Tuesday, July 22, 2008

அவன்

வஞ்சித்தலும் வஞ்சிக்கப்படுதலும் என் வாழ்வின் அங்கமாகிவிட்டது சமீபகாலங்களில். மனசோர்வு அதிகமாகி போன இந்நாளில் என்ன செய்வதென்றே தெரியாமல் தனிமையில் இருக்க பயந்து என்னை நானே வஞ்சித்துக்கொண்டேன். ஆம் இப்போதெல்லாம் தனிமை பயமாய் இருக்கிறது, அதற்கு காரணமும் உண்டு.

தன்னம்பிக்கை இழந்து, என் நம்பிக்கையும் குறைந்து சோர்ந்து போய் உள்ளேன், மனதில் எங்கோ ஒரு சிறிய இடத்தில் மீண்டு வருவேன் என்ற தீ எரிந்து கொண்டு உள்ளது, அதை நம்பியே எனது தனிமையை களிக்கின்றேன்.
எதற்கும் யாருக்கும் தவறிழைக்க கூடாதென்ற நினைப்புடன் இருப்பவனை எவரும் எளிதாக பலவீனப்படுத்திவிடலாம். உன்னை பதிலுக்கு சீண்டுவதை கூட கேவலமாக நினைக்கும் என்னிடம் விளையாண்டு கொண்டு உள்ளாய், உன்னிடம் சரி நிகராக சண்டையிட உனக்கு தகுதி இல்லை. அதற்காக பலவீனப்பட்டு உன்னிடமிருந்து ஓடி விடுவேன் என்று மட்டும் நினைக்காதே, மீண்டு வருவேன், இன்னிடத்தில் இருந்தே உனக்கு புரிய வைப்பேன், என் சக்தி என்னவென்று எனக்கு தெரியாத நிலைமையை ஏற்படுத்திய உனக்கு நன்றி.

எத்தகைய நினைப்பு உனக்கு என்மீது, என் வரலாறு எனகூட்டும் நம்பிக்கையில் சொல்கிறேன், தயவு செய்து என்னுடைய எதிர்ப்புகுரிய நபர்களின் பட்டியலில் வந்துவிடாதே, இழப்பு உனக்குத்தான் அதிகமாய் இருக்கும் வரும் நாட்களில்.நீ இந்த பதிவை படிக்கபோவது இல்லை என்று எனக்கு தெரியும் அனால் அடிக்கடி நான் படிப்பேன், இது உன்னை பலவீனப்படுத்த இல்லை என்னைப்பலப்படுத்த. தற்போதைய இடம் உனக்கு என்னை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தி ஒதுக்கி, புறக்கணித்து கொடுமைப்படுத்த வேண்டும் என்பதே, அனால் எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை உண்டு, எனது தனிமை என்னை எப்போதும் தாலாட்டும் என்பது உனக்கு தெரியாது.

நான் தற்ப்போது பலவீனப்பட்டு உள்ளேன் என்பது உண்மை, அனால் இது தற்காலிகமானது ----------. உன்னை சொல்லி அழைக்க உறவுகளே இல்லை, எந்த பெயருக்கும் உனக்கு தகுதி இல்லாமல் போய்விட்டாயே என்று வருத்தப்படுகிறேன். எனது எதிரிகளுக்கு கூட எதிரிகள் என்ற உறவு உண்டு ஆனால் உனக்கு????

தெரிகின்றது நாட்கள் நெருங்கிக்கொண்டு உள்ளன என்று எனக்கா? உனக்கா?பொறுத்திருந்த பார்ப்போம். உன் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிந்ததால்தானே இன்னும் என்னைபலவீனப்படுத்த முயல்கிறாய், உனக்கு தெரியாது உனக்கிறுப்பது உன் சுற்றத்தில் ஒரு போலி மரியாதையை என்று. என்னால் மட்டுமே உன் ரகசியங்கள் காக்கப்படும் ஆனால் மற்றவரால்??

மேலும் எழுத மனது துடிக்கிறது ஆனால் உன்னை மையமாக வைத்து எழுத என் புத்தி மறுக்கிறது. மன்னிக்ககூட தகுதி இல்லாத உனக்கு இபோதைக்கு இப்பதிவு கூட தகுதி இல்லை.

5 comments:

DHANS said...

test

Anonymous said...

//இப்போதெல்லாம் தனிமை பயமாய் இருக்கிறது

ஆமாம். அது நம்மை நாமே பார்த்துக்கொள்ள பயப்படுகிறோம். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதையே விரும்புகிறோம். பெரும்பாலான நேரம்.

//எதற்கும் யாருக்கும் தவறிழைக்க கூடாதென்ற நினைப்புடன் இருப்பவனை எவரும் எளிதாக பலவீனப்படுத்திவிடலாம்.

