Monday, March 8, 2010

கார்த்திக் காலிங் கார்த்திக்-திரை விமர்சனம்
நெடு நாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த இந்திப்படம்.  படம் Farhan Akhtar  நடித்த படம் என்பதாலேயே பார்க்க  சென்றேன். கடைசியாய் பார்த்த இந்தி படமும் இவர் படமே,  Rock On, மனதுக்கு பிடித்ததால் இன்றும் சென்றேன். 

தாழ்வு மனப்பான்மையும், தனிமையும் ஒருவனை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றி விடலாம், அவனுக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை அதைக்காதால் வெற்றி நிச்சயம் என அவனுக்கு தெரிந்து கூட  கடக்க முடியவில்லை என்றால்??  இல்லை அதைக்கடந்தால் ?? எல்லாவற்றுக்கும் இந்த படத்தில் பதில் உண்டு.ரொமாண்டிக் காமெடி என்று ஒரு வகைப்படம் உண்டு ஆனால் இது ரொமாண்டிக் திரில்லர் வகையை சார்ந்தது.

கார்த்திக் வாழ்வில் நன்றாக படித்தாலும் நல்ல வேளையில் இருந்தாலும் மேலே வர முடியவில்லை பிடித்ததை செய்ய முடியவில்லை, ஒரு தாழ்வு மனப்பான்மையுடன், சுய நம்பிக்கை இல்லாமல் எதிலும் பிடித்தம் இல்லாமல் இருந்து தாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என நினைக்கும் வாழ்க்கை ஒரு போன் காலில் மாறுகிறது. எப்படி என்பதுதான் படம்.காத்திக் இப்படி இருக்க காரணம் சிறுவயதில் இழந்த தனது அண்ணன், தனது அண்ணனின் இழப்புக்கு தான் தான் காரணம் என நினைப்பது அவன் தாழ்வு மனப்பான்மைக்கு அடித்தளம். இறுதியில் வரும் அவன் அன்னனைப்பற்றிய நிகழ்ச்சி ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.

கார்த்திக்( தமிழ் இந்தி என எந்த மொழிப்படத்திலும் ஏன் கதாநாயகன் பெயர் கார்த்திக் என்று இருக்கிறது? ) ஐ ஐ எமில்  படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறான், அவன் மேலதிகாரி ஒரு நாள் அவனிடம் ஒரு வேலையை சொல்லி செய்ய சொல்கிறார், இரவு நேரமானாலும் முடித்துவிட்டு செல்ல சொல்கிறார், இவனும் அவ்வாறே செய்துவிட்டு வருகிறான், ஆனால் இரவே அவனுக்கு ஒரு போன் வருகிறது, மேலதிகாரி கண்ட படி திட்டி நான் செய்ய சொன்ன வேலை இது இல்லை நீ என்ன செய்துள்ளாய், நாளை காலை இந்த வேலைகளை முடித்து 1  மணிக்குள்ளாக எனக்கு கொடு என சொல்கிறார். மேலதிகாரி மேல் உள்ள கோவத்தை போன் மீது காட்டுகிறான், போன் சுக்கு நூறாகிறது. அதன் பிறகு  வேலையை முடித்து கடுக்க அவனை அவர் காரிலேயே வரச்சொல்லி கொடுத்த கோப்புகளை சரி பார்க்கிறார் பிறகு வாடிக்கையாளர் ஒருவரிடம் தவறான வாக்குறுதி கொடுக்கிறார், எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு அவனை நாடு ரோட்டில் இறக்கிவிட்டு செல்கிறார். இறங்கி என்ன செய்வது என தெரியாமல் நிற்கும் அவன் சரி என பக்கத்தில் உள்ள கடையில் உடைந்த போனுக்கு பதில் புதுசு வாங்குகிறான், அப்போதுதான் உடன் வேலை செய்யும் சோனாலியை பார்க்கிறார் வேறு ஒருவனுடன்.பின்னர் மேலதிகாரி செய்யும் சிறு  தவறை சுட்டிக்காட்டுவதால் எரிச்சல் அடையும் அவர் இவனை அவமானப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார்.அதற்க்கு பிறகு இரண்டு மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளிவராமல் இருக்கும் அவன் பின்னர் தற்கொலைக்கு முயலும் போது அவனுக்கு ஒரு போன் கால் வருகிறது. எடுத்து பேசினால் மருமோயில் பேசுபவர் கார்த்திக். அவனுக்கு இவனைப்பற்றி எல்லாம் தெரியும் எனவும் தான் ச்ன்னபடி கேட்டால் இவன் வாழ்க்கை மாறிவிடும் என்றும் சொல்கிறான்.  ஒரு கட்டத்தில் அதை நம்பும் ஹீரோ கார்த்திக் அவன் சொல்படி கேட்க எல்லாம் மாறுகிறது. ஆனால் இந்த விஷத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என போன் கார்த்திக் விதித்த நிபந்தனையை மதிக்காமல் தன காதலி சோனாலி கிட்ட சொல்லிவிட நடப்பவை எல்லாம் தலை கீழ். அதன் பின்னர் நடந்தது என்ன, காதலியுடன் சேர்ந்தானா? போன் பண்ணிய  கார்த்திக் யார்?  மேலதிகாரியை என்ன செய்தான் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்க. 

