Tuesday, May 12, 2009

வெல்கம் டு சிஃபி கஷ்டமர் கேர்

டேய் நாம ரொம்ப நாளா பிராட்பாண்ட் கனக்சன் வாங்கணும் என்று சொல்லிகிற்றுந்த தான சிஃபி ல வாங்கலாமா என்றான் என் நண்பன், ஏண்டா ஏற்க்கனவே நான் ஏர்டெல் தான் வச்சுருந்தேன் அந்த கனக்சன அப்படியே வச்சுக்கலாம் த என்றேன்.

இந்த பிளான் நல்ல இருக்கு பகல்ல 256 kbps நைட்ல 512 kbps unlimited மாசம் 1122 ரூபாய் தான். வேளச்சேரி பகுதில சிஃபி நல்ல ஸ்பீடா இருக்கு நானும் கேள்விபட்டேன் என்றான். நமக்கும் வெகு நாளாக இணைப்பு குடுக்க வேண்டும் என்று தோன்றியதால் கொடுத்தோம். இணைப்பு கொடுத்து முதல் பத்து நாட்களுக்கு ஒழுங்காக வேலை செய்தது அப்போதும் ஒரு கணினி மற்றும் மடிக்கணினி இடிப்பில் சில சிறு பிரச்சனைகள் ஏற்ப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.

பத்து நாட்களுக்கு பிறகு தொடர்பை ஏற்படுத்துவதில் முதல் பிரச்சனை இரவு எட்டு மணிக்கு மேல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் விட்டுவிட்டோம் பின்னர் இணைப்பு கொடுத்த நபரை கூப்பிட்டு சரிசெய்ய சொல்லி கேட்டோம் பின்னர் இரண்டு நாளில் சரி ஆனது. மறுபடியும் இணைப்பை புதுப்பிக்கும் போது சரி ஆனது, இரண்டாவது மாதமும் புதுபித்து பதினைந்து நாட்களில் மறுபடியும் இரவில் இணையத்தில் தொடர்பு ஏற்படுத்துவதில் பிரச்சனை.

வாடிக்கையாளர் சேவை மையம் என்று ஒரு நம்பர் உண்டு, அதுக்கு கால் செய்தால் ஒன்னு ஏதேதோ பேசிவிட்டு பின்னர் அமைதி ஆகிவிடும் இல்லை என்றால் பாதில கட் ஆகிவிடும். இரண்டாவது மாதமும் போராடிவிட்டு பின்னர் புதுப்பித்தோம் ஆனால் இந்த முறையும் அதே பிரச்சனை, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் நம்பர் 1 அழுத்தவும் பின்னர் இந்த தொல்லை என்றால் நம்பர் 2 அழுத்தவும் எல்லாம் சொல்லி கடைசியில் எல்லாத்தையும் அழுத்திவிட்டு எவனாது பேசுவான் என்று காத்திருந்தால் லைன் ஊமை ஆகிவிடுகிறது. விடாமல் முயற்சி செய்ததில் 41 வது முயற்சியில் வெற்றி, ஒரு அதிகாரி பேசினார், எல்லா கதையும் சொல்லி சரி செய்ய சொல்லுப்பா என்றோம். அவரும் சரி சொல்கிறேன் நாளைக்கு சரி ஆகிவிடும் என்று கூறி அமைதிப்படுத்தினார்

ஆனால் அதுக்கப்புறம் இதே போல 40 முறை முயன்று புகார் கொடுத்தது இது வரை 8 தடவை. இடைப்பட்ட காலத்தில் அட புகார் குடுக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுதுன்னு விட்டுடோம்.

கடசியா ஒருத்தன்கிட்ட பேசினப்போ அவன் பேசினது இருக்கே அப்பா அவன் மட்டுமே பெருசா படிச்சு கிழிச்ச மேதாவி மாதிரியும் எங்களுக்கு எதுமே தெரியாத மாதிரியும் பேசறான், இதுல என் அறை நண்பன் network engineer அவன்கிட்ட எதோ அத மாத்து இதமாத்து என்று சொல்லி வாங்கி கட்டிகிட்டான், அவங்க மேலதிகாரி நம்பர கேட்டா குடுக்க மாட்டேன்கறாங்க, இவர்களுக்கு பேச புடிக்கல என்றால் பாதில கால கட் பண்றாங்க. ஏண்டா சிஃபி இணைப்பு வாங்கினோம் என்றாகிபோச்சு, இந்தமாசத்தோட அவங்க கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிடலாம் என்று இருக்கோம்.

