Tuesday, December 16, 2008

கல்வி நமது நாட்டில்

கல்வி நமதுநாட்டில் வியாபாரம் ஆகி பல நாட்கள் ஆகின்றன
இவற்றின் விளைவுகளை நாம் என்றாவது நினைத்து பார்த்தூமா?
இந்திய சூழலில் நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் பெரும்பான்மை தனியார் பள்ளிகளே.

ஒருவர் தமது மகனையோ மகளையோ முதன் முதலில் பள்ளியில் சேர்க்க என்னென்ன செய்ய வேண்டி உள்ளது.

முதலில் மிக சிறந்த பள்ளி என்று சொல்லப்படும் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்க நாள் முழுக்க நிக்க வேண்டும், பின்னர் அதற்க்கு சிபாரிசு பிடித்து நன்கொடை குடுத்து இடம்பிடிக்க வவேண்டும், ஒரு சாமானியனால் அதை செய்ய கண்டிப்பாக முடியாது .நன்கொடை என்று சொல்வது எல் கே ஜி க்கு லட்சகணக்கில். நினைக்கவே பயமாய் உள்ளது.

நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நிலைமை இதுதான், என்ன நன்கொடை என்பது அளவில் மாறும் லட்சத்தில் தொடங்கி ஆயிரத்தில் முடிகிறது இந்த லட்சிய கல்வி.

பள்ளிகளின் மார்கெட்டை பொருத்து நன்கொடை மாறும்.
பள்ளிக்கே இவ்வளவு தொகை செலவு செய்தால் பின்னர் மேற்படிப்பன கல்லூரிக்கு எவ்வளவு என்று தெரிந்துகொள்ளுங்கள், பொறியியல் கல்லூரியில் படித்து வெளியே வர பல லட்சங்கள் செலவு ஆகும்.
இவாறெல்லாம் செலவு செய்து படித்து வருபவர் செலவுசெய்த பணத்தை எடுக்க முயற்சி செய்யாமல் இருபாரா? நன்றாக படிக்கும் மாணவருக்கே இவ்வளவு செலவு என்றால் சிறிது குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால் அவ்வளவுதான் அவங்க அப்பா கொள்ளை அடித்து தான் பணம் காட்ட வேண்டும்.

படித்து முடித்த பின்னர் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது ஆனாலும் குடும்ப கஷ்டம் தீர மூன்று ஆண்டுகள் சம்பாதித்து கடனை அடைத்தால் அடுத்த ஆண்டில் திருமணம் செய்ய வேண்டிவரும். அதற்க்கு கையில் சல்லி காசு இருக்காது கடன் வாங்கி செய்ய வேண்டும் பின்னர் சம்பாதித்து அதை அடைக்க வேண்டும், பின்னர் குழந்தை என்று வந்தால் பள்ளியில் சேர்க்க செலவு என்று அரம்பிக்கும்பாருங்கள்.

ஏன் நமது அரசாங்க பள்ளிகள் தரம் குறைந்து செயல் இழந்து காணப்படுகின்றன? நேர்மையான அதிகாரிகள் ஆசிரியர்கள் என்று எவருமே காணப்படுவது இல்லையா? மக்கள் நம்பிக்கை வைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு முறை ஒரு அலுவலர் கூறினார்.

நம்பிக்கை வைத்து அனுப்பும் அளவிற்கு பள்ளி இருக்கிறதா? தகுந்த வசதிகளுடன் பள்ளி இருந்து மக்கள் அனுப்பவில்லை என்றால் கேள்வி கேட்கலாம் , எந்த வசதியும் இல்லாமல் எப்படி அனுப்ப?

மொத்தத்தில் நமது நாட்டின் கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று மாற்றப்பட்டு வருகின்றது. பின்னர் எப்படி பின்தங்கி உள்ள மாணவன் முன்னேறுவான்? அவனுக்கு ஆரம்பத்திலேயே முறையான கல்வி கிடைக்க வில்லை அப்படி கிடைத்தாலும் படிக்க முடியாத வரு பணம் தடையாக உள்ளது. சும்மா கல்வியில் முன்னேறி உள்ளது என்று சொல்லிகொண்டாலும் கடந்த பத்து வருடத்தில் எத்தனை அரசாங்க பொறியியல் கல்லூரி தொண்டங்கப்பட்டது நமது மாநிலத்தில்? தனியார் கல்லூரிகள் ஏற்க்கனவே நிறைய உள்ளன அவர்களுடன் கெஞ்ச வேண்டிஉள்ளது ஒவ்வொரு வருடமும் இத்தனை இடங்களை அரசாங்கத்திற்கு கொடுங்கள் என்று.
தகுந்த கல்வி கொடுக்க கூடிய தரமான அரசாங்க கல்லூரிகளை உருவாக்கினால் தாமாக தரமான கல்வி மற்றும் குறைவான தங்குந்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகள் கல்வி அளிக்க வரமாட்டார்களா?
என்னை பொறுத்தவரை திருமணம் செய்யும் முன்னரே திருமணத்திற்கு பின்னர் வரும் செலவுகளை நினைத்து பயம் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.

