Monday, May 25, 2009

ஒரு வாரத்தில் நடந்தவை

சில நாட்களாக பதிவு எழுதவில்லை, எழுத தோன்ற வில்லை இன்று எதாவது எழுத வேண்டும் என தோன்றியது எழுதுகிறேன்.

முதலில் என்னைப்பற்றி:
சில நாட்களாக நான் என் நிலையில் இல்லை என தோன்றுகிறது, ஆராய்ந்து பார்த்ததில் எனக்குள் எதோ ஒரு மாற்றம், இனம்புரியாத ஒன்று என்னை மாற்றிக்கொண்டு உள்ளது. என்னால் முயன்றவரை அது என்ன என்று கண்டுபுடிக்க முடியவில்லை, என் சோம்பேறித்தனம் அதிகமாகி உள்ளது. எந்த வேலையையும் செய்யாமல் காலம் தாழ்த்துதல், எதிலும் முழுமையாக கவனம் செலுத்தாமல் இருத்தல் போன்ற செயல்கள் அதிகமாகி உள்ளன.

காரணம் என்னவென்று தெரியவில்லை, பணக்கஷ்டம் வந்தாலே மனக்கஷ்டம் வந்துவிடும் அனால் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தால் அதை தீர்க்க காரணங்களை யோசிக்க மறந்து விடுவோம். அனுபவித்து புரிந்து மறுபடியும் அனுபவித்து சொல்கிறேன் வாழ்வில் கடன் கொடுக்காதீர்/ வாங்காதீர் அதிலும் நண்பர்களுக்குள். இரவல் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது மிக நலம்

சில காலங்களாக ஈழத்தமிழர் பிரச்சனை பதிவுலகில் அதிகம் எழுதப்படுகிறது, பிரச்சினையின் ஆழம் புரிந்தாலும் செய்திகளை அறியவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதிகமான உண்மை தெரியாத பதிவுகளால் எதையும்படிப்பதில்லை என முடிவெடுத்து உள்ளேன். என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்துகொண்டு புலம்பியும் மற்றவரை திட்டியும் என்ன ஆகப்போகின்றது? மனத்தால் என்னை நானே திட்டிக்கொண்டு அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி நகர்கிறேன். என்றோ ஒருநாள் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில்.

நேற்று வெகு நாட்களுக்கு பிறகு watchmen என்ற ஆங்கில படத்திற்கு போனேன். மூன்று வருடங்களுக்கு பிறகு சத்யம் சினிமாஸ். அடேங்கப்பா என்ன மாற்றம். சத்யம் சினிமாஸ் உன்னை மூன்று வருடங்களாக தவறவிட்டு விட்டேன். என்ன மாயாஜால் எப்பவுமே நமக்கு பிடித்த இடமாயினும் அங்கு இருக்கும் வேலையாட்களுக்கும் சத்யம் வேலையாட்களுக்கும் நிறைய வித்தியாசம். வேலையாட்களில் மட்டும் இல்லை எல்லாவற்றிலும். இவ்வளவு அழகான திரை அரங்கில் மறுபடியும் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க இப்படி ஒரு மொக்கை படம்தான கிடைத்தது?? படம் மரண மொக்கை. பின்னணி இசை மிக அற்ப்புதம் ஆனால் படம் மொக்கை.


நெடு நாட்களுக்கு பிறகு எனது கல்லூரி நண்பர்களை சந்தித்தேன், பெசென்ட் நகர் கடற்கரையில் சில நேரம் பேசிவிட்டு பின்னர் அங்குள்ள அஞ்சப்பர் உணவகத்தில் உணவு அருந்தினோம் ஐயோ என்ன விலை விக்கிறார்கள்? மற்றபடி உணவு மிக அருமை ஆனால் விலையோ மிக அதிகம் :)

********************************************************************************************************************

கார் வாங்கினதில் இருந்து செலவு அதிகம் ஆகிறது இருந்தும் மனது சன்தூசாம் அடைகிறது. எனது கார் பராமரிப்பில் என்னை விட எனது நண்பர்/ மெக்கானிக் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வது மனதை நெருடுகிறது. எனக்கு தெரிந்து மிக சிறப்பான வேலை செய்கிறார். தொழிலில் மிகுந்த அனுபவம் இருந்தும் இன்னும் நிறைய முன்னேற வேண்டி இருக்கிறது இவருக்கு. தனியாக ஒரு மெக்கானிக் ஷெட் வைத்திருக்கிறார், கூடிய விரைவில் சென்னையில் ஒரு சிறந்த மகிழுந்து பராமரிப்பு ஆளாக வருவார்.

