Tuesday, March 31, 2009

முட்டாள் திட்டம் இப்போது இல்லை...

முட்டாள் திட்டம் தற்போதைக்கு நமது நாட்டில் போடப்பட்ட பலவிதமான திட்டங்கள் போல கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனது மாமாவிற்கு உடல் நிலை சரிஇல்லாத காரணத்தால் இதை செயல் படுத்த முடியாத நிலைமை.

சிலநாட்களாக மனது சரியாகவே இல்லை, நேற்று எப்படியும் சரி பண்ண வேண்டும் என்ற் நினைப்பில் கடந்த வருடம் சேமித்து வைத்த அந்த ரகசியம் (the Secret) என்ற motivational video பார்த்தேன், பல விஷயங்கள் புரிபட துவங்கியுள்ளது. மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய தகுந்த ஒரு பெட்டகம் இது. இந்தியாவில் இதுவரை கிடைக்காமல் இருந்த இந்த புத்தகம் மற்றும் குறுந்தகடு இப்போது கிடைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் landmark இல் பார்த்தேன்.


ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் எனது மாமா குணமைடைய, வழக்கமாக கஷ்டம் வரும்போது மட்டுமே கடவுள் நம்பிக்கை வரும் இப்போதும் அப்படியே, பெருசாக நம்பிக்கை இல்லாவிடிலும் கஷ்டம் என்று வரும்போது நம்பிக்கை தேவையை உள்ளது. ஒரு துணை போல... வழக்கம் போல நெல்லை மாவட்டத்தில் உள்ள காரையார் அணைக்கட்டு அருவிக்கரையில் ஒரு சிறு பிள்ளையார் இருப்பார் அவரிடம் வேண்டியுள்ளேன். மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் அவர் (என்னைப்பொறுத்தவரையில் ). அப்புறம் அவர் தம்பி பழநிமலை முருகனையும் வேண்டியுள்ளேன்.

நண்பர் பிரேம்குமார் என்னை பார்த்து ஒரு வருடம் முன்னாடி smart ஆகா இருந்துளீர் என்று சொல்லிவிட்டார், அதனால் இப்போது நான் எப்படி உள்ளேன் என்பதை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடிகிறது. மறுபடியும் பழைய நிலைமைக்கு வர இன்று முதல் முயற்சிகளை துவங்கிவிட்டேன். பதிவுலகம் என்பது முதலில் நான் எனது எண்ணங்களை வெளிப்படுத்த மட்டுமே உபயோகித்தேன் பின்னர் இந்த உலகம் எனக்கு பலவிதமான ரசனைகளையும் நண்பர்களையும் கொடுத்து உள்ளது இப்பொது தான் தெரிகிறது. தற்சமயம் தீவிரமாக பதிவுலகத்தில் இல்லாவிடிலும் அவ்வப்போது எழுதுவதை படித்து சிறு பின்னூட்டம் போடுவதற்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்க மகிழ்ச்சி.

ஆட்டோமொபைல் துறையை பற்றியும் வாகனங்களை பற்றியும் எழுத நிறைய ஆசை ஆனால் முடியவில்லை. இந்த வாரம் முதல் எழுத ஆரம்பிக்க உள்ளேன்.

எதையோ எழுத நினைத்து எதையோ எழுதியுள்ளேன். வழக்கம் போல மொக்கை என்று நினைத்தால் நல்ல பதிவு தங்களுக்காக தயாராகிக்கொண்டு உள்ளது விரைவில் வெளியிடப்படும்.

Wednesday, March 25, 2009

முட்டாள் திட்டம்.. இல்லை இல்லை முட்டாளாக்க திட்டம்

இந்த முறை முட்டாள்கள் தினத்தை எப்படி கழிப்பது?? இந்த முறை யாரையது கண்டிப்பாக முட்டாளாக்க வேண்டும் என்று தோன்றுகிறது, நேற்றிலிருந்து யோசித்து வருகையில் ஒருவர் இல்லை இல்லை ஆறு பேர் சிக்கி உள்ளனர்.
ஆமாம் ஒரு ஆறு பேரை முட்டாளாக்க முடிவு செய்து விட்டேன். அவர்கள் யார் எப்படி என்பதை வெகு விரைவில் தெரிவிக்கிறேன். தகுந்த முன் ஏற்பாட்டுடன் எல்லாவிதமான திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

இப்படி தோன்றும்போதே இதை பதிவாக போட்டால் என்ன என்றும் தோன்றியது ஏனென்றால் நான் முட்டாளாக்க போகும் யாருக்கும் பதிவுலகம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் என் பதிவுகள் அவர்களை அடைய நெடு நாளாகும்.எனவே நேரலை போல இல்லாவிடிலும் திட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன். தங்களின் வரவேற்ப்பை பொருத்து...

வரவேற்ப்பு அதிகம் என்றால் திட்டம் செயல் வடிவம் பெரும்.

