Wednesday, May 13, 2009

பசங்க பாகம் இரண்டு

பசங்க படம் இரண்டாம் பாகம் போயிருந்தேன் எனது சென்னை நண்பர்களுடன் , உடன் வந்த நண்பர்கள் இருவரும் இரு துருவங்கள், ஒருவர் எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாய் இருப்பவர் , இன்னொருவர் அமைதியாக இருப்பவர்,  

வற்புறுத்தி அவர்களை இந்த படத்துக்கு அழைத்து சென்றேன், அவர்கள் என்னை அழைத்தது குரு என் ஆளு படத்துக்கு, விவேக் காமெடி நல்ல இருக்கும் என்று சொல்லி அந்த மொக்கையை பார்க்க அழைத்தனர் நல்ல வேலை ஆராதனா திரை அரங்கு என்னை காப்பாற்றியது பசங்க படம் போட்டு. படத்தை பார்க்க ஆரம்பித்ததும் அவ்வப்போது வெளியே சென்று வந்தனர், இடையில் போன் வேறு, ரசித்துபார்த்தனர் இருந்தாலும் அந்த அளவுக்கு இல்லை, ஒரு வேளை புதுக்கோட்டை தமிழ் புரியலையோ இல்லை ஒரு மாநகரத்து பள்ளி வாழ்க்கை இல்லாமல் ஒரு டவுன் பள்ளி வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும் . 

படம் முடியும் தருவாயில் ரொம்ப ஓட்டிவிட்டனர், பாவம் டைரக்டர், கண்டிப்பாக அவர் சென்னை மக்களுக்காக இந்த படத்தை எடுத்திருக்க மாட்டார். சென்னை மக்களுக்கு ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன் சென்னை மட்டுமே தமிழ் நாடு இல்லை அதையும் தாண்டி பல இடங்கள் சேர்ந்ததுதான் தமிழ்நாடு. படம் முடிந்து இருவரும் அடித்த கமெண்ட் படத்துல வடிவேலு இல்லை விவேக் சேர்த்து இருக்கலாம் படம் முழுக்க காமெடி இல்லை, இவர்கள் இருந்திருந்தால் படம் சூப்பெரா இருக்கும் என்றனர், எனக்கு எங்கு போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை . 

இதுக்கு மேல என்ன எழுதறது, படத்த இரண்டாவது முறை பார்க்கும்போது கதையில் சொல்லியிருந்த சினன் சின்னகவிதைகள் விஷயங்கள் பல புரிகின்றது. இன்னொரு முறை மற்றும் ஒரு வித்தியாசமான நண்பர்களுடன் பார்க்க வேண்டும் எனக்கு தெரிந்துஉலகிலேயே சின்ன கேள்வி இதான் - ? அதற்க்கு பதில் இதுவாக இருந்திருக்குமா - ! கேள்வி ? பதில் ! திடிர்ன்னு ஏதோ தோணிச்சு அதான் இதை பதிவுல சேர்த்துகிட்டேன்

2 comments:

Karthik said...

பசங்க நான் இன்னும் பார்க்க வில்லை. பார்த்துட்டு சொல்றேன். கல்லூரி எனக்கு பிடிக்கவில்லை. இப்படி கூட காலேஜ் இருக்குமானு தோணுச்சு. :((

பசங்க நல்லா இருக்குனு எல்லாரும் சொல்றாங்க.. பார்க்கலாம். :))

DHANS said...

//பசங்க நான் இன்னும் பார்க்க வில்லை//
நேத்து கூட பார்த்தேன் முன்னாடியே சொல்லிருந்தா நீயும் வந்திருக்கலாம்

அடுத்த முறை சொல்கிறேன்.
//கல்லூரி எனக்கு பிடிக்கவில்லை. இப்படி கூட காலேஜ் இருக்குமானு தோணுச்சு. :((//
இப்படியும் கல்லூரி இருக்கு கார்த்திக் , மறுபடியும் சொல்றேன் சென்னை மட்டும் தமிழ்நாடு அல்ல உண்மைய சொன்ன சென்னை என்பது ஒரு சிறிய புள்ளி, தமிழ் உலகம் அதற்க்கு வெளியே உள்ளது

கண்டிப்பா பசங்க படமும் தணலுக்கு வித்தியாசமா தெரியும், தமிழ் வலி கல்வியில் அரசு பள்ளியில் படித்து இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த படம் புடிக்கும்