மறுபடியும் பழைய சுறுசுறுப்பான நிலைக்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஏற்ப்பட்டு அதற்க்காக முயற்சிகளை ஆரம்பித்துள்ளேன்.

Tuesday, May 19, 2009

Leader

The world people has got prabakaran just like they have got Che Guevara

Sunday, May 17, 2009

மௌனம் மட்டுமே

இந்த பதிவு எழுவது எனக்காக மட்டுமே எதையும் எழுத தோன்ற வில்லை மௌனம் மட்டுமே மருந்தாக அமையும்

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவகள் அதிருப்தியை தருகின்றன, என்ன நடந்தாலும் வாழ்க்கை மேற்க்கொண்டு போக வேண்டும்.
அடுத்த சட்ட மன்ற தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்

தேமுதிக வெற்றி எனும் செய்தி வரும் அடுத்த தேர்தலில் அதுவரை விஜய காந்து தாக்கு புடிக்க வேண்டும், கட்சியை காப்பாற்றி வைக்க வேண்டும்.

கொங்கு முன்னேற்ற பேரவை பெரிய பதிப்பை ஏற்படுத்தி உள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். எனக்கு தெரிந்தவர் அனைவரின் ஓட்டுகளும் இதற்கே விழுந்துள்ளது இதற்க்கு காரணம் சாதிப்பற்று இல்லை, எவனுக்கு ஓட்டு போட்டாலும் ஒன்னும் பண்ணப்போறது இல்லை அதற்க்கு நம்ம ஆளுக்கு போட்ட ஏதும் வேணும் என்றால் போய் கேட்ட உடனே செய்து கொடுப்பார், பார்க்கறதுக்கு எளிது எனும் காரணங்கள் தான்.


கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி

யாருக்கும் தெரியாத ஒரு முன்னிரவில்
எல்லோருமே இருக்கும் பரபரப்பான சாலையில் 
யாவருமில்லா தனிமையை அனுபவித்து
என்னிடம் நீ வாங்கிய காதலை
மூன்றே மாதத்தில் திருப்பி தந்தாய் வட்டியுடன் 
ஆனாலும் அடுத்த ஆறு மாதத்தில் மொத்தமும் முடிந்ததென முடிவெடுத்து
எல்லாவறையும் மொத்தமாக முடித்து என் வாழ்க்கையை ஆரம்பித்ததன் நோக்கமென்ன?  

உன்னை காதலி என்பதா இல்லை தோழியா என்பதா இல்லை உலகை கற்றுகொடுத்த குரு என்பதா? நானே கேட்டு நானே பதில் சொல்லும் நிலைமை என்றுமே இனிமை.  
ரசனையை கற்றுக்கொடுத்த நீயும் கற்று அனுபவித்து வரும்நானும் என்றுமே நலமுடன் வாழ அவசியம் இந்த பிரிவு. 

கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி

Friday, May 15, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-4

பகுதி 3
நாள்தோறும் smsகள், forward mail என்று நடப்பு வளர்ந்து கொண்டு இருந்தது. treat போவதற்கு மட்டும் சரியான நாள் அமையவில்லை.
திடிரென்று ஒரு நாள் அவனுக்கு தோன்றியது, y dnt v meet today? என செய்தி அனுப்பினான்.

"naanum athan nenachen, iniku meet panalaama nu" பதில் வந்தது. மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. எதோ அவனது yamaha பைக்கில் ரேஸ் ஜெயித்து போன்ற உணர்வு.

" enga meet panalaam?" செய்தி அனுப்பினான், "hostel va " என்று பதில்.
hostela ஐயோ சுதா இருப்பாளே, ஒரு பைக் தான் இருக்கு ரெண்டு பேரையும் குட்டி போகனும்னா auto ல போகணும் என்று யோசித்துக்கொண்டு சுதாவுக்கு மெயில் அனுப்பினான்.

ஈவினிங் ப்ரீயா? treat போலாமா என்று, ஊருக்கு போகிறேன் என்று பதில் வந்தது.

சரி உன்ன டிராப் பண்ணிட்டு போறேன் என்றுசொல்லிவிட்டு, "ethana manikku meet பண்லாம்" என்று அனுப்பினான், பின்னாலேயே "7.30 to 8 pm tonght? " என்று அனுப்பினான்.

yes என்று பதில் வந்தது, சரி "call u evening " என்று பதில் அனுப்பிவிட்டு வேளையில் மூழ்கினான்.

மாலை சுதாவை கூடிக்கொண்டு போகும்போது சில அலுவலக கண்கள் அவர்களை மொய்ப்பதை கவனிக்க தவறவில்லை.

