Tuesday, December 28, 2010

ஊட்டி பயணத்திற்கு ஆலோசனை தேவை


திடீரென வரும் வெள்ளி அன்று ஊட்டி செல்லலாம் என முடிவெடுத்துள்ளோம்,வழக்கம் போல் எல்லோரும் செல்லும் இடங்களுக்கு செல்லாமல் இந்த முறை சிறிது வேறு இடங்களுக்கும் செல்லலாம் என நினைத்துள்ளோம், 

அவலாஞ்சி, சென்று அங்கிருந்து அப்பர் பவானி வரை சென்று மறுபடியும் திரும்ப முடிவெடுத்துள்ளோம் இதற்கு வன இலாகாவிடம் அனுமதி பெற வேண்டும், ஊட்டி சென்று அனுமதி கூறலாம் என நினைக்கிறோம், பதிவர்கள் எவரும் இதற்கு முன்னால் இங்கு சென்று வந்திருந்தால், அவர்களது ஆலோசனை தேவைப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த இடத்திற்கு நண்பன் ஒருவன் துணையுடன் சென்று வந்தோம் அப்போது அவன் அனுமதி பெற்றுதந்தான். தற்போது அவன் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அவனிடம் உடனடியாக உதவி கேட்க முடியவில்லை. ஊட்டியில் வேறேதும் வித்தியாசமான அனைவரும் போகாத நல்ல இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

சென்னையில் இருந்து காரில் வியாழன் காலை கிளம்புகிறோம், வெள்ளி சனி இரண்டு நாளும் ஊட்டியில்  இருக்க திட்டமிட்டுள்ளோம். 

வன இலாகா அனுமதிக்கு வேறு எதுவும் செய்ய வேண்டுமா என தெரியவில்லை, எங்கள் விருப்பம் இயற்க்கை காட்சிகளை பார்த்துவிட்டு திரும்பி விடுதல் மட்டுமே. வேறு எதுவும் ஆலோசனை இருந்தாலும் தெரிவிக்கவும். ஆலோசனை அளிக்க விரும்புபவர்கள் என்னை 9940685415  என்ற எண்ணிலும் dhans4all@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். 

Wednesday, December 22, 2010

பேருந்துப்பயணம்

கடந்த சில வாரங்களாக அடிக்கடி ஊருக்கு சென்று வந்ததால் பேருந்துப்பயணம் சாத்தியமாகியது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் ஒரு வாரம் தனியார் ஆம்னி பேருந்தில் திருச்சி சென்று அங்கிருந்து கரூருக்கு மறுபடியும் பேருந்து மாறி சென்றேன்.  பத்து மணிக்கு கத்திப்பாராவில் அந்த நேரத்துக்கு வந்த பேருந்தில் எதில் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததோ அதில் ஏறினேன். அவர்களே தாம்பரத்தில் கொஞ்ச நேரம், பெருங்களத்தூரில்  வெகுநேரம் என நிறுத்தி பதினொன்றுக்கு கிளப்பினர். பெருங்களத்தூரில் கிளம்பும்போதே கோயம்பேட்டில் ஏறிய ஒருவர் சண்டை போட ஆரம்பித்தார், கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் வர அவர்கள் எடுத்தொக்கொண்ட நேரம் மூன்று மணிநேரம்  மேலும் அவர் கொடுத்தது ரூபாய் 300  ஆனால் நான் கொடுத்தது ரூபாய் 250  எனக்கப்புறம் தாம்பரத்தில் ஏறியவர்கள் இன்னும் இருபது குறைத்து கொடுத்தனர்.  கோயம்பேட்டில் ஏறினவன் கடுப்பாக மாட்டானா?  திருச்சி ஒரு வழியாக கலை ஐந்து மணிக்கு கொண்டு சேர்த்தனர், பேருந்தும் நம்ம அரசுப்பேருந்து போலத்தான் இருந்தது கொஞ்சம் அத விட பரவாயில்லை. திருச்சி வரை சாலை நன்றாக இருப்பதால் எந்த பேருந்தா இருந்தாலும் செல்லலாம் அசவுகரியமா இருக்காது.

திருச்சியில் இருந்து கரூருக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கிய உடனே பேருந்து கிடைத்தது, இரண்டு பேர் அமரும் இருக்கையில் முன் படிக்கட்டுக்கு அடுத்து இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன். நான் ஒரு முழுக்கை சட்டையும் அதன் மேல் ஒரு ஜெர்கினும் அணிந்திருந்ததால் குளிர் அடிக்கவில்லை தலைக்கு குல்லா வேறு. அங்கு அமர்ந்தால் தான் யாரும் அருகில் அமர மாட்டார்கள் ஏனென்றால் குளிர் காற்று பேருந்து வேகத்தில் மோசமாக அடிக்கும். கரூர் பேருந்து நிலையத்தில் அடையும் முன்னே வயிறு கலக்கியது. திருச்சி கரூர் சாலை (சாலை என்பதே கிடையாது) குளித்தலைக்கு பிறகு ஓரளவு இருக்கிறது. இவளவு மோசமான சாலை இன்னும் உள்ளதா என யோசிக்க வைத்தது. கரூர் பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்லும் நகர பேருந்தில் ஏறினேன். தனியார் சிற்றுந்து தான், உறுமி உறுமி கிளப்பவே பத்து நிமிடம் ஆகியது அடுத்த இரண்டாவது நிமிடத்தில் எனது வீட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்தேன். டிக்கெட் வாங்கும்போது நன் இரண்டு  ரூபாய் கொடுக்க "மூணு ரூபா கொடு" என்றார் நடத்துனர். நான் இரண்டு ரூபாய் தான என கேட்க "அதெல்லாம் ஏத்தியாச்சு பிரைவேட் பஸ்ல மூணு ரூபா தான்" என சொல்ல அதற்குள் நான் இறங்கும் இடம் வந்ததால் கொடுத்துவிட்டு வந்தேன். 

