Tuesday, April 21, 2009

என்ன கார் வாங்குவது??

இன்று பதிவு எழுத வேண்டும் என்று கலையில் எழுந்த உடன் நினைத்துக்கொண்டே வந்தேன். என்ன பதிவு எழுத என்று பெரிதாக யோசனை இல்லை...

மகிழுந்து வாங்குவதை பற்றி எழுதுகிறேன்.

கார் வாங்கலாம் என்று நினைக்கிறீர்கள?? நல்ல முடிவு, இரு சக்கர வாகனத்தை விட பாதுகாப்பான வாகனம். வாங்கும்போதே அதன் பராமரிப்பு பற்றியும் தெரிந்துகொண்டால் வாங்கிய பின்னால் வரும் சில மனகஷ்டத்தை தவிர்க்கலாம்.

கார் வாங்கும்போது புதுசாக வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு. முதலில் இருந்தே ஆரம்பிப்பது என்ன சார் வாங்கலாம் என்பது. பலர் இதில் கோட்டை விடுகின்றனர். என்ன கார் வாங்கினால் நனது தேவைக்கு சரியாக இருக்கும் என்று தெரியாமல் எதாவது வாங்கிபின்னால் புலம்புவதை பலமுறை கேட்டிருக்கிறேன்.

முதலில் தங்கள் தேவைகளை பட்டியல் இடுங்கள். உதாரணத்திற்குதங்கள் மாதந்திர உபயோகம் என்ன, தினமும் எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள், எவ்வளவு பயணிகள் பயணம் செய்வீர்கள், நகரத்திற்குள் மட்டுமே ஊடுவீர்கள இல்லை அடிக்கடி நெடுந்தூர பயணம் செல்வீர்களா, மலைப்பிரதேச பயணம் செய்வீர்களா என்று ஒரு பட்டியல் தயார் செய்து அதற்க்கு தகுந்த படி உங்கள் தேவைக்கு உகந்த கார்களை ஒரு பட்டியலாக தயார் செய்து தேர்ந்து எடுக்க வேண்டும்.

சும்மா பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாருதி சுவிப்ட்டு வாங்கிட்டன் அதனால நானும் வாங்கறேன் திரு உங்கள் தேவை அதை விட சிறுசாக இருக்கும் பொது பெருசாக வாங்க கூடாது.

உதாரணமாக, தாங்கள் தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்வீர்கள் அதுவும் நகரத்தில் நெடுஞ்சாலை பயணம் அதிகம் மேற்க்கொள்ள மாடீர்கள் அப்படி செய்தாலும் நெடுந்தூரம் போக மாட்டீர்கள் என்றால் உங்களுக்கு தேவை சிறிய பெட்ரோல் கார் மட்டுமே. உங்கள் நண்பர்கள் சொல்கிறார்கள் டிசல் கார் இருந்தால் மாதந்திர எரிபொருள் செலவு கம்மி என்று நினைக்க வேண்டாம்.

நீங்கள் மாதம் செல்லும் தூரம் தினமும் ஐம்பது கிலோமீட்டர் என்றால் மாதம் ஆயிரத்து ஐந்நூறு (1500). வார இறுதியில் ஒரு 200 கிலோமீட்டர் அதிகம் செல்விக்றீர்கள் அன்றாலும் மொத்த தூரம் 1700-1800 km . தற்கு மாதம் ஆகும் எரிபொருள் செலவு ஒரு பெட்ரோல் வண்டி சராசரியாக ஒரு லிட்டருக்கு 14 கிலோமீட்டர் கொடுக்கின்றது என்று வைத்தால் மாதம் 125 லிட் எரிபொருள் தேவை அதற்க்கு உண்டான பணம் 5625.

இதுவே டிசல் வண்டி என்றால் ஒரு லிட்டருக்கு சராசரியாக 17 கிலோமீட்டர் கொடுக்கும்.மாதம் ஆகும் எரிபொருள் செலவு 103 லிட்டர். அக எரிபொருள் செலவு 3708.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 1917 ரூபாய்.இப்போது ஒரு பெட்ரோல் காருக்கும் டிசல் காருக்கும் உள்ள விலை வித்தியாசம் சராசரியாக ஒரு லட்சம். ஒரு லட்சத்திற்கான மாத வட்டி 13% விகிதத்தில் கணக்கிட்டால் 1084 ரூபாய்.மீதம் உள்ளது 833 ரூபாய். இதில் நீங்கள் டிசல் காருக்கு ஆகும் பாராமரிப்பு செலவை கணக்கிட்டால் மிஞ்சுவது ஒன்றும் இருக்காது. அதற்க்கு பராமரிப்பு செலவு கம்மியாக ஆகும் பெட்ரோல் காரை நீங்கள் தேர்ந்து எடுக்கலாம். மாதம் கட்டும் வட்டியில் எரிபொருள் போடலாம்.

