Showing posts with label ஆலோசனை. Show all posts
Showing posts with label ஆலோசனை. Show all posts

Tuesday, April 21, 2009

என்ன கார் வாங்குவது??

இன்று பதிவு எழுத வேண்டும் என்று கலையில் எழுந்த உடன் நினைத்துக்கொண்டே வந்தேன். என்ன பதிவு எழுத என்று பெரிதாக யோசனை இல்லை...

மகிழுந்து வாங்குவதை பற்றி எழுதுகிறேன்.

கார் வாங்கலாம் என்று நினைக்கிறீர்கள?? நல்ல முடிவு, இரு சக்கர வாகனத்தை விட பாதுகாப்பான வாகனம். வாங்கும்போதே அதன் பராமரிப்பு பற்றியும் தெரிந்துகொண்டால் வாங்கிய பின்னால் வரும் சில மனகஷ்டத்தை தவிர்க்கலாம்.

கார் வாங்கும்போது புதுசாக வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு. முதலில் இருந்தே ஆரம்பிப்பது என்ன சார் வாங்கலாம் என்பது. பலர் இதில் கோட்டை விடுகின்றனர். என்ன கார் வாங்கினால் நனது தேவைக்கு சரியாக இருக்கும் என்று தெரியாமல் எதாவது வாங்கிபின்னால் புலம்புவதை பலமுறை கேட்டிருக்கிறேன்.

முதலில் தங்கள் தேவைகளை பட்டியல் இடுங்கள். உதாரணத்திற்குதங்கள் மாதந்திர உபயோகம் என்ன, தினமும் எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள், எவ்வளவு பயணிகள் பயணம் செய்வீர்கள், நகரத்திற்குள் மட்டுமே ஊடுவீர்கள இல்லை அடிக்கடி நெடுந்தூர பயணம் செல்வீர்களா, மலைப்பிரதேச பயணம் செய்வீர்களா என்று ஒரு பட்டியல் தயார் செய்து அதற்க்கு தகுந்த படி உங்கள் தேவைக்கு உகந்த கார்களை ஒரு பட்டியலாக தயார் செய்து தேர்ந்து எடுக்க வேண்டும்.

சும்மா பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாருதி சுவிப்ட்டு வாங்கிட்டன் அதனால நானும் வாங்கறேன் திரு உங்கள் தேவை அதை விட சிறுசாக இருக்கும் பொது பெருசாக வாங்க கூடாது.

உதாரணமாக, தாங்கள் தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்வீர்கள் அதுவும் நகரத்தில் நெடுஞ்சாலை பயணம் அதிகம் மேற்க்கொள்ள மாடீர்கள் அப்படி செய்தாலும் நெடுந்தூரம் போக மாட்டீர்கள் என்றால் உங்களுக்கு தேவை சிறிய பெட்ரோல் கார் மட்டுமே. உங்கள் நண்பர்கள் சொல்கிறார்கள் டிசல் கார் இருந்தால் மாதந்திர எரிபொருள் செலவு கம்மி என்று நினைக்க வேண்டாம்.

நீங்கள் மாதம் செல்லும் தூரம் தினமும் ஐம்பது கிலோமீட்டர் என்றால் மாதம் ஆயிரத்து ஐந்நூறு (1500). வார இறுதியில் ஒரு 200 கிலோமீட்டர் அதிகம் செல்விக்றீர்கள் அன்றாலும் மொத்த தூரம் 1700-1800 km . தற்கு மாதம் ஆகும் எரிபொருள் செலவு ஒரு பெட்ரோல் வண்டி சராசரியாக ஒரு லிட்டருக்கு 14 கிலோமீட்டர் கொடுக்கின்றது என்று வைத்தால் மாதம் 125 லிட் எரிபொருள் தேவை அதற்க்கு உண்டான பணம் 5625.

இதுவே டிசல் வண்டி என்றால் ஒரு லிட்டருக்கு சராசரியாக 17 கிலோமீட்டர் கொடுக்கும்.மாதம் ஆகும் எரிபொருள் செலவு 103 லிட்டர். அக எரிபொருள் செலவு 3708.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 1917 ரூபாய்.இப்போது ஒரு பெட்ரோல் காருக்கும் டிசல் காருக்கும் உள்ள விலை வித்தியாசம் சராசரியாக ஒரு லட்சம். ஒரு லட்சத்திற்கான மாத வட்டி 13% விகிதத்தில் கணக்கிட்டால் 1084 ரூபாய்.மீதம் உள்ளது 833 ரூபாய். இதில் நீங்கள் டிசல் காருக்கு ஆகும் பாராமரிப்பு செலவை கணக்கிட்டால் மிஞ்சுவது ஒன்றும் இருக்காது. அதற்க்கு பராமரிப்பு செலவு கம்மியாக ஆகும் பெட்ரோல் காரை நீங்கள் தேர்ந்து எடுக்கலாம். மாதம் கட்டும் வட்டியில் எரிபொருள் போடலாம்.

இதுவே உங்கள் மாதந்திர உபயோகம் 3000 kmக்கு மேல் போகும்போது டிசல் காருக்கு செல்லலாம்.

இது ஒரு உதாரணம் தான் ஆனாலும் இதற்கு மேலும் பல காரணிகள் இருக்கு தங்களின் காரை தேர்ந்து எடுக்க.

இன்று இத்தோடு போதும் நாளை மேலும் சில குறிப்புகளுடன் எழுதுகிறேன்.

எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Thursday, April 9, 2009

ஆலோசனை தேவை

பெருமிழப்பை சந்தித்து மீண்டு கொண்டு இருக்கும் எனக்கு தங்களின் ஆலோசனை வேண்டும்.

முக்கிய உறவின் இழப்பை சந்தித்து மறுபடியும் வேலைக்கு வந்து சேர்ந்து ஒரு நாள் ஆகின்றது. இந்த வார இறுதியில் அலுவலக வேளையாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளது, ஏற்க்கனவே போடப்பட்ட திட்டம், இழப்பின் பதட்டத்தில் தவறாக பயணத்தை மாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டேன், தற்போது பார்த்தால் வீட்டிற்கு பதினைந்து நாட்கள் செல்ல முடியாது என்று தோன்றுகிறது.

என்னால் இப்போது செய்ய முடிந்தது,

திட்டத்தை ரத்து செய்துவிட்டு வார இறுதியில் வீட்டிற்கு செல்வது.

இல்லை திட்டத்தை செயல்படுத்துவது.

அலுவலக நண்பர்கள் உதவ முன்வரா நிலையில் உடன் வருபவரும் தனியாக செல்ல மறுக்கையில் நான் என்ன செய்ய என்று தெரியவில்லை. என் மனதிற்கு நான் வீட்டினருடன் இருக்க வேண்டும் என்று படுகிறது. ஆனால் இழப்பை மறக்க ஒரு மாற்றம் தேவை என்றும் தெரிய வருகிறது. தங்களால் முடிந்த அறிவுரை ஆலோசனை எதுவாயினும் எனக்கு அளிக்கலாம்.