கல்லூரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்ததும் சிறிது காலத்தில் எனக்கு தோன்றியது எதாவது தொழில் செய்ய வேண்டும் என்பது. இன்று வரை அந்த எண்ணம் இருக்கின்றது ஆனால் என்ன தொழில் செய்வது? எந்த தொழில் செய்தாலும் அதில் ஏற்கனவே இருக்கும் நிறுவனகள் பல, எதாவது புது ஐடியா (இதுக்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் தோன்ற வில்லை) கிடைத்தாலும் நல்ல இருக்கும் எதுவும் கிடைக்க வில்லை.
எனது தந்தை வேறு ஓட்டுனராக பணிபுரிகிறார், அவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே விருப்ப ஓய்வு குடுத்துவிட்டு வர சொல்லிக்கொண்டு இருக்கிறேன் அவரும் வந்தபாடு இல்லை, ஓய்வு எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் என்ன வேலை செய்வது என்று கேள்வி. நான் தயங்காமல் சொன்னது விவசாயம், அடிப்படையில் விவசாயக்குடும்பம் எங்களது குடும்பம், எனக்கு நினைவு தெரிந்த நாள் வரையில் விவசாயம் செய்து வந்தோம், எங்களது படிப்பை முன்னிட்டு சொந்த ஊரில் இருந்து நகருக்கு குடி வந்து பின்னர் விவசாயத்தை கைவிடும் நிலைமை ஏற்ப்பட்டது. அது வரையிலும் எனது தாயார் எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.
சிறு வயதில் எனது தாத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பை காரணம் காட்டி இன்று வரை வயலில் இறங்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர் எனது தந்தை. படிப்படியாக லாபம் குறைந்து பின்னர் நட்டம் வரும்படி ஆனதால் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டது. இப்போது வீட்டில் எல்லோரும் நல்ல நிலைமைக்கு வந்து விட்டதால் எனது தந்தையை வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்கும்படி அழைக்கிறேன்.
பரம்பரை தொழிலை சிறிது காலமெனும் நடத்த வேண்டும் என்று ஒரு ஆசை மற்றும் என்னவோ தெரியவில்லை விவசாயதிலொரு நாட்டம் இன்னமும் இருக்கிறது. மற்ற ஊர் பெரியவர்கள் (அவ்வாறுதான் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் ஊர் மந்தையில் தினசரி தாயம் விளையாண்டுகொண்டு உள்ளது, எந்த வேலையும் செய்யாமல்) போல எனது தந்தையையும் தினமும் தோட்டத்திற்கு சென்று மேற்ப்பார்வை பார்த்துவிட்டு வெட்டி நியாயம் அடித்துக்கொண்டு வரும்படி சொன்னால் கேட்க்க மாட்டேன் என்று சொல்கிறார். அவருக்கு பிடிக்கவில்லையாம்,பிள்ளைகள் வளர்ந்து நன்றாக இருக்கும்போது இன்னும் ஏன் கஷ்டப்படவேண்டும்?? அவர் காலில் அவர் நிக்க வேண்டும் என்பது சரி அதற்காக கஷ்டப்பட வேண்டும் என்று இல்லை, அவர்க்கென்று ஒரு தொழில் ஏற்படுத்தி தருகிறோம் கவனியுங்கள் என்றால் வறட்டு சண்டையை நினைத்து மாட்டேன் என்கிறார்.
விவசாயத்திற்கு வருவோம், நமது நாட்டில் விவசாயம் என்பது செத்துக்கொண்டு வருகிறது, எனக்கு தெரிந்து விவசாயக்குடும்பத்தில் இருந்து என்னுடன் படிக்க வந்த எந்த மாணவரும் இன்று மறுபடியும் விவசாயத்தை பொழுதுபோக்காக செய்யகூட தயங்குகின்றனர். விவசாயிக்கு நமது நாட்டில் மரியாதையுமில்லை, எங்கு சென்றாலும் அவமானமும், நட்டமும் கிடைகின்றதால் எவரும் தம் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்பவில்லை.
விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் வசதி நமதுநாட்டில் இல்லாதவரை விவசாயிகள் கண்டிப்பாக ஒழிந்து போவார்கள், எனது மனதில் தோன்றுவது இனும் பத்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு மீண்டும் பெரிய வரவேற்பு இருக்கிறது, ஏனெனில் விவசாய பொருளுக்கு டிமாண்டு அதிகம் வரும் ஆனால் அதற்கான உற்பத்தி கண்டிப்பாக இருக்காது. அப்போது எளிதில் கிடைக்காத பொருளுக்கு விலை ஏற்றம் என்பது நடக்கும் அனால் அதுவரை நமது குறுநில விவசாயிகள் தாக்குபிடிப்பார்களா என்பது தெரியவில்லை.
