Wednesday, July 2, 2008

நேற்றிரவு

நேற்று இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு படுக்கப்போகும் முன் நண்பன் வாடா காலாற நடந்துவிட்டு வரலாம் என்று அழைக்க எதோ குருட்டு யோசனையுடன் சரி என்று நடக்க ஆரம்பித்தோம். எங்க தெருவில் வீட்டுக்கு முன்னாள் கார் நிறுத்துபவர்கள் இப்போது பயந்து போயுள்ளனர். பின்ன அன்று ஒரு நாள் நிறுத்தியிருந்த காரை இரவில் வேகமாகச்செல்லும் மணல் லாரிகள் இடித்துவிட்டு சென்றிருக்க, அடுத்த சில நாட்களில் இன்னொரு கரையும் காலி பண்ணி இருந்தனர்.

கிளம்பும்போதே பக்கத்து வீட்டுக்காரர் ஒரு லாரி ஓட்டுனருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார், வீட்டு வேலைக்கு மணல் கொட்டுகிறேன் என்று அவர் வீட்டு சுற்றுச்சுவர் முழுவதையும் மூடி இருந்தனர். நாங்களும் பார்த்தோம், இருபது அடி ரோடு இப்ப ஒத்தையடிப்பதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்படியே வேளச்சேரி - தரமணி மெயின் ரோட்டுக்கு வந்தோம், கொஞ்ச நேரம் நடந்திருப்போம். இரண்டு பேர் பைக்கில் வந்து விஜயநகர் எது என்றனர், இதுதான் என்று சொல்ல, இல்ல இங்க எங்க இருக்கு விஜயநகர் என்றுகேட்டனர். அவங்களுக்கு ஒருவழியா வலி (வழிதான்) சொல்லி அனுப்பினோம். மெதுவாக சுற்றி வீட்டுக்கு வரும் வழியில் காவல்த்துறை ரோந்து,எங்கப்பா போயிட்டு வரீங்க என்று அவர்கள் கேட்க. வாக்கிங் போயிட்டு வரோம் என்று சொலிட்டு அவங்கள பாக்க, நைட் 12 மணிக்கு எவனாது வாக்கிங் போவனா? என்று எங்களை பார்த்து சிரித்தார்.

அவங்கள சமாளிச்சு வீட்டுக்கு வந்தா எதுத்த வீட்டுக்கு முன்னாடி ஒருத்தர் கார நிறுத்திட்டு கைய பிசஞ்சுகிட்டு இருந்தார். கிட்ட போய் என்னனு பார்த்தா, கார் சாவிய உள்ள வச்சுட்டு கதவ பூட்டிட்டார். அப்புறம் நாங்களும் கொஞ்சநேரம் என்ன பண்ண என்று யோசித்தோம். வழியே வந்த ஒரு வாடகை வண்டியை நிறுத்தி உதவி கேட்க, அவரும் உதவினார். நாங்களும் கதவில்லுள்ள இடைவெளியில் ஒரு scale விட்டு அழுத்தினால் திறந்துவிடும் என்று நினைத்து கஷ்டப்பட்டு அந்த கண்ணாடியை மூடி இருக்கும் ரப்பரை பிரிக்க இப்போதுதான் சோதனை. ஆமா scale இல்ல, அதுபோல ஆயுதங்களை தேடினா கிடைத்தது பெரிய கரண்டி எங்க வீட்டிலிருந்து, அவர் வீட்ல பெரிய கரண்டி 2, பரீட்சை அட்டை 1, நீண்ட கம்பி 1, ரப்பர் பட்டை , சின்ன கட்டை.நமக்கு ஆயுதம் செய்வோம் என்ற படம் நியாபகம் வந்தது.

திடீரென்று ஒரு யோசனை,சரி என்று just dial நம்பர்க்கு அழைத்து 24 மணிநேர சர்வீஸ் நம்பரை கண்டுபிடித்து ஒரு ஆளை அழைத்தால் அவர் இன்னொரு நம்பர் குடுக்க அதிலிருந்து இன்னொரு நம்பர் என்று நான்காவது நம்பரில் ஒருவர் கிடைத்தார். அவர் ஆளனுப்பி அவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆனது. காலையில்தான் அவர் பெட்ரோல் போட்டுள்ளார் போல, இரண்டு மணி நேரமாக வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.இதுக்கு இடைல அவங்க வீட்டிலிருந்து mirinda வேற. கடைசியில் வந்து சரி செய்யும்போது மணி இரண்டு. அந்த நேரத்தில அவங்க காபி வேற குடுத்தனர்.