Monday, March 23, 2009

விமான நிலையம்

தூக்கத்திலேயே பதிவு எழுதுகிறேன் இன்று ஆமாம் நேற்றுஇரவு நண்பரை வரவேற்க விமான நிலையம் சென்று விட்டதால் இரவு தூங்க முடியவில்லை.விமான நிலையம் நிறைய மாறி இருந்தது,

உள்ளே நுழைவது ஒரு வருடத்திற்கு முன்னாள் காரில் சென்றால் ரொம்ப கஷ்ட்டம் இப்போது மிக சுலபம். அறுபது ரூபாய் கார் பார்க்கிங் என்பதற்கு எந்த வழியும் அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை அறிவிப்பு பெயர் வைத்த இடம் 100 ரூபாய் வாகன நிறுத்துமிடம். அநியாய கொள்ளைநேராக அங்கே சென்றவுடன் இது நூறு ரூபாய் கட்டணம் என்று கூறுகிறார்கள். விமான நிலையம் வழக்கம் போல சுத்தமில்லாமல் நம்ம ஊரு மக்கள் வழக்கம் போல ஒருபையனை வழியனுப்ப இருபது பேர் வண்டி கட்டிக்கொண்டு வந்தனர். ஆனால் கூட்டம் கடந்த வருடம் போல இல்லாமல் குறைந்தே இருந்தது, காரணம் தெரியவில்லை பொருளாதார மந்த நிலை??
நண்பரின் விமானம் சரியான நேரத்திற்கு வந்தது, நண்பர் அதிக சுமை எடுத்து வந்ததால் அவரிடம் இருந்த சில பொருட்களை எடுத்து செல்ல சென்றேன். எல்லாம் எடுத்து அடுக்கிவிட்டு கவரையும் வழியனுப்பிவிட்டு கிளம்பினேன்.

நான் கவனித்தவை

நம்ம ஊர் விமான நிலையம் எப்பயும் சந்தை கடை போல இருக்கிறது. (சின்ன வயசுல தூரத்துல மேலே பறக்கற விமானத்தை கண்ணு கூச பார்த்த நான் இப்படி சொல்றேன்)

மக்கள் எவ்வளவு நாள் வெளிநாட்டில் இருந்தாலும் இங்கு வந்தவுடன் நமது பழக்கத்தை அடுத்த நிமிடமே பழகிக்கொள்கின்றனர் (பின்ன என்னாங்க காரை நிறுத்திவிட்டு ஒரு நிமிடத்துக்குள் ஒரு ஆள் வந்து ஜாலியா சாஞ்சு நின்னுகிட்டு ஓய்வு எடுக்கிறார்)

வெத்து சீன் போடுறது வெளிநாட்டில் இருந்து வந்தால், ஒருவனை பார்த்தேன் காதில் ஐ பாடு மாட்டிக்கொண்டு ஆடிக்கொண்டே வந்தான். பக்க தமிழ் பையன் ஆனால் பெரிய லார்டு மாதிரி ஆட்டம். (டை நாங்கலாம் ஆடுன நீங்க தாங்க மாடீங்க)

மகளோ மகனோ வந்தால் ஒரு முப்பது ரூபாய் டிக்கெட்டை வாங்கி கொண்டு உள்ளே சென்று வழியிலே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அடுத்தவருக்கு வழியை மறைப்பது. (ஏன்யா உன் பிள்ளை தான, அதான் முழுசா எந்த வெள்ளைகாரியையும் கூட்டி வராம வந்துட்டான்ல கொஞ்சம் ஓரமா போய் கொஞ்ச வேண்டியது தான )

வெளியே வந்த உடனே சார் டாக்ஸி வேணுமா ஆட்டோ வேணுமாநு மொய்க்கிறது (ஏன்யா நாங்கதான் வேணாம்நு சொல்றோம்ல அப்பவும் கைய புடிச்சு இழுக்காத குறையா ஏன் கூப்பிடுறீங்க .கூட வந்த எங்க மூஞ்சி வெளிநாடு போயிட்டு வந்த மாதிரியா இருக்கு?? )

என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு சந்தோஷமும், காலைல அம்மாட்ட இட்லி சுட சொல்லி வச்சு வந்த நாளிலேயே சாப்பிடற சுகமும் எங்கங்க வரும். இதெல்லாம் மாறலாம் மாறாமல் போகலாம் பாசத்துடன் கிடைக்கும் அம்மாவின் சாப்பாடு எப்படி மாறும்.

Sunday, March 22, 2009

யாவரும் நலம்

நேற்று நண்பரை சந்திக்க சென்ற பொது திடீரென்று இந்த படத்திற்கு செல்ல முடிவு செய்து சென்றோம். வழக்கம்போல மாயாஜால் ஆனால் மதிய நேரத்து மாயாஜால் வித்தியாசமாய் இருந்தது. சென்னையில் இளமை இல்லை என்று யார் சொன்னது... நாம் தான் வெட்டி என்று நினைக்க வைத்தது, அத விடுங்க படம் ஆரம்பித்தது ரொம்ப நேரம் தொல்லைக்காட்சி பெட்டிய காட்டினார்களா, முதலில் அந்த லிப்ட் காட்சிகள் நெகு நேரம் காட்டப்பட்டதால் போர் அடித்துவிட்டது. படம் நன்றாக இருந்தது.