ஆமாம். நேர்மை என்பது மக்களின் அகராதியிலிருந்து நீக்கப்பட்டு அரை நூற்றாண்டாவது ஆகிவிட்டது. தனிமனித ஒழுக்கத்திற்கும் இப்போதெல்லாம் பெரிய மரியாதை இருப்பதாகத்தெரியவில்லை. பணம். பணம் மட்டுமே பேசும்.

//ற்போதைய இடம் உனக்கு என்னை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தி ஒதுக்கி, புறக்கணித்து கொடுமைப்படுத்த வேண்டும் என்பதே

ஆமாம். தனிமை என்பதை நேசிக்கத்தொடங்கிவிட்டால் வாழ்கையில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். ஏனெனில் நாம் நம்மோடு நேரம் செலவழிக்க அஞ்சும் அளவு நமது மனசாட்சி நம்மை விட்டுவைப்பதில்லை.


//எந்த பெயருக்கும் உனக்கு தகுதி இல்லாமல் போய்விட்டாயே என்று வருத்தப்படுகிறேன்.

ஆமாம். எனக்கு நீ யார், உனக்கு நான் யார் என்பதற்கு ஒரு சக உலக வாசி என்ற தகுதியைக்கூட தரத்தேவையில்லாத் அளவுக்குப் போய்விட்டது என்றும் சொல்லலாம்.

//உன் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிந்ததால்தானே இன்னும் என்னைபலவீனப்படுத்த முயல்கிறாய்,

உன் ரகசியங்கள் என்னால் நிச்சயம் காக்கப்படும் என்னும் தைரியம் அவர்களை ஏதும் செய்ய வைத்துவிடுகிறது.


//மன்னிக்ககூட தகுதி இல்லாத உனக்கு இபோதைக்கு இப்பதிவு கூட தகுதி இல்லை.

நிச்சயமாக. மன்னிக்கத் தகுதியில்லாதவனோ/ளோ பூமியில் வாழ்வதற்கு அருகதை அற்றவர்கள் என்று நம்புகிறேன்.

இந்தப்பதிவு ஏன் வந்தது என்பதற்கான காரணத்தை உணர முடிகிறது.

DHANS said...

//ஆமாம். அது நம்மை நாமே பார்த்துக்கொள்ள பயப்படுகிறோம். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதையே விரும்புகிறோம். பெரும்பாலான நேரம்.//

இதுனமக்காக இல்லை இந்த பலவீனபடுத்த்ப்பட்ட உலகத்திற்காக நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு உள்ளோம்.

//ஆமாம். நேர்மை என்பது மக்களின் அகராதியிலிருந்து நீக்கப்பட்டு அரை நூற்றாண்டாவது ஆகிவிட்டது. தனிமனித ஒழுக்கத்திற்கும் இப்போதெல்லாம் பெரிய மரியாதை இருப்பதாகத்தெரியவில்லை. பணம். பணம் மட்டுமே பேசும்.//

நான் நேர்மைக்கு மரியாதையை எதிர்பார்ப்பதை நிறுத்திவைத்து பல வருடங்கள் ஆகின்றன. நேர்மையும் தனி மனித ஒழுக்கமும் கேளிபோருலாகி வெகு நாட்கள் ஆனாலும் இன்னும் அதை பின்பற்றும் சிலரால் எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

// ஏனெனில் நாம் நம்மோடு நேரம் செலவழிக்க அஞ்சும் அளவு நமது மனசாட்சி நம்மை விட்டுவைப்பதில்லை.//

நான் எனக்காக நேரம் செலவழிக்க விருப்பப்பட்டு முடியாமல் போன நாட்கள் பல ஆனாலும் எப்பவுமே எனக்கான நேரத்தை குறைத்ததுஇல்லை.

// சக உலக வாசி என்ற தகுதியைக்கூட தரத்தேவையில்லாத் அளவுக்குப் போய்விட்டது என்றும் சொல்லலாம்.//

சிலருக்கு எந்த தகுதியும் தேவைப்படுவதில்லை அல்லது தேவை இல்லை.


//நிச்சயமாக. மன்னிக்கத் தகுதியில்லாதவனோ/ளோ பூமியில் வாழ்வதற்கு அருகதை அற்றவர்கள் என்று நம்புகிறேன்.//

இந்த பூமியில் வாழ அருகதை அற்றவர்கலாலேயே பெரும்பாலும் இப்பூமி இயங்கிக்கொண்டு உள்ளது. வர்கள் பார்வையில் நானும் இதே பிரிவை செர்ந்தவனகப்படுகிறேன்.


//இந்தப்பதிவு ஏன் வந்தது என்பதற்கான காரணத்தை உணர முடிகிறது//

கண்டிப்பாக இந்த பதிவு ஒரு காரணத்தினால் மட்டும் உருவாகவில்லை, உன்னளுக்கோ இல்லைமற்றவர்க்கோ மிக சாதாரணமான ஒரு காரணம்தான் என்னை இப்பதிவை துயருடன் எழுதி முடிக்கும்போது ஓரளவிற்கு ஆறுதலுடன் முடிக்கவைத்தது.

