Wednesday, March 3, 2010

நியாபகம் இருகிறதா டயனோரா??

ஒரு காலத்தில் கிரிகெட் விளையாட்டின் நடுவே இந்த விளம்பரத்தை பார்த்தாலே கோவம் வரும் ஆனால் இன்று? 

எங்கள் ஊரிலேயே ஒரு வீட்டில் தான் டிவி இருந்தது அப்போது, நான் மிக சின்ன பையன், ஒன்றாம் வகுப்போ, யு கே ஜியோ  படித்துக்கொண்டு இருந்தேன். நாங்கள் அந்த வீட்டில் போய் டிவி பார்க்கிறோம் என எங்க அப்பா ஒரு டிவி வாங்கிக்கொண்டு வந்தார். ஊரின் இரண்டாவது டிவி ஆனால் அதை கொண்டு போய் எங்க பாட்டி ஊரில் வைத்துவிட்டு வந்துவிட்டார். அக்காவும் அண்ணாவும் படிக்கிறார்களாம் டிவி பார்த்து படிப்பை கோட்டை விட்டுடுவாங்க என்று. 

அப்போது வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை படமும் தான் நிகழ்ச்சி இந்த ரெண்டு நிகழ்ச்சில படிப்ப கோட்டை விடுவாங்க என்றால் இன்று?? இன்றைய தொலைக்காட்சி யுத்தத்தை எங்க அப்பாவெல்லாம் கனவுல கூட நெனச்சு பார்த்து இருக்க மாட்டார்.

எனக்கு ஓரளவுக்கு சந்தோசம், பின்ன நான் மட்டும் தான் பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு அடிக்கடி போவேன். நம்ம டிவி ராஜ்யம் அங்கதான் ஆரம்பம் ஆயிற்று. அந்த ஊரில் முதல் டிவி எங்களுடையது.  வாங்கிய சிறிது நாளில் அந்த ஊரில் இருத்த பெரிய வீட்டில் டிவி வாங்கினார்கள் (இதுக்கெல்லாம் ஒரு ஈகோ யுத்தம் ). ஆனால் அதுவரை என்னுடைய யுத்தம் பெரிதாக நடந்தது.

என்ன அநியாயம் பண்ணுவேன் டிவி பார்க்க வருவோரிடம். நான் தான் முன்னாடி உட்க்காருவேன், அடிக்கடி ஆப் பண்ணி வைத்து விடுவேன், கொஞ்ச காலம் எல்லோரும் டிவி பார்க்க வருவது பெருமையா இருந்தாலும் என்னுடைய தனிமை (  privacy)  கெடுவது  அப்பட்டமாக தெரிந்தது. தெரிய தெரிய கோவம் அதிகமானது, டிவி பார்ப்பதற்காகவே ஊரில் எனக்கு நண்பர்கள் ஆனவர் நிறைய. என்னுடைய விளையாட்டை டிவி பறித்தது, ஊருக்கு பள்ளி விடுமுறையில் மட்டுமே போவேன் அதிலும் விளையாட மட்டுமே நான் ஊருக்கு போவது. ஆனாலும் அந்த நாட்கள் மறக்க  முடியாதவை. மாநில  மொழி திரைப்படம், சித்ரகார், அளிப் லைலா, ஜன்கில்  புக் மோக்ளி, இன்னும் நிறைய. டிவி வர வர பக்கத்துக்கு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கதை பேசும் நேரம் குறைந்தது, எனக்கு பிடித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக குறைந்து இன்று ஊருக்கு போகலாம் என்றாலே வெறுப்பை இருக்கிறது. ஒரு கிராமத்து வாழ்வின் இயல்பை குலைத்த வருத்தம் துளியும் இல்லாமல் புன்னகைத்துக்கோடு இருக்கிறது அந்த டிவி. 

என்ன இருந்தாலும் முதன் முதலில் வாங்கிய டயனோரா டிவி மறக்க முடியாதது.இந்த விளம்பரத்தை தேடி கண்டுபுடிக்கையில் மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்வு. அந்த விளம்பரத்தில் வரும் பாடலை தானாக பிரித்து வைத்து கேட்க வேண்டும் பல இருக்கிறது.  இதில் பார்த்த படங்கள், நாடகங்கள்,கிரிக்கெட் மாட்சுகள் எல்லாமே மனதை வருடி செல்கின்றன. 

7 comments:

மாயன் said...

நன்றி

தராசு said...

தலைப்பை பார்த்து எதோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சேன்.

அப்புறம் பார்த்த இதுவும் ஒரு கொசுவர்த்திதான்.

DHANS said...

வருகைக்கு நன்றி திரு மாயன்
@ தராசு
நம்ம எப்பவுமே கொசுவர்த்திதான், பில்ட் அப் மட்டும் பெருசா கொடுப்போம்.
நாளை அலுவலகம் வருகிறேன்

Karthik said...

நான் அடுத்த ஜெனரேஷன் தல. நிறைய எக்ஸைட்மென்ட்ஸ் எங்களுக்கு கெடைக்கல. ஆனா ஒளியும் ஒலியும்லாம் நானும் பாத்திருக்கேன். நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்ச போது ரிலையன்ஸ்காரங்க 'கமான் இந்தியா'னு கடுப்பேத்துவாங்க. உடனே ஒரு விக்கெட் விழும். இவங்க மறுபடியும் 'கமான் இந்தியா'. :))

எங்களோட முதல் டிவி பிபிஎல். ச்சே என்னையும் கொசுவத்தி சுத்த வெச்சுடுவீங்க போல. நல்ல பதிவு.

DHANS said...

அடுத்த ஜெனரேசன் நிறைய மிஸ் பண்ணிடுச்சு கார்த்தி, எங்களுக்கு போன் என்பது புதுசு அனா அதுல மொபைல் என்பது மட்டுமே உங்களுக்கு புதுசு அது மாதிரிதான்.

இப்போதைக்கு நீ கொசுவர்த்தி சுத்தமாட்ட ஆனா கொஞ்ச நாளில் நீயும் சுத்த ஆரம்பிச்சுடுவ....

நாடோடிப் பையன் said...

Nice entry.

கோவை நேரம் said...

ஞாபகம் வருதே ..ஞாபகம் வருதே ..ஞாபகம் வருதே ..