விவசாயத்திற்கு பயன்படும் வகையிஒல் பல கருவிகள் இயந்திரங்கள் வந்துள்ளன ஆனால் அவற்றை பயன்படுத்த பெரிய நிலப்பரப்பு வேண்டும், குறுநில விவசாயிகள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலைமையில் அவ்வசதிகள் கண்டிப்பாக அவர்களுக்கு பயன்படுத்த கிடைக்காது, வேண்டும் என்றால் சில குறுநில விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூட்டாக விவசாயம் செய்து அத்தகைய இயந்திரங்களை பயன்படுத்த முயற்சி செய்யலாம் ஆனாலும் அதை தடுக்க நமதுநாட்டில் சாதி என்று ஒன்றை உருவாக்கி உணவளித்து வைத்துள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் ஏன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது, தமது தந்தையரை மற்றும் உறவினர்களை வைத்து தமக்கு தெரிந்த புதிய தொழில்நுட்பங்களை வைத்து ஏன் முயற்சி செய்யக்கூடாது இதில் ஓரளவிற்கு லாபம் கிடைத்தால் பின்னர் பெரிய அளவில் செய்யலாமே?
விவசாயத்தில் ஈடுபட்டு பணம் ஈட்டினால் நன்றாக வருமானம் ஏற்படுத்தினாலும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அவமானத்தால் எவரும் ஈடுபட தயங்குகின்றனர். எனக்கு தெரிந்த நண்பரின் உறவினர் மாதம் விவசாயத்தில் மட்டும் நாற்பது ஆயிரங்கள் சம்பாதிக்கிறார் ஆனாலும் அவருக்கு ஐந்து வருடங்களாக பெண் தேடிக்கொண்டு இருந்து பின்னர் சொந்தத்தில் திருமணம் செய்தனர். எவரும் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.
இந்நிலைமாறினால் கண்டிப்பாக நமது சமுதாயத்தில் மாற்றம் வரும்.
9 comments:
Good post! am about to write one post regarding this.
Future farmer
Kabheesh
நல்ல எண்ணம்...
தற்போது காலம் சிறிது மாற தொடங்கி உள்ளது. சிறு விவசாயிகளால் எந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன் படுத்த முடிகிறது.மேலும் நெல் பயிரின் கொள்முதல் விலை ஏற்ற பட்டதால் நெல் விவசாயம் ஒரளவிற்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
Dude, farming is not an easy stuff as you talk. These days you can't get good labours (credit goes to our CM for providing rice at 1Rs/Kg) . If you have some good/reliable water resource then you can think of it. Dont ever trust the river water for Farming. Bringing up crop is equivalent to bringing up a child, you need to give proper fertilizer at proper time, use proper insectiside and other stuffs and harvest in right time.
வருகைக்கு நன்றி கபீஷ்
வாழ்த்துக்கள்
நன்றி அனானி அவர்களே
விவசாயம் என்பது எளிதல்ல என்பது எனக்கு நன்றாக தெரியும் அப்படி என்றால் எந்த செயலும் எளிது கிடையாது. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தின் அடிப்படைகளை ஓரளவிற்கு கற்றும், சிறிது அனுபவ ஸ்ரிவும்பெற்ற என்னால் செய்ய முடியும் என்னும் எண்ணம் என்னிடம் உள்ளது. மேலும் எனது தந்தை மற்றும் தாயாரின் அனுபவம் எனக்கு உதவும்.
வேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும், அதற்காகத்தான் கூறினேன் தகுந்த தொழில்நுட்பத்தை உபயோகபடுத்தி, ஏன் செய்யக்கூடாது என்று. எடுத்துக்காட்டக, முன்பெல்லாம் கிணற்றில் இருந்து வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சினார்கள், ஏன் இப்போது அதுவே குழாய் மூலம் செய்கிறார்கள், தணீர் சேமிக்க.. அதுபோலத்தான்.
விவசாயம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பது போல என்று கூரியுளீர், மிக நன்று, நிலைத்தை வெறுமையாய் போட மனம் வராமல் ஏதாவது பயிரிட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள எனது பெற்றோர் உள்ளவரை என்னால் அக்குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்று நம்பிக்கை
சிறு விவசாயிகளால் எந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன் படுத்த முடிகிறது உள்ளது //
நானும் கவனித்து உள்ளேன், அனாலும் தகுந்த சாலை வசதி இல்லாத இடங்களில் அவற்றை பயன்படுத்த ன்றைய தடைகள் உள்ளன , அதுவுமில்லாமல் சிறிய நிலம் வைதிருபவர்கலாய் சில நேரங்களில் சில இயந்திரங்களை பயன்படுத்த முடிவதில்லை. அவ்வளவே. நிலைமை மாறினால் சந்தோசமே.
நன்றி சதுக்க பூதம்..
நன்றி சரவணகுமார் அவர்களே
hi
i just read your post. i reflects my thought. also within next six months i am going to involve in agriculture... "Nellu Nadavu"...
your posts are superb.
(i dont know how to type in types.. thats why i am using English)
Post a Comment