ஈமெயில் அனுப்பினா பதில் இல்லை போன் பேசினால் சரியான பதில் இல்லை இந்த வாரம் நேர்ல போலாம் என்று இருக்கோம். ஆபிஸ் வேற டைடல் பார்க்குல இருக்காம், கலர் கலரா பிகர்லாம் இருக்கும் அங்க போய் ஒரு சவுண்ட் குடுத்துட்டு சீன் போட்டு வரலாம் என்று ஒரு யோசனை.

ஏன் ஏர்டெல் வச்சுருந்து பின்னர் சிஃபி மாறினேன் என்ற கேள்விக்கு பதில்.

ஏர்டெல் வச்சிருந்தேன் இடைல நம்ம ஊர்ல இல்லாம போய்ட்டோம் அதனால இணைப்ப தற்காலிகமா துண்டிச்சு வச்சுருந்தேன் அப்புறம் ஒரு வருசமா உபயோகப்படுத்தாம இருந்ததால முற்றிலும் துண்டிசுடாங்க மறுபடியும் வேணும்னா டெபாசிட் கட்ட சொன்னாங்க, ஏற்கனவே கொடுக்கும்போது அஞ்சு பைசா டெபாசிட் கட்டாம கொடுத்தாங்க இப்ப கட்ட சொன்னா?

ஆனா மறுபடியும் ஏர்டெல் இணைப்பத்தான் கொடுக்கணும் போல. ஒரே இணைப்பில் இரண்டு கணினியை இணைக்க முடியுமா என்று தெரியவில்லை அதனால் தான் யோசிக்கிறோம்.

தயவு செஞ்சு யாரும் சிஃபி இணைய தொடர்பு வாங்கிடாதீங்க அவங்களுக்கு கஸ்டமரும் கிடையாது சர்வீசும் கிடையாது ஆனா கஸ்டமர் சர்வீஸ் உண்டு.


பி எஸ் என் எல் கொடுக்கலாம் என்று யாரவது பின்னூட்டத்தில சவுண்ட் விட்டீங்க அவ்வளவுதான், ஏற்கனவே அவங்க கிட்ட நான் பட்ட அவஸ்தைய இங்க பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க .

6 comments:

Karthik said...

எனக்கு இப்போதைக்கு இந்த கவலைகள் ஏதும் இல்லை.ஆனால் நல்ல பதிவு. :)

//ஆபிஸ் வேற டைடல் பார்க்குல இருக்காம், கலர் கலரா பிகர்லாம் இருக்கும் அங்க போய் ஒரு சவுண்ட் குடுத்துட்டு சீன் போட்டு வரலாம் என்று ஒரு யோசனை.

அடச்சீ, சீரியஸா போய்க்கிட்டிருந்த பதிவில் இப்படி எதிர்பார்க்காம ஜோக் வந்துச்சா, சத்தம் போட்டு சிரிச்சுட்டேன். என் ப்ரெண்ட் என்னை வித்யாசமா பார்க்கிறான். :))

DHANS said...

@ karthik

I hope there wont be any problem like this in Airtel. customer care is too good and speed is also good when u pay little extra.

//அடச்சீ, சீரியஸா போய்க்கிட்டிருந்த பதிவில் இப்படி எதிர்பார்க்காம ஜோக் வந்துச்சா, சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்.//

:) :) :) ha ha ha.... unmaiya sonna sirikkara nee??

சித்து said...

இதே மாதிரி அனுபவம் எனக்கு BSNL இடம் உண்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் Airtel மாற்றினேன் அருமையாக உள்ளது. நான் ஒரே இணைப்பில் 3 கணினி உபயோகிக்கிறேன் ஒரு பிரச்சனையும் இல்லை.

DHANS said...

thanks sithu

will change it to airtel again, now the only problem is the deposit amount, i should talk to them again for that.

the customer care is very good in airtel.

ச.பிரேம்குமார் said...

//ஆனா மறுபடியும் ஏர்டெல் இணைப்பத்தான் கொடுக்கணும் போல. ஒரே இணைப்பில் இரண்டு கணினியை இணைக்க முடியுமா என்று தெரியவில்லை அதனால் தான் யோசிக்கிறோம்.
//

தனா, பேசாம wifi வாங்கி போட்டுடுங்க.....

நான் சென்னையில் ஏர்டெல் தான் வச்சிருக்கிறேன். நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு. ஏதாவது offer வச்சிருப்பாங்க, டெபாசிட் இல்லாம வாங்குறதுக்கு, கேட்டு பாருங்க

DHANS said...

@prem

wifi எல்லாம் வேலைக்கு ஆகாது அந்த அளவுக்கு வசதி இல்லை

மத்தபடி ஏர்டெல் தான் மாத்தனும் செய்க்கிரம் எது நல்ல பிளான் இருந்த மாத்திக்கலாம்