இவ்ளோ நடந்ததுல கிடைத்த தகவல்கள்

அந்த வீட்டுக்கு 15000 வாடகை குடுக்கிறார் (ஆகா நம்ம ஒப்பந்தம் அடுத்த மாசம் காலாவதி ஆகிறது, ஓனர் ஒரு ஆயிரம் ரூபாய் வாடகை ஏத்துவார் என்று நினைத்தால் இவர் சொல்வதை வைத்து பார்த்தால் சுமார் 6000 ரூபாய் ஏற்றப்படும் என்று நினைக்கிறேன்)

வாடகை வண்டிகள் உதவி செய்வது மகிழ்ச்சி.

வண்டிக்கு இத்தகைய சோதனை வரும்போது உதவி செய்யும் நபர்கள் வண்டியின் அசல் பதிவுப்புத்தகத்தை சரி பார்க்கின்றனர்.

அவர்களை அனுப்பியவர் மறுபடியும் அழைத்து சரி செய்யப்பட்டது என்று உறுதி செய்கிறார் ( My TVS Guindy ). இருபது நிமிட தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

சரி செய்ய வந்தவர்களை தேனிர் அருந்தி செல்லலாம் என்று அழைக்க அவர்கள் நீங்க கூப்பிட்டதே போதும், நாங்க பார்த்து இதுவரை எங்களை இப்படிகேட்டதே இல்லை என்று சொல்லி சென்றனர்.

இனி வண்டியை விட்டு இறங்கும்போது சாவி கையில் இல்லாமல் இறங்க கூடாது என்று நாங்கள் பாடம் கற்றோம்.

காலையில் கிளம்பும்போது பார்த்தேன், மணல் கொட்டுகிறேன் என்று பக்கத்து வீட்டு காரை பாதி மூடி வைத்திருந்தனர். (இன்னிக்கு மறுபடியும் பெரிய சண்டை இருக்குடா )

இனி வாக்கிங் கிளம்புனா சீக்கிரம் கிளம்பனும்.

6 comments:

rapp said...

இதென்ன ஒரே 'கார்'கால நினைவுகளா இருக்கு?

Dhans said...

ஆகா நல்ல தலைப்ப மிஸ் பண்ணிட்டேனே...'கார்'கால நினைவுகள்.
என்னங்க பண்ண நமக்கும் காருக்கும் அப்படி ஒரு ராசி

பிரேம்குமார் said...

அருமையான பதிவு தனா.

சரி, ஒரு சாவியை உள்ளே வைத்து பூட்டிவிட்டார். இன்னொரு சாவி இல்லையா அவரிடம்.

கூடவே நிறுவனத்தின் தொடர்பு எண்ணையும் கொடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும்

பிரேம்குமார் said...

அருமையான பதிவு தனா.

சரி, ஒரு சாவியை உள்ளே வைத்து பூட்டிவிட்டார். இன்னொரு சாவி இல்லையா அவரிடம்.

கூடவே JUST DIAL நிறுவனத்தின் தொடர்பு எண்ணையும் கொடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும்

Dhans said...

//சரி, ஒரு சாவியை உள்ளே வைத்து பூட்டிவிட்டார். இன்னொரு சாவி இல்லையா அவரிடம்//

அவர் சமீபத்தில் நாடு திரும்பியுள்ளார் அதனால் உறவினரின் வண்டியை உபயோகிக்கிறார், இன்னொரு சாவி அவரிடம் உள்ளதாம்.


நிறுவனத்தை தொடர்பு கொள்ள :
T V Sundaram Iyengar & Sons Ltd
(Contact Person: Roopa Praveen)

Building : No 54-A
Street : Mount Poonamallee Road
Location : Near Guindy
Area : St Thomas Mount
Pin : 600016
Tel. : 28159994, 9894945494, 9842113000
Mobile. : 9840222000
Email : Roopapraveen.mytvses@tvssons.com, Vatxhan@vsnl.com
Website : Www.tvsiyengar.com

Dhans said...

for just dial: 044-26444444