Friday, October 8, 2010

வீடியோ கேம்

கடந்த 5  நாட்களாக கண்ணில் வலி வந்தமையால் எதையும் பார்க்க முடியாமல் இருந்தேன், ஓரளவுக்கு சரியான உடனே கணினிப்பக்கம் வந்தாச்சு (எங்க போய் முடியுமோ) 

வீடியோ கேம்:

கண்டிப்பா இந்த வார்த்தைகள் எல்லோருடைய வாழ்விலும் என்றாவது எட்டிப்பார்திருக்கும், நம்மில் பலருக்கு ரொம்ப பிடித்தவையாகவும் சிலருக்கு ஒரு காலத்தில் பிடித்தவையாகவும் மேலும் சிலருக்கு ஒரு காலத்தில் ஏக்கம் கொடுத்தவையாகவும் இருந்து இருக்கும்.


எனக்கு வீடியோ கேம் அறிமுகம் ஆனது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்கையில் வெளியே கடை போட்டிருக்கும் ஒருவர் அப்போது வீடியோ கேம் வாங்கி வாடகைக்கு விட்டுக்கொண்டு இருந்தார். அப்போதே அதன்மேல் ஆர்வம் ஆனால் அதை வாடகைக்கு எடுத்து வந்து வீட்டில் வைத்து விளையாடுவது என்பது முடியாது காலம் அது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்லலாம் என முடிவெடுத்து நண்பன் ஒருவனுடன் ஒரு இடத்தில சேர்ந்தேன்.  அப்போது நமக்கு கம்ப்யூட்டர் மேல் ஒரு விதமான காதல், மேலும் கம்ப்யூட்டர் என்றால் கண்டிப்பாக கேம்ஸ் இருக்கும். வகுப்பு சேர்ந்து முதலில் basic programming  சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது ஞாயிற்று கிழமைகளில் சென்டர் காலியாய் இருக்கும் மதியத்துக்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள். சேர்ந்த உடன் அங்கு சொல்லிக்கொடுக்கும் இருவரை நட்பு பிடித்தாயிற்று, அவர்களுக்கு பிடித்தவனாகி இரண்டாவது வாரமே கேம்ஸ் போட்டுக்கொடுக்க சொல்லியாயிற்று.

நான் முதன் முதலில் விளையாடிய கேம் Dave.  அந்த குள்ள மனிதனை பலவித தடைகளைத்தாண்டி இறுதிப்பக்கம் எடுத்து செல்ல வேண்டும். எனக்கு தெரிந்து நம்மில் பலர் முதன்முதலில் விளையாடிய கேம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் அதில் இருக்கும் பல குறுக்கு வழிகளைகண்டு பிடித்து செல்வது மிகவும் ஆச்சரியமாய் இருக்கும். அப்போதெலாம் கம்ப்யூட்டர் மானிட்டர் எல்லாம் கருப்பு வெள்ளை மட்டுமே அந்த சென்டரில் ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே கலர் மானிட்டர் கொண்டது அதில் விளையாட பசங்க சண்டைபோட்டுக்கொண்டு இருப்பாங்க.

இந்த dangerous dave  போரடிக்க ஆரம்பிச்சப்ப மற்றொரு  கேம் அறிமுகம் ஆச்சு அதான் "பிரின்ஸ் ஒப் பெர்சியா"  எனக்கு அது அறிமுகம் ஆனது 1998 ஆம் ஆண்டு அன்றில் இருந்து இன்று வரை சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு புடிக்கவில்லை இந்த கேம். இருந்தும் foxpro வில் cheat code  போட்டு அடுத்த லெவல் போவது எல்லாம்  அப்போதே கண்டுபிடித்தாயிற்று.

அடுத்த் அறிமுகம் ஆனது "hocus pogus"   என்ற கேம், நான் முதன் முதலில் கலர் மானிட்டரில் விளையாடிய கேம், அதனாலேயோ என்னவோ மிகவும் பிடித்து போய்விட்டது. அந்த மூன்று மாதங்கள் நான் படித்த basic programming, Forpro, Dos  விட இந்த கம்ப்யூட்டர் கேம் தான் நன்றாக நினைவில் உள்ளது.

