்லை.
இத்தகைய கேவலமானவர்கள் ரசிகர்களாக இருக்கும் பட்சத்தில் ரஜினி பாவம். உங்களையும் உங்கள் ரசிகர்களையும் நினைத்து சிரித்துவிட்டு செல்வதைத்தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
பின்னூட்டத்தில் திட்டுவதால் ஒரு பயனும் இல்லை, எதைப்பற்றியும் நான் கவலைப்பட போவதும் இல்லை.... உங்களைப்போல என்னால் இருக்க முடியாது ஆனால் நினைத்ததை எழுதுவேன் என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது
கரூரில் வெளியிட வில்லை எனபது ஆச்சர்யமான தகவல்
நன்றி ராம்ஜி
எனக்கே ஆச்சரியம்தான் படம்வேளியிடும் முன்னர் ஊரெல்லாம் போஸ்டர் ப்ளெக்ஸ் பானர் எனக்கிலப்பினார்கள் ஆனால் வெளியிடப்படவில்லை பக்கத்தில் வேலூரில் உள்ள திரை அரங்குக்கு நல்ல வசூல் என்று கேள்விப்பட்டேன்
I Robot pakkiren thala. :-)
Post a Comment