Thursday, July 24, 2008

நான் என்ன செய்ய?? -முடிவு

நான் என்ன செய்ய என்று ஒரு தலைப்பில் கடந்த வாரம் ஒரு முடிவெடுக்க இந்த பதிவை எழுதியிருந்தேன். முடிவு எடுத்துவிட்டேன்

முதலில் பேசி முன் பணம் செலுத்திய காரை மட்டுமே வாங்கினேன், சில ஆயிரங்கள் நட்டம் என்றாலும் மன நிறைவு. என்னவோ தெரியவில்லை இது போன்ற விசயங்களில் இன்னும் எனது மனம் இப்படியே இருக்கின்றது. முறைப்படி வண்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று உறுதி செய்ததால் பாத்து நாட்கள் ஆகியும் எனக்காக வேறு ஒருவரிடமும் விற்காமல் விலை பேசாமல் வண்டியை வைத்திருந்த அவர்கள் நேர்மையிடம் தோற்றுபோக விரும்பவில்லை.

மேலும் பலனாக வண்டியின் பெயர் மாற்றம், சராசரி பராமரிப்பு, காப்பீடு அனைத்தையும் அவர்களே செய்து கொடுப்பதாக உறுதி கொடுத்து உள்ளனர். இவை அனைத்தையும் நானே செய்தால் இனும் சில ஆயிரங்கள் செலவாகும்.
மன நிறைவுடன் செய்த உறுதியை நிறைவேற்றிவிட்டேன்.

3 comments:

ஜோசப் பால்ராஜ் said...

இது தான் நல்ல முடிவு. நல்லபடியாக வாகனம் ஓட்டி, மகிழ வாழ்த்துக்கள்.

ஆமா, எந்த ஊருல இருக்கீங்க? நாங்க அங்க வந்த, உங்க கார்ல 4 இடம் சுத்திப்பார்க்கலாம் பாருங்க, பெட்ரோல் நான் போட்டுக்குறேன்னு சொன்ன கேட்க்கவா போறீங்க?

DHANS said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

நான் சென்னையில் உள்ளேன், சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது. எப்போது வருகின்றீர்கள்?? 4 இடம் என்ன 40 இடங்கள் கூட சுற்றலாம் :)

புருனோ Bruno said...

//, சில ஆயிரங்கள் நட்டம் என்றாலும் மன நிறைவு//

;) :)