அதன் பிறகு டிவியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம், ஒரு வழிய காசு சேர்த்து அத வாடகைக்கு எடுத்து நண்பன் வீட்டில் டிவியில் இணைத்து விளையாடினோம். அப்போது "contra"   கேம் பிரபலம், அதில் இரண்டுபேர் விளையாடலாம் ஆனால் ஒருவர் வேகமாய் விளையாண்டாலும் மற்றவர் காலி அதனால்  சொல்லி வைத்துகொண்டு விளையாட வேண்டும். பலவித லெவல் எல்லாம் உண்டு இந்த கேமை இரண்டாவது வாடகையில் முடித்துவிட்டோம் 

மரியோ கேம் அடுத்து, குதித்து குதித்து விளையாடும் அந்த கேம் எல்லோருக்கும் பிடிக்கையில் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை ஆனாலும் அதையும் முடித்துவிட்டேன். அதை அடுத்து பல கேம் விளையாண்டோம், கார் ரேஸ் உட்பட. இருந்தாலும் கிராபிக்ஸ் எல்லாம் கொஞ்சம் மொக்கையாய் இருந்ததால் கொஞ்ச காலத்திலேயே அதன் மேல் இருந்த விருப்பம் குறைய துவங்கியது. இந்த காலத்தில் எங்கள் ஊரில் அறிமுகமாகி இருந்த வீடியோ கேம் கடையில் குடி இருந்தேன். "titanic Video Games"  என்ற கடை, பெயர் பலகை வைக்கும் காலத்துக்கு முன்பிருந்தே அங்கு சென்று விளையாடியதால் மிகப்பழக்கம், அந்த பழக்கமே    பின்னாளில் பல நாட்களில் கடையை திறந்து நடத்தி காசு வங்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து, அதே கடை கால ஓட்டத்தில் வீடியோ லைப்ரரி அக உருவெடுத்து அதிலும் காலை முதல் இரவு வரை பழியாய் கிடந்தது எல்லாம் இன்னமும் மலரும் நினைவுகள். அங்கு கிடைத்த நண்பன் ஹரி பின்னாளில் அந்த நடப்பு  எங்களுக்குள் மிகப்பெரிய நட்பாக உருவான பொது பெருமிதம் அடைந்தேன். 

 Turtles  கேம் விளையாடும்போது இன்று வரை அவனை என்னால் ஜெயிக்க முடியவில்லை, எனக்கு பிடித்த Leo  எடுத்து நன் விளையாண்டால் அவன் எந்த ஆளை வைத்தும் ஜெயித்துவிடுவான். வீடியோ கேமில் ஆரம்பித்து வீடியோ கடை வரை வளர்ந்தது எங்கள் நட்பு.

பின்னர் இன்டர்நெட் அறிமுகம் ஆனது (1999-2000)   கரூரில் இன்னும் இருக்கும் galaxy  இன்டர்நெட் சென்டர் தான் அப்போது எங்களுக்கு அடுத்த புகலிடம். சாட், இன்டர்நெட், யாஹூ மெயில், MIRC chat, Desibaba  என்று இன்னும் பல அறிமுகம் ஆகியது, அப்போது அங்கும் நட்பு வட்டம் பெருக நாளடைவில் காலையில் கடை தொறந்து இரவில் மூடும் வரை உடன் இருக்க ஆரம்பித்தேன். நெட் கனக்ட் பண்ணுவது, மோடம் இன்ஸ்டால் பண்ணுவது சின்ன சின்ன trouble shoot  என்று கத்துகொண்டது அங்குதான். அந்த சென்டரில் வேலை பார்த்த பையன்( பெயர் மறந்துவிட்டது, பின்னாளில் மஞ்சள் கமலையில் இறந்துவிட்டான், பக்கத்துக்கு கடை அக்கா, தையல் கடை சேகர், கம்ப்யூட்டர் வேர்ல்ட் கடை அண்ணன் எல்லோரும் இன்னும் மனதில் இருக்கிறார்கள்)