திரில்லர் படம் ஆனால் பயமூட்டவில்லை, சில காட்சிகள் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தது. சில குறைகளும் உள்ளன. வீடிற்கு சாமி படம் துளை பட வந்தவர் மின்சாரம் தாக்கி அடிபடுவார் அப்போது நுழைவு வாயிலின் இடது பக்கம் மின்சார plug point மற்றும் சுவிட்ச் இருக்கும் ஆனால் அதே இடத்தில அதற்க்கு பிறகு மாதவன் வரும்போது அங்க எதுவுமே இருக்காது. மாதவன் எப்போது கீழே இறங்கி கார் பார்க்கிங் செல்லும்போதும் எதிரே ஒரு போர்டு ஐக்கான் மற்றும் குவாலிஸ் நின்று கொண்டு இருக்கும்அதுவும் நிலை மாறாமல். காவல் துறை வாகனத்தை காடும்ப்து பதிவு எண் வேறு இருக்கும் இது போன்ற சிறு குறைகளை களைந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

இரண்டாம் பகுதியில் படம் நன்றாக சென்றது ஆனால் முடிவுகள் சில சமயம் நினைத்தது போலவே இருந்தன, அந்த சுத்தியல் காட்டப்படும் போதே தெரிந்துவிட்டது முடிவு வேறு மாதிரி என்று. படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லை. இதை ஆங்கில படத்திற்கு உரிமை வாங்கி உள்ளார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் இன்னும் நன்றாக எடுக்கக்கூடும்.


முடிந்து வெளியே வந்த போது வழக்கம் போல நண்பர்கள் வெளியே புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். எடுக்கலாம் என்றால் அருகில் இருந்த மூன்று பெண்களிடம் கொடுத்து எடுக்க சொல்லலாம் என்றால் நான் விடவில்லை. அந்த பெண்கள் எதிர்பார்த்து இருந்து பின்னர் ஏமாற்றம் அடைந்தனர், அதே பெண்கள் இந்த பதிவை படித்தால் ஒரு ஹாய்...


மற்றவை அடுத்த பதிவில்

நண்பரின் வலைப்பூ

நான் சமீபத்தில் சந்தித்த நண்பரின் வலைப்பூ , அவரின் ஓவியங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன இங்கு, என் மனதிற்கு பிடித்தவையாக இருந்தன சில. உங்களுக்கும் பிடிக்கும் என்பதற்காகவும் அவரின் திறமை வெளிப்பட வேண்டும் என்பதற்காகவும் இங்கு அவரின் வலைப்பூவை அறிமுகபடுத்துகிறேன்.

unique in active என்ற பெயரின் தனது ஓவிய திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார், முடிந்தால் சென்று பார்த்து பின்னூட்டம் இட்டால் அவரை ஊக்குவிப்பது போல இருக்கும். எத என்னாலான சிறு முயற்சி ஒருவரின் திறமையை சிறிய அளவு வெளி உலகுக்கு கொண்டு வர .

உங்களால் முடிந்தால் ஆதரியுங்கள்

Friday, March 20, 2009

நான் பள்ளி சென்ற கதை

காலையில் கிளம்பும்போது அந்த பள்ளிச்சிறுமியை தினமும்பார்ப்பேன், இன்று எதோ ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். ஒவ்வொரு நாளும் ஓவொரு முக பாவனையுடன் வித விதமான பேச்சில். அமைதியாய், ஆச்சரியமாய், மகிழ்ச்சியாய், அழுகையுடன் என்று வித விதமான செய்கைகள் பேச்சுகள் என்று. இன்று புதிதாய் பள்ளி வாகனம் மாற்றப்பட்டு உள்ளதாம் அதை பற்றி பேசும்போதே என்னுள் எனது கடந்த கால பள்ளி செல்லும் நினைவுகள் வந்தது.

அப்பா பதிவுக்கு ஒரு தலைப்பும் விசயமும் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு வந்தேன்.

நான் பள்ளியில் சேர்க்கப்படும்போது நாங்கள் எங்கள் சொந்த ஊரில் இருந்தோம். கரூருக்கு அருகில் இருந்த கிராமம் எங்களுது. பள்ளிக்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றால் அங்கிருந்து பள்ளி பேருந்து வரும். நான் பள்ளிக்கு செல்வது என்பது இன்றும் உறவினர்களால் கேலி செய்யப்படும் ஒரு நிகழ்வு, பின்ன சும்மாவா என் தாத்தாவுடன் சென்று பள்ளி பேருந்தை பிடிக்க வேண்டும். அவர் சைக்கிளுக்கு நான்தான் ஆஸ்த்தான பயணி. என்னை அவ்வளவு பாதுகாப்பா கூட்டி செல்வார் . அவர் சைக்கிளில் பின்னால் ஒரு பெரிய பலகை வைத்திருப்பார் அதில் முதலில் என் அண்ணாவின் புத்தகப்பை அடுத்து என்னை உட்கார வைப்பார், அதன் பின்னர் எனது புத்தகப்பை என் பின்னால். இதுல என்ன இருக்கு??? இருங்க இருங்க, அப்புறம் ஒரு கயிறு எடுத்து புத்தகப்பை மற்றும் என்னை சேர்த்து கட்டுவார். கட்டிவிட்டு பின்னை நன்றாக புடித்துக்கொள்ள சொல்லுவார். டாடா கூட காட்டக்கூடாது. அப்படியே சென்று பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவார். பின்னால் இவன் ஒரு பெரிய மேதையாவன் பாதுகாப்பா கொண்டு செல்லனும் என்று அப்போதே அவருக்கு தெரிந்து இருக்கிறது பாருங்களேன்.