அடுத்த முறை திரும்பி சென்னை வர அதுபோலவே பேருந்துப்பயணம். கரூர் திருச்சி அரசுப்பேருந்து கோயம்புத்தூரில் இருந்து வரும் பேருந்து அதனால் விரைவில் செல்லலாம் என நினைத்து நான் செல்ல ஓட்டுனர் உருட்டு உருட்டு என உருட்டினார். மூன்று மணி நேரமாக சென்று திருச்சியை அடைந்து இறங்கி சென்னை பேருந்தை தேடினேன். அந்த நேரம் பார்த்து தனியார் பேருந்து எல்லாம் முன்னூற்று ஐம்பது ரூபாய் கேட்க அரசுப்பேருந்து ஒன்று தான் நமக்கு வழி என பேருந்தை தேடினேன். அந்த நேரம் பார்த்து அரசு ஏசி வோல்வோ பேருந்து (நம்ம சென்னை வோல்வோ பேருந்து தான் ) வந்தது டிக்கெட்  பயண நேரம் ஐந்தரை  மணி நேரம் என எழுதியதை நம்பி நானும் அட்ஜஸ்ட் செய்து  அமர்ந்து சென்று விடலாம் என நினைத்து கிளம்ப. படு பாவி ஆறரை மணி நேரம் உருட்டினார்கள். இதுக்கு சாதாரண டீலக்ஸ் பேருந்தில் ஏறி இருக்கலாம் அவர்களே இதே நேரத்தில் தான் வருகிறார்கள்.  ரொம்ப கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து . கத்திப்பாராவில் இருந்து வேளச்சேரிக்கு திருச்சி செல்ல கொடுத்த தொகையை விட அதிகமா ஆட்டோ கேட்கிறார்கள். ஒரு வழியாக வழியே சென்ற ஆட்டோவில் நூறு ரூபாய் கொடுத்து வந்து சேர்ந்தேன்.

அடுத்த முறை நேரடியாக கரூர் பேருந்தில் ஏறி விடலாம் என நினைத்து ஏறி அமர்ந்தால் பாதி தூரத்தில் நிறுத்தி எதோ லோட் லோட் என தட்டிக்கொண்டு இருந்தனர், ஒரு இரண்டு மணி நேர தட்டல்க்கு பிறகு ஒரு வழியாக கிளம்பி காலை ஏட்டு மணிக்கு கரூர் வந்து சேர்ந்தேன், என்ன கிளம்பினது இரவு எட்டு மணிக்கு. காரில் வந்தா ஐந்தரை மணி நேரமும், திருச்சி வழியாக தனியார் பேருந்தில் வந்தால் ஏழு மணிநேரமும் ஆகும் ஊருக்கு பனிரெண்டு மணிநேரப்பயணம்.  மறுபடியும் சிற்றுந்து அவர்களும் மூன்று ரூபாய் கேட்க ஏரிச்சலானது.  மறுபடியும் சென்னை வர அரசுப்பேருந்து இவர்கள் பரவாயில்லை பத்தரை மணிநேரம் சென்றனர். (வழியில் சின்ன லோட் லோட் தட்டல் மட்டுமே) ஆனால் அரசுப்பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி உயிரை எடுக்கிறார்கள். துறையூரில் இருந்து எவ்வளவு பயணிகளை ஏற்ற முடியுமோ அவ்வளவு பயணிகளை இரண்டு சீட்டுக்கு நடுவில் உள்ள இடத்தில அமர வைத்து கல்லா கட்டுகிறார்கள். கைய கால நகத்த முடியல கொஞ்சம் மேல பட்டாலும் உடனேகீழ உட்கார்ந்து இருக்கவன் ஏன் மேல இடிக்கற என நம்மையே ஏசுகிறான். இந்த கொடுமையை எல்லாம்  சகித்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தா ஆட்டோகாரங்க கொள்ளை ஐயோ.

கரூருக்கு கடந்த மூணு தடவை அரசுப்பேருந்தில் சென்றேன் மூன்று தடவையும் பாதி வழியில் வண்டி நின்றுவிட "லோட் லோட் தட்டல்கள்" இரண்டு மணிநேரம் சகஜம். தனியார் நகர பேருந்தில் குறைந்த பட்ச கட்டணம் மூன்று ரூபாய். கேட்டால் வேனும்ன இறங்கிக்கோ என பதில்.  தனியார் ஆம்னி பேருந்தில் கொள்ளை. இதெல்லாம் வேணாம் என காரில் போலாம் என்றால் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் விலை ஏற்றம்.
பேருந்து நிலைமை ரொம்ப கவலைக்கிடம், கஷ்டப்பட்டு ஏறி உட்கார்ந்தா வெள்ளை சட்டை மட்டும் போட்டு போயிருந்தா அவ்வளவுதான் இறங்கும்போது உங்க வீட்ல காறி துப்புவாங்க. மூட்டபூச்சி எல்லாம் உங்க கூட ஏறி விழுந்து கடிச்சு விளையாடும். அதுவே அரசு எசி  பஸ் என்றால் ஒரு கம்பளி கொடுப்பாங்க  (அதக்கூட கேட்டுத்தான் வாங்கணும்) அத மட்டும் முகத்த மூடுற மாதிரி போர்த்திடாதீங்க அவ்வளவுதான் அப்புறம் நீங்க குளிர்ல நடுங்கினாலும் பரவல என்று நினைப்பீர்கள். துவைப்பது என்றால் என்ன என கேட்கும் அளவுக்கு சுத்தம்.




பந்த பாசம் எல்லாத்தையும் குறைத்து எதற்கும் கவலைப்படதவனாக தனியாக வாழ விரும்பும் என்னை இந்த அரசாங்கமும் உடன் சேர்ந்து பந்தம் பாசம் இல்லா மனிதனாக மாற்ற எல்லா முயற்சிகளை செய்கிறது. இனிஊருக்கு போவதற்கு நன்கு யோசித்து அவசியம் என்றால் மட்டுமே செல்கிறேன். போனில் பேசுவதையும் ஏர் டெல் முயற்சியால் குறைத்துவிட்டேன்.
நம்ம மாதிரி இன்னொருவரும் அனுபவப்பட்டு இருக்கிறார் இதைக்கூட படிங்க.... ஆகா நான் மட்டும் இல்லை என நினைக்கும்போது ஒரு அல்ப சந்தோசம்

இந்த குறைகளை எல்லாம் எங்கு புகார் கொடுக்க வேண்டும் என்ற விவரமும் தெரியவில்லை. என்ன பண்ண வெங்காயம் விலை ஏறிப்போச்சு என நினைத்த நம்ம பிரதமரே இப்போ கடிதம் எழுதும் வேலைய செய்ய ஆரம்பித்துவிட்டார், கடிதம் எழுதும்பழக்கம் நம்ம ஊரில் இருந்து டெல்லி வரை சென்றுவிட்டது. நாமும் முகவரி இல்லாம ஒரு கடிதத்தில் எல்லா குறைகளையும் எழுதி தபால் பெட்டில போட்டுடலாம். நம்ம மாதிரியே அதுவும் அட்ரெஸ் இல்லாம சுத்திகிட்டு இருக்கும்.  தேர்தலுக்காக வெய்டிங் தலைவரே. நீங்க குடுத்த டிவிலதான் நாங்க உங்கள பத்தின ஊழல் செய்திகள பாத்துகிட்டு இருக்கோம். அடுத்த முறை எல் சி டி  டிவி யா அப்கிரேட் பண்ணிக்கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும் 

Monday, December 6, 2010

புல் மீல்ஸ் -3

விக்கிலீக்ஸ் ஊரையே ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டு இருக்கிறது, அமெரிக்க  ட்ரவுசர்  கழண்டு போய் ரொம்ப நாள் ஆச்சு, அத இப்போ ஊருக்கே படம் புடிச்சு காட்டி இருக்கிறது விக்கிலீக்ஸ்.  இன்னும் பல ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
அப்படியே நம்ம 2G  ஊழல் பத்தியும் ஆவணங்களை வெளியிட்டா நல்ல இருக்கும். யாராவது அந்த விக்கிலீக்ஸ் ஓனருக்கு மெயில் அனுப்பி இந்த டாகுமென்ட் எல்லாம் லீக் பண்ண சொல்லுங்கப்பா.

ரத்த  சரித்திரம் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்த அளவுக்கு நான் எதிர்பார்த்தேனோ அதை பூர்த்தி  செய்துள்ளது என்று நினைக்கிறேன் ரத்த சரித்திரம் போகலாம் என நினைத்து சனிகிழமைமுடிவு  செய்து கடைசியில் சிக்கு புக்கு பார்த்தாயிற்று. படம் நல்லாத்தான் இருக்கு, ஜாலியா போகுது ஆனாலும் ஏனோ மனசுல நிக்கவில்லை.  அப்பா ஆர்யா நல்லா இருக்கார், பிளாஷ் பேக் காட்சிகள் நன்றாக இருந்தன. என்ன இருந்தாலும் ஜீவா படம் அளவுக்கு வரல... அது மாதிரியே கலர்புல் படமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர்.

மந்திரப்புன்னகை படம் பார்த்தேன், சொல்லத்தெரியல என்னை மிகவும் கவர்ந்துடுச்சு. படத்துல அந்த கதாநாயகன் பாத்திரம் என்னைக்கவர்ந்தது. இயக்குனருக்கு கண்டிப்பாக பலவற்றை தேடிப்படிக்கும் பழக்கம் உள்ளது. அவரின் கதாநாயகன் குணம் அவர் படித்த எதோ ஒன்றின் ஈர்ப்பு என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும் கண்டிப்பா. எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தா பலருக்கு படம் புடிக்காது அதனால் இந்தப்படத்தின் வெற்றி எப்படி என்று எனக்கு தெரியவில்லை. கடைசி இருபது நிமிடங்கள் எனக்கு பிடிக்கவில்லை.

எந்திரனுக்குப்பிறகு உருப்படியா ஒரு படமும் இன்னும் வெளிவரவில்லை, எல்லாம் மொக்கைப்படமாக வந்துகொண்டு இருக்கின்றது.யாராவது ஒரு நல்ல ஹிட் படத்த குடுங்க ப்ளீஸ்.  பார்க்க நாங்க ரெடி படம் வெளியிட நீங்க ரெடியா ?

ஈசன் படம் பாட்டு கேட்டேன், நன்றாக இருக்கின்றது, எனக்கு பிடித்த பாடல் "இந்த இரவுதான்" என்னும் பாடல் மற்றும் "ஜில்லா விட்டு"என்னும் கிராமியப்பாடல். நன்றாக இருக்கிறது, டிரைலர் கூட மிரட்டலாக இருக்கிறது. நான் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன் சசிக்குமாரிடம் இருந்து பார்க்கலாம்.

