நண்பர் கார்கியின் இந்த பதிவு படித்தவுடன் பின்னூட்டம் எழுதியும் எனக்கு தனியாக ஒரு பதிவு போட்டால் என்ன என்று தோன்றியது.
அவர் எழுதியது பஜாஜின் மேல் உள்ள கொலை வெறியில் எழுதியது போல் இருந்தது. (விளையாட்டுக்கு தான் புண்படுத்த இல்ல)
இனி விளக்கமும் என்னுடைய கோணமும்...
44,000 ரூபாய் மட்டுமே, செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல், என்ற கவர்ச்சி எல்லா கம்பெனியிலும் உண்டு, டாப் எண்டு மாடல்மட்டுமே இதை கொண்டு இருக்கும் விலையும் அதிகம்.
விளம்பரம் செய்யப்படும் மைலேஜ் என்பது சாதாரண சூழ்நிலையில், எடை ஏதும் இல்லாத நிலையில், சீரான நிலையில் சீரான வேகத்தில் எவ்வளவு கிடைக்கிறதோ அது மட்டுமே. எல்லா நிறுவனமும் இத்தகைய விளம்பரங்களை மட்டுமே செய்கின்றன.
109 கிலோமீட்டர் என்பது அதிகப்படியான மைலேஜ், ஆனால் நீங்கள் கண்டிப்பாக 80 கிலோமீட்டர் எதிர்பார்க்கலாம். மைலேஜ் குறைவதற்கு காரணம் என்ஜின்இல் அடையும் கார்பன் துகள்கள், எரிபொருள் சுத்தம் இல்லாமை, நீங்கள் ஊட்டும் முறையில் ஏற்படும் மாற்றம். எப்பவும் மூன்றாவது சர்விசுக்குமேல்தான் வண்டியின் மைலேஜ் ஒரு நிலையில நிக்கும்.
அடிக்கடி கியர் மாற்றாமலும், என்ஜினை அதிக சுழற்சியில் கியர் மாற்றாமல், அடிக்கடி பிரேக் பிடிக்காமல், கிளட்சை பிடித்துக்கொண்டே வண்டியை ஓட்டாமல், இருந்தாலே நல்ல மைலேஜ் வரும். வேகமும் அறுபதுக்கு மேல் செல்லாமல் இருக்க வேண்டும்.
கம்பெனி பராமரிப்பு அதுவும் இலவச பராமரிப்பு என்பது கண் துடைப்பு எதுவுமே செய்ய மாட்டார்கள், முக்கியமாக் என்ஜின் ஆயில் மாற்றவே மாட்டார்கள் ஆனால் பில்லில் மாற்றியதாக வரும்.இலவச பராமரிப்பு முடிந்து இருந்தால் நீங்களே என்ஜின் ஆயிலை மாற்றிக்கொள்ளலாம், அல்லது நீங்களே என்ஜின் ஆயிலை வாங்கி சென்று உங்கள் கண் முன்னாடி மாற்ற சொல்லவும்.
எந்த எடைக்கும் டிஸ்க் பிரேக் சத்தியம் தான் ஆனால் அந்த எடைக்கு தேவை இல்லை. இதெல்லாம் மக்கள் வாங்கும் தன்மையால் வந்த வினை.
முதுகு வலி வருவதற்கு வாய்ப்புகள் எல்லா வண்டியிலும் வரும். என்னுடைய பல்சரிலும் இருக்கிறது, எனக்கு முதுகு வலி ஏற்படுவது என்னுடைய வண்டியினால் மட்டுமே அனாலும் அதற்கு வண்டியை குறை சொல்ல வில்லை, இந்திய சாலைகள் மட்டுமே இதற்கு முழு தகுதி பெரும். எனக்கு எந்த வண்டி ஓடினாலும் முதுகு வலி வருகிறது இப்போது.. மோசமான சாலையில் செல்லும்போது பல்சர் போன்ற வண்டிகள் எல்லாமே சிறிது sportivaana ஓடும் முறையை கொண்டதால் சாலையில் உள்ள குழிகள் முதுகை பதம் பார்க்கின்றன.
டீலர்களே சொல்கிறார்கள் என்றால் அது தவறு.
அடிக்கடி வண்டியை மாற்றுகின்றனர் என்பது தவறு இல்லை, அவர்கள் செய்வது என்ஜின் மாற்றுவது தான், discover enginai எடுத்து platina வில் பொருத்தியுள்ளனர் இது போலத்தான் எல்லாமுமே.