Rock on  படம் பார்த்த பிறகு தமிழில் இந்த மாதிரி படம் எப்போது வரும் என நினைத்தேன், அறைத்தோழன் அறிமுகப்படுத்தும் படம் எல்லாம் நன்றாக இருக்கவே அவன் சொல்லிய படி Farhan Akhtar  படமும் பார்க்க ஆரம்பித்தேன். இதுவும் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை.  ஒரு motivational  படம் போல ஆரம்பித்து அதில் பலவற்றை தொட்டு சென்றுள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் மிகையாகாமல் மெல்ல தொட்டு சென்றுள்ளது. இதில் மோடிவேசன், திரில்லர், காதல்,  இயலாமை எல்லாமே உள்ளது. கடைசி வரை அந்த போனை பண்ணுவது யாரை இருக்கும் என நம்மை யோசிக்க வாய்த்த இயக்குனர் Vijay Lalwani க்கு நமது பாராட்டுக்கள்.

இசை வழக்கம் போல  Shankar Ehsaan Loy கூட்டணி, மிகப்பொருத்தமான இசை.  கதாநாயகி தீபிகா படுகோன், என்னமோ தெரியல இவரை எனக்கு முதலில் இருந்தே புடிக்காது, தம் அடித்து பப்பில் தண்ணி அடித்து டான்ஸ் ஆடும் நகரத்து இளம்பெண்.  இந்த காரக்டரில் இவரை பார்த்தது இன்னும் புடிக்கவில்லை ஆனால் நிறைவாக செய்துள்ளார்.  

கார்த்திக்காக Farhan Akhtar  மிகப்பொருந்தியுள்ளார், தாழ்வு மனபான்மையுடன் இயலாமையால் பொருமுவதாகட்டும், மிடுக்குடன் தான் IIM இல் படித்து வெளிவந்து தன்னை மிரட்டிய மேலதிகாரியை எளிதில்  மடக்கும் ஆளாகட்டும் எளிதாய் செய்துள்ளார். உண்மையாக படம் பார்க்கும்போது நாளை நாமும் இப்படி இருக்க வேண்டும் என நினைத்தேன். தயக்கத்துடன் நிறைய வேலைகளை நானும் இது போல செய்துள்ளேன், மனதில் இப்படி இருக்க வேண்டும் என நினைத்து இருக்காமல் நமக்கு அதெல்லாம் வராது என நினைத்ததுண்டு, எப்படி இருக்க வேண்டும் என நினைத்தேனோ இனி அப்படி இருந்து பார்ப்போம் என தோன்ற வைத்துள்ளது இந்த படம். அழைத்து சென்ற  cinema addict க்கு நன்றி. இவர் எழுதும் வலைப்பூவில் கண்டிப்பாக இந்த படத்தின் நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.

படம் நெடுக டெலிபோனும் அவன் மனநிலையை காமிக்கும் வண்ணம் காட்டப்படும் cube  அருமை 

படத்தில் காட்டப்படும் காதல் காட்சிகள் சுவை, வீட்டுக்கு வெள்ளை அடிக்கும் காட்சியில் ஹீரோ முழிக்கும் குழப்பமான முழி எனக்கு புடித்தது 

இவ்வளவு சொல்லியும் படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் இருந்து வெளிவராமல் இருக்கும் கார்த்திக் அப்படியே மொழு மொழு கன்னத்தில் இருப்பது உறுத்துகிறது, மூன்று நாள் தாடி வைத்திருக்கலாம்.