"விடாமுயற்சி விஸ்பரூப வெற்றி" கண்டிப்பாக உண்மை, என் நண்பன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை IITயில்  Phd  சேர இறுதிக்கட்ட நேர்முக தேர்வை வெற்றிகொண்டுவிட்டான். என்ன  நண்பன் முனைவர் பட்டம் பெறுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதற்கெல்லாம் அவனது விட முயற்சியும் அவன் வாழ்வில் சந்தித்த சில கருப்பு நாட்களும் உந்து சக்தியாக இருந்தது எனக்கு தெரியும். வாழ்த்துகள்    நண்பா. 

லாரி ஓனர் எல்லோரும் போராட்டம் நடத்துறேன்னு சொன்னாங்க அப்பவே தெரியும் கண்டிப்பா இது நடக்காதுன்னு. அதுபோலவே உடன்படிக்கை ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. நல்லா விஷயம் தான் மறுபடியும் பெட்ரோல் தட்டுப்பாடு, காய்கறி விலை ஏற்றம் என நம்மளால தாங்க முடியாது சாமி.  

குடும்ப அட்டை பற்றி பேசும்போது நண்பர் சொன்னது, "நமக்கெல்லாம் எட்டு பக்கத்துல ரேசன் கார்டு இருக்கு ஆனா நம்ம ஊர் பெரிய தலைவர் ரேசன் கார்ட பாக்கணும் எப்படியும் அவர் ஒருத்தர்க்கு மட்டும்  எண்பது பக்க கட்டுரை நோட்டுல தான் ரேசன் கார்டு இருக்கும் போல" என்று.  நெனைக்கும்போதே கண்ணக்கட்டுதே...

மழை போட்டு உலுக்கிக்கொண்டு இருக்குது சென்னைல, பத்து நாளா ஊர்ல பெய்த மழையைப்பற்றி இந்த நம்ம ஊரு சில்வண்டு செய்தி சேனல்களுக்கு தெரியல மூணு நாளா பெய்த சென்னை மழைக்கு மைக்க,கேமராவ தூக்கிக்கிட்டு கிளம்பிட்டாங்க தெருத்தெருவா. சென்னைய விட்டு வெளிய போக போக உங்களுக்கு நிறைய விஷயம் கிடைக்கும் என்று நான் சொன்னால் மட்டும் புரியுமா உங்களுக்கு.  வழக்கம் போல வீட்டுக்கு வெளிய தண்ணி. ஒரு நாள் இரவுல ஊரே தண்ணியாகி வெளிய போக முடியல.பார்க்கலாம் நாளைக்கு வேலைக்கு போக முடியுமா என்று. 

நான் எடுத்ததில் சில படங்கள்.. வேளச்சேரியில் மிதக்கும் ஒரு தெரு 






Tuesday, November 23, 2010

மணியார்டர்

மணியார்டர் 

ஒரு காலத்தில் இதன் பெயரை சொன்னாலே சந்தோசம் பொங்கும் பலருக்கு, அதுவும் கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு மிக மிக சந்தோசத்தை தரக்கூடியது.  மணியார்டர் வந்தால் அனுப்பியவருக்கு கூட சந்தூசமே, அந்த கொஞ்சூண்டு இடத்தில எல்லாத்தையும் எழுதணும்  என்று எழுதுவதில் ஆரம்பித்து பெற்றோருக்கோ மகன்/மகளுக்கோ மனது நிறைய சில சமயம் கடன் வாங்கியாவது அனுப்பி வைத்து சந்தோசப்படுவார்கள்.

மணியார்டர் வாங்குபவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம், அப்பாவிடமிருந்தோ அம்மாவிடம் இருந்தோ வரும் பணம், தூரத்தில் வேளையில் உள்ள மகனிடம்/மகளிடம்  இருந்து வரும் பணம், பணம் எங்கிருந்து வந்தால் என்ன?  நம்மிடம் வந்து சேர்ந்தால் போதும், தபால்க்காரர்க்கு ஒரு சின்ன அன்பளிப்பாவது கிடைக்காதா என்ற எண்ணத்தில் வரும் மகிழ்ச்சி என எல்லோருக்கும் ஓரளவிற்காவது மகிழ்ச்சி கொடுத்த மணியார்டர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கிறது.

நான் கல்லூரியில் படிக்கும்கலத்தில் எங்கள் செட் தான் கடைசியாக மணியார்டர் வாங்கிய செட்டாக இருக்கும் என நினைக்கிறேன், எங்கள் ஜூனியர் மாணவர்கள் எல்லோரும் கல்லூரி வரும்போதே வங்கியில் கணக்கு அரம்பிக்கத்துவங்க, அதுக்கு அடுத்த மாணவர்கள் எல்லோருமே வங்கிக்கணக்கு கல்லூரியில் சேருவதற்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டனர். எங்களுக்கெல்லாம் (உடனே ரொம்ப முன்னாடி படிச்சேன்னு நெனச்சுக்காதீங்க, 2005 ல கல்லூரி முடிச்சேன்) கல்லூரி சேரும்போது விடுதியும், கல்லூரியும் புதுசு. கல்லூரிகாலத்தில்எனக்கு அதிகமாக மணியார்டர் வந்தது இல்லை, வீடு இரண்டு மணி நேர பயணத்தில் இருந்ததால் மணியார்டர் கமிசனை விட பேருந்துகட்டணம் குறைவு. 