இரண்டு வருடங்கள் கழித்து எங்கள் ஊரிலேயே ஒரு அண்ணன் பள்ளிக்கு ஆட்டோ ஓட்டுவது தெரிந்து எங்களை அதில் அனுப்பி வைத்தனர். அப்போது பள்ளிக்கு ஆட்டோவில் போவது ஒரு முக்கியமான நிகழ்வு, ஆட்டோ என்றால் நன்றாக இருக்கும். அங்கேயும் ஆட்டோவில் முன்னாள் நிற்பதற்கு தகுதி சிறு வயதாக இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு இரு புறமும் நின்று கொண்டு வர பெரிய பையனாக இருக்க வேண்டும். நான் தான் ரெண்டும் இல்லை மேலும் எங்கள் வீட்டில் இருந்தே ஏறி விடுவதால் பின்னால் சீட்டில் நடுவில் தான் உட்கார வேண்டும். அதிலும் பக்கத்து ஊரில் ஒரு சிறுவன் (நானே அப்போது சிறுவன் தான் ஆனாலும் 1 ஒன்றாம் வகுப்பு படித்தேன்) ஏறினான், முன்னாள் நிற்கும் இடம் அவனுக்கு போயிற்று. ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் என் அண்ணன் நின்று கொள்வார்.



இதில் தான் எத்தனை அனுபவங்கள் , பள்ளி முடிந்து திரும்பும்போது சில நாட்கள் நாவல் மரத்தின் அடியில் ஆட்டோவை நிறுத்தி உதிர்ந்த நாவல் பழம் எடுத்து சாப்பிடுவோம். ஸ்டார்ட் ஆகாத ஆட்டோவை தள்ளுவது. எங்க ஆட்டோதான் எப்பவுமே பள்ளியில் இருந்து கடைசியாக கிளம்பும், எனக்கு தெரிந்து இரண்டு முறை தான் மற்ற ஆட்டோவை முந்தியுள்ளது.

மூன்று வருடம் இப்படியே பயணம் செய்து பின்னர் ஓட்டுனர் அருகில் நிற்கும் தகுதி வந்த வேளையில் நாங்கள் கரூருக்கு வீடு மாறி வந்தோம். பின்னர் மறுபடியும் பள்ளி பேருந்து. அப்போது எங்கள் வீட்டில் குடியிருந்தவரின் பெண் எங்கள் பள்ளியில் படித்தார், அவரும் பள்ளி பேருந்தில் செல்வதால் அவருடன் அனுப்பி வைப்பார்கள். பேருந்தில் அப்போதெல்லாம் உட்கார இடம் இருக்காது. அடைத்துதான் செல்வார்கள். சின்ன பசங்க எல்லாம் சீட்டில் சாய்வதற்கும் உட்காருவதர்க்கும் உள்ள பலகைக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கே அதில் காலை வைத்து சாயும் பலகையை நோக்கி முகம் பார்த்து உட்கார வேண்டும். மற்றவர்கள் எங்களுக்கு பின்னால் இருக்கும் இடத்தில் முன்னோக்கி அமருவார்கள். எங்கள் பேருந்து வேறு நாய் வண்டி போல இருக்கும். சிறிது காலத்தில் பேருந்து மாறியது. அப்போது அந்த அக்காவும் என்னை அவர் அருகிலே உட்க்கார வைத்துக்கொண்டனர்.

ஒன்றரை வருடங்கள் அப்படியே ஓடியது. பின்னர் அரசு பேருந்தில் செல்ல துவங்கினேன், தினமும் வீட்டில் இருந்து காலையில் கிளம்பி ஒரு கிலோமீட்டர் நடந்து பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். இரண்டு பேருந்துகளே பள்ளிக்கு செல்லும். கால் மணி நேர வித்தியாசத்தில் இருக்கும் இரண்டும். இரண்டாவதாக வரும் பேருந்தில் சென்றால் கூட்டம் அதிகம், மணி அடிக்கும்போது உள்ளே செல்லும் நிலை இருக்கும் ஆதலாம் முடிந்த வரை முதல் பேருந்தில் செல்வேன். எல்லாமே கூட்டமாக வரும், பத்தாவது முதல் +2 வரை படிக்கும் மாணவர் அரசு பேருந்தில் தான் வருவார்கள். அப்போதெல்லாம் நினைப்பேன் ஏன் இவர்கள் அழகா சைக்கிளில் வராமல் பேருந்தில் கூட்டமாக வருகிறார்கள் என்று, பின்னர் நான் அந்த வகுப்பு வரும்போது தான் புரிந்தது, பின்னே அந்த பேருந்து எங்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னாள் இரண்டு பெண்கள் பள்ளியை கடந்து வரும்.