இன்னும் நாம் வானளாவிய கட்டிடங்களையும், நிலாவிற்கு ஆள் அனுப்பினாலும் ஏழை மக்கள் சாலையோரத்தில் vaala இடம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நான் படித்தது அரசு பள்ளியில் ஆனாலும் அதற்கு தனிப்பாடம் சென்றுதான் படிக்க முடிந்தது . இருந்தாலும் படிக்கிற மாணவன் எங்கு இருந்தாலும் படிப்பான் என்ற கொள்கை இப்போதெல்லாம் உடைபடுகிறது.

தீர்வு:
கல்வியை அரசு மட்டுமே செயல் படுத்த வேண்டும், இதை செய்ய இப்போதைக்கு முடியாது.

அப்படி என்றால் கல்வி கொள்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு.

பள்ளிகளின் தரத்தை உயர்த்தி எந்த ஒரு மாணவனும் இருக்கும் இடத்திற்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற விதி வேண்டும்.

கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு தரும் உதவி தொகையினை தகுதி வாய்ந்தவர்களுக்கு அவர்களின் நிலைமையை பொருத்து மாற்றி அமைக்க வேண்டும்.

அனைவருக்கும் சமசீரான கல்வி வேண்டும்.

இதெல்லாம் நடந்தால்?? என்ன அதற்குள் உங்கள் தூக்கம் கலைந்துவிடும்

2 comments:

ச.பிரேம்குமார் said...

//என்னை பொறுத்தவரை திருமணம் செய்யும் முன்னரே திருமணத்திற்கு பின்னர் வரும் செலவுகளை நினைத்து பயம் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது//

ரொம்ப புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க தனா. சீக்கிரம் திருமணம் நடந்துரும்னு நினைக்கிறேன் :)

//ஏன் நமது அரசாங்க பள்ளிகள் தரம் குறைந்து செயல் இழந்து காணப்படுகின்றன//

இப்போதெல்லாம் மாநகராட்சி பள்ளிகளில் செயல்வழி கற்றல் எல்லாம் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். சீக்கிரமே மாறுதல்கள் வரலாம்

//கல்வியை அரசு மட்டுமே செயல் படுத்த வேண்டும், இதை செய்ய இப்போதைக்கு முடியாது.//

கல்வி நிறுவணங்கள் எல்லாம் அரசாங்க வசம் வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் அங்குள்ளவர்கள் ஊழல் செய்யாத வரை

DHANS said...

ரொம்ப புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க தனா. சீக்கிரம் திருமணம் நடந்துரும்னு நினைக்கிறேன் :) //

வீட்டில் பொண்ணு பாக்கலாம் என்று ஆரம்பிக்கும்போதே செலவைப்பற்றிய பயம் அதாநிந்தனைபுலம்பால். எவ்வளவு நாள்தான் நாமும் தனியாய் இருப்பது,

//இப்போதெல்லாம் மாநகராட்சி பள்ளிகளில் செயல்வழி கற்றல் எல்லாம் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். சீக்கிரமே மாறுதல்கள் வரலாம்//

செயல் முறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர் அனால் வசதிகளில்பிந்தங்கி உள்ளது, எனது ஊரில் நான் சிறுவனாக இருந்த பொது நாற்பது மாணவர்கள் இருந்த பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் இன்று அதே பள்ளியில் குறைந்தது எழுபது மாணவர்கள் அனால் ஒரே ஆசிரியர். என்ன சொல்ல.

//கல்வி நிறுவணங்கள் எல்லாம் அரசாங்க வசம் வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் அங்குள்ளவர்கள் ஊழல் செய்யாத வரை//

எல்லாவற்றையும் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று கொண்டு வந்தால் ஊழல் கொஞ்சம் குறையலாம்