முதலாம் ஆண்டில் விடுதியில் தங்கி இருந்த பெரும்பாலான மாணவர்கள் வாரக்கடைசியில் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட, மிகக்சிலரே விடுதியில் தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு மாத துவக்கத்தில் மணியார்டர் வரும், பெரும்பாலும் அனைவரும் பழகி இல்லாத காரணத்தாலும், என்னுடைய நண்பர்கள் எல்லோரும் வாரக்கடைசியில் ஊருக்கு சென்று வரும் தூரத்தில் இருந்ததாலும் மணியார்டர் வாங்கும் யாரையும் மணியார்டரையும் நான் பெரிதாக கவனித்தது இல்லை. எங்கள் வீட்டில் அக்கா, அண்ணன் இருவரும் விடுதியில் தங்கிப்படித்தாலும் பணம் மணியார்டரில் அனுப்பியது கிடையாது அதனாலும் இருக்கலாம்.

இரண்டு மாதம் கழித்து நண்பன் ஒருவன் ஒரு நூறு ரூபாய் கடன் வாங்கியபோது இரண்டு நாளில் மணியார்டர் வந்ததும் தந்து விடுகிறேன் என்று சொல்ல, நமக்கும் மணியார்டர் மீது கொஞ்சம் கவனம் வந்தது. முதன் முதலில் மணியார்டர் பற்றி சொல்கிறானே என்றும், என்னடா மணியார்டர் வந்ததும் தருகிறேன் என்று சொல்கிறானே என்றும் தோன்றியது. இருக்காதா பின்ன அப்போது எனக்கு மணியார்டர் சினிமாவில் மட்டுமே பார்த்து பழக்கம்.
நான் பார்த்த படத்தில் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் பையனோ அல்லது அப்பவோ மிக கஷ்டப்பட்டு அவர்கள் பெற்றோருக்கோ, மகனுக்கோ பணம் அனுப்புவார்கள். மணியார்டர் என்றாலே கஷ்டத்தில் இருப்பவர் மட்டும் உபயோகிக்கும் ஒரு வித யுக்தி என நினைத்து இருந்தேன்.(மோசமான நினைப்புத்தான்). பதினொன்றாம் வகுப்பில் தமிழ் துணைப்பாடத்தில் வரும் மணியார்டர் பாரம் மட்டுமே நான் பார்த்தது.

இதே மனநினையில் இருந்த எனக்கு இரண்டு நாளில் வராத மணியார்டர் வேறு இன்னும் கொஞ்சம் யோசிக்க வைத்தது, என்னடா இவன் கஷ்டத்தில் இருக்கிறானோ? இவன் பெற்றோர் மிக கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்களோ என்று எண்ண வைத்தது, இரண்டு நாளில் அவனக்கு வந்த இரண்டு தொலைபேசியில் (செல்போன் இல்ல விடுதி பொது தொலைப்பேசி) கொஞ்சம் உறுதியாக, அடுத்த நாள் போன் பேசிவிட்டு வந்து சொன்னான், மச்சி சனிக்கிழமை பணம் வந்துடும் என்று. அவன் அப்பா திடிரென்று நேரில் வந்து பார்த்துவிட்டு போலாம் என மணியார்டர் அனுப்பவில்லையாம். அந்த வாரக்கடைசி நான் ஊருக்கு செல்லவில்லை, முதல் வாரம் நான் விடுதியில் தங்கியது (எனக்கு தெரியாது இதுக்கப்புறம் எப்பவாவது மட்டுமே ஊருக்கு செல்லப்போகிறேன் என்று)

அந்த வாரம் மிக சந்தோசமாக சென்றது, இரவு விடிய விடிய கதை பேசி,  காலையில் எட்டு மணி வரை தூங்கி மெதுவாக எழுந்து, சாப்பிட்டு மெல்ல ஒரு நடை போட்டு, ஆற அமர பேப்பர் படித்து, மறுபடியும் மொக்க போட்டு எனக்கு மிக பிடித்து இருந்தது.

அதன் பின்னர் அவனுக்கும் அடிக்கடி மணியார்டர் மட்டுமே வரும், எனக்கு வந்த மணியார்டர் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, என் அண்ணன் அனுப்பி வைத்தார், எனக்கு பணம் கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்க அண்ணன் இருப்பதோ சென்னையில், அப்போது கல்லூரியில் யாரிடமும் வங்கி கணக்கோ எடிஎம்  கார்டோ இல்லை, சென்னைக்கே அது அப்போது தான் வந்தது. முதல் மணியார்டர் எனக்கு அது, அந்த ணியார்டர்க்கு காத்திருக்கையில் மனதில் வரும் ஒரு சந்தோசம்.  தபால்க்காரர் தூரத்தில் வரும்போதே விடுதி குட்டிச்சுவரில் அமர்ந்து இருக்கும் எங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும். இதையெல்லாம் அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

நம்ம பசங்க சிலபேர் இருக்காங்க (நான் கூட )மதிய நேரத்தில் கல்லூரியில் இருந்து கீழே சென்று (எங்கள் கல்லூரி ஒரு குன்றின்  மீது இருந்தது) தபால் காரரின் மணியார்டர் லிஸ்ட்டை முதலிலேயே பார்த்து விடுவோம்.  ஒன்னு நமக்கு கடன் கொடுக்க வேண்டியவன் எவனுக்காவது பணம் வந்திருக்கா என்று பார்க்க  இன்னொன்று நாம கடன் கேட்டா நமக்கு கொடுக்க கூடியவன் எவனுக்காவது பணம் வந்திருக்கா என தெரிந்துகொள்ள.  முதலில் தபால்க்கரர் மணியார்டர் லிஸ்ட் எல்லாம் கொடுக்க மறுத்துவிட ஒருவாரகாலத்தில் நண்பன்  இரண்டு பாரத்தை மட்டும் சுட்டுவிட, தபால்க்கரரின் நடப்பு கிடைத்தது. பின்னே சுட்ட பாரத்தை அவரிடமே மறுபடியும் கொண்டு சேர்த்தோம். கீழே கடை வைத்துள்ள பாஸ் அண்ணனிடம் கொடுத்து தபால் காரரிடம் கொடுக்க சொல்ல, அவரும் சரியாக செய்தார். அடுத்த வாரத்தில் இருந்து லிஸ்ட் எங்க கைல, கொஞ்ச நாளில்  அடிக்கடி பாஸ் அண்ணன் கடையில் கேக் மற்றும் பன்  சாப்பிடும் அளவிற்கு நடப்பு வளர்ந்தது. நமக்கு மணியார்டர் வராது ஆனா எல்லோர் மணியார்டரும் நம்ம கைக்கு வராம போகாது (பஞ்சுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல ).

