Wednesday, March 3, 2010

கடந்த வாரம்

பத்து நாட்களாக அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு இவு எடுத்தேன், ஓயவே வேணாம் எனும் அளவுக்கு ஓய்வு எடுத்தாயிற்று மறுபடியும் நாளை முதல் அலுவலகம். நினைக்கும்போதே சிறிது சந்தோசமாக உள்ளது.

என்னடா கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் பரபப்பான செய்திகளே வரலையே என்று நினைத்தேன், நினைத்து ஒரு நாளில் நம்ம நித்தியானந்த சுவாமிகள் திருவிளையாடல். எனக்கு ஒன்னு மட்டும் புரியல, சன் டிவி ஏன் இப்படி எல்லாம் காட்றாங்க? அண்ணாமலை பல்கலை கழகத்தில நான்கு மாணவர் பலி, மற்றும் பென்னாகரம் இடை தேர்தல் பிரச்சனை என்று நிறைய வரும்போது இந்த செய்தி வந்ததால் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.
அவர் படுக்கை அறையில் அவர் யாரிடமோ சந்தூசம இருக்கிறார் என்னவோ பண்ணுகிறார், அதை பாம் பிடித்து காட்ட இவர்கள் யார்? சாமியார் என்றால் இப்படிதான் இருக்கணுமோ? அவர் சொல்லும் உபதேசமோ என்னமோ நல்ல இருந்த கேட்டுகோங்க அதுக்காக அவரை நீங்க உங்க வரையறைக்குள் வாழ் என்று சொல்லாதீங்க.  சாமியார் என்றாலே பிரச்சனை தான்.

சச்சின்  200 அடிச்சாலும்  அடிச்சார்  பாவம் விட்ருங்க என்று அவரே கேட்டாலும் விடாத அளவுக்கு அவர் புகழ் பாடுகின்றனர் இந்த மீடியா. இதே மீடியா தான் கொஞ்ச நாளைக்கு முன்பு சச்சின் எதுக்கு இன்னும் இருக்கிறார் கிளம்பு வேண்டியது தான என்று கேட்டன. இவர்களுக்கு பணம் பண்ண எந்த செய்திய இருந்தாலும் போடுவார். பத்திரிக்கை தர்மம் என்று எல்லாம் நாம் மட்டும் நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

கொஞ்ச நாள் முன்னாடி திருநெல்வேலில போலீஸ் காரர் ஒருத்தர் செத்தாரே அத மீடியா என்ன பணிச்சு, அப்படியே மறந்துட்டாங்க இப்படிதான் எல்லாமே. 

மாருதி இந்தியா மற்றும் ஆட்டோ கார் பத்திரிகை இணைத்து நடத்தும்  young driver  எனும் பூட்டி ஆரம்பம் ஆகிவிட்டது. சும்மா எழுதுவம் என ஆன்லைன் தேர்வு எழுதினால் நீ தேர்வாகிவிட்டாய் என்று சொல்லிடாங்க, இனிக்கு பொய் அடுத்த கட்ட தேர்வையும் முடித்தாயிற்று. சிமுலதியன் முறையிலும், நேரடி வாகனம் ஓட்டும்   முறையிலும் தேர்வு . சிமுலதியன்  சரியாய் பணிட்டாலும்  நேரடி ஒட்டுதலில் சிறிய தவறு செய்துவிட்டேன். பியட் வாகனம் ஓட்டிவிட்டு மாருதி எடுக்கையில் வரும் வித்தியாசம் காலை வாரிவிட்டது.  பக்கத்துல வேற ஒரு பொண்ணு என்னடா இப்படி தடுமாறுகிறாய் என்று  பாத்து கேலியா சிரிச்சுடுச்சு. ( ஆனா நான் ஸ்கார்பியோ ஓட்டிக்கிட்டு இருக்கேன்  என பீலா விட்டு பயங்கர காமெடி பண்ணியது அது ஓட்டும்போது).பார்போம் இதில் ஜெயித்தால் டெல்லியில் இறுதி போட்டி. நமக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, போட்டி முடித்துவிட்டு என் காரை எடுத்தால் எனக்கே வித்தியாசமா இருக்கு.