இப்படி போகும்போது எதேட்சையாக ஒரு சிஸ்டத்தில் கமாண்டோ என்று ஒரு கேம் கண்டுபுடிதேன். யாரோ இன்ஸ்டால் செய்துவிட்டு போயிருக்க  நான் விளையாட ஆரம்பித்தேன். எதோ ஒரு லெவெலில் இருந்து ஆரம்பிக்கும், ஒரு ரயில்வே ஸ்டேசனில் தீவிரவாதிகளை சுட்டு புடிக்க வேண்டும். அப்போது தான் கம்ப்யூட்டர் கேம் மற்றும் அதன் கிராபிக்ஸ் பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் F1 ரேஸ், MOTO GP  ரேஸ் என்று களை  கட்டியது கொஞ்ச நாள்.  அதுவும் கொஞ்ச நாள் தான். ஆனால் கம்ப்யூட்டர், இன்டர்நெட், கேம் எல்லாம் நன்றாக கற்றுக்கொண்ட நேரம் அது. (Mirc சாட்டில் நட்பான அந்த ஜப்பான் பொண்ணும் அது அனுப்பிய பின்னால் பனி படர்ந்த போட்டோவும்   இன்னும் மறக்க முடியாதது).


கல்லூரி ஆரம்பித்தது, முதலில் மொக்கையாய் போனது இரண்டு மாதங்களில் சீனியர் பழக்கத்தில் மறுபடியும் கம்ப்யூட்டர் அறிமுகம் மற்றும் கேம். நண்பன் கணேஷ் வாங்கிய சிஸ்டத்தில் நானும் பழனிசாமியும் தூங்காமல்  இரண்டு நாட்கள் விளையாண்ட Project IGI  கேம் மற்றும் NFS2 என சுருக்கமா கூறப்படும் need for speed 2  கேம் மறக்க முடியாதது, இன்றும் need for speed pro street, hot persuit, under cover  என பல முன்னேற்றம் வந்தாலும் என்னால் மறக்க முடிய கேம் NFS2.  அதிலும் அதில் வரும் மகளாரன் கார். நானும் நண்பன் சிவராம கிருஸ்ணனும் அதில் பெரிய ஆட்கள். பின்னாளில் நான் கம்ப்யூட்டர் வாங்கிய பின்னர் என் சிஸ்டத்தில் கேம் மற்றும் படம் மட்டுமே இருக்கும்.     கேமுக்காக autocad ஐ கணினியில் இருந்து அழித்தவன் நான் 

கல்லூரி முடித்த நாட்களில் பிளே ஸ்டேஷன் 2 அறிமுகம் அதில் அதிகம் விளையாண்டது இல்லை ஆனால் நண்பன் ஹரி ஆரம்பித்த கேம் கடையில் கொஞ்சம் விளையாண்டு மறுபடியும் கேம் ஆட ஆரம்பித்தவன், எல்லோரும் வீடியோ கேம் விளையாண்ட சின்ன பையன் என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு நன் சின்ன பையனாகவே இருக்க விரும்புகிறேன், வயசு ஆனாலும் எனக்கு வீடியோ கேம் மேல் உள்ள பிடிப்பு குறைய வில்லை.

நான் லேப்டாப் வாங்கும்போது கிராபிக் கார்டு இருக்கும் மடிக்கணிணியை  வாங்கினேன் காரணம் அப்போதுதான் கேம் விளையாட முடியும் இப்படி ஆரம்பித்த கேம் பைத்தியம் பிளே ஸ்டேஷன் 3 யில் வந்து  நிற்கிறது. நமது பதிவுலக நண்பர்களில் எதனை பேர் என்னைப்போல் வீடியோ கேம் பிரியர்கள் என தெரியவில்லை 

7 comments:

Karthik said...

Wow this is precisely same order i too progressed, from dave to play station. However i lost interest in gaming soon after and came to chennai. Very nostalgic!

தராசு said...

நல்லா குடுக்கறாய்ங்கைய்யா டீடெய்லு...

DHANS said...

@ karthik

i hope most of the people progressed in this way only.

i have not lost interest but finding time for play is difficult for me

@ tharasu

naama epayume detailathaan koduppom... :)

ggautam said...

Same here to..I just skipped hogus bocus..progressed to IGI,GTAs,MaxPayne and Mafia..

Appuram avlothaan..Shd revive now..

Gautam

DHANS said...

never forget those IGI max payne game times in IRTT hostel :)

எல் கே said...

பாஸ் nan playstationla vilyadrathu illai matthapadi computerla neenga sonna ella gamesukum vilaydi irukkun
kurippa dave,appuram NFS ellam

DHANS said...

@ LK

Dave ellam yaralayum marakka mudiathu