Tuesday, March 31, 2009

முட்டாள் திட்டம் இப்போது இல்லை...

முட்டாள் திட்டம் தற்போதைக்கு நமது நாட்டில் போடப்பட்ட பலவிதமான திட்டங்கள் போல கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனது மாமாவிற்கு உடல் நிலை சரிஇல்லாத காரணத்தால் இதை செயல் படுத்த முடியாத நிலைமை.

சிலநாட்களாக மனது சரியாகவே இல்லை, நேற்று எப்படியும் சரி பண்ண வேண்டும் என்ற் நினைப்பில் கடந்த வருடம் சேமித்து வைத்த அந்த ரகசியம் (the Secret) என்ற motivational video பார்த்தேன், பல விஷயங்கள் புரிபட துவங்கியுள்ளது. மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய தகுந்த ஒரு பெட்டகம் இது. இந்தியாவில் இதுவரை கிடைக்காமல் இருந்த இந்த புத்தகம் மற்றும் குறுந்தகடு இப்போது கிடைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் landmark இல் பார்த்தேன்.


ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் எனது மாமா குணமைடைய, வழக்கமாக கஷ்டம் வரும்போது மட்டுமே கடவுள் நம்பிக்கை வரும் இப்போதும் அப்படியே, பெருசாக நம்பிக்கை இல்லாவிடிலும் கஷ்டம் என்று வரும்போது நம்பிக்கை தேவையை உள்ளது. ஒரு துணை போல... வழக்கம் போல நெல்லை மாவட்டத்தில் உள்ள காரையார் அணைக்கட்டு அருவிக்கரையில் ஒரு சிறு பிள்ளையார் இருப்பார் அவரிடம் வேண்டியுள்ளேன். மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் அவர் (என்னைப்பொறுத்தவரையில் ). அப்புறம் அவர் தம்பி பழநிமலை முருகனையும் வேண்டியுள்ளேன்.

நண்பர் பிரேம்குமார் என்னை பார்த்து ஒரு வருடம் முன்னாடி smart ஆகா இருந்துளீர் என்று சொல்லிவிட்டார், அதனால் இப்போது நான் எப்படி உள்ளேன் என்பதை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடிகிறது. மறுபடியும் பழைய நிலைமைக்கு வர இன்று முதல் முயற்சிகளை துவங்கிவிட்டேன். பதிவுலகம் என்பது முதலில் நான் எனது எண்ணங்களை வெளிப்படுத்த மட்டுமே உபயோகித்தேன் பின்னர் இந்த உலகம் எனக்கு பலவிதமான ரசனைகளையும் நண்பர்களையும் கொடுத்து உள்ளது இப்பொது தான் தெரிகிறது. தற்சமயம் தீவிரமாக பதிவுலகத்தில் இல்லாவிடிலும் அவ்வப்போது எழுதுவதை படித்து சிறு பின்னூட்டம் போடுவதற்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்க மகிழ்ச்சி.

ஆட்டோமொபைல் துறையை பற்றியும் வாகனங்களை பற்றியும் எழுத நிறைய ஆசை ஆனால் முடியவில்லை. இந்த வாரம் முதல் எழுத ஆரம்பிக்க உள்ளேன்.

எதையோ எழுத நினைத்து எதையோ எழுதியுள்ளேன். வழக்கம் போல மொக்கை என்று நினைத்தால் நல்ல பதிவு தங்களுக்காக தயாராகிக்கொண்டு உள்ளது விரைவில் வெளியிடப்படும்.

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாங்க வாங்க நல்லா எழுதுகோ...

ச.பிரேம்குமார் said...

உங்கள் மாமா விரைவில் குணமடைய பிராத்திப்போம்

ச.பிரேம்குமார் said...

நீங்கள் Automobile துறையில் இருக்கிறீர்களா தனா. அப்போ சீக்கிரமே உங்கள் துறை சார்ந்த பதிவுகளை எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம் :)

DHANS said...

தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

நான் இருப்பது ஆட்டோமொபியில் துறை இல்லை இருந்தாலும் அதிலுள்ள ஆர்வத்தின் காரணமாக எழுதலாம் என்று உள்ளேன். நான் இருப்பது இயந்திரவியல் துறை. சிமெண்ட் தயாரிப்பு துறை