Friday, July 11, 2008

கார் வாங்கியாச்சு

ரொம்ப நாளா சொல்லிகிட்டிருந்த கார் வாங்கும் படலம் இபோதுதான் முடிந்துள்ளது. தீவிரமா தேடி எனக்கு பிடித்த பாலியோ காரை நேற்று கண்டுபிடித்தேன். இதற்கு முன்னால் மூன்று கார்களைப்பார்த்தேன். அனைத்துமே இணையத்தில் தேடி கண்டு பிடித்ததுதான்.

முதல் கார், மிக குறைவான விலை குறிப்பிடிருந்தனர், சரி பார்க்கலாம் என்று நினைத்து சென்றோம். அதற்க்கு முன்னாடியே பலமுறை தொலைப்பேசியில் அழைத்து உறுதி செய்தனர். அரஞ்சு கலர் பார்க்க நன்றாக பளபளப்பாக இருந்தது. ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. அனைத்தும் ஓகே. இருந்தாலும் ஒரு மெக்கானிக் வைத்து அறிந்துவிடலாம் என்று நண்பரின் உதவியுடன் மெக்கானிக் கண்டுபிடித்து அறிந்தோம்.

காரின் வண்ணம் இரண்டாம் முறை பூசப்பட்டிருந்தது, சர்விஸ் செய்ததற்க்கான வரலாற்றை கூறவில்லை, இஞ்சின் பிரச்சனை இருந்தது. இதை வாங்குவது என்பது ரிஸ்க் என்று முடிவானது.அதனால் இந்த வண்டி இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.

அடுத்து மற்றொன்று, இதுவும் நல்ல வண்டி ஆனால் டீசல் வண்டி, விலையும் நம்ம தகுதிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தது. அதற்குமேல் அதில் வழக்கம் போல உள்ள டீசல் பம்ப் பிரச்சனை இருதது கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது

மூன்றாவதாக பேப்பரில் பார்த்த வண்டிக்கு அழைத்து நேரில் சென்று பார்க்க சென்றோம். பார்க்கும்போதே தெரிந்தது நன்றாக பராமரிக்கப்பட்ட வண்டி என்று.முதல் உரிமையாளர், வண்டியை ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. திருப்திகரமான வண்டி, ஆனால் கேட்ட விலை மயக்கம் வந்து விட்டது பின்னர் ஒரு வழியாக பேசி முடித்தாயிற்று. (மாதிரி புகைப்படம்)

முன் பணம் குடுத்து விட்டு இப்பொது வங்கி கடனுக்காக காத்துகொண்டு உள்ளேன். திங்கட்கிழமை கிடைத்து விடும் என்று நம்புகிறேன். வீட்டிலும் பெரிய எதிர்ப்பு இல்லை. நெடுநாள் ஆசை அதனால் எதுவும் சொல்லவில்லை ஆனாலும் எதோ ஒரு குற்ற உணர்ச்சி இருக்கின்றது, தேவை இல்லாமல் செலவு செய்து விட்டோமா என்று. பார்ப்போம் பல்சர் வாங்கியபோதும் இப்படித்தான் தோன்றியது. பின்னர் வீட்டில் சகஜமாக எடுத்துக்கொள்ள அது மறைந்தது.

எப்படியோ இந்த பிறந்தநாள் நன்றாக நல்ல செய்திகளை கொண்டு வருகின்றது. பத்து நாட்களுக்குள் மூன்று நல்ல செய்தி.நான் கார் வாங்கியது, மிக எதிர்பார்த்த துறை மாற்றம் எனது அலுவலகத்தில், அண்ணனின் திருமணம் மற்றும் சம்பள உயர்வு .. மகிழ்ச்சியான தருணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்.

இத்தருணத்தில் புறக்கணிப்பின் வலியிலிருந்து மீண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் புறப்படுகிறேன் புதிய உலகை நோக்கி. புறக்கணிப்பு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களில் பல என்னை பக்குவபடுத்தியது போலத்தெரிகிறது. மிக கொடியதுதான் இது, நீ என்னுடன் பேசியது பின்னர் என்னிலுள்ள சிறிய தவறு என் நட்பை துளைத்து பின்னர் என்னையே துளைக்கும் அளவிற்கு வந்து, நண்பர்களை பிரித்து, எதிரிகளை கூட பிரித்து என்னை தனிமைச்சிறையில் அடைத்த தருனகள் என் வாழ்வில் கொடிய தருணங்கள். கண்முன்னே சிரித்து பழகிய நண்பர்கள் என்னிடம் பொய் சொல்லி தனியே சென்று களிக்கின்றனர். காரணம் எனக்கு தெரிந்தால் நான் துன்பப்படுவேனோ, இல்லை என்னை விள்ளக்க அவர்களாக எடுத்த முடிவோ என்னவோ மேலும் என்னை அழைக்க முடியாது என்பதாலோ. அவர்களே அடுத்த நாளில் என்னிடம் தெரியப்படுத்துகின்றனர் எவ்வாறு கழித்தோம் நேற்றைய நாளை என்று.

கண்முன்னே எனது நண்பர்களால் புறக்கணிக்கப்படுவது தெரிந்தும் ஊமைச்சிரிப்பு சிரித்துகொண்டு ஏன் இருக்க வேண்டும் நான்? அதற்காக வருத்தப்பட்டு மெலிந்து போவதும் கூடாது, என்னுள் இருந்த "நான்" என்ற சுயமரியாதை தலை தூக்கியது. போராட்டத்தை தனியாளாக நின்று ஏற்க்கத்துவங்கினேன், பல தோல்விகள் மிகச்சில வெற்றிகள், சிற்சில சந்தோசங்கள் என்று முடிந்த கடந்த வருடமும், நல்ல செய்திகளுடன் துவங்கும் இந்த வருடமும் எனக்குள் விதைத்த அனுபவங்களுக்கு நன்றி.