இதுவே உங்கள் மாதந்திர உபயோகம் 3000 kmக்கு மேல் போகும்போது டிசல் காருக்கு செல்லலாம்.

இது ஒரு உதாரணம் தான் ஆனாலும் இதற்கு மேலும் பல காரணிகள் இருக்கு தங்களின் காரை தேர்ந்து எடுக்க.

இன்று இத்தோடு போதும் நாளை மேலும் சில குறிப்புகளுடன் எழுதுகிறேன்.

எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்.

8 comments:

பிரேம்குமார் said...

துறை சார்ந்த பதிவா? ரைட்டு விடுங்க....

என்னைக்காவது கார் வாங்க முடிஞ்சா உங்க கிட்ட கேட்டுக்குறேன் :)

DHANS said...

துறை சார்ந்த பதிவு?? இருக்கலாம்

அதென்ன என்னைக்காவது, சொல்லுங்க நாளைக்கே வாங்கிவிடலாம்.

BADRINATH said...

நானோ காரைப் பற்றி ஒரு பதிவில் கேட்கப் பட்டக் கேள்விகள் உங்கள் பதிலுக்காக...
1) மைலேஜ் 23 என்கிறார்களே அது கரக்டா.. இல்லை உல்லுலுங்காட்டியா...?
2) நான் அதிகமாக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை (என்ன வீடு டூ பீச் என்றாவது வீக் எண்ட் போக வர 40 கிமீ மட்டும் அதாவது மாதம் 4X40 = 160 கிமீ)
3) தொடர்ச்சியாக எத்தனை கிமீ போக முடியும்..? (உ.ம் சென்னை டூ திருப்பதி)
4) மலை ஏறுமா..?
5) மெயிண்டனஸ் எப்படி..?
6) ஏர் கூலிங் என்கிறார்களே.. இரு சக்கர வாகனத்தில் கேள்வி பட்டுள்ளேன்.. காரில் எப்படி..? அதனால் ஒன்றும்...????
7) ஒண்ணு வாங்கிடலாமா...?
8) நான்ஏசி நான்மெட்டாலிக் என்ற ஒரு கார் ரூ 135000 என்கிறார்களே...சீப்பாக இருக்கே.. தைரியமா வாங்கலாமா...?

DHANS said...

நன்றி பத்ரிநாத்

நானோ காரைப் பற்றி ஒரு பதிவில் கேட்கப் பட்டக் கேள்விகள் உங்கள் பதிலுக்காக...
//1) மைலேஜ் 23 என்கிறார்களே அது கரக்டா.. இல்லை உல்லுலுங்காட்டியா...?//
சோதனை நிலையில் 23 வரலாம் அனால் நம்ம ஊர் பூகுவரத்தில் நன்றாக ஓட்டத்தெரிந்தவர் ஓடினால் 18 கிலோமீட்டர் எதிர்பார்க்கலாம் ஒரு லிட்டருக்கு.
//2) நான் அதிகமாக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை (என்ன வீடு டூ பீச் என்றாவது வீக் எண்ட் போக வர 40 கிமீ மட்டும் அதாவது மாதம் 4X40 = 160 கிமீ)//

இந்த தேவைக்கு நானோ பொருத்தமாக இருக்கும்

//3) தொடர்ச்சியாக எத்தனை கிமீ போக முடியும்..? (உ.ம் சென்னை டூ திருப்பதி)//

பெட்ரோல் tank கொள்ளளவு 15 லிட்டர், எப்படியும் தொடர்ச்சியாக நிறுத்தாமல் சென்றாலும் 200 கிலோமீட்டர் செல்லலாம், ஆனால் இந்த வண்டி நகரத்திற்கு மட்டுமே உகந்தது, நெடுஞ்சாலைக்கு உகந்தது அல்ல. திருப்பதி எல்லாம் இதில் போகலாம் என்று நினைக்க வேண்டாம்,

4) மலை ஏறுமா..? //
வண்டியில் நான்கு பேர் இருந்தால் கண்டிப்பாக ஏறாது, ஒருவர் இருந்தால் சிரமத்துடன் ஏறலாம் நெடுஞ்சாலைக்கு மலை பிரதேசங்களுக்கு ஏற்ற வண்டி அல்ல.