கதை நடப்பது தற்காலத்தில், காய்கறி விக்கும் பெண்மணி எல்லாம் செல் போன் வைத்திருக்கும் நேரத்தில் கதாநாயகன் அதைப்பற்றி தெரிந்தும் அதை உபயோகிக்காமல் இருப்பது நெருடுகிறது.

காதல் வந்தப்புறம் கூட காதலியுடன் sweet nothings  பேசாமல் இருப்பதும், ஒரு sms  கூட அனுப்பாமல் இருப்பது அட போங்க செல்போன் வாங்காமல் இருப்பது டூ மச்.

அமெரிக்கா என்ன உலகில், இல்லை இல்லை நிலவுக்கு போன கூட ரெண்டு மலையாளி சந்திச்சா மலையலதுல தான் பேசிப்பாங்க, ஒரு மலையாளி யார சந்திச்சாலும் மலையாளம் கலந்த அந்த ஊர் மொழியை பேசுவாங்க ஆனா கேரளால இவர் பாக்கற எல்லா மலையாளியும் தெளிவான இந்தி பேசறது ஒத்துக்கவே முடியாது.

ஆனா இந்த குறை எல்லாம் தெரியாம படத்தை கடைசி வரை கொண்டு போன இயக்குனர்  மற்றும் அனைத்து குழுவினருக்கும் பாராட்டுக்கள்.


மறுபடியும் தமிழில் இந்த மாதிரி படம் வருமா? வரலாம், தல அஜித் நடிச்சா இந்த படம் கண்டிப்பா சூப்பர் ஹிட். தல எங்க ப்ளாக் படிக்கும தெர்ல ஆனா படிச்சு இதுல தமிழா நடிச்சா கண்டிப்பா சூப்பர் ஹிட்.

எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும், எனது மடிக்கணினி விசைப்பலகை என்னை திட்ட வேறு வழி தெரியாமல் தனது எதிர்ப்பை இப்படி காட்டுகிறது. அதனுடன் போராடியே பதிவெழுத வேண்டி உள்ளது. கொஞ்சம் மன்னியுங்கள்  

முதல் முறையாக திரை விமர்சனம் எழுதுகிறேன் அதனால் தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
படம் பார்த்தது புதுப்பிக்கப்பட்ட தேவி திரை அரங்கில், டிக்கெட் வாங்க நண்பன் சென்றிருக்கும் போதே தற்காலிக பைக் பார்க்கிங்கில் இருவர் அடித்த கமெண்ட், " மச்சி சத்தியத்துக்கும் தேவிக்கும் இதாண்டா வித்தியாசம் "  காரணம் அப்போதுதான் திரையரங்கு ஊழியர் சொல்லிய வாக்கியம் " டெம்ப்ரவரி பார்கிங் எல்லாம் புல்லு போயிட்டு ஏழு மணிக்கு வா போ, சொல்லிட்டே இருக்கேன்ல எல்லாம் புல்லுனா மறுபடியும் வந்துகிட்டே இருந்த, ஏன்யா நிக்கற போயா"

ஜாக்கி சேகர் சொலியபடி புதுபிக்கப்பட்ட தேவி சூப்பர் ஆனா சத்யம் அளவுக்கு வராது, நான் என்னதான் மிடில் கிளாஸ் ஆளா இருந்தாலும் கண்டிப்பா படம் பார்க்க போகும்போதும் வரும்போதும் மன நிறைவுடன் வர வேணும் என நினைப்பவன். காசையும் கொடுத்து கண்டவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்கிட்டு அசிங்கப்பட்டு வரணும் என்றால் அதுக்கு இருபது ரூபாய் அதிகம் கொடுத்து சத்யம்கே போய்விடுவேன். தேவி சத்யம் கிட்டக்கூட வர முடியாது ஆனாலும் சத்யம்க்கு போட்டி கொடுக்க யாராவது வரணும். போட்டி அதிகம் ஆனாத்தான் விலை குறையும் தரம் அதிகமாகும் 

9 comments:

Karthik said...