ஆறாவது பாதியிலேயே நான் சைக்கிளில் செல்ல துவங்கிவிட்டேன், வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் பள்ளிக்கு ஏழு கிலோமீட்டர் சுற்றி செல்வோம் (கூட்டம் இல்லாமல் செல்லும் வழி அது, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று செல்வோம்) பத்தாவது வரை சைக்கிள்தான் எங்கு சென்றாலும் சைக்கிள்தான் துணை, சில நாட்கள் வீட்டிற்கு அருகில் பை பாஸ் சாலைக்கு அருகே உள்ள வயல் வெளிகளுக்கு சென்று தனியாய் அமைந்து விடுவேன், ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் திரும்பும்போது மன அமைதி இருக்கும்.

11ம் வகுப்பு பள்ளி மாறிவிட்டேன், வீட்டில் இருந்து 15 நிமிடபயணம் . மதிய சாப்பாடு வீடிற்கு வந்து சாப்பிடுவேன் பெரும்பாலும் பள்ளி நடக்காது அப்படி நடந்தாலும் நாங்கள் போக மாட்டோம். 9 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் பத்து மணிக்கு பாதி பேர் வெளியே சென்று விடுவார்கள்.பெரும்பாலும் விளையாடவும் சிலர் சினிமாவுக்கும் செல்வார்கள், என்னைமாதிரி பயந்த பையன்கள் வீட்டிற்கு சென்று விடுவோம், நன்றாக தூங்கிவிட்டு பின்னர் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு பள்ளி வந்து சிறிதுநேரம் அரட்டை அடித்துவிட்டு மீண்டும் டியுசன் சென்று விடுவோம்.

பதினொன்றாம் வகுப்பு பாதியில் நண்பன் ஒரு TVS-50 இல் பள்ளிக்கு வரத்துவங்கினான். அவனுடம் சேர்ந்து வரத்துவங்கியதால் எனது சைக்கிள் ஓய்வு எடுத்தது. அவ்வப்போது தேவைப்படும்போது எடுப்பேன் மற்றபடி அதிகம் சென்றது நண்பனுடன் வண்டியில். அப்போது ரொம்ப முக்கிய தேவை எனில் வீட்டில் எப்படியாவது கேட்டு எனது தந்தையின் TVS-50 யை எடுத்து செல்வேன் அப்போது அதுவே பெரிய சாதனை பள்ளிக்கு வண்டியில் வருவது.

கல்லூரி வந்தவுடன் ஹாஸ்டல் வாழ்க்கை, ஈரோட்டிற்கு சென்று வர கல்லூரி பேருந்து 7 B மறக்க முடியாத பேருந்து. பல காதல்களையும் சில மோதல்களையும் ஒன்று சேர சுமந்த பேருந்து, இதில் அதிகம் பயணித்ததுஇல்லை எப்போதும் கீழே இறங்கி மூன்றாம் நம்பர் பேருந்தை பிடிப்பதுதான் எங்கள் வழக்கம்.

இவ்வாறெல்லாம் இனிய பயன்களை கடந்த நான் இப்போதெல்லாம் அலுவலக பேருந்தை ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விட்டேன், சமீப காலமாக அவ்வப்போது வெளியே எட்டிப்பார்த்து பயணத்தை அனுபவிக்கிறேன்.

பயணங்கள் எப்போதும் இனிமையானவை.. இப்போது கூட...

Tuesday, March 17, 2009

திடீரென்று நினைவில் வந்த நிமிடங்கள்...

முதல் நாள் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்ற அபோது இருந்த பயம் கலந்த உண்ர்வு,

முதல் நாள்பள்ளி அழுகை

முதல் பள்ளி நண்பர்கள், பள்ளியின்மதிய தூக்கம்,

முதன் முதல் படித்த மழலை பாடல்

பிடித்தமான வகுப்பு ஆசிரியை

பள்ளிக்கு சென்ற ஆட்டோ, நண்பர்கள்.

முதன்முதல் எழுதிய சிலேட்டு, முதன் முதல் தின்ற பல்பம் (சிலேட்டு பென்சில்)

எப்பவுமே பயமுறுத்தும் தலைமை ஆசிரியை

மதிய இடைவேளை சாப்பாடு

இப்பவும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிமிடங்கள்

Sunday, March 15, 2009

மனதில் தோன்றியவை

பதிவு எழுத நேரம் கிடைப்பது இல்லை இப்போது எல்லாம்...

விளம்பரங்கள் மிராண்டா விளம்பரம் பார்த்தேன் அசின் கலக்கியுள்ளார் ஆனால் என்ன இந்த காலத்தில் பெண்கள் முன்னேற்றம் சுய உரிமை என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க இப்போ போய் இந்த மாதிரி விளம்பரமா?

the ther end of the line.. நம்ம ஸ்ரேயா நடிச்ச ஆங்கில படம், நேத்து தான் பார்த்தேன், நல்லாத்தான் இருக்கு, நல்ல ரோமன்ஸ் படம்..இந்த அம்மா மும்பைல சிட்டி பேங்க் கால் சென்டெர் ல வேலை செய்யறாங்க அப்ப அங்க வேலை நிமித்தமா ஒரு வெள்ளைக்காரரிடம் பேச வேண்டி இருக்கு, பேசும்போதே அவர் மேல காதல் வந்துடுது அப்புறம் அவர தேடி அமேரிக்கா போறாங்க (எப்படித்தான் நெனச்ச உடனே பாஸ்போர்ட் விசா எதுவுமே இல்லாம அமேரிக்கா போறாங்களோ ஒரு வேலை காதலுக்கு தேவை இல்லை போல) ஆனா நல்ல படம்.

