இந்தி கஜினி படம் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, அமிர்கான் நடிப்பில் நம்ம முருகதாஸ் இந்தியில் முதலில் இயக்கம் படம், மேலும் அசினுக்கும் இந்தியில் முதல்படம். அமிருக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் அமீர் படம் என்றால் எப்படியும் நல்ல இருக்கும் என்ற நினைப்பு எல்லாம் இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் கூட பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.
நேற்று வீடிற்கு சென்று செய்திகளை பார்க்கையில் இந்த படம் தமிழ்நாட்டில் வெளியாக தடை என்று சொல்லப்பட்டது, எதுவுமே புரியவில்லை, காரணம் இந்த படத்தை தமிழில் தயாரித்தவர் நீதி மன்றத்தில் தன்னிடம் உரிமம் வாங்க வில்லை என்று வழக்கு போட்டுள்ளார் . நீதிமன்றம் தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்து உள்ளது
என்னடா நாளைய விடுமுறையை ஒரு நல்ல படம் பார்த்து களிக்கலாம் என்றால் இப்படி நடந்துபோச்சே என்று நினைத்தபோது என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
இந்த படத்தை கடந்த ஒரு வருடகாலமாக இந்தியில் எடுத்து வருகின்றனர், இதை பற்றிய செய்திகளும் எல்லா பத்திரிக்கையிலும் வெளிவந்தது கொண்டு உள்ளது. இப்படி இருக்க திடீரென்று படம் வெளியாகும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக வழக்கு போட என்ன காரணம்?
படத்தை தயாரித்தவர் என்னிடம் உரிமை வாங்கவில்லை என்று வழக்கு போட என்ன உரிமை இருக்கிறது?
படத்தின் கதை முருகதாசுக்கு சொந்தம் அவரின் கதையை இந்தியில் எடுக்க அவர் உபயோகபடுத்தி இருக்கிறார், இந்த தமிழ் படத்தை தயாரித்தவர் இந்த கதையை தயாரித்தாலே கதை அவருக்கு சொந்தம் ஆகுமா? எனக்கு தெரியவில்லை தெரிந்தவர் சொல்லுங்களேன்?
கடைசி நேரத்தில் பிரச்சனை பண்ணினால் பணம் கறக்கலாம் என்ற எண்ணம்தானே இதற்க்கு காரணம்??
இப்படி செயல்பட்டால் தமிழரை பற்றி மற்றவர் என்ன நினைப்பர், முன்னரே இத்தகைய வழக்கினை போட்டு பிரச்சனையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான ?
4 comments:
Robot-kku sharukh kudukkatha kudaichala? Ellam inga sagajam boss...
ஒருவேளை, அந்த தமிழ் தயாரிப்பாளர், கதைக்கான காப்புரிமையை பெற்றவராய் இருக்கலாம்.
ஆனா, இந்த படத்தின் மூலமே,ஆங்கில படாத்தின் தழுவல்தான். இப்படி, கதைக்கு உரிமை கொண்டாடுவது சிரிப்புதான் :)
வருகைக்கு நன்றி அனானி,
ரோபோட்டுக்கு வந்த சோதனைகள் எனக்கு தெரியவில்லை.
இப்படி இவர்கள் அடித்துக்கொள்வது கேவலமாய் இருக்கிறது.
நன்றி சர்வேசன்,
ஒருவேளை அந்த தயாரிப்பாளர் காப்புரிமை பெற்றிருந்தாலும் இவளவு நாட்கள் இருந்துவிட்டு வெளியிடும் நாளில் ஏன் இப்படி பிரச்சனை பண்ண வேண்டும். முதலிலேயே கேட்டிருந்தால் அவர்கள் இவளவு செலவு செய்திருக்க வேண்டியது இல்லையே.
momento படத்தின் தழுவல்தான் ஆனாலும் அந்த அடிப்படையை வைத்து மசாலா தடவி நம்ம ஊருக்கு தகுந்த வகையில் குடுத்துள்ளனர். இரண்டு படங்களையும் பார்க்கும்போது நிறைய வித்தியாசம் உள்ளது.
Post a Comment