கடந்த பதினைந்து நாட்களில் எப்படியும் ஒரு இருபது படங்கள் பாத்திருப்பேன், எல்லாவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனா பதிவுலகில் படித்து தேர்வு செய்த படங்கள் தான் ஏற்கனவே எல்லோரும் எழுதிட்டாங்க. விண்ணைத்தாண்டி வருவாயா, எல்லோரும் எழுதி கிழித்து தோரணம் கட்டிடாங்க ஆனா எனக்கு படம் புடிக்கல, ஒரு பழைய படத்துல மோகன் மட்டும் ஒரு நடிகை நடித்து இதே கதை வரும் அதில் கூட இருவரும் செத்து ஒன்னு சேருவாங்க. வருண் சொன்னது போல முப்பது வருடத்தில் நாம் ஜாதிக்காக காதலை விட்டுகொடுக்கும் அளவுக்கு மாறியுள்ளோம். கவலை அளிக்கும் போக்கு. ஆனால் படத்தை ரகுமான் இல்லாமல் நினைத்து  பார்த்தால்  தேறுவது ரொம்ப கஷ்டம். கவுதம் மேனன் சார் அடுத்த தலை படத்தையாது  ஒழுங்கா எடுங்க.


3 comments:

Karthik said...

நம்ம மீடியா மெச்சூர்டாக இன்னும் எத்தனை வருஷம் இருக்கோ தெரில. கொலம்பியா யுனிவர்சிடில போய் இவங்க என்ன ஜர்னலிசம் படிச்சு கிழிச்சாங்கனு தோணுது சில சமயம். சின்னபுள்ளதனம். இல்லைனா சென்சேஷனலைஸ் பண்ணுவது. தாங்க முடில இவங்க இம்சை. சன் நியுஸ் சொல்லவே வேணாம். வெக்கமேயில்லாம கட்சி நியுஸ் வாசிச்சவங்க. உலகச்செய்திகள்னு சிங்கப்பூர்ல நாய் கண்காட்சினு சொல்லிட்டிருப்பாங்க. லூஸுப்பசங்க.

Karthik said...

வாழ்த்துக்கள் தல, இறுதிப் போட்டில ஜெயிச்சுட்டு சொல்லுங்க. ட்ரீட் எங்க வெச்சுக்கலாம்னு நாங்க சொல்றோம். :) விண்ணைத்தாண்டி வருவாயா செம காமெடி. லூஸுதேவ மேனன கலாய்ச்சு ஒரு பதிவு எழுதலாமானு யோசிச்சிட்டு இருக்கேன். :))

DHANS said...

மீடியா பத்தி தெரிஞ்சுகிட்டது நான் கல்லூரியில் படித்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி, தமிழ்நாடே இன்னும் அதை மீடியாவின் கோணத்தில் மட்டுமே தெரிஞ்சு வைத்துள்ளது, ஒரு ௦௦ 1200 குடும்பங்கள் தவிர அதன் பிறகு மும்பை தாக்குதல் நடந்தபோது அதன் பிறகு மீடியா மீது எனக்கு ஒரு வெறுப்புதான் மிஞ்சுகிறது. இவர்கள் நினைத்தது மட்டும் தான் மக்கள் தெரிஞ்சுக்கணும் என்பது கொடுமை.


//வாழ்த்துக்கள் தல, இறுதிப் போட்டில ஜெயிச்சுட்டு சொல்லுங்க. ட்ரீட் எங்க வெச்சுக்கலாம்னு நாங்க சொல்றோம். ///
இறுதிப்போட்டி என்பது எல்லாம் கொஞ்சம் கடினம், பார்ப்போம் கூடிய சீக்கிரம் சொல்றேன். விண்ணைத்தாண்டி வருவாயா உனக்கு கண்டிப்பா புடிதிருக்காது என்று நினைத்தேன்.