எதற்கும் கலங்காத கல் நெஞ்சக்காரான்
கடவுளே இவனுக்கு கல்லாகத்தான் தெரிவார்
முசுடு, பேசத்தேரியாதவன், எதுக்கும் கவலையே படாதவன்
பாசமில்லாதவன், பிழைக்கத்தெரியாதவன், உறவை மதிக்கத்தெரியாதவன்
இன்னும் எத்தனை எத்தனை பேச்சுக்கள், எத்தனை வசவுகள்
எதற்கும் அஞ்சாதவந்தான், கவலையே படாதவன்தான்.
என்னுள் நீ கொடுத்த இந்த மாற்றம் உன்னையே மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும் அளவுக்கு மிகப்பெரியது,
இருந்தும் உன் ஒற்றை வரியில் என் அத்தனையையும் மாற்றியது, உன் போலி மகிழ்ச்சிக்காக இதையும் தாங்கிக்கொள்வேன் என்று உன்னுள் நம்பிக்கை ஏற்ப்படுத்தும் அளவுக்கு வலி பழகிப்போனதாக இருக்கலாம் ஆனாலும் வலியும் நியாபகங்களும் என்றுமே வலியும் நியாபகங்களும்தான். உன் போலி மகிழ்ச்சிக்காக அவற்றை போலியாக்கதே. இழப்பு என்பது இருவர்க்கும்தான்
7 comments:
தனா, அதெப்படி உங்கள கடுப்படிக்க யாராவது இருந்துகிட்டே இருப்பாங்களா? இல்ல உங்களுக்கு தான் அடிக்கடி கோபம் வருமா?
ரெண்டுமே தான் .
என் கோவம் எல்லாம் செல்லா காசு பிரேம்
எப்போதாவது சில விஷயங்கள் மனச உறுத்தும் அப்போது இந்த மாதிரி சில்எ பதிவுகள் பிறக்கும். இது கடுப்பால வந்த பதிவு இல்ல, புரிதல் இல்லாததால் வந்த பதிவு.
எனக்கு புரியவில்லையாதலால், பின் நவீனத்துவ பதிவா என்று மட்டும் கேட்டு எஸ் ஆகிக் கொள்வது..
நானே தான். ;)
ஜோக்ஸ் அபார்ட்,
//இழப்பு என்பது இருவர்க்கும்தான்
எனக்கு இது புரிஞ்சது.
இந்த பதிவு எனக்காக நானே எழுதிக்கொண்டது, கண்டிப்பாக பின் நவீனத்துவம் அது என்றுலாம் இல்லை. நமக்குமா துக்கும் ரொம்ப தூரம்.
என்னுடைய நிலை வந்தால் கண்டிப்பாக தங்களுக்கு புரியும் அதுவரை என்சாய்.
//எனக்கு இது புரிஞ்சது//
அப்பா ஒரு வரியாது புரிஞ்சுதே மகிழ்ச்சி
கார்த்தி மேல எழுதிருக்கது உங்களுக்குத்தான்.
அதுக்கும் மேல எழுதிருக்கது ப்ரேம்க்கு.
உங்கள் வலி புரிகிறது....
அன்புடன் அருணா
தங்கள் புரிதலுக்கு நன்றி அருணா ஒருத்தருக்காது புரிகிறதே
Post a Comment