நீண்ட பின்னூட்டதிற்கு நன்றி

ஜோசப் பால்ராஜ் said...

புலிக்கு உணவு , ஆனால் மானுக்கு அது கொலை.
இப்படித்தான் நேர்மைக்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.
அனார்த்தமாய் அர்த்தம் கற்பிக்கும் நபரைக்கூட, அவர் சொல்வது நியாயமில்லை எனும் போதும், ஏதோ சில காரணங்களுக்காக அவரை சார்ந்திருக்கும் சிலர் ஆதரிக்கின்றார்கள். ஆதரிப்போர் இருக்கும் வரை தான் செய்வது குற்றம்தான் என்பது கூட பலருக்கு புரியாமலேயே போய்விடுகின்றது.
இது போல் பலவற்றை கண்டவன் நான்.
இதற்கெல்லாம் நின்று, நிதானித்து கவலைப்படுவது கூட கால விரையம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவன் நான்.
நம்மை ஒருவர் திட்டினால், தவறு திட்டுபவர் மேல் இருக்கலாம் என நினைக்கலாம், அதே பல போர் திட்டினால் தவறு நம்மேல் தான் இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுவிடும். அந்த நிலை எனக்கும் ஏற்பட்டது. பலருடைய வெறுப்புக்கு நான் ஆளானபோது எனக்கே என் மேல் சந்தேகம் வந்தது. நல்ல வேளை, கொஞ்சம் ஆழமாக யோசிக்க எனக்கு முடிந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் இருப்பவர்கள், என்னதான் நண்பர்களாக பழகினாலும், நீங்கள் வெகுவேகமாய் செயல்பட்டு, வேகமாய் வளர்ந்தால் யாராலும் அதை நல்லவிதமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. பொறாமை என்பது மிகக் கொடிய சமூக நோய். இது எல்லோரையும் தின்றுவிட‌த்துடிக்கின்ற‌து.

உங்க‌ள் ம‌ன‌திற்கு நீங்க‌ள் செய்த‌வை ச‌ரி என்று தோன்றினால் தொட‌ர்ந்து முன்னேறுங்க‌ள். த‌வ‌று என்று தோன்றினால் த‌யாங்காது ம‌ன்னிக்க‌ கோருங்க‌ள்.
விருமாண்டியில் க‌ம‌ல் சொன்னது போல், ம‌ன்னிப்பு கேட்கிற‌வ‌ன் ம‌னுச‌ன், ம‌ன்னிக்க‌த் தெரிஞ்ச‌வ‌ன் க‌ட‌வுள். அவ‌ர் சொல்லாத‌து, ம‌ன்னிக்க‌வே தெரியாத‌வ‌ன் மிருக‌த்திற்கும் கீழே.

DHANS said...

//புலிக்கு உணவு , ஆனால் மானுக்கு அது கொலை.
இப்படித்தான் நேர்மைக்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கற்பிக்கின்றார்கள்//

எவ்வளவு உண்மை,

//நிதானித்து கவலைப்படுவது கூட கால விரையம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவன் நான். //

நானும் அதே முடிவுக்கு வந்துவிட்டேன்.

//பல போர் திட்டினால் தவறு நம்மேல் தான் இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுவிடும்//
எனக்கும் இதே நிலை ஏற்ப்பட்டுவிட்டது, சிறிது காலம் அந்த அச்சத்தில் என்னிடம் உள்ள குறைகளை பட்டியலிட்டேன் அனால் பின்னர்தான் தெரிந்தது குறை என்னிடம் இல்லை என்று. எனது எண்ணங்கள் பலருக்கு குறைகளை தெரிகிறது. ஊரோடு ஒத்து வாழ் என்று எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். நான் நேர்மையாக இருக்கும்போது எதற்காக வளைந்து குடுக்க வேண்டும். நேர்மையின் பயனாக ஏற்படும் வலி கூட சுகமாகத்தான் உள்ளது.

//த‌வ‌று என்று தோன்றினால் த‌யாங்காது ம‌ன்னிக்க‌ கோருங்க‌ள்//

மன்னிப்பு கேட்பதில் எனக்கேதும் தான் என்ற எண்ணம் வந்துவிட்டதா என்று பார்த்தேன் அது கூட இல்லை, மன்னிப்பு கேட்பதற்கு வெட்கப்பட்டது கிடையாது. ஆனாலும் செய்யாத தவறுக்கு நான் மன்னிப்பு கேட்பது மிக கொடுமை.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, என்னை மாற்றிக்கொள்ளும் தருணம் இன்னும் வரவில்லை அதுவரை எனது பயணம் இப்படியே துவங்கும். இத்தகைய தடைகள் எல்லாமுமே என்னை நானே செதுக்கிக்கொள்ள பயன்படும்