எதோ எழுதப்போய் எதோ எழுதிட்டேன், ஊருக்கு சென்றுவிட்டு வந்து அடுத்து அலப்பரைய ஆரம்பிக்க வேண்டியதுதான். நம்ம அலப்பரைய அப்புறம் சொல்றேன்...

இ புகைப்படம்

12 comments:

துளசி கோபால் said...

முதலில் பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.

காரோட படத்தைப் போட்டுருங்க. பார்த்துக்குவோம்:-)

Dhans said...

//முதலில் பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.//

வாழ்த்து(க்)களுக்கு நன்றி,

//காரோட படத்தைப் போட்டுருங்க. பார்த்துக்குவோம்:-)//


காரோட படம் போடணும், ஆனால் இப்போது மாதிரி படம்மட்டுமே போட முடியும் என்பதால் விரைவில் படம் பதியப்படும்.

Sen22 said...

பிறந்த நாள் வாழ்த்துகள் Boss...

Dhans said...

//பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்//

மிக நன்றி வாழ்த்துக்களுக்கு .. அனா இந்த boss தான் பயமார்க்கு :)

//காரோட படத்தைப் போட்டுருங்க. பார்த்துக்குவோம்:-)//

மாதிரி புகைப்படம் பதியப்பட்டுள்ளது.

ராஜ நடராஜன் said...

மாசத்துக்கு ஒரு முறை என்ஜின் ஆயில் மாத்துங்க.கூடவே கியருக்கும்.ரேடியேட்டர் சூடாகம பார்த்துக்குங்க,தினமும் வண்டிக்கு சாவி குடுக்கறதுக்கு முன்னாடி டயர்களை ஒரு சுத்து பார்த்துடுங்க.வாழ்த்துக்கள்.இது முதல் பாதிக்கான டிப்ஸ்.அடுத்து வரிகளுக்கும் டிப்ஸ் கேட்டீங்கன்னா நான் எஸ்ஸாயிடுறேன்.

கயல்விழி said...

உங்களை யார் என்ன சொன்னது என்ற முன்கதை எல்லாம் எனக்கு தெரியவில்லை.

உங்கள் புது வாகனத்துக்கும், ப்ரொபஷனல் வெற்றிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தஞ்சாவூரான் said...

கார் வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்!

செந்தழல் ரவி said...

தன்ஸ் !!!

நிராகரிப்பு, வலி அது இதுன்னு எழுதியிருக்கீங்க ? அவனா நீ :))))

தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்...

வாழ்க்கையில் வெற்றி, கார் வாங்குவது எல்லாம் சரி...அதனால் பிகர் மடியும் என்பது சரியில்லை :))

நீங்க என்ன பைக் வாங்கி பிகர் மடிச்ச "தனுஷா" :)))

நிராகரிப்புக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்...

புலம்பல்ஸ் விடுத்து, ஒரு புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதே சிறப்பானது...

அன்புடன்..

Dhans said...

//மாசத்துக்கு ஒரு முறை என்ஜின் ஆயில் மாத்துங்க.கூடவே கியருக்கும்.ரேடியேட்டர் சூடாகம பார்த்துக்குங்க//
தங்கள் ஆலோசைனைக்கு நன்றி

மாதம் ஒருமுறை என்ஜின் ஆயில் மற்ற வேண்டுமா? எனக்கு தெரிந்த வரை இந்த இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

அடுத்த பாதிக்கு நீங்க இல்ல யாருமே டிப்ஸ் குடுக்க முடியாது :)

Dhans said...

//உங்களை யார் என்ன சொன்னது என்ற முன்கதை எல்லாம் எனக்கு தெரியவில்லை//

முன்கதை தெரியாத வரை ரொம்ப நல்லது :) நடந்தவை எல்லாம் நன்மைக்கே

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி

Dhans said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக நன்றி

தங்கள் தாமதமான இரண்டாவது பந்தி மிக நன்றாக இருந்தது, தொடரவும்

Dhans said...

ஏன் நாங்களும் அவன மாதிரி ஆனா என்ன? தவறாக எடுத்துக்கொள்ளவில்லை

//வாழ்க்கையில் வெற்றி, கார் வாங்குவது எல்லாம் சரி...அதனால் பிகர் மடியும் என்பது சரியில்லை :))//

பிகர் மடியறது எங்க, எப்பட வாங்குவ பாண்டி போயிட்டு வரலாம் என்று சில பேர் இருக்காங்க, வண்டி வீட்ட விட்டு வெளிய போகுதுன்னா இவங்க இல்லாம போகாது இதுல பிகருக்கு எங்க???


//நீங்க என்ன பைக் வாங்கி பிகர் மடிச்ச "தனுஷா" :)))//

பைக் வாங்கின பிகர் முடியும்னு சொன்னாங்க நானும் வங்கி 38000 கிலோ மீட்டர் ஒட்டியும் ஒன்னும் காணோம்.

என்ன காரணம் இருந்தாலும் புதிய வாழ்வு ஆரம்பித்து விட்டாயிற்று.

நன்றி ரவி