Tuesday, December 16, 2008

எனது 2008 இன் சிறந்த தருணங்கள்

வருடத்தின் முதல் நாளில் எனது அயல்நாட்டு மேலதிகாரியின் வீட்டில் கொண்டாடிய புத்தாண்டு.

ஊரை விட்டு தனியே வந்திருப்பதனால் நான் தனிமையில் இருக்க கூடாது என்று என்னையும் அவர்களுடன் வந்து புத்தாண்டை கொண்டாட அழைத்த அவரும் அவர் துணைவியும் என்னால் மறக்க இயலாதவர்கள், என் பிறந்தநாளை நானே மறந்து விட்டபோது தனியாய் இருப்பாய் எங்களுடன் வந்து பிறந்த நாளை கொண்டாடு என்று அழைத்து என்னை எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருந்தனர்.

முதல் இரண்டு மாதங்கள் நன்றாக சென்று பின்னர் இந்தியா வந்து சென்னை அலுவலகத்திற்கு வந்த முதல் நாளில் இருந்து ஆரம்பித்த சனி ஆகஸ்டு ஒன்றாம் தேதியுடன் முடிந்தது. ஆம் அன்று முதல் அலுவலகத்தில் வேறு துறையில் மாற்றப்பட்டேன். என் வேண்டுகோளுக்கு இணங்கி என்னை மாற்றிய துறை தலைவர் என்னால் மறக்க முடியாதவர்.
2008 நான் பதிவு எழுத ஆரம்பித்த வருடம், 50 பதிவுகளை எழுதிவிட்டேன் என்று நினைத்துப்பார்த்தால் அதிசயமாய் உள்ளது. இருந்தாலும் எழுத்துப்பிழைகளும் வருகின்றன.

முதன் முதலாக கார் வாங்கினேன் எனது பிறந்த நாளுக்கான என் பரிசாய்

எனது சகோதரரின் திருமணம்.

என் சகோதரிக்கு பிறந்த பெண் குழந்தை.

சந்தோசமாக குடும்பத்துடன் பேசி மகிழ்ந்த நாட்கள் என்று இந்த மோசமான ஆண்டின் நல்லதொரு மறுபக்கம்.

இவை அனைத்தும் நான் இழந்த நட்பு மட்டுமே என்னிடம் இருந்து பிரித்தது, அதற்காக வருத்தப்படாத நாட்களே இல்லை என்ற நிலைமையில் எதற்காக வருத்தப்பட வேண்டும் என்று யோசிக்கிறேன்.

இந்த வருடம் இவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு கொடுத்தும் இது மோசமான வருடம் என்று இரண்டு கசப்பான நிகழ்வுகளை மட்டும் நினைத்து வருந்தியுள்ளேன் என்று நினைத்து வெட்கப்படுகிறேன் இந்த ஆண்டு இறுதியில்தான்.

என்னைப்பொருத்தவரை அதிக துயரை கொடுத்த நிகழ்வு இரண்டு இருந்தாலும் அவை ஏற்ப்படுத்திய மகிழ்ச்சியான தருணம் பல என்பதால் மிக நன்றாக இருந்தது, இருந்துகொண்டு உள்ளது

6 comments:

ச.பிரேம்குமார் said...

ஓ! ஐம்பது பதிவுகள தாண்டியாச்சா? வாழ்த்துக்கள்

அடுத்து வரும் வருடமும் நல்லதொரு ஆண்டாக மலர வாழ்த்துக்கள்

DHANS said...

வாழ்த்துகளுக்கு நன்றி பிரேம்குமார்

தங்களுக்கும் அவ்வாறே அமைய வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

என்னைப்பொருத்தவரை அதிக துயரை கொடுத்த நிகழ்வு இரண்டு இருந்தாலும் அவை ஏற்ப்படுத்திய மகிழ்ச்சியான தருணம் பல என்பதால் மிக நன்றாக இருந்தது, இருந்துகொண்டு

நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்!!!!

துளசி கோபால் said...

அதாங்க...பாதிக் கப் காலி ன்னு சொல்லாமப் பாதி நிறைஞ்சு இருக்குன்னு யோசிக்கும் பக்குவம் வரணுமாம்.

நிறைய நல்லது நடந்தாலும், கெட்டதா நடந்த ஒன்னுரெண்டு மனசுக்குள்ளே நல்ல இடம் பார்த்து உக்கார்ந்துக்குது(-:

வரும் காலம் இனிதாக இருக்கணும்.

வாழ்த்து(க்)கள்.

அம்பதுக்கும் சேர்த்துத்தான்:-)

DHANS said...

நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்!!!! //

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக நன்றி thevanmayam

DHANS said...

அதாங்க...பாதிக் கப் காலி ன்னு சொல்லாமப் பாதி நிறைஞ்சு இருக்குன்னு யோசிக்கும் பக்குவம் வரணுமாம்.//

சரியாய் கூறினீர்கள். கேட்டதை எல்லாம் சிறிதுநாட்களில் விரட்டி அடிக்க வேண்டும், எல்லாம் நாம் மனது வைத்தால் முடியும் என்று நினைக்கிறேன்.

தங்கள் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக நன்றி துளசி கோபால் அவர்களே