இந்த முறை முட்டாள்கள் தினத்தை எப்படி கழிப்பது?? இந்த முறை யாரையது கண்டிப்பாக முட்டாளாக்க வேண்டும் என்று தோன்றுகிறது, நேற்றிலிருந்து யோசித்து வருகையில் ஒருவர் இல்லை இல்லை ஆறு பேர் சிக்கி உள்ளனர்.
ஆமாம் ஒரு ஆறு பேரை முட்டாளாக்க முடிவு செய்து விட்டேன். அவர்கள் யார் எப்படி என்பதை வெகு விரைவில் தெரிவிக்கிறேன். தகுந்த முன் ஏற்பாட்டுடன் எல்லாவிதமான திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
இப்படி தோன்றும்போதே இதை பதிவாக போட்டால் என்ன என்றும் தோன்றியது ஏனென்றால் நான் முட்டாளாக்க போகும் யாருக்கும் பதிவுலகம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் என் பதிவுகள் அவர்களை அடைய நெடு நாளாகும்.எனவே நேரலை போல இல்லாவிடிலும் திட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன். தங்களின் வரவேற்ப்பை பொருத்து...
வரவேற்ப்பு அதிகம் என்றால் திட்டம் செயல் வடிவம் பெரும்.
4 comments:
நானும் இந்த வேட்டையில் தான் இறங்கியுள்ளேன். இந்த வருஷம் 5 பேர் target. என்ன திட்டம் என்பதையும் ஓரளவுக்கு தீட்டிவிட்டேன்.
ஒரு சின்ன டிப்ஸ், ஏப்ரல் 1தேதி அன்று செய்வதைவிட, ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுங்க.... ஒரு வாரம் அவங்கள ஏமாத்திவிட்டு, அன்று விஷயத்தை போட்டு உடைச்சுடுங்க. இல்ல என்றால் சிலர் ரொம்ம்ப உஷார் பார்ட்டி, ஏப்ரல் 1 தேதி ஃபோன் பண்ணால், எடுப்பதே இல்லை!:)
கண்டிப்பாக முதல் தேதி கிடையாது ஒரு மூன்று நாட்கள் முன்னதாக செய்யலாம் என்று முடிவெடுத்து உள்ளேன்,
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
All the best
நன்றி ஜெயஸ்ரீ மற்றும் தமிழ்மாங்கனி
ஆனால் திட்டம் இப்போது நிருத்திவைகப்பட்டுள்ளது, எனது மாமாவின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் திட்டத்தை இப்போது செய்வது நல்லது இல்லை.
Post a Comment