Thursday, July 17, 2008

நான் என்ன செய்ய??

முன்பே சொன்ன படி நான் கார் வாங்கி விட்டேன், விட்டேன் என்றால் முன் பணம் செலுத்தி விட்டேன், இன்னும் வங்கி கடன் வரத்தால் இரண்டு நாளில் வண்டியை எடுக்க போகிறேன். அவர்களிடம் ஒரு தொகைக்கு பேசி முன்பணம் செலுத்தி உள்ளேன்.

நேற்று எனது மற்றொரு நண்பர் நான் வாங்கிய அதே மாடல் வண்டி வியாளிக்கு வந்துள்ளதாகவும் விலை கணிசமான அளவு குறைவாகவும் இருப்பதாக கூறி எனை அழைத்தார். அவர் அழைப்பை மறுக்க முடியாமல் நானும் சென்று பர்தீன், ஊடிப்பர்ததில் வண்டி நன்றாக உள்ளது. நான் ஏற்க்கனவே முடித்த வண்டிக்கும் இந்த வண்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அனால் இந்த வண்டி கணிசமான அளவு குறைவான விலைக்கு கிடைக்கின்றது.

இப்போது நான் என்ன செய்வது? இரண்டுமே பழைய கார் , ஒரே வருடம், ஒரே அளவு ஓடியுள்ளன. வித்தியாசம் எதுவுமில்லை விலையை தவிர.

பழைய காருக்கு முன்பணம் செய்து உறுதி செய்ததால் நாணயமாக அதையே எடுத்துக்கொள்வதா?

இல்லை சில ஆயிரங்களை சேமிக்க இந்த இரண்டாவது காரை எடுத்துக்கொள்வதா?

தொழில் நேர்மை என்னை முதல் முடிவிர்ற்கு செல்ல தூண்டுகிறது இருந்தாலும் சேமிப்பு இரண்டாவதுமுடிவுக்கு இழுக்கிறது.

நண்பர்களே முடிந்தால் முடிவெடுக்க உதவி செய்யுங்கள்

6 comments:

சந்தர் said...

உமக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் நன்றாக இருந்தால் பழைய காரையே வாங்குங்கள். உமக்கு பணம் வேண்டுமென்றால் யாரும் தரப்போவதில்லை. இதில் நாணயக்குறைவு ஏதும் இல்லை. புதிய காருக்காக கொடுத்த உமது அட்வான்ஸ் திரும்ப கிடைக்குமா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

DHANS said...

நன்றி சந்தர்

சிறிது பிழை உள்ளது என் பதிவில். இன்றுமே பழைய கார்தான்.
அதனால்தான் இந்த யோசனை.
தெளிவாக எழுதாததால் மன்னிக்கவும்

சந்தர் said...

புதியதோ பழையதோ, நாலு காசு நமக்கு மிச்சமானால் நல்லது தானே. பழையவரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கு ஏதும் குற்ற மனப்பான்மை இருக்காது.(ஏற்கனவே சொன்னது போல, காருக்காக கொடுத்த அட்வான்ஸ் திரும்ப கிடைக்குமா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.)

Karthik said...

என்ன கார்???

DHANS said...

பியட் பாலியோ கார்த்திக்

புருனோ Bruno said...

ஒருவரிடம் ஒரு வியாபாரம் பேசி முன்பணம் அளித்து விட்டால் அதே பணத்திற்கு அந்த வியாபாரத்தை முடிப்பது தான் தர்மம்.

உங்களுக்குள் எழுதப்பட்ட ஒப்பந்தம் எதுவும் இல்லையென்றால் நீங்கள் அதை மீறினால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாது.

ஆனால்

நீங்கள் முன்பணம் அளித்த சீருந்தை அதை விட அதிக விலைக்கு அவர் விற்றால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும் அல்லவா.

அப்படி நினையுங்களேன்.

சில ரூபாய்கள் மிச்சமாகலம். ஆனால் தொழில் நேர்மை அதை விட முக்கியம் என்பது என் கருத்து !!!