மணியார்டர் பாரத்தில் இருக்கும் சின்ன இடத்தில என்ன எழுதி இருக்காங்க என படிக்கும்போது நிஜமா வரும் சந்தோசம் அற்புதம். அப்பாவிடம் இருந்து வரும் மிரட்டல் கலந்த அன்பு, அம்மாவிடம் இருந்து வரும் பாசம் கலந்த எழுத்து. சில சமயம் அண்ணனிடம் இருந்து வரும் மகிழ்ச்சி(எங்க அண்ணன் பெருசா எதையும் எழுத மாட்டார், பணம் கிடைச்சா போன் செய்து சொல், ஜாலியா இரு என்று மட்டுமே எழுதுவார்)  சில சமயம் காதலியிடம் இருந்து வரும் மறைக்கப்பட்ட காதல் கலந்த எழுத்துக்கள். எப்போதாவது வெறுப்புடன் சந்தோசம் கலந்த நண்பனின் பணம். எல்லாமே வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியே.

எனக்கு தெரிந்து இருவர்க்கு அடிக்கடி காதலியிடம் இருந்து மணியார்டர் வரும்,  ஒருத்தனுக்கு அவனோட மாமா பொண்ணு அனுப்பும் (இப்ப அந்த பெண்ணையே  கல்யணம் பண்ணிட்டான் ) அப்பவே மாமனார்கிட்ட கறக்க ஆரம்பிச்சுட்டான். இன்னொருத்தனுக்கு அதிக அக்கறையாய் அவன் காதலி அனுப்புவாள் ( யார் என்ன என்று கண்டுபுடிக்க முடியவில்லை).

நானும் மூன்றாம் ஆண்டில் இருந்து மணியார்டருக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலைமைக்கு ஆளாகிவிட்டேன், ஆமாம் எங்கள் நண்பன் கரடியின் திறமை அது, நாதாரி எல்லோரிடமும் கடன் வாங்கி விடும் திருப்பிக்கொடுக்காது, கடன்கொடுத்த நாங்கள் அவனுக்கு எப்போ மணியார்டர் வரும் என தேவுடு காத்து இருப்போம். ஆனா நல்ல பையன் அவன், எவ்வளவு மணியார்டர் வருது என சொன்னால் கண்டிப்பாக அதில் முன்னூறு கம்மியாக வரும். நாங்களே வாங்கி எங்களுக்குள் பிரித்துக்கொண்டு அவனுக்கு ஒரு பங்கு கொடுப்போம். ஒரு வாரத்தில் மறுபடியும் எங்களிடம்  கொடுத்த பணத்தை வாங்கி விடுவான்,  மறக்க முடியாத நாட்கள்.

மணியார்டர் வந்த அடுத்த நாளே (இது முதல் வருடத்தில்) எல்லோரும் ஈரோடு கிளம்பி சென்று விடுவோம் சினிமாவிற்கு. இரண்டாம் வருடம் பாதிப்பேர் சினிமாவிற்கு சென்று ஹோட்டலில் சாப்பிட்டு வருவோம் மீதி எங்க போகுதுங்க நம்ம பஞ்சாபி தாபா தான். ஒரு பீர நாலு பேர் கட்டிங் போட ஆரம்பித்த காலம்.மூன்றாம் வருடம் சினிமா, பீர் அடித்து வரும்போது ஹோட்டலில் சாப்பாடு. நான்காம் வருடம் ஊர் சுத்தி எங்காவது சென்று பீர் பின்னர் சாப்பாடு அவ்வளவுதான்.

மணியார்டர் வரும் நல்லா படிக்கும் பையங்க  வருடத்தின் எல்லா நாட்களிலும் செழிப்பா இருப்பாங்க அவங்கதான் நமக்கு எப்பவுமே ஒரு நீரூற்று.  மூன்றாம் வருடத்தில் நண்பன் ஒருவன் வங்கிக்கணக்கு துவங்க பணம் எடுக்கும் அட்டையை வாங்கினான், அப்போது எல்லாம் அது பெரிய விஷயம்(செல்போன் கூட அதுபோலத்தான்) அன்றே துவங்கியது மணியார்டரின் மவுசு, வெகு விரைவில் மணியார்டருகும் தபால்கரருக்கும் விடுதியில் அவ்வளவாக வேலை இல்லை, வயது அதிகரித்ததாலோ என்னவோ அவர் முகத்திலும் மகிழ்ச்சி குறையத்துவங்கியது. 