நான் இந்த வீக் என்ட் போறதா இருந்தேன் தல. மிஸ் ஆயிடுச்சு. அடுத்த வாரம்தான். சூப்பர்ப்பா எழுதியிருக்கீங்க. பர்கான் அக்தருக்கு மிடாஸ் டச் இருக்குனு நெனைக்கறேன். செமையா கிளிக் ஆகுது அவருக்கு. I like him. :)

Karthik said...

இந்த பிவிஆர் சினிமாஸ் அம்பா ஸ்கைவாக் வந்தாங்களே, எப்ப ஓபன் பண்றாங்களாம்?

DHANS said...

//நான் இந்த வீக் என்ட் போறதா இருந்தேன் தல. மிஸ் ஆயிடுச்சு//

i was planning to go leader telugu film and finally end up with karthik calling karthik.

//சூப்பர்ப்பா எழுதியிருக்கீங்க.//

aga thank u thank u :)

//இந்த பிவிஆர் சினிமாஸ் அம்பா ஸ்கைவாக் வந்தாங்களே, எப்ப ஓபன் பண்றாங்களாம்//

before pongal they said in a month it will open but there is no sign of opening. but its a nice place not like inox, parking is a hectic there in city center.

தராசு said...

இந்தப் பதிவுன்னு இல்ல, உங்க எல்லாப் பதிவிலுமே எழுத்துப் பிழை நிறைய இருக்கும்.

கொஞ்சம் பார்த்து கரெக்ட் பண்ணு நைனா.

அப்புறம் சினிமாவுக்கும் எனக்கும் ரொம்பவே தூரம் நைனா,

இன்னாவோ சொல்ல வர்றேன்னு தெர்து, ஆனா, இன்ன சொன்னாலும் ஷோக்கா சொல்லீக்கறப்பா.....

DHANS said...

//இந்தப் பதிவுன்னு இல்ல, உங்க எல்லாப் பதிவிலுமே எழுத்துப் பிழை நிறைய இருக்கும்.

கொஞ்சம் பார்த்து கரெக்ட் பண்ணு நைனா.//

my keypad had made me mad, have to get an external keyboard. will do it next time. elutthuppilai kandipa sari seithu vidugiren but santhippilaigalai sari seiya kaalam agalaam, maranthu pochu :(

//அப்புறம் சினிமாவுக்கும் எனக்கும் ரொம்பவே தூரம் நைனா,

இன்னாவோ சொல்ல வர்றேன்னு தெர்து, ஆனா, இன்ன சொன்னாலும் ஷோக்கா சொல்லீக்கறப்பா.....//

rompa thanks :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பரே
இதுதான் கதையா?
என் ப்ரிடிஷ் பாஸ் இந்த படத்தை எங்கோ போஸ்டரில் பார்த்துவிட்டு கார்த்திக் காலிங் கார்த்திக் என்று சொல்லி அப்படி ஒரு படம் இருக்கு பார்த்தியா?என்றதும் எனக்கு தெரியாது என்றேன்.
வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன்
இது கார்த்திக் சீஸன் போலவும்.
நல்லா எழுதுனீங்க நண்பா
www.geethappriyan.blogspot.com

DHANS said...

நன்றி கார்த்திகேயன், தங்கள் விமர்சன பகுதியில் உள்ள சில படங்களை நான் எப்பவுமே பார்ப்பதுண்டு

/இதுதான் கதையா?//

அமாம் ஆனால் ஒரு சஸ்பென்ஸ் கடசில இருக்கு, படம் நன்றாக உள்ளது.

//என் ப்ரிடிஷ் பாஸ் இந்த படத்தை எங்கோ போஸ்டரில் பார்த்துவிட்டு கார்த்திக் காலிங் கார்த்திக் என்று சொல்லி அப்படி ஒரு படம் இருக்கு பார்த்தியா?என்றதும் எனக்கு தெரியாது என்றேன்.//

farhan akthar நடித்த கடைசி படம் Rock on நன்றாக இருந்ததால் இந்த படத்துக்கு சென்றேன், ஏமாற்றவில்லை


//இது கார்த்திக் சீஸன் போலவும்//. நம்ம தமிழ்நாட்டில்தான் கார்த்திக் சீசன் என்றுமே உள்ளதே

Sangeee's Diary.... said...

hei.. ur narration is really good da...

DHANS said...

thanks sangee :)