நம்ம வாழ்க்கை :
புதன் கிழமை அலுவலகத்தில் சும்மா இல்லாம நண்பர் கூப்பிட்டார் என்று நாவலூரில் உள்ள ஆந்திரா மெஸ்சுக்கு சாப்பிட சென்றோம் . நல்லாதான் போயிகிட்டு இருந்துச்சு சாப்பாடு, கோழி வறுவல் என்று. அபோதுதான் அவர்கள் வந்தனர், இரண்டு பேர் வந்து கல்லாவில் இருந்தவரிடம் எதோ பேசினார்கள், அதில் ருவரை வந்ததில் இருந்து நான் கவனித்துக்கொண்டே இருந்தேன், அதை அவரும் கவனித்து போல இருந்தது. பின்னர் சென்று விட்டனர், என்னடா வந்தாங்க போய்ட்டாங்க என்று நினைத்து சாப்பிட்டேன். பின்னர் திரும்பி வந்தது அந்த தேவதை ( நான் கூட இப்படிலாம் சொல்ற அளவுக்கு நிலமா மாறிபோச்சு பாருப்பா ) என்னமோ தெரியல அந்த பெண்ணை பார்த்த உடன் பிடித்து போய்விட்டது அந்த சிரித்த முகமும் பார்வையும்... பின்னர் டோக்கன் வாங்கி வந்து சாப்பிட உட்கார்ந்த இடம் எனக்கு அருகில் உள்ள மேசை .. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தாள் அந்த தேவதை.

கூட வந்த கொடுக்கு எப்படி இருந்தது என்று நினைவு இல்ல மனது முழுவதும் அந்த பெண்ணின் நினைவு மட்டுமே. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தது அந்த தேவதை சாப்பிடும் போதும் என்னை பார்த்துக்க்கொண்டே இருந்தது எங்கோ பார்த்த முகமா? இல்லையா தெரியவில்லை ஆனால் மிக பிடித்த முகம்... பேச வேண்டும் போல இருந்தது ஆனால் பேச வில்லை சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகத்தை அடைந்த பிறகும் அதே முகம், வேலை செய்ய முடியவில்லை, அடுத்த நாளும் ஆந்திரா மெஸ்சுக்கு சென்றேன் அவள் தான் வரவில்லை இருந்தும் அந்த முகம் நினைவில்...

வியாழகிழமை அலுவலகத்திற்கு செல்லும்போது கலையில் எனது நிறுத்தத்திற்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கண்டு இருந்தது இன்னொரு தேவதை... இவளின் பெயரும் தெரியவில்லை அதனால் தேவதை என்றே அழைப்போம், அதே பார்வை அதே முகம், திடிரென்று என்னை பார்த்தது பின்னர் நான் பார்ப்பது தெரிந்தும் தலை குனிந்து.நின்றது. மறுபடியும் மின்னல் (என்னாங்கடா இது நமக்கு இப்படி எல்லாம் ஆகுது முதல்ல வீட்ல பொண்ணு பார்க்க சொல்லணும் என்று நினைத்தேன் ) வெள்ளிகிழமையும் அதே நிறுத்தம் அதே பெண் அதே பார்வை.. ஹ்ம்ம் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.

இலங்கை பிரச்சனை
சொல்ல நிறைய இருந்தும் சக பதிவர்கள் நிறைய எழுதி விட்டனர், மனது ரணமாக வும் கனமாகவும் உள்ளது. நம் தமிழ் இளைஞர்கள் பலருக்கும் இலங்கையில நடப்பதற்கான காரணங்கள் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

தேர்தல் புதன் கிழமை வருகிறது தேர்தல் சென்னையில் இருந்த கரூர் சென்று ஓட்டு போடணும், ஏனுங்க ஒரு வெள்ளிகிழமையா இல்லை திங்கள் கிழமை வைத்திருந்தால் வசதியா இருந்திருக்கும், எப்படியும் என் கடமையை செய்து விடுவேன் ஆனால் மற்றவர்கள் ??

பின் குறிப்பு:நன்றி அருணா அவர்களே, எழுத்து பிழைகளை சரி பார்த்தேன் ஆனால் கணினியில் எதோ கோளாறு போல, நன் முதலில் copy செய்தது வரவில்லை. இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

Friday, March 13, 2009

பஜாஜ் மட்டும் ஏன் வேண்டாம்??

நண்பர் கார்கியின் இந்த பதிவு படித்தவுடன் பின்னூட்டம் எழுதியும் எனக்கு தனியாக ஒரு பதிவு போட்டால் என்ன என்று தோன்றியது.

