Sunday, March 15, 2009

மனதில் தோன்றியவை

பதிவு எழுத நேரம் கிடைப்பது இல்லை இப்போது எல்லாம்...

விளம்பரங்கள் மிராண்டா விளம்பரம் பார்த்தேன் அசின் கலக்கியுள்ளார் ஆனால் என்ன இந்த காலத்தில் பெண்கள் முன்னேற்றம் சுய உரிமை என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க இப்போ போய் இந்த மாதிரி விளம்பரமா?

the ther end of the line.. நம்ம ஸ்ரேயா நடிச்ச ஆங்கில படம், நேத்து தான் பார்த்தேன், நல்லாத்தான் இருக்கு, நல்ல ரோமன்ஸ் படம்..இந்த அம்மா மும்பைல சிட்டி பேங்க் கால் சென்டெர் ல வேலை செய்யறாங்க அப்ப அங்க வேலை நிமித்தமா ஒரு வெள்ளைக்காரரிடம் பேச வேண்டி இருக்கு, பேசும்போதே அவர் மேல காதல் வந்துடுது அப்புறம் அவர தேடி அமேரிக்கா போறாங்க (எப்படித்தான் நெனச்ச உடனே பாஸ்போர்ட் விசா எதுவுமே இல்லாம அமேரிக்கா போறாங்களோ ஒரு வேலை காதலுக்கு தேவை இல்லை போல) ஆனா நல்ல படம்.

நம்ம வாழ்க்கை :
புதன் கிழமை அலுவலகத்தில் சும்மா இல்லாம நண்பர் கூப்பிட்டார் என்று நாவலூரில் உள்ள ஆந்திரா மெஸ்சுக்கு சாப்பிட சென்றோம் . நல்லாதான் போயிகிட்டு இருந்துச்சு சாப்பாடு, கோழி வறுவல் என்று. அபோதுதான் அவர்கள் வந்தனர், இரண்டு பேர் வந்து கல்லாவில் இருந்தவரிடம் எதோ பேசினார்கள், அதில் ருவரை வந்ததில் இருந்து நான் கவனித்துக்கொண்டே இருந்தேன், அதை அவரும் கவனித்து போல இருந்தது. பின்னர் சென்று விட்டனர், என்னடா வந்தாங்க போய்ட்டாங்க என்று நினைத்து சாப்பிட்டேன். பின்னர் திரும்பி வந்தது அந்த தேவதை ( நான் கூட இப்படிலாம் சொல்ற அளவுக்கு நிலமா மாறிபோச்சு பாருப்பா ) என்னமோ தெரியல அந்த பெண்ணை பார்த்த உடன் பிடித்து போய்விட்டது அந்த சிரித்த முகமும் பார்வையும்... பின்னர் டோக்கன் வாங்கி வந்து சாப்பிட உட்கார்ந்த இடம் எனக்கு அருகில் உள்ள மேசை .. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தாள் அந்த தேவதை.

கூட வந்த கொடுக்கு எப்படி இருந்தது என்று நினைவு இல்ல மனது முழுவதும் அந்த பெண்ணின் நினைவு மட்டுமே. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தது அந்த தேவதை சாப்பிடும் போதும் என்னை பார்த்துக்க்கொண்டே இருந்தது எங்கோ பார்த்த முகமா? இல்லையா தெரியவில்லை ஆனால் மிக பிடித்த முகம்... பேச வேண்டும் போல இருந்தது ஆனால் பேச வில்லை சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகத்தை அடைந்த பிறகும் அதே முகம், வேலை செய்ய முடியவில்லை, அடுத்த நாளும் ஆந்திரா மெஸ்சுக்கு சென்றேன் அவள் தான் வரவில்லை இருந்தும் அந்த முகம் நினைவில்...

வியாழகிழமை அலுவலகத்திற்கு செல்லும்போது கலையில் எனது நிறுத்தத்திற்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கண்டு இருந்தது இன்னொரு தேவதை... இவளின் பெயரும் தெரியவில்லை அதனால் தேவதை என்றே அழைப்போம், அதே பார்வை அதே முகம், திடிரென்று என்னை பார்த்தது பின்னர் நான் பார்ப்பது தெரிந்தும் தலை குனிந்து.நின்றது. மறுபடியும் மின்னல் (என்னாங்கடா இது நமக்கு இப்படி எல்லாம் ஆகுது முதல்ல வீட்ல பொண்ணு பார்க்க சொல்லணும் என்று நினைத்தேன் ) வெள்ளிகிழமையும் அதே நிறுத்தம் அதே பெண் அதே பார்வை.. ஹ்ம்ம் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.

இலங்கை பிரச்சனை
சொல்ல நிறைய இருந்தும் சக பதிவர்கள் நிறைய எழுதி விட்டனர், மனது ரணமாக வும் கனமாகவும் உள்ளது. நம் தமிழ் இளைஞர்கள் பலருக்கும் இலங்கையில நடப்பதற்கான காரணங்கள் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

தேர்தல் புதன் கிழமை வருகிறது தேர்தல் சென்னையில் இருந்த கரூர் சென்று ஓட்டு போடணும், ஏனுங்க ஒரு வெள்ளிகிழமையா இல்லை திங்கள் கிழமை வைத்திருந்தால் வசதியா இருந்திருக்கும், எப்படியும் என் கடமையை செய்து விடுவேன் ஆனால் மற்றவர்கள் ??

பின் குறிப்பு:நன்றி அருணா அவர்களே, எழுத்து பிழைகளை சரி பார்த்தேன் ஆனால் கணினியில் எதோ கோளாறு போல, நன் முதலில் copy செய்தது வரவில்லை. இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

3 comments:

Sri said...

vayasu kolaru man vayasu kolaru....

ச.பிரேம்குமார் said...

எவ்வளவு நாள் தான் தனா புலம்பிகிட்டே இருப்பீங்க.... சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணுங்க‌ ;)

DHANS said...

நன்றி ஸ்ரீ, ஏழு கழுதை வயசாச்சு இன்னும் வயசு கோளாறு என்று சொன்னா எப்படிங்க??
வயசு கோளாறா, பார்வை கோளாறா தெர்ல, சரி செய்துடுவோம்.

நன்றி பிரேம், என்ன பண்ண அதுக்கு ஒரு நேரம் வர வேண்டாமா? பார்க்கலாம், நமக்குன்னு யாரும் இனிமே பொறக்க போறது இல்லை, நம்ம ரூட் கிளியர் ஆகிவிட்டது, அதனால பொறுமையா கண்டு பிடிக்கலாம்