ஹீரோ ஹோண்டாவில் ஹோண்டா தொழில்நுட்பம் இருக்கிறது இவர்களது (பஜாஜ்)முழுக்க முழுக்க இவர்கள் தொழில்நுட்பம். அவர்கள் தொழில்நுட்பத்தை மீருகேற்ற நிறைய தடைகள் இருக்கலாம் ஹோண்டாவின் துணை இருப்பதால் அதனால் என்கினை மெருகேற்றுவது அடிக்கடி நடப்பது இல்லை. இரண்டாம் விற்ப்பனை விலை என்பது நுகர்வோரின் மனநிலை பொருத்து. காலம்காலமாகே பஜஜ்க்கு இந்த ஒரு பெயர் இருப்பதால் நல்ல வண்டியையும் கம்மி விலையில் விற்க வேண்டி வருகிறது.
நான் வண்டி வாங்கும்போதும் என்னிடம் பஜாஜ் வாங்காதே பின்னால் விற்க வேண்டும் என்றால் சிரமம் என்று கூறினர். வாங்கும் முன்னரே விறபபதை பற்றி யோசிப்பவர் எப்படி வண்டியை பராமரிப்பார், அனுபவித்து ஓட்டுவார். என்னை பொருத்த வரை என் வண்டியை விற்பனை செய்வது இல்லை என்ற முடிவோடு வாங்கினேன் ஆனால் இப்போது விற்கும் நினைப்பு வந்துள்ளது. அதற்கு காரணம் இந்த வண்டி போரடித்து விட்டது, மேலும் இப்போது வண்டி ஊட்டுவது குறைந்துவிட்டது. யமாஹா RD350 தேடிக்கொண்டு இருக்கிறேன் கிடைத்தால் வாங்கிவிடவேண்டும்.
சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு. எனது விருப்ப பாடமும் இயந்திரவியல், விருப்பமாய் வேலை செய்வதும் அதே துறையில் தான். இருந்தும் கார் பைக் மேல் உள்ள ஆசையால் ஓய்வு நேரத்தில் அவற்றின்மேல் கவனம் செலுத்துகிறேன்.
எனக்கு நியாபகம் இருக்கிறது என் நண்பன் unicorn நான் பல்சர் வங்கி ஒரு வாரத்தில் வாங்கினான். இது வரை அதிக பட்சமாக 50 கிலோமீட்டர் ஒரு லிடேருக்கு கொடுத்து உள்ளது. எனது வண்டி சராசரியாக 52 கிலோமீட்டர் கொடுக்கின்றது.
பராமரிப்பில் மற்றது எல்லாம் வருகிறது. எத்தகைய வண்டியாயினும் சரியான பராமரிப்பு என்பது முக்கியம். என்னை பொருத்தவரையிஒல் மிக பிடித்த வண்டிகள் yamaha RD350,RX100,RX135, FZ16, hero honda CBZ old type, bajaj Pular.
அபாச்சி மட்டுமே நான் ஓட்டி மிகவும் சிரமத்துக்கு உண்டாக்கியது. பிக் உப வேகம் எதுவும் சுமார் தான், ஸ்டைல் மிக நன்று அனால் ஓட்ட சிரமம், அதிர்வுகளும் அதிகம். .
அடுத்த சில பதிவுகளில் மறுபடியும் எழுதுகிறேன், ஒரு ஆரோகியமான பூட்டி சூழ்நிலை இருந்தால் நன்றாக இருக்கும்.
4 comments:
நல்ல பதிவு... முதுகு வலி பத்தி நீங்க சொல்றது 100% சரி !!
வருகைக்கு நன்றி மகேஷ்....
ந்த சாலைகளால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்
ஹீரோ ஹோண்டாவில் ஹோண்டா தொழில்நுட்பம் இருக்கிறது இவர்களது (பஜாஜ்)முழுக்க முழுக்க இவர்கள் தொழில்நுட்பம்//
கவாசாகி இடம் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பம் தானே அண்ணா?இது சந்தேகமே ...பதிவு நன்றாக உள்ளது ..உங்கள் இந்த அனுபவ பதிவை தொடரவும்.
கவாசாகியுடன் இருந்த தொழில் நுட்ப உறவு இப்போது இல்லை...
இப்போது இவர்கள் உபயோகப்படுத்தும் தொழில்நுட்பம் அவர்களை சார்ந்தது தான்... மேலும் அவர்களிடம் இருந்த வாங்கிய தொழில்நுட்பத்தை இப்போது இவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி அதை மெருகேற்ற கவாசாகி உதவி கேட்பது இல்லை ..
நல்ல கேள்வி....
Post a Comment