மணியார்டரில் வரும் மணியைவிட கொஞ்சூண்டு இடத்தில இருக்கும் அந்த எழுத்துக்களை படிக்கும்போது மனதில் நம்முள் தோன்றும் பாசத்தின் முன் எதுவும் பெரிதில்லை, கால ஓட்டத்தில் காணாமல் போனது என்னைப்பொறுத்தவரை மணியார்டரும், நம்முள் இருந்த பாசமும் கூட.  என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் வந்த தொழில்நுட்பங்கள் நமது பாசத்தை, அன்பை குறைக்கத்துவங்கி பலநாட்கள் ஆகின்றன. நினைத்தவுடனே  பேசும்போது தேக்கிவைத்த பாசம் எங்கு இருக்கிறது?  அட்டையை சொருகினால் பணம் வரும்போது கையில் கொடுக்கும் பணத்தின் அருமை எங்கு புரிகிறது?


Sunday, November 21, 2010

புல் மீல்ஸ் -2

இரண்டு வாரம் அலுவலக விசயமாக கிழக்கு இந்தியா பக்கம் போய்விட்டு வந்தாச்சு, பயணம் நல்லபடியாக முடிந்தது, பயணக்கட்டுரை கூடிய விரைவில். ( இதெல்லாம் தேவையான்னு நிறையப்பேர் கேட்கறது எனக்கு மைன்ட் வாய்சுல கேட்குது, இதுகேலாம் அசரமாடோம்ல)

இனிக்குதான் உத்தமபுத்திரன் படம் பார்த்தேன், கொய்யால மொக்க படம், அதுவும் கதாநாயகிய கூட்டிகிட்டு போகும்போது வில்லங்க தொரதுவாங்க, இவங்க கார் கதவு பிசுகிட்டு போய்டும், அனா அடுத்த சீன்லயே கதவோட கார் ஒரு பலத்துல இறங்கும், மறுபடியும் இறங்கி நின்ன உடனே கதவு காணாம போய்டும். 

தண்டபாணி என பொய் பெயர் சொல்லுவர் அதை உண்மைன்னு நெனச்சு கதாநாயகி பேசிகிட்டு இருப்பா ஆனா கடைசில அவளை தோழி வீட்டில் கொண்டு விடும்போது சிவா என சரியா பெயர் சொல்லி அழைப்பா, அதுவரை கதாநாயகன் உண்மைய சொல்லியிருக்க மாட்டார், அடுத்த சீன்ல தண்டபாணி என அழைத்துப்பேசுவார் 

கொய்யால இவங்க ஊத்துக்குளி கவுண்டனுங்க என்று வில்லன்களை லாட்டினாங்க ஆனா எனக்கு தெரிஞ்சு எந்த கவண்டனும் இப்படி இருந்தது இல்ல, யோவ் டைரக்டர் ஒரு படம் எடுத்தா அத பத்தி நல்லா ஸ்டடி பண்ணி எடுக்கணும், ஆந்திரால எடுத்த படத்த தமிழில் எடுத்தா ததமிழ்நாட்டுக்கு தகுந்த மாதிரி மாத்தனும், டைரக்டர் ஒரு தடவையாது ஊத்துக்குளி போயிருக்காரா தெரியல.

கொங்கு நாடு கட்சி எதிர்ப்பு தெரிவிததுல ஆச்சரியம் இல்லை, முஸ்லிம் கேரக்டர் என்றால் தொப்பி வைப்பது, அய்யர் என்றால் சட்டை இல்லாமல் குடுமி வைப்பது, கவுண்டர் என்றால் நாட்டாமை மாதிரி குடுமி வைப்பது, கணக்குப்பிள்ளை வைப்பது யோவ் திருந்துங்கப்பா. பாதிக்கும் மேல செம மொக்கை, விவேக் ஓரளவு பரவால்ல, இதுக்கு வ படம் கூட ஓகே. 

தீவாளிக்கு வந்ததுல எதுவும் சரி இல்ல, மைனாக்கு முதலிடம், வ இரண்டாம் இடம், வேற வழியே இல்லாம அன்னபோஸ்ட்டா உத்தமபுத்திரன் மூன்றாம் இடம்.

நாம ஊர்ல இல்லாத நாளில செம மழை சென்னைல, ஊருக்கு காலடி வைத்த அடுத்த நாள் வெயில் கொளுத்துது, வாரக்கடைசி ஆனா மழை பெய்யுது, முன்னாடி எல்லாம் செப்டம்பர் அக்டோபர் மாசத்துல மழை பெய்யும்  இப்போது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்கிறது, இதுதான் காலநிலை மாற்றமோ?

மேயர் என்று சொல்லிக்கிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒருத்தர் வேளச்சேரிக்கு வந்தார்.  மழை நீர் வடிகால் கலவை வெட்டுகிறோம் என்று தெரு பூரா கட்அவுட் வச்சு ஒரு புல்டோசர் கொண்டு வந்து குழி பறிச்சு அடுத்த நாள் பேப்பர்ல பெட்டி கொடுத்தார். பறித்த குழி இன்னும் அப்படியே இருக்கு மழை பெய்ததுல தெரு பூரா தண்ணி, சாக்கடை தண்ணி கலந்து நாறுது, கொய்யால ஏங்கடா பக்கத்து தெருவில ஒரு IAS  ஆபிசர் வீடுகட்டி வந்த உடனே அங்க மட்டும், அதுவும் அந்த ஆள் வீட்டுக்கு முன்னாடி மட்டும் ரெண்டு இன்ச் உயரமா ரோடு போடுறீங்க, ஒழுங்கா இருந்த ரோட்ட போன மழையில் தண்ணி தேங்கியது என்று பறித்து விட்டு அப்படியே விட்டுடீங்க. கடந்த 5  வருசமா மழை பெய்தால் கடசில வந்து தெருவ பறிச்சு மழை தண்ணிய ஒரு வாரம் கழிச்சு எடுத்து விடுவீங்க, அப்புறம் ரோட்ட தோண்டி அப்படியே விட்டுடறீங்க.  ஏதும் உருப்படியா செஞ்ச மாதிரி தெரியல. தேர்தல் வருதுங்க சார், இது வரை நான் வோட்டு போட்ட யாரும் டெபாசிட் வாங்கினது இல்ல பாத்துகங்க என் வோட்டு உங்களுக்கு வேணுமா வேண்டாமா என்று முடிவு செஞ்சுக்கங்க.