சோகமாக இருந்தாள், ஏன் சுதா சோகமா இருக்க என்ன ஆச்சு என்று கேட்கையில், அவளது அக்கா பையனுக்கு உடம்பு சரி இல்லை அதான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அமைதியானாள். கவலைபடாதே என்று ஆறுதல் படுத்திவிட்டு அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு கிளம்பினான். சிறிது தூரம் நடந்திருப்பான்.
பேருந்து கிளம்ப்பத்தொடங்கும்போது திடிரென்று சுதாவிற்கு யாரோ அழைப்பது போல தோன்ற திரும்பினால், கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் கேக் உடன் கதிர்.

" எப்படியும் நீ சாப்பிட மாட்ட அதான் இத சாப்பிடு" என்று கையில் திணித்துவிட்டு இறங்கி சென்றான், அவன் போவதையே பார்த்துகொண்டிருந்தாள் சுதா.

மொபைலை எடுத்து " thanks for being my friend" என்று அனுப்பினாள்.பதில் உடனடியாக வந்தது " i dnt need ur thx, hav a safe jurny.gve me a call r sms hn u rech." என்று.

"drive safe, take care" என்று பதில் அனுப்பினாள், ஏனோ தெரியவில்லை இவனுக்கு என்மேல ரொம்ப அக்கறை என்று தோன்றியது.

சரியாக கதிர் 7.15 க்கு hostel அருகே நின்று கொண்டு இருந்தான். அவள் வந்தால், அவனுக்குமுதன்முறை ஒரு பெண்ணோடு வெளியே செல்வது எங்கு போவது என்று தெரியவில்லை.

ஹை எப்படி இருக்க? லேட் ஆகிவிட்டதா? என்று கேட்டபடி வந்தாள். 'இல்லை இப்பத்தான் வந்தேன் 'என்று சொல்லியபடி சிரித்தான்.
எங்கயாது போகலாம் இங்க பேச வேண்டாம் hostel ல பார்த்தா திட்டுவாங்க என்று சொல்லியபடி நின்றாள், வண்டியை கிளப்பி திருப்பி நிறுத்தினான். "எப்படி உட்க்கார?" என்று கேட்டால், எப்படி உனக்கு இஷ்டமோ அப்படி உட்கார் என்று பதில் கொடுத்தான்.

வண்டி கிளம்பியது இருவரும் பேசவில்லை எங்க போகலாம் என்று கேட்டான், "எனக்கென்ன தெரியும் நீ எங்க கூட்டிக்கொண்டு போறியோ அங்க வருவேன்" என்றாள்.

"எங்கயாது சாப்பிட போலாமா?" என்று கேட்டான். போலாமே என்று பதில் கூறினாள். "எங்க போறது?" என்று இவன் கேட்க எனக்கு எந்த இடமும் தெரியாது நீ எங்க போறியோ அங்க வரேன் என்று கூறிவிட்டாள். ஆபிஸ் பக்கதுல இருக்கும் ஹோட்டல் போகலாம் என்று தோன்றியது.

வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தான், எங்கு செல்கிறோம் என்பதையே மறந்து வழி எல்லாத்தையும் மறந்து வண்டியை ஓடிக்கொண்டு இருக்கும் பொது கேட்டாள் "எங்க கூட்டிட்டு போற" என்று அப்போதுதான் நியாபகம் வந்தது வழி மாறி எங்கோ சென்று கொண்டு இருக்கிறோம் என்று. எப்படியோ பத்து நிமிடத்தில் போகும் இடத்தை நாற்ப்பது நிமிடத்தில் அந்த ஹோட்டேல் சென்று அடைந்தனர்.

அன்று அவனின் கனவு நனவாகியது முதன்முதலாக ஒரு பெண்ணுடன் உணவருந்தினான். அதுவும் மனதுக்கு மிக பிடித்த பெண்ணுடன் என்று தோன்றியது.
மறுபடியும் அவளை கொண்டு விட்டுவிட்டு திரும்புகையில் வண்டியை மிக வேகமாக ஆனால் நிதானம் தவறாமல் ஓட்டி சென்றான். அனுபவித்து வண்டி ஓட்டும்போது இருக்கும் நிறைவே நிறைவு. இவன் இப்படித்தான் மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது வேகமாக வண்டி ஓட்டுவான் சோகமாக இருக்கும்போது மிகவும் அனுபவித்து மெதுவாக ஓட்டுவான்.

வீடு வந்து சேர்ந்து "reched home, wat u doing " என்று கேட்டு செய்தி அனுப்பினான்.
"aftr a lng time i had gud dinner. so gng 2 sleep " என்று பதில் வந்தது.
"me 2, gud nte, slp wel" என்று பதில் அனுப்பிவிட்டு தூங்க சென்றான்.