அவர் எழுதியது பஜாஜின் மேல் உள்ள கொலை வெறியில் எழுதியது போல் இருந்தது. (விளையாட்டுக்கு தான் புண்படுத்த இல்ல)

இனி விளக்கமும் என்னுடைய கோணமும்...

44,000 ரூபாய் மட்டுமே, செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல், என்ற கவர்ச்சி எல்லா கம்பெனியிலும் உண்டு, டாப் எண்டு மாடல்மட்டுமே இதை கொண்டு இருக்கும் விலையும் அதிகம்.


விளம்பரம் செய்யப்படும் மைலேஜ் என்பது சாதாரண சூழ்நிலையில், எடை ஏதும் இல்லாத நிலையில், சீரான நிலையில் சீரான வேகத்தில் எவ்வளவு கிடைக்கிறதோ அது மட்டுமே. எல்லா நிறுவனமும் இத்தகைய விளம்பரங்களை மட்டுமே செய்கின்றன.

109 கிலோமீட்டர் என்பது அதிகப்படியான மைலேஜ், ஆனால் நீங்கள் கண்டிப்பாக 80 கிலோமீட்டர் எதிர்பார்க்கலாம். மைலேஜ் குறைவதற்கு காரணம் என்ஜின்இல் அடையும் கார்பன் துகள்கள், எரிபொருள் சுத்தம் இல்லாமை, நீங்கள் ஊட்டும் முறையில் ஏற்படும் மாற்றம். எப்பவும் மூன்றாவது சர்விசுக்குமேல்தான் வண்டியின் மைலேஜ் ஒரு நிலையில நிக்கும்.

அடிக்கடி கியர் மாற்றாமலும், என்ஜினை அதிக சுழற்சியில் கியர் மாற்றாமல், அடிக்கடி பிரேக் பிடிக்காமல், கிளட்சை பிடித்துக்கொண்டே வண்டியை ஓட்டாமல், இருந்தாலே நல்ல மைலேஜ் வரும். வேகமும் அறுபதுக்கு மேல் செல்லாமல் இருக்க வேண்டும்.

கம்பெனி பராமரிப்பு அதுவும் இலவச பராமரிப்பு என்பது கண் துடைப்பு எதுவுமே செய்ய மாட்டார்கள், முக்கியமாக் என்ஜின் ஆயில் மாற்றவே மாட்டார்கள் ஆனால் பில்லில் மாற்றியதாக வரும்.இலவச பராமரிப்பு முடிந்து இருந்தால் நீங்களே என்ஜின் ஆயிலை மாற்றிக்கொள்ளலாம், அல்லது நீங்களே என்ஜின் ஆயிலை வாங்கி சென்று உங்கள் கண் முன்னாடி மாற்ற சொல்லவும்.

எந்த எடைக்கும் டிஸ்க் பிரேக் சத்தியம் தான் ஆனால் அந்த எடைக்கு தேவை இல்லை. இதெல்லாம் மக்கள் வாங்கும் தன்மையால் வந்த வினை.

முதுகு வலி வருவதற்கு வாய்ப்புகள் எல்லா வண்டியிலும் வரும். என்னுடைய பல்சரிலும் இருக்கிறது, எனக்கு முதுகு வலி ஏற்படுவது என்னுடைய வண்டியினால் மட்டுமே அனாலும் அதற்கு வண்டியை குறை சொல்ல வில்லை, இந்திய சாலைகள் மட்டுமே இதற்கு முழு தகுதி பெரும். எனக்கு எந்த வண்டி ஓடினாலும் முதுகு வலி வருகிறது இப்போது.. மோசமான சாலையில் செல்லும்போது பல்சர் போன்ற வண்டிகள் எல்லாமே சிறிது sportivaana ஓடும் முறையை கொண்டதால் சாலையில் உள்ள குழிகள் முதுகை பதம் பார்க்கின்றன.

டீலர்களே சொல்கிறார்கள் என்றால் அது தவறு.

அடிக்கடி வண்டியை மாற்றுகின்றனர் என்பது தவறு இல்லை, அவர்கள் செய்வது என்ஜின் மாற்றுவது தான், discover enginai எடுத்து platina வில் பொருத்தியுள்ளனர் இது போலத்தான் எல்லாமுமே.


ஹீரோ ஹோண்டாவில் ஹோண்டா தொழில்நுட்பம் இருக்கிறது இவர்களது (பஜாஜ்)முழுக்க முழுக்க இவர்கள் தொழில்நுட்பம். அவர்கள் தொழில்நுட்பத்தை மீருகேற்ற நிறைய தடைகள் இருக்கலாம் ஹோண்டாவின் துணை இருப்பதால் அதனால் என்கினை மெருகேற்றுவது அடிக்கடி நடப்பது இல்லை. இரண்டாம் விற்ப்பனை விலை என்பது நுகர்வோரின் மனநிலை பொருத்து. காலம்காலமாகே பஜஜ்க்கு இந்த ஒரு பெயர் இருப்பதால் நல்ல வண்டியையும் கம்மி விலையில் விற்க வேண்டி வருகிறது.