5) மெயிண்டனஸ் எப்படி..?
பாகங்கள் அதிக விலைக்கு இருக்காது என்று நம்பலாம் இருந்தாலும் வண்டியை test drive செய்து பார்க்க வில்லை இந்த வாரம் பார்த்துவிட்டு சொல்கிறேன். நகரத்துக்குள் மட்டும் ஓடினால் செலவு அதிகம் வைக்காது என்று நம்புகிறேன்.
ஆனால் நம்பகத்தன்மை என்பது சிறிது காலம் கழித்தே கூற முடியும். தற்ப்போதைக்கு relaiability என்றால் அது maruti 800.

6) ஏர் கூலிங் என்கிறார்களே.. இரு சக்கர வாகனத்தில் கேள்வி பட்டுள்ளேன்.. காரில் எப்படி..? அதனால் ஒன்றும்...????//

எனக்கு தெரிந்து அவர்கள் இணைய பக்கத்தில் இதை பற்றி சொல்லவில்லை அனாலும் பின் சக்கரத்துக்கு மேலே இருக்கும் காற்று போகும் வழி என்கினுக்கு செல்கிறது. கண்டிப்பாக நெடுஞ்சாலைகளில் செல்லும்போது /நகர போக்குவரத்து அதிகமிருக்கும்போது என்ஜின் அதிக சூடாகும்.7) ஒண்ணு வாங்கிடலாமா...?
// உங்கள் தேவை நகரத்துக்குள் மட்டும் என்றால், எப்போதும் நான்கு பேர் (பெரியவர் இருவர் + சிறியவர் இருவர் ) என்றால் வாங்கலாம்.

8) நான்ஏசி நான்மெட்டாலிக் என்ற ஒரு கார் ரூ 135000 என்கிறார்களே...சீப்பாக இருக்கே.. தைரியமா வாங்கலாமா...?

// பைக்குக்கு பதில் கார் வாங்கலாம் என்று நினைத்தால் இந்த வண்டி மட்டுமே சாத்தியம் ஆனால் அதற்க்கு நீங்கள் விட்டுக்கொடுப்பது நிறைய. மற்ற கார் போல வசதிகள் இருக்காது. மேலும் பார்க்கிங் பிரச்சனைகள் வரும், மலை காலத்தில் நலியாமல் செல்லலாம், வெயில்காலத்தில் எனக்கு தெரிந்து AC இல்லாமல் செல்ல முடியாது. வண்டியை நேரில் பார்த்த எனது மேகனிக் நண்பரின் கருத்து இதுதான்.

இது பேப்பர்ல பாக்கும்போது, மத்தவங்க சொல்லும்போதுனள்ள இருக்கு அனா நேர்ல பாக்கும்போது இத போய் எதுக்கு இவ்ளோ built up குடுத்தாங்க தெர்ல.

என்னை பொறுத்தவரை உங்களுக்கு கார் வேண்டும் என்றால் second hand maruti-800 ,santro நல்ல பொருத்தம். 2004-2005 மாடல்கள் இதே விலைக்கு கிடைக்கும்.நம்பகமான மாடல்கள் இரண்டும்.

BADRINATH said...

நன்றி நன்றி திரு தன்ஸ் அவர்களே... எனது கேள்விகளுக்கு பொறுமையாகவும் அழகாகவும் பதில் சொன்ன உங்களுக்கு மீண்டும் மிக்க நன்றி..
பத்ரிநாத்

DHANS said...

nandri ellam ethukku , etho enakku therinchatha sonen bathrinath

muthuraj ravi said...

Dewoo matiz கார் நெடுஞ்சாலை பயணம் போகலாமா?சுமார் 650 koil meter

DHANS said...

Muthuraj

you can go highway drive in all car but MAtiz being small car wont be comfortable for 650kms drive.

if you planning to buy Matiz be prepared for high maintanence and poor spare parts availability. its a good city car but now no service support.