Wednesday, May 13, 2009

பசங்க பாகம் இரண்டு

பசங்க படம் இரண்டாம் பாகம் போயிருந்தேன் எனது சென்னை நண்பர்களுடன் , உடன் வந்த நண்பர்கள் இருவரும் இரு துருவங்கள், ஒருவர் எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாய் இருப்பவர் , இன்னொருவர் அமைதியாக இருப்பவர்,  

வற்புறுத்தி அவர்களை இந்த படத்துக்கு அழைத்து சென்றேன், அவர்கள் என்னை அழைத்தது குரு என் ஆளு படத்துக்கு, விவேக் காமெடி நல்ல இருக்கும் என்று சொல்லி அந்த மொக்கையை பார்க்க அழைத்தனர் நல்ல வேலை ஆராதனா திரை அரங்கு என்னை காப்பாற்றியது பசங்க படம் போட்டு. படத்தை பார்க்க ஆரம்பித்ததும் அவ்வப்போது வெளியே சென்று வந்தனர், இடையில் போன் வேறு, ரசித்துபார்த்தனர் இருந்தாலும் அந்த அளவுக்கு இல்லை, ஒரு வேளை புதுக்கோட்டை தமிழ் புரியலையோ இல்லை ஒரு மாநகரத்து பள்ளி வாழ்க்கை இல்லாமல் ஒரு டவுன் பள்ளி வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும் . 

படம் முடியும் தருவாயில் ரொம்ப ஓட்டிவிட்டனர், பாவம் டைரக்டர், கண்டிப்பாக அவர் சென்னை மக்களுக்காக இந்த படத்தை எடுத்திருக்க மாட்டார். சென்னை மக்களுக்கு ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன் சென்னை மட்டுமே தமிழ் நாடு இல்லை அதையும் தாண்டி பல இடங்கள் சேர்ந்ததுதான் தமிழ்நாடு. படம் முடிந்து இருவரும் அடித்த கமெண்ட் படத்துல வடிவேலு இல்லை விவேக் சேர்த்து இருக்கலாம் படம் முழுக்க காமெடி இல்லை, இவர்கள் இருந்திருந்தால் படம் சூப்பெரா இருக்கும் என்றனர், எனக்கு எங்கு போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை . 

இதுக்கு மேல என்ன எழுதறது, படத்த இரண்டாவது முறை பார்க்கும்போது கதையில் சொல்லியிருந்த சினன் சின்னகவிதைகள் விஷயங்கள் பல புரிகின்றது. இன்னொரு முறை மற்றும் ஒரு வித்தியாசமான நண்பர்களுடன் பார்க்க வேண்டும் எனக்கு தெரிந்துஉலகிலேயே சின்ன கேள்வி இதான் - ? அதற்க்கு பதில் இதுவாக இருந்திருக்குமா - ! கேள்வி ? பதில் ! திடிர்ன்னு ஏதோ தோணிச்சு அதான் இதை பதிவுல சேர்த்துகிட்டேன்

Tuesday, May 12, 2009

வெல்கம் டு சிஃபி கஷ்டமர் கேர்

டேய் நாம ரொம்ப நாளா பிராட்பாண்ட் கனக்சன் வாங்கணும் என்று சொல்லிகிற்றுந்த தான சிஃபி ல வாங்கலாமா என்றான் என் நண்பன், ஏண்டா ஏற்க்கனவே நான் ஏர்டெல் தான் வச்சுருந்தேன் அந்த கனக்சன அப்படியே வச்சுக்கலாம் த என்றேன்.

இந்த பிளான் நல்ல இருக்கு பகல்ல 256 kbps நைட்ல 512 kbps unlimited மாசம் 1122 ரூபாய் தான். வேளச்சேரி பகுதில சிஃபி நல்ல ஸ்பீடா இருக்கு நானும் கேள்விபட்டேன் என்றான். நமக்கும் வெகு நாளாக இணைப்பு குடுக்க வேண்டும் என்று தோன்றியதால் கொடுத்தோம். இணைப்பு கொடுத்து முதல் பத்து நாட்களுக்கு ஒழுங்காக வேலை செய்தது அப்போதும் ஒரு கணினி மற்றும் மடிக்கணினி இடிப்பில் சில சிறு பிரச்சனைகள் ஏற்ப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.