நான் வண்டி வாங்கும்போதும் என்னிடம் பஜாஜ் வாங்காதே பின்னால் விற்க வேண்டும் என்றால் சிரமம் என்று கூறினர். வாங்கும் முன்னரே விறபபதை பற்றி யோசிப்பவர் எப்படி வண்டியை பராமரிப்பார், அனுபவித்து ஓட்டுவார். என்னை பொருத்த வரை என் வண்டியை விற்பனை செய்வது இல்லை என்ற முடிவோடு வாங்கினேன் ஆனால் இப்போது விற்கும் நினைப்பு வந்துள்ளது. அதற்கு காரணம் இந்த வண்டி போரடித்து விட்டது, மேலும் இப்போது வண்டி ஊட்டுவது குறைந்துவிட்டது. யமாஹா RD350 தேடிக்கொண்டு இருக்கிறேன் கிடைத்தால் வாங்கிவிடவேண்டும்.

சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு. எனது விருப்ப பாடமும் இயந்திரவியல், விருப்பமாய் வேலை செய்வதும் அதே துறையில் தான். இருந்தும் கார் பைக் மேல் உள்ள ஆசையால் ஓய்வு நேரத்தில் அவற்றின்மேல் கவனம் செலுத்துகிறேன்.

எனக்கு நியாபகம் இருக்கிறது என் நண்பன் unicorn நான் பல்சர் வங்கி ஒரு வாரத்தில் வாங்கினான். இது வரை அதிக பட்சமாக 50 கிலோமீட்டர் ஒரு லிடேருக்கு கொடுத்து உள்ளது. எனது வண்டி சராசரியாக 52 கிலோமீட்டர் கொடுக்கின்றது.

பராமரிப்பில் மற்றது எல்லாம் வருகிறது. எத்தகைய வண்டியாயினும் சரியான பராமரிப்பு என்பது முக்கியம். என்னை பொருத்தவரையிஒல் மிக பிடித்த வண்டிகள் yamaha RD350,RX100,RX135, FZ16, hero honda CBZ old type, bajaj Pular.

அபாச்சி மட்டுமே நான் ஓட்டி மிகவும் சிரமத்துக்கு உண்டாக்கியது. பிக் உப வேகம் எதுவும் சுமார் தான், ஸ்டைல் மிக நன்று அனால் ஓட்ட சிரமம், அதிர்வுகளும் அதிகம். .

அடுத்த சில பதிவுகளில் மறுபடியும் எழுதுகிறேன், ஒரு ஆரோகியமான பூட்டி சூழ்நிலை இருந்தால் நன்றாக இருக்கும்.

Thursday, March 12, 2009

ஆதலால் இனிக்கு என் பதிவு இதுதான்

நான் பதிவுலாம் google transiltrationla எழுதி அப்புறம் நம்ம பதிவுல ஒட்டி வெளியிடுவீன்
கிட்டத்தட்ட ஒரு பெரிய பதிவ எழுதி என் கலூரி நினைவுகள நினைத்துக்கொண்டிருந்த சமயம், backspace விசையை அழுத்தினேன் மொத்த பக்கமும் மறைந்து இதற்க்கு முன்னாள் இருந்த பக்கம் வந்துவிட்டது. மறுபடியும் forward செய்து வந்தால் எல்லாமும் போய்விட்டது, எங்க போனது என்று தெரிய வில்லை. ஆதலால் இனிக்கு என் பதிவு இதுதான்

Tuesday, March 10, 2009

குழப்பம்

இன்றைய பொழுதை நல்ல படியாக கழிக்க வேண்டுமென்ற நினைப்பில் தான் தினமும் பொழுது துவங்குகிறது ஆனால் எல்லா நாளும் அப்படி இருபது இல்லையே. என்னுள் எழுந்த சில மாற்றங்கள் என்னையும் அறியாமல் என்னை ஆக்கிரமித்துள்ளன. பொய் வாழ்கையில் எவ்வளவு நாள் வாழ்வது?

சந்தோசங்களை தருகிறது என்று என் மகிழ்ச்சியை இழந்து இப்போது நிற்கிறேன். வாக்குறுதிகளும் உன்மீதுள்ள பற்றும் மட்டுமே இப்போது என்னில் உள்ளன, காத்துக்கொண்டு இருக்கும் வாக்குறுதிகளே என்னைகாப்பாற்றுகின்றன என்று சொன்னால் அது கண்டிப்பாக உண்மை, இத உண்மை என்னை மட்டுமே அறிந்தது, நீ அறிய வாய்ப்புகளை நீ ஏற்படுத்திக்கொள்ள வில்லை. இந்த உண்மையை என்னுள் மட்டுமே புதைத்திட விருப்பமில்லாமல் ஒரு நாள் நீ அறிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தவே வெளிப்படுத்துகிறேன். என்னில் ஏற்படுத்திய அனைத்து மாற்றத்திற்கும் நீயே காரணம் ஆனால் உன்னில் சிறு மாற்றங்களை ஏற்ப்படுத்த முடிந்த என்னால் இப்போது எதையும் செய்ய முடியவில்லையே??

கைகளைமீறி சென்று கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் மீண்டும் ஏறி வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையில் மறுபடியும் நான்