Thursday, April 9, 2009

ஆலோசனை தேவை

பெருமிழப்பை சந்தித்து மீண்டு கொண்டு இருக்கும் எனக்கு தங்களின் ஆலோசனை வேண்டும்.

முக்கிய உறவின் இழப்பை சந்தித்து மறுபடியும் வேலைக்கு வந்து சேர்ந்து ஒரு நாள் ஆகின்றது. இந்த வார இறுதியில் அலுவலக வேளையாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளது, ஏற்க்கனவே போடப்பட்ட திட்டம், இழப்பின் பதட்டத்தில் தவறாக பயணத்தை மாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டேன், தற்போது பார்த்தால் வீட்டிற்கு பதினைந்து நாட்கள் செல்ல முடியாது என்று தோன்றுகிறது.

என்னால் இப்போது செய்ய முடிந்தது,

திட்டத்தை ரத்து செய்துவிட்டு வார இறுதியில் வீட்டிற்கு செல்வது.

இல்லை திட்டத்தை செயல்படுத்துவது.

அலுவலக நண்பர்கள் உதவ முன்வரா நிலையில் உடன் வருபவரும் தனியாக செல்ல மறுக்கையில் நான் என்ன செய்ய என்று தெரியவில்லை. என் மனதிற்கு நான் வீட்டினருடன் இருக்க வேண்டும் என்று படுகிறது. ஆனால் இழப்பை மறக்க ஒரு மாற்றம் தேவை என்றும் தெரிய வருகிறது. தங்களால் முடிந்த அறிவுரை ஆலோசனை எதுவாயினும் எனக்கு அளிக்கலாம்.

3 comments:

ச.பிரேம்குமார் said...

உங்கள் குடும்பத்தாருக்கு உங்கள் துணை தேவைப்படுமெனில் அதற்கே செவிசாயுங்கள்.

(I mean, if they want to be there)

இல்லையெனில், அலுவலக வேலையையே தொடரலாம். உங்களுக்கும் ஒரு மனமாற்றம் கிடைக்கும்

Karthik said...

hope you're doing well. i'm late. :(

DHANS said...

its ok, i am doing well karthik, thanks