பத்து நாட்களுக்கு பிறகு தொடர்பை ஏற்படுத்துவதில் முதல் பிரச்சனை இரவு எட்டு மணிக்கு மேல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் விட்டுவிட்டோம் பின்னர் இணைப்பு கொடுத்த நபரை கூப்பிட்டு சரிசெய்ய சொல்லி கேட்டோம் பின்னர் இரண்டு நாளில் சரி ஆனது. மறுபடியும் இணைப்பை புதுப்பிக்கும் போது சரி ஆனது, இரண்டாவது மாதமும் புதுபித்து பதினைந்து நாட்களில் மறுபடியும் இரவில் இணையத்தில் தொடர்பு ஏற்படுத்துவதில் பிரச்சனை.

வாடிக்கையாளர் சேவை மையம் என்று ஒரு நம்பர் உண்டு, அதுக்கு கால் செய்தால் ஒன்னு ஏதேதோ பேசிவிட்டு பின்னர் அமைதி ஆகிவிடும் இல்லை என்றால் பாதில கட் ஆகிவிடும். இரண்டாவது மாதமும் போராடிவிட்டு பின்னர் புதுப்பித்தோம் ஆனால் இந்த முறையும் அதே பிரச்சனை, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் நம்பர் 1 அழுத்தவும் பின்னர் இந்த தொல்லை என்றால் நம்பர் 2 அழுத்தவும் எல்லாம் சொல்லி கடைசியில் எல்லாத்தையும் அழுத்திவிட்டு எவனாது பேசுவான் என்று காத்திருந்தால் லைன் ஊமை ஆகிவிடுகிறது. விடாமல் முயற்சி செய்ததில் 41 வது முயற்சியில் வெற்றி, ஒரு அதிகாரி பேசினார், எல்லா கதையும் சொல்லி சரி செய்ய சொல்லுப்பா என்றோம். அவரும் சரி சொல்கிறேன் நாளைக்கு சரி ஆகிவிடும் என்று கூறி அமைதிப்படுத்தினார்

ஆனால் அதுக்கப்புறம் இதே போல 40 முறை முயன்று புகார் கொடுத்தது இது வரை 8 தடவை. இடைப்பட்ட காலத்தில் அட புகார் குடுக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுதுன்னு விட்டுடோம்.

கடசியா ஒருத்தன்கிட்ட பேசினப்போ அவன் பேசினது இருக்கே அப்பா அவன் மட்டுமே பெருசா படிச்சு கிழிச்ச மேதாவி மாதிரியும் எங்களுக்கு எதுமே தெரியாத மாதிரியும் பேசறான், இதுல என் அறை நண்பன் network engineer அவன்கிட்ட எதோ அத மாத்து இதமாத்து என்று சொல்லி வாங்கி கட்டிகிட்டான், அவங்க மேலதிகாரி நம்பர கேட்டா குடுக்க மாட்டேன்கறாங்க, இவர்களுக்கு பேச புடிக்கல என்றால் பாதில கால கட் பண்றாங்க. ஏண்டா சிஃபி இணைப்பு வாங்கினோம் என்றாகிபோச்சு, இந்தமாசத்தோட அவங்க கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிடலாம் என்று இருக்கோம்.

ஈமெயில் அனுப்பினா பதில் இல்லை போன் பேசினால் சரியான பதில் இல்லை இந்த வாரம் நேர்ல போலாம் என்று இருக்கோம். ஆபிஸ் வேற டைடல் பார்க்குல இருக்காம், கலர் கலரா பிகர்லாம் இருக்கும் அங்க போய் ஒரு சவுண்ட் குடுத்துட்டு சீன் போட்டு வரலாம் என்று ஒரு யோசனை.

ஏன் ஏர்டெல் வச்சுருந்து பின்னர் சிஃபி மாறினேன் என்ற கேள்விக்கு பதில்.

ஏர்டெல் வச்சிருந்தேன் இடைல நம்ம ஊர்ல இல்லாம போய்ட்டோம் அதனால இணைப்ப தற்காலிகமா துண்டிச்சு வச்சுருந்தேன் அப்புறம் ஒரு வருசமா உபயோகப்படுத்தாம இருந்ததால முற்றிலும் துண்டிசுடாங்க மறுபடியும் வேணும்னா டெபாசிட் கட்ட சொன்னாங்க, ஏற்கனவே கொடுக்கும்போது அஞ்சு பைசா டெபாசிட் கட்டாம கொடுத்தாங்க இப்ப கட்ட சொன்னா?

ஆனா மறுபடியும் ஏர்டெல் இணைப்பத்தான் கொடுக்கணும் போல. ஒரே இணைப்பில் இரண்டு கணினியை இணைக்க முடியுமா என்று தெரியவில்லை அதனால் தான் யோசிக்கிறோம்.

தயவு செஞ்சு யாரும் சிஃபி இணைய தொடர்பு வாங்கிடாதீங்க அவங்களுக்கு கஸ்டமரும் கிடையாது சர்வீசும் கிடையாது ஆனா கஸ்டமர் சர்வீஸ் உண்டு.


