Wednesday, October 20, 2010

வாரக்கடைசி திரைப்படங்கள்

.இந்த வார இறுதியில் நான் பார்த்த திரைப்படங்கள் இரண்டு அவை i, robot  மற்றும் Ta Ra Rum Pum 

இதில் i robot  பற்றி முதலில் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் பின்னர் வேண்டாம் என்று நினைத்து விட்டுவிட்டேன் 

த ர ரம் பம் இந்திப்படம், இந்தப்படம் 2007 இல்  வெளிவந்தது  என்று நினைக்கிறேன், ஒரு நாள் மாயாஜாலில் படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது இந்தப்படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்ட தட்டி வைத்திருந்தனர். கார் ரேஸ் ஓடும் உடை, நாஸ் கார் எல்லாம் இருந்ததால் கண்டிப்பாக கார் ரேஸ் பற்றிய படம் என்று நினைத்தேன். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், இந்தியாவில் இதுபோன்ற முழுக்க முழுக்க கார் ரேஸ் கார்கள் பற்றிய படம் எதுவும் வந்தது இல்லை 

ஆனால் சிறிதுகாலம் கழித்து படம் வெளிவந்தபோது வேலைப்பளு அதிகமான காரணத்தால் படத்தை பார்க்க முடியவில்லை, சில இணைய தளங்களில் வேறு படத்தைப்பற்றிய விமர்சனங்களும் அவ்வளவாக இல்லாததால் பார்க்காமல் விட்டுவிட்டேன் ஆனால் ஏனோ அந்த படத்தைப்பார்க்க வேண்டும் என தோன்றிக்கொண்டே  இருந்தது 

ஒரு வழியாக இன்று கலையில் பார்த்து முடித்தேன், கதைப்படி பெரியதாக ஒன்றும் இல்லை, வழக்கமான ஆங்கிலத்திரைப்படக்கதை தான். ஆனால் இந்திய நடிகர்கள் வசனம் இந்தியில் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டது சுருக்கமா சொல்லணும் என்றால் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்தியத்திரைப்படம்.

நாயகனின் மகள் கதை சொல்லுவது போல அமைக்கப்பட்ட கதை, அக ஆரம்பிக்கும்போதே நமக்கு முடிவு நல்ல பொசிடிவ் முடிவு என்று தெரிந்து விடுகிறது அதனால் ஒரு சந்தூசத்துடன் படம் பார்க்க முடிகிறது. நாயகன் அமெரிக்காவில் ஒரு கார் ரேஸ் டீமில் ரசுக்கு நடுவில் வண்டிக்கு டயர் மாற்றும் ஆளாக அறிமுகம் ஆகிறார்.  எதைப்பற்றியும் , நாளை ஏன்டா ஒரு பயமும் இல்லாமல் வாழும் ஒரு இளைஞர். ஒரு நாள் அவசரமாக ஒரு இடத்துக்கு போக வடகைக்கரில் ஏறுகிறார், அவர் என்றுமே அவசரமாக போக வேண்டும் என்றால் அதிக பணம் கொடுத்து வடகைக்கரை தானே ஓட்டி செல்வார். அன்று அது போல செல்லும்போது நாயகி பின்னர் ஏறிவிடுகிறார். அவ்வளவு வேகமாகவும் அதே போல விவேகமாகவும் கார் ஓட்டுபவனை பார்த்து வாடகைக்கார் ஓட்டுனர் ஆச்சரியப்படுகிறார். 

அதன் பின்னர் படம் ஆரம்பம் இடைவேளைகுல்லாக ஹீரோ பெரிய கார் ரேஸ் வீரனாக மாறிவிடுகிறார். 

இடைவேளையில் ஹீரோ ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டுவிடுகிறார், விபத்துக்கு காரணம் இன்னொரு போட்டியாளர். விபத்தில் இருந்து ஒரு வருடத்தில் மீண்டு வந்தாலும் அடுத்தடுத்த ரேசில் ஜெயிக்க முடியவில்லை. விபத்தின் பாதிப்பு அவரை மனதளவில் நெருக்குகிறது, இதனிடையில் அவரின் ரேஸ் டீம் அவரை வேளையில் இருந்து தூக்கிவிட்டு அந்த போட்டியாளரை நியமிக்கிறது. 

பலவித இடையூறுகளுக்கிடையில் பலவித வேலைகள் செய்தி தன காதல் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுகிறார், இதற்கிடையில் கஷ்டம் வந்தால் என்ன என்ன விசயங்களை விட்டுகொடுக்க தோன்றும் என்பது தெளிவாகத்தெரிய சில காட்சிகள்.

இறுதியில் ஒரு ரேசில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் அதுபோல ஜெயித்துவிடுகிறார். இது வழக்கம் போல  இந்திய மசாலாப்படம் போல இருந்தாலும் கண்டிப்பாக ஒரு படி மேல். ஆங்கிலப்படங்களுக்கு இணையாக எடுத்துள்ளனர் ஆனாலும் வழக்கமான இந்தியப்படத்தின் காதல் செண்டிமெண்ட் எல்லாம் கலந்ததனால் நல்ல ஒரு motivational  படம் கொஞ்சம் சிதைக்கப்பட்டுள்ளது.

பார்க்கலாம் இயக்குனரின் முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு சபாஸ். இது போன்ற முயற்சிகள் தமிழில் துவங்கவே இல்லை, ஒரு கார் ரேஸ் அல்லது இது போன்ற வித்தியாசமான முயற்சி எப்போது வருமோ. இது தக்க சமயம் என்று நினைக்கிறேன் ஆனால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என தெரியாததால் யாரும் முயலவில்லை.

இதை அஜித் தமிழில் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் பின்னர் கைவிடப்பட்டது, எடுத்திருந்தால் கண்டிப்பாக நன்றாக இருந்து இருக்கும்   

No comments: