Monday, March 23, 2009

விமான நிலையம்

தூக்கத்திலேயே பதிவு எழுதுகிறேன் இன்று ஆமாம் நேற்றுஇரவு நண்பரை வரவேற்க விமான நிலையம் சென்று விட்டதால் இரவு தூங்க முடியவில்லை.விமான நிலையம் நிறைய மாறி இருந்தது,

உள்ளே நுழைவது ஒரு வருடத்திற்கு முன்னாள் காரில் சென்றால் ரொம்ப கஷ்ட்டம் இப்போது மிக சுலபம். அறுபது ரூபாய் கார் பார்க்கிங் என்பதற்கு எந்த வழியும் அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை அறிவிப்பு பெயர் வைத்த இடம் 100 ரூபாய் வாகன நிறுத்துமிடம். அநியாய கொள்ளைநேராக அங்கே சென்றவுடன் இது நூறு ரூபாய் கட்டணம் என்று கூறுகிறார்கள். விமான நிலையம் வழக்கம் போல சுத்தமில்லாமல் நம்ம ஊரு மக்கள் வழக்கம் போல ஒருபையனை வழியனுப்ப இருபது பேர் வண்டி கட்டிக்கொண்டு வந்தனர். ஆனால் கூட்டம் கடந்த வருடம் போல இல்லாமல் குறைந்தே இருந்தது, காரணம் தெரியவில்லை பொருளாதார மந்த நிலை??
நண்பரின் விமானம் சரியான நேரத்திற்கு வந்தது, நண்பர் அதிக சுமை எடுத்து வந்ததால் அவரிடம் இருந்த சில பொருட்களை எடுத்து செல்ல சென்றேன். எல்லாம் எடுத்து அடுக்கிவிட்டு கவரையும் வழியனுப்பிவிட்டு கிளம்பினேன்.

நான் கவனித்தவை

நம்ம ஊர் விமான நிலையம் எப்பயும் சந்தை கடை போல இருக்கிறது. (சின்ன வயசுல தூரத்துல மேலே பறக்கற விமானத்தை கண்ணு கூச பார்த்த நான் இப்படி சொல்றேன்)

மக்கள் எவ்வளவு நாள் வெளிநாட்டில் இருந்தாலும் இங்கு வந்தவுடன் நமது பழக்கத்தை அடுத்த நிமிடமே பழகிக்கொள்கின்றனர் (பின்ன என்னாங்க காரை நிறுத்திவிட்டு ஒரு நிமிடத்துக்குள் ஒரு ஆள் வந்து ஜாலியா சாஞ்சு நின்னுகிட்டு ஓய்வு எடுக்கிறார்)

வெத்து சீன் போடுறது வெளிநாட்டில் இருந்து வந்தால், ஒருவனை பார்த்தேன் காதில் ஐ பாடு மாட்டிக்கொண்டு ஆடிக்கொண்டே வந்தான். பக்க தமிழ் பையன் ஆனால் பெரிய லார்டு மாதிரி ஆட்டம். (டை நாங்கலாம் ஆடுன நீங்க தாங்க மாடீங்க)

மகளோ மகனோ வந்தால் ஒரு முப்பது ரூபாய் டிக்கெட்டை வாங்கி கொண்டு உள்ளே சென்று வழியிலே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அடுத்தவருக்கு வழியை மறைப்பது. (ஏன்யா உன் பிள்ளை தான, அதான் முழுசா எந்த வெள்ளைகாரியையும் கூட்டி வராம வந்துட்டான்ல கொஞ்சம் ஓரமா போய் கொஞ்ச வேண்டியது தான )

வெளியே வந்த உடனே சார் டாக்ஸி வேணுமா ஆட்டோ வேணுமாநு மொய்க்கிறது (ஏன்யா நாங்கதான் வேணாம்நு சொல்றோம்ல அப்பவும் கைய புடிச்சு இழுக்காத குறையா ஏன் கூப்பிடுறீங்க .கூட வந்த எங்க மூஞ்சி வெளிநாடு போயிட்டு வந்த மாதிரியா இருக்கு?? )

என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு சந்தோஷமும், காலைல அம்மாட்ட இட்லி சுட சொல்லி வச்சு வந்த நாளிலேயே சாப்பிடற சுகமும் எங்கங்க வரும். இதெல்லாம் மாறலாம் மாறாமல் போகலாம் பாசத்துடன் கிடைக்கும் அம்மாவின் சாப்பாடு எப்படி மாறும்.

4 comments:

jaisri said...

என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு சந்தோஷமும், காலைல அம்மாட்ட இட்லி சுட சொல்லி வச்சு வந்த நாளிலேயே சாப்பிடற சுகமும் எங்கங்க வரும்.

mmm antha sugame thani than...

பிரேம்குமார் said...

//நம்ம ஊரு மக்கள் வழக்கம் போல ஒருபையனை வழியனுப்ப இருபது பேர் வண்டி கட்டிக்கொண்டு வந்தனர்.//

இதுல என்ன இருக்கு தனா? எல்லோருக்கும் வழியனுப்ப போகனும்னு ஆசை இருக்கதா?

பிரேம்குமார் said...

//மகளோ மகனோ வந்தால் ஒரு முப்பது ரூபாய் டிக்கெட்டை வாங்கி கொண்டு உள்ளே சென்று வழியிலே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அடுத்தவருக்கு வழியை மறைப்பத//

முதலில் இதை படித்ததும் கோபம் வந்தது. என்ன தனா, இப்படி மத்தவுங்க உணர்ச்சிகள் புரிஞ்சுக்காம எழுதியிருக்காரேன்னு. அப்புறம், மக்கள் உணர்ச்சி பெருக்குல சமயத்தில் அடுத்தவர்களுக்கு தடங்கலாக இருந்துவிடுகிறார்கள் என்று நினைக்கும் போது நீங்கள் சொன்னது சரிதான் என்று பட்டது (ஆனாலும் கொஞ்சம் அதிகமா தான் நக்கல் பண்ணிட்டீங்க ;-))

DHANS said...

இதுல என்ன இருக்கு தனா? எல்லோருக்கும் வழியனுப்ப போகனும்னு ஆசை இருக்கதா?//

எல்லோருக்கும் ஆசையாய் தான் இருக்கும், தப்பு இல்லை வீட்டிலிருந்து வலி அனுப்பலாம் இல்லை என்றால் விமான நிலையம் வந்த வழியனுப்பலாம், இந்த டிசெக்ட் வாங்கி வந்து உள்ளே வந்து மற்றவரையும் தொந்தரவு செய்யும்போது கோபம் வருகிறது. இந்த வழியனுப்பு கூட்டத்தினால் எனது நண்பர் ஒருவர் விமானத்தை தவற விட நேர்ந்தது.

//இப்படி மத்தவுங்க உணர்ச்சிகள் புரிஞ்சுக்காம எழுதியிருக்காரேன்னு// அதே பதில்தான் இங்கும்மதவங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்காம தங்கள் மகனையோ மகளையோ விமான நிலைய வாசலிலேயே கொஞ்சனுமூ? கொஞ்சம் மத்தவங்களுக்கும் இடம் விட்டால் நன்றாக இருக்கும் தான. எனது சொந்த அனுபவத்தில் எழுதினேன் இதை, சரியாக எட்டு நிமிடம் ஆனது நான் விமான நிலைய வாசலை விட்டு வெளியேற அதுவும் பாதுகாப்பு காவலாளி அவர்களை நகர்ந்து நிற்க சொன்ன பிறகு நகர்ந்துசென்றனர்.

அப்படி என்னங்க நக்கல் ப்பிடேன் நான், உண்மைய சொனேன் அவ்வளவுதான் :)