வருடத்தின் கடைசி பதிவு இதுவாக இருக்கலாம்
ரொம்ப முக்கியமாக எட்டு மாதங்களில் அறுபது பதிவு, எல்லாம் மொக்கை பதிவுகள் என்பது மிகப்பெரிய விஷயம். பதிவு எழுத வந்த கதை பற்றி இப்போது பார்ப்போம்,
இந்த வருடத்தின் (2008) முதல் மாதத்தில் நான் இருந்தது டென்மார்க்கில், இந்த வருடம் இனிமையாக துவங்கியது முதல் இரு மாதங்கள் மிக நன்றாக சென்றது, வேலையும் அதிகம் இருக்கவில்லை.
முதல் இரு மாதங்களில் இரண்டு மிக பெரிய ஆர்டர்கள் பெற்றேன், ஒன்றின் மதிப்பு சுமார் இருபது லட்சம் யுரோ. மகிழ்ச்சியான தருணம்.
மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தேன், வரும்போதே சிறிய குழப்பம், கடந்த நவம்பரில் நடந்த அபுரைசலில் நிறைய புளுகினானே நமது டேமேஜர் ஒண்ணுமே பண்ணவில்லையே என்று.
எனக்கு தரப்பட்ட வாக்குறுதி என்னவென்றால் பிரெஞ்சு பேசும் நாடுகளின் விற்பனை உதவி வேலைகளை எனக்கு கீழ்கொண்டு வரப்போவதாகவும் மேலும் அலுவலகத்திலேயே பிரஞ்சு மொழி கற்றுத்தர போவதாகவும் கூறினர்.
சொல்லி மூன்று மாதம் ஆனது மூன்று மாதத்தில் இந்தியாவிலிருக்கும் டேமேஜர் என்னுடம் கொண்டிருந்த சுமூக உறவை சிறிது சிறிதாக கைவிடுவதயுனர்ந்தேன்,அவனைப்பற்றி நன்றாக தெரியும் ஆதலால் கண்டுகொள்ளவில்லை.இந்தியா வந்து சேர்ந்தவுடன் இதைப்பற்றி பேசலாம் என்று அவனிடம் சென்றால் மீடிங்கில் பேசுவோம் என்றான்.
என்னடா என்று குழம்பி பின்னர் தனியாக பேசினால் சொல்கிறான் நீ சொல்றமாதிரி எல்லாம் செய்ய முடியாது என்று, அப்புறம் எதுக்கு அப்போது சொல்லி ஒத்துகொண்டாய் என்றுகேட்க எதுவும்பதில் இல்லை. பின்னர் ஒரு பதில் சோனான்,இதையெல்லாம் செய்ய எனக்கு நேரம் இல்லை என்று, அத்துடன் எழுந்து வெளியே வந்துவிட்டேன், பின்னர் ஆரம்பித்தது அவனுடைய வேலைகள், எனக்கு மட்டும் வேலை குடுப்பது இல்லை, டீமில் உள்ள அனைவரும் ஒரு வாரத்திற்கு இருபது என்கொயரி பார்த்தால் எனக்கு இரண்டு மட்டுமே.
நானும் விடவில்லை நீ என்னவேணும் என்றாலும் செய் ஆனால் நான் விட்டுகொடுக்க மாட்டேன் என்று, நேற்று சேர்ந்த பயிற்சி பொறியாளர் என்னிடம் வேலை வாங்கும் அதிகாரம் பெற்றான்.
எனது மேலதிகாரியிடம் இந்த பிரிவில் இருந்து விலகி வேறு பிரிவிற்கு மாறும்படி கோரிக்கைவைத்தேன், இவை அனைத்தும் ஏப்ரலில் நடந்தது, அபோதுதான் வேலை இல்லாமல் இருக்கும் நேரத்தில் நிறைய பதிவுகளை படித்தேன், பின்னர் நானும் பதிவு எழுதினால் என்ன என்ற கேள்வி முளைத்தது, பின்னர் நெடு நாளைக்கு பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி முதற்பதிவை எழுதினேன்.
எனது வாழ்கையின் மிக மோசமான நேரத்தில் நான் பதிவு எழுத ஆரம்பித்தேன், இந்த பதிவுகள்தான் என்னை மேம்படுத்தின இல்லை என்னை அந்த மோசமான நேரங்களில் இருந்து காத்தன என்று சொல்லலாம்.
எனது நேரத்தை பதிவுகளில் செலுத்தினேன் சிறிது நாட்களிலேயே எனக்கும் நல்ல நேரம் வந்தது ஆம், நான் அலுவலகத்தில் வேறு பிரிவுக்குமாற்றப்படேன். அதிலிருந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. அவ்வப்போது பதிவுகளை படித்தும் சில நேரங்களில் எழுதியும் வருகிறேன்.
பிறந்த நாளுக்கு நானே எனக்கு பரிசு வாங்கிக்கொண்டேன் ஆம் நான் கார்வாங்கியது இந்த வருடம் தான்.
எனது சகோதரரின் திருமணம்
எனது காரில் எனது உறவினருக்கு ஏற்பட்ட சிறிய விபத்து
பாட்டியின் மரணம் புதிய
பழைய நண்பர்களின் முகமூடி என்று பல தரப்பட்ட அனுபவங்களையும் அவை கொடுத்த வருத்தத்தையும் வைத்து மோசமான வருடம் என்று கூற மனம் வரவில்லை,
பல சோகங்களை கொண்டு வந்தாலும் அத்தகைய அனுபவங்களை கொடுத்ததால் மிக சிறந்த வருடம் என்று சொல்வேன் இதை.
இந்த பதிவு எழுதும்போதே அடுத்த சில பதிவுக்கு கரு கிடைத்து விட்டது, ஏன் எனது தேமேஜருடனான அனுபவங்களை பதிவாக எழுதக்கூடாது என்று தோன்றுகிறது, எழுதாலம் கண்டிப்பாக
விரைவில் எதிர்பாருங்கள்
நீங்களும் மேனேஜர் ஆவது எப்படி???
7 comments:
ஜடியா சூப்பருங்க,,,,,
kallakkunga DHANS
// ஏன் எனது தேமேஜருடனான அனுபவங்களை பதிவாக எழுதக்கூடாது என்று தோன்றுகிறது, எழுதாலம் கண்டிப்பாக விரைவில் எதிர்பாருங்கள்
நீங்களும் மேனேஜர் ஆவது எப்படி??? //
we are waiting for that post
People leave Managers not Companies.
இது உங்கள் விஷயத்தில் தெளிவாக பொருந்துகிறது.
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே..
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)
நன்றி திரு.மெல்போர்ன் கமல்
திரு.ஷங்கர் Shankar , மிக விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம் "எனது டேமேஜருடனான எனது அனுபவங்கள்.
திரு.ராம்சேகர்
திரு. கார்த்திக்
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
டேமேஜருடனான அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறோம்.புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
அன்புடன் அருணா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
Post a Comment