Friday, March 12, 2010

சென்னை முதல் சென்னை வரை கொல்லம், திருவனந்தபுரம் வழியாக இரண்டு நாளில்....

சில வாரங்களுக்கு முன்பு அலுவலக நண்பர்களுடன் கேரளா சென்று வந்தேன். சென்னையில் இருந்து திருச்சி மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றோம்.
வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி காரிலேயே சென்றுவிட்டு வருவதாக ஏற்பாடு. இதுவரை நெடுந்தூரம் காரில் சென்று இருந்தாலும் 760km  செல்வது இது தான் முதன் முறையாக அதுவும் நான் மட்டுமே கார் ஓட்ட வேண்டும். ஆனால் ஓட்டிவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம். வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல நண்பர்கள் சொதப்பியதால் எட்டு மணிக்கு கிளம்பி சென்றோம்.  தாம்பரம் தாண்டி சென்று எல்லோரும் ஒரு கோவிலில் சாமிகும்பிடுவார்களே அங்கு நிறுத்தி கடவுள இ கும்பிட்டு வண்டியை கிளப்பினோம். சிறிது நேரத்திலேயே டாஸ்மாக் போர்டை பார்த்து வண்டியை ஓரம் கட்டினர். 

சரக்கும் சைடு டிஷும் வாங்கிக்கொண்டு வண்டி கிளம்பு ஒரு மணி நேரம் ஆனது. மதுராந்தகம் சென்ற உடன் வண்டி நிறுத்தப்பட்டது,சரக்கு கிளம்ப ஆரம்பித்தது, மூன்று மணிக்கு திருச்சி தாண்டி வண்டி சென்றது, அங்கிருந்த ஒரு கடையில்  வண்டியை நிறுத்தி நான் தூங்க ஆரம்பித்தேன் ஆறு மணி வரை தூங்கி எழுந்திருக்கும் போது எனக்கு மட்டும் மோசமாக விடிந்தது. நண்பன் ஒருவன் மப்பு அதிகமாக ஏறி ரொம்ப அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருந்தான். எப்படியோ ஏற்றிக்கொண்டு கிளம்பி பாதி தூரம் கடப்பதற்குள் வாந்தி...
மதுரையை தாண்டி செல்லும் போது இடையில் இரண்டு முறை வண்டி நிறுத்தப்பட்டது. எப்படியோ கொல்லம் சென்று சேர மதியம் 11.45 ஆனது. இயற்கையை ரசித்து வண்டி ஓட்ட முடியவில்லை, கேரளாவின் இயற்கையை ரசிப்பதற்கு பதில் எப்படி மறுபடியும் சென்னை சென்று சேருவது என யோசித்து மனதை குழப்பிக்கொண்டு இருந்தேன்.

இரண்டு நாட்கள் நன்றாக சென்றன, கேரளா பச்சை பச்சையாய் இருந்தது ஆனால் குளு குளு என இல்லை, வெயில் காட்டு காட்டு என காட்டியது.  நன்றாக என்ஜாய் செய்தோம். எனது கார் கப்பலில் போனது, இதெல்லாம் இங்கு மட்டுமே சாத்தியம். ஞாயிறு அன்று காலை திருவனத்தபுரம் சென்றோம், அங்கு சென்றுவிட்டு மாலை நானும் இரண்டு நண்பர்களும் சென்னை கிளம்புவதாக பிளான். பத்மநாப கோவிலுக்கு சென்று விட்டு நண்பரின் அண்ணன் வீட்டுக்கு செல்லுவதாக திட்டம், தோழி ஒருத்தி அங்கு இருப்பதால் அவ்வளவு தூரம் வந்து அவளிடம் பேசாமல் கூட சென்றால் நன்றாக இருக்காது என்பதால் தொலை பேசினேன், அதுதான் தப்பு, வீட்டிற்கு வரவில்லை என கோவம் அவருக்கு.

நண்பர்கள் இருவர் கோவளம் செல்வதாக திட்டம் போகும் வழியில் அவர்களை இறக்கி விட்டு செல்லலாம் என சென்றால் இன்னொரு காரில் என்னுடன் வர வேண்டிய ஒருவர், அந்த சார் நேராக கடற்கரை சென்றது, எனக்கோ மாலை மணி 3  ஆகிவிட்டது இப்போ கிளம்பினாத்தான் காலை 4 மணிக்கு சென்னை செல்ல முடியும் என கவலை. கடைசியில் யாவரும் அங்கு தங்கவில்லை. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பி அங்கிருந்து நகர் கோவில் திருநெல்வேலி மதுரை திருச்சி வழியாக சென்னை வரவேண்டும். நான்கு மணிக்கு கிளம்பினோம், நண்பர் வேறு சரக்கு கேட்டுக்கொண்டே வந்தார், வண்டியில் இருந்த ஹாப் பாட்டிலை எடுத்து குடுத்தோம், நாகர்கோவில் தாண்டி ஒரு கோட்டரை முடித்து விட்டார்.

நாகர் கோவில் தாண்டி திருநெல்வேலி செலும்போது சாலைகள் நன்றாக இருந்தன, ஆனால் ஒரு இடத்தில  take diversion  போட்டு ஒரு போர்ட் இருந்தது, அதை கடந்து மறுபடியும் சாலைக்கு வந்தோம் கொஞ்ச தூரம் வந்தால் தன தெரிந்தது சாலையில் எங்களை தவிர யாருமில்லை, ஒரு பாலத்தில் ஏறிக்கொண்டு இருந்தோம் உச்சிக்கு சென்றபோது பார்த்தல் பலத்தை நடுவில் காணூம். நல்லவேளை மெதுவாக சென்றேன் இல்லாவிடில் ஐந்து பெரும் அரோகரா தான். நெடுஞ்சாலை துறை நன்றாக வேலை செய்கின்றனர், அந்த புறவழிச்சாலை முடியவில்லை ஆனால் அதற்கு ஒரு அறிவிப்பும் இல்லை, எப்படியோ கஷ்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்து சேர்ந்தோம். பின்னர் வண்டி நிற்காமல் கிளம்பியது. நண்பர் மட்டும் சரக்கு கேட்டார், வண்டியை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தார் நான் நிறுத்தவில்லை. 

கலையில் ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம், பயனத்தி ரசிக்காமல் வெறுத்து வந்து சேர்ந்தேன், என்னைத்தவிர நான்கு பெரும் நன்றாக ரசித்தனர். இப்பொது தெரிகிறது சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று.


பயணத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்கள் அடுத்த பதிவில்


சில புகைப்படங்கள் உங்களுக்காக 


2 comments:

Karthik said...

அடடா இந்த பதிவை இவ்ளோ லேட்டா படிக்கிறேனே! வாட் அ லூஸர் ஐயாம்! :(

தல சீக்கிரம் அந்த சுவாரஸ்யமான விஷயங்களை சீக்கிரம் எழுதுங்க. :)

Karthik said...

விதாவா ஜெஸ்ஸி மாதிரி பொண்ணு யாரையாச்சும் பாத்தீங்களா? :)