பி எஸ் என் எல் கொடுக்கலாம் என்று யாரவது பின்னூட்டத்தில சவுண்ட் விட்டீங்க அவ்வளவுதான், ஏற்கனவே அவங்க கிட்ட நான் பட்ட அவஸ்தைய இங்க பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க .

Saturday, May 9, 2009

சச்சின் ஒரு சகாப்தம்





இந்த புகைப்படங்கள் போதும், ஒருவராவது அமர்ந்து உள்ளார்கள??


 
how many of them had got this standing ovation fromAustralian crowd???  
கீழுள்ள புகைப்படம்

Bad boy of world cricket shaking hands with good boy of world cricket



Friday, May 8, 2009

பசங்களும் நானும்

பசங்க படம் பார்த்தீன் சில நாட்களுக்கு முன்னாள்
என்னுடைய பள்ளிக்கால நாட்கள் நினைவுக்கு வந்ததை மறக்க முடியாது.

அந்த ஓட்டை டவுசரும், சட்டையை இன் செய்து போவது போன்ற நினைப்பும், சைக்கிள் வாங்க வேண்டும் என்ற கனவும், கோஸ்டி சேர்த்து பூட்டி போடுவதும் என்று மறக்க முடியா நினைவுகள்.

வகுப்பு கரும்பலகையில் பெயர் எழுதும் வகுப்பு தலைவன் : இந்த கதாபாத்திரத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்ன அப்போதெல்லாம் வகுப்புக்கு தேர்தல் கிடையாது, வெறும் ஆசிரியர் யாரை சொல்கிறாரோ அவர்தான், நன்றாக படித்ததால் நான் மட்டுமே அந்த போஸ்ட்டுக்கு அன்னப்போஸ்ட்டாக வந்துகொண்டு இருந்தேன்.

பேர் எழுதும் பொது எல்லாம் பெண்கள் பெயரை எழுதாமல் விடும் வழக்கம் என்னிடம் இல்லை, ஆமா நான் படிச்சது ஆண்கள் பள்ளி. ஆனால் பின்னால் கடைசி வரிசைல இருக்கும் யார் பெயரும் வராது.
மாலையில் மக்கள் கடையில் கரம் வாங்கி தருவது அவர்கள் மட்டுமே :)

எனக்கும் போட்டிக்கென்று ஒருத்தன் வந்தான் முதல் மூன்று ரேங்க் எடுக்கும் எனக்கு போட்டியாக வந்தது செந்தில் நாதன், ஆமாம் முதல் தடவை அவனை சாதாரணமாக நினைத்து முதல் ராங்க்கை அவனிடம் இழந்தேன், அடுத்த முறை எட்டாவது ரேங்க் தள்ளப்பட்டேன், அப்போதுதான் இந்த உலகில் போட்டி என்பது உள்ளது என்று புரிந்துகொண்டேன். அய்ந்தாவது வரை எப்போதும் முதல் ரேங்க் எடுத்தவனுக்கு போட்டி என்பது ஒன்று உண்டு அதற்க்கு உன்னை தகுதிபடுத்தி தயார் படுத்த வந்தவன்தான் அவன் என்று புரிந்துகொள்ள நான் எட்டாவது ரேங்க் போக வேண்டியது அவசியமாயிற்று. என் வாழ்க்கையிலேயே மிக மோசமாக அழுதது அன்றுதான் எப்படி ரேங்க் சீட்டை வீட்டில் காட்டுவது என்றும், இப்படி படிக்காமல் போய்ட்டோமே என்றும் இன்னும் என்னனமோ எண்ணங்கள். நம்மை சாதாரணமாக ஜெயித்துவிட்டனே என்ற வன்மமும் தலை தூக்கியது.

அப்புறம் அடுத்தமுறை இரண்டு மார்க்கில் அவனை ஜெயித்து மீண்டும் பெயரை நிலைநாட்டினேன். அடுத்த ஒரு வருசத்துக்கு எங்களுக்குள் பலமான போட்டி அந்த போட்டியில் இன்னும் சிலர் சேர்ந்துகொள்ள அப்போதுதான் போட்டியைப்பற்றிய பயம் என்னுள் வந்தது. நம்ம கூடவும் சில கதாபாத்திரங்கள் பசங்க படம் போல இருந்தனர், அவன் அதை பண்றான் நீ என்ன பண்ற என்று சொல்லி காட்டி உசுப்பு ஏற்றிவிட.

அப்புறம் என்ன அடுத்த ஒரு வருடத்துக்கு என்று சொல்லும்போதே தெரிந்து இருக்கணும் இரண்டு பேரில் ஒருவர் வேறு பள்ளிக்கு சென்றிருக்க வேண்டும் , அது நான் தான், எட்டாவதில் பள்ளி மாறினேன், அன்றுடன் முடிந்தது என்னுடைய ரேங்க் சகாப்தம், அப்புறம் கடைசி பத்து ரேங்க் மட்டுமே நம்ம ஏரியா , தமிழ்மீடியம் பள்ளியில் இருந்து ஆங்கில மீடியம் பள்ளிக்கு மாறுவது என்பது மிகப்பெரிய ரிஸ்க் அதை அப்போது தைரியமாக என்னை எடுக்க வைத்து தள்ளி விட்டனர் என் அண்ணனும் அப்பாவும் (நன்றி அண்ணா).

அப்போது எனக்கிருந்த மனநிலையை காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். முதல் இடைத்தேர்வு தேர்வுத்தாளை எடுத்துக்கொண்டு ஆங்கில வழியிலே படித்த பையனின் தேர்வுத்தாளையும் எடுத்து பக்கத்துக்கு மாணவரிடம் கொடுத்து என் தேர்வுத்தாளில் பிழை இல்லாத எழுத்துக்களை எண்ணி சொல்ல சொன்னார், அந்த பையனின் தாளில் பிழை உள்ள எழுத்துக்களை எழுத சொன்னார். நம்முது எட்டு அந்த பையனுது ஐந்து. அதுல கூட நம்ம தான் அதிகம் ஆனாலும் அத வெளிய சொல்லி அந்த பையன அவமானபடுத்திட்டார் எங்க சோசியல் சைன்ஸ் ஆசிரியர், அதுக்கு பதிலாக அவர் பாடத்தில் பத்தாவதில் பதினேழு மதிப்பெண் வாங்கி அவரை நான் அவமானப்படுத்தினது தனி கதை, நன்றி சுலக்சனா டீச்சர்.


அடுத்த வகுப்பு தமிழ் வகுப்பு அந்த ஆசிரியை இதே போல இன்னொரு கேள்வி கேட்டு என்னை அசிங்க படுத்தினார், தமிழ் வழியில் இருந்து வந்து எந்த பாடத்திலும் தோல்வி அடையாதவன் இவன், முதல் வகுப்பில் இருந்து ஆங்கில வழியில் படித்து பெயில் ஆனவர்கள் எண்ணிக்கை எத்தனை என்பதை கூறி அசிங்கப்படுத்திவிட்டார் அதற்கும் பதிலடி பத்தாவதில் அவர் பாடத்தில் பள்ளியில் முதல் மூன்று இடத்தில வந்தேன். நன்றி லக்ஷ்மி டீச்சர்.

படத்தை பார்த்து அதை விமர்சனம் பண்ணலாம் என்றுலாம் எழுதலை ஆனாலும் அதை பற்றி எழுதப்போய் என்னைப்பற்றி வந்துவிட்டது, என்ன இருந்தாலும் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள். செந்தில்நாதா நீ எதோ ஒரு பொட்டி தட்டும் வேளையில் இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி, என் வாழ்விலும் போட்டியை கொண்டு வந்ததுக்கு.

முதல் ரேங்க் வாங்கி கற்றுக்கொள்ளாததை கடைசி ரேங்க் வங்கி கற்றுக்கொண்டேன், வாழ்க்கையை அதன் போக்கை எல்லாவற்றையும் அந்த கடைசி பத்து ரேங்க் மட்டுமே கற்றுக்கொடுத்தது.

என்னைப்பொறுத்தவரை நான் படிப்பில் முதல்பத்து இடத்திலும் கடைசி பத்து இடத்திலும் இருந்து இருக்கிறேன், கண்டிப்பாக முதல் பத்து இடம் என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே, வெறும் உலகம் தெரியாதவனாக உலகத்தை நடத்தும் மிகப்பெரிய கூடத்தில் முறையை புரியாமல் இருக்க மட்டுமே லாயக்கு, கடைசி பத்து என்பது உலகத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, எப்போதும் ஒரு வித போட்டியும், தயாரிப்பும் தேவைப்படும் இடங்கள். உன்னை எப்போதும் ஒரு விதமான தகுதிக்கு தயார் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அந்த இடத்தில் அதனால் நீ அடையும்பயன் பின்னாளில் உனக்கு தெரியும்.

தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் பசங்க படத்தை பார்த்தவுடன் அவர்கள் பள்ளி நியாபகம் வருவது தவிர்க்க முடியாதது

Thursday, May 7, 2009

உன் ஒற்றை வரி....

