Sunday, May 17, 2009

கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி

யாருக்கும் தெரியாத ஒரு முன்னிரவில்
எல்லோருமே இருக்கும் பரபரப்பான சாலையில் 
யாவருமில்லா தனிமையை அனுபவித்து
என்னிடம் நீ வாங்கிய காதலை
மூன்றே மாதத்தில் திருப்பி தந்தாய் வட்டியுடன் 
ஆனாலும் அடுத்த ஆறு மாதத்தில் மொத்தமும் முடிந்ததென முடிவெடுத்து
எல்லாவறையும் மொத்தமாக முடித்து என் வாழ்க்கையை ஆரம்பித்ததன் நோக்கமென்ன?  

உன்னை காதலி என்பதா இல்லை தோழியா என்பதா இல்லை உலகை கற்றுகொடுத்த குரு என்பதா? நானே கேட்டு நானே பதில் சொல்லும் நிலைமை என்றுமே இனிமை.  
ரசனையை கற்றுக்கொடுத்த நீயும் கற்று அனுபவித்து வரும்நானும் என்றுமே நலமுடன் வாழ அவசியம் இந்த பிரிவு. 

கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி

3 comments:

ச.பிரேம்குமார் said...

மொத்தத்தில் படிச்சு நான் ஒரு மாதிரி ஆயிட்டேன் ;-)

ச.பிரேம்குமார் said...

அவுங்க கண்டிப்பா நண்பியா இருக்க முடியாது தனா. ஏன்னா அந்த வார்த்தையே சரியானது இல்லை, அல்லது புழக்கத்தில் தவறாக பயன்படுத்தப்படும் வார்த்தை. தோழி என்பது தான் சரியான வார்த்தை

“தோழியா இல்லை காதலியா, யாரடி நீ கண்ணே” அப்படீங்குற பாடலை உங்களுக்கு நான் Dedicate பண்றேன் :)

DHANS said...

ஒரு மாதிரியும் இல்லாம புது மாதிரி அஹிட்டேன் என்று சொல்லலாமா?

பழக்கத்துல சொன்னது பிரேம் தோழி என்று மாத்திட்டேன் :)

நீங்கள் dedicate செய்த பாடல் நன்றாக உள்ளது, நன்றி பிரேம்