எதற்கும் கலங்காத கல் நெஞ்சக்காரான்

கடவுளே இவனுக்கு கல்லாகத்தான் தெரிவார்

முசுடு, பேசத்தேரியாதவன், எதுக்கும் கவலையே படாதவன்

பாசமில்லாதவன், பிழைக்கத்தெரியாதவன், உறவை மதிக்கத்தெரியாதவன்

இன்னும் எத்தனை எத்தனை பேச்சுக்கள், எத்தனை வசவுகள்
எதற்கும் அஞ்சாதவந்தான், கவலையே படாதவன்தான்.


என்னுள் நீ கொடுத்த இந்த மாற்றம் உன்னையே மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும் அளவுக்கு மிகப்பெரியது,

இருந்தும் உன் ஒற்றை வரியில் என் அத்தனையையும் மாற்றியது, உன் போலி மகிழ்ச்சிக்காக இதையும் தாங்கிக்கொள்வேன் என்று உன்னுள் நம்பிக்கை ஏற்ப்படுத்தும் அளவுக்கு வலி பழகிப்போனதாக இருக்கலாம் ஆனாலும் வலியும் நியாபகங்களும் என்றுமே வலியும் நியாபகங்களும்தான். உன் போலி மகிழ்ச்சிக்காக அவற்றை போலியாக்கதே. இழப்பு என்பது இருவர்க்கும்தான்

Wednesday, May 6, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-3

பகுதி 2
எதுக்கு இவ்ளோ கோவமா சென்றாள் என்று புரியாமல் இருக்கைக்கு வந்தான், வேலை நிறைய இருந்தாலும் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைத்து விட்டு சுதாவுக்கு மெயில் பண்ணினான், "என்ன ஆச்சு ஏதும் கோவமா?" என்று.

treat மட்டும் என்கிட்டே கேளு ஆனா நேத்து உதவின்னு கேட்ட நீ பாட்டுக்கு நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கட் பண்ணின, என்ன எதுன்னு கேட்க மாட்ட. பதில் இப்படி வந்தது..

உடனே அவளுடைய extn க்கு கால் பண்ணினான், நேத்து நீ பேசினப்ப நான் அவ கூடத்தான் இருந்தேன், அந்த பக்கமா போறப்ப திரு திருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா என்ன ஆச்சுன்னு கேக்கலாம் என்று நின்னேன் நீ கால் பண்ணிட்ட. அதான் நான் அப்படி சொன்னேன் என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

sorry கதிரா எனக்கு இதெல்லாம் தெரியாது உன்கிட்ட அவ நம்பரும் இல்லை, அப்புறம் பேசினப்ப சுரேஷ் கொண்டு வந்து விட்டான்னு சொன்ன ரொம்ப கோவம் வந்துடுச்சு, உன்கிட்ட ஒரு உதவி கேட்டா இப்படித்தான் பண்ணுவியா என்று.


மறுபடியும் கேட்டப்பக்கூட நீ சரியாய் பேசாத மாதிரி தெரிஞ்சுது அவளும் ஆட்டோல வந்து இறங்கினா அதான் கோவம்.எதுவுமே பண்ணாம treat கேக்கறது பாருன்னு கோவம் வந்தது டா அதான்.

சமாதான படுத்திவிட்டு மொபைலை எடுத்தான், sry i slept yest, hpe u r busy dnt wanna dis u. sms u l8r. என்று அனுப்பினான். உடனே வந்தது பதில் its k i too slept imm.. also im nt too busy, என்று பதில் வந்தது

ஆகா வேலை கிடக்குது என்று மனதில் நினைத்துக்கொண்டு 1st time i hrd dat 1 SW engg telng c s nt bsy. 2 strange... என்று அனுப்பினான். கோவமாய் பதில் வரும் என்று நினைத்து, ஆனால் வந்தது வேறு. actly im too bsy bt i thgt i nd a brk n imm i gt ur msg. so i replid u. so hw abt thr?

nthng bsy,just chkig fwd msg. hey chk ur mail என்று சொல்லி அனுப்பினான் ( மனசு திட்டியது, அட பாவி எவ்ளோ வேலை இருக்கு நீ என்னடா சொல்ற என்று)ஒரு fwd மெயில் அனுப்பினான் , அவனுக்கு பிடித்த ஒன்று, ஒரு game இருக்கும் அதில்.

thx 4 d mail, will see u l8r ltl bsy என்று பதில் வந்தது... அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை அவனுக்கு

தொடரும்

திடிரென்று அலுவலக வேலை வந்து விட்டதால் இந்த பகுதி இத்தோடு முடிக்கப்படுகிறது