எஸ்.ஆர்.பி டூல்ஸ் ல இருந்து தரமணி வரும் சாலை (அப்படி ஒன்னு இருக்கா??) சாலையே இல்ல, நேத்து அந்த சாலையில் போகும்போது அய்யவையோ அம்மாவையோ ஒரு தடவ அந்த சாலைல பயணிக்க சொல்லணும் என்று மனசுல பயங்கரமா தோன்றியது. ஏன் இந்த கொலவெறி???

ராஜீவ் காந்தி சாலையில் (டைடல் பார்க்கில் இருந்து எஸ் ஆர் பி டூல்ஸ்) சென்று வலது புறம் திரும்பி தரமணி வழியாக வேளச்சேரி செல்லும்போது எஸ் ஆர் பி சிக்னலில் வலது புறம் திரும்பினேன். எனக்கு வலது புறம் ஒரு குட்டி யானை, இடது புறத்தில் இருந்து ஒரு பல்சர் சரலென உள்ளே புகுந்தது நான் எனது காரின் வேகத்தை குறைத்து வலப்புறம் சிறிது திருப்பியதால் பல்சர் தப்பியது. என்னால் குட்டியானை வலப்புறம் சாலை தடுப்பில் இடிக்குமாறு சென்று நின்றது, யாருக்கும் அடி இல்லை, சிறிது நேரத்தில் குட்டியானையில் வந்தவர் என்னிடம் "அறிவில்லையா என ஆரம்பித்து சண்டை போட,  நான் பல்சர்காரன் குறுக்கே வந்தான் அவன இடிச்சா  அவன் உயிருக்கு ஆபத்து ஆனால் உங்க வண்டிய இடிச்சா நம்ம ரெண்டு வண்டிக்குத்தான் அடிபடும் அதான்" என்று கூறினேன். அவர்கள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை, அவர்களுக்கு மனித உயிரை விட குட்டியானை அடிபடக்கூடாது என்றுதான் நினைப்பு. அடுத்து என்ன வண்டியில் பாட்டு சத்தத்தை அதிகம் வைத்து சன்னலை மூடினேன். இருந்தும் அந்த குட்டி யானை ஓட்டுனர் என்னை இடிக்குமாறு சென்று ஒதுக்கி விட்டு சென்றார், இதில் யாருக்கு அறிவில்லை என தெரியவில்லை. பல்சர் ஓட்டுனர் செஞ்ச தப்புக்கு யாரெலாம் டென்சன் ஆகாரங்க பாருங்க.

சாலையில் இரு சக்கரமவாகனம் ஓட்டுபவர்கள்  சிலர் மெதுவாக பாதுகாப்பாக செல்கின்றனர் ஆனால் அவர்கள் வலது ஓரமாகவோ இல்லை இடது ஓரமாகவோ சென்றால் மற்ற வண்டிகள் முன்னால் செல்லலாம்.  ஒரு சிலர் நாடு சாலையில் பின்னால் வரும் வாகனத்தை செல்ல விடாமல் ஒதுங்காமல் செல்கின்றனர்.  இருசக்கரவாகனம் ஓட்டிவிட்டு கார் ஓட்டும்போது மட்டுமே நாம் பைக்கில் செல்லும் போது செய்யும் தப்புகள் தெரிகின்றது.

அண்ணன் ஜாக்கி கண்டிப்பாக இத ஒத்துகொள்ள மாட்டார், ஒரு நாள் அவர்க்கு கண்டிப்பா தெரியும் :)

ராசா டிரெஸ்ஸ கழட்டிட்டு அடுத்து யார் டிரெஸ்ஸ கழட்டலாம் என்று எல்லோரும் கிளம்பிவிட்டனர், சொல்றதுக்கு ஒன்னும் இல்ல கூடிய விரைவில் இதை மறைக்க(மறக்க) தமிழ்நாட்டில் ஏதும் பெரிய சம்பவம் நடக்கலாம்,உள்மனசு சொல்லுது மக்களை திசை திருப்ப வேறு எதுவும் செய்து விடுவாங்களோ என பயமா இருக்கு.

Tuesday, November 9, 2010

மறுபடியும் ஒரு பயணம்

மறுபடியும் ஒரு பயணம் 

இந்த முறை கொல்கத்தாவை நோக்கி, வழக்கம் போல அலுவலக பயணம், மிக நெருக்கமாக திட்டமிடப்பட்ட ஒரு பயணம், ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் எல்லா பகலும் அலுவலக வேலையாகவும் எல்லா இரவிலும் பயணமாகவும் இருக்கப்போகின்றது.

என்றுமே நான் பயணத்தை வெறுப்பது இல்லை அனால் சமீப காலமாக அலுவலகப்பயணம் என்றால் ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கொள்கிறது. ஆனாலும் ஒரு வித்தியாசமான பயணத்துக்கு என்னை தயார் படுத்திகொண்டு உள்ளேன். இந்தியும் தெரியாது, நாள்முழுக்க பயனப்படவேண்டும், ஒரு வாரத்துக்கு இணையம் கூட கிடையாது, பார்ப்போம் எப்படி போகின்றது என்று.

கடந்த இரண்டு வாரமாக சில பதிவுகளை எழுத வேண்டும் என்று நினைத்தாலும் சோம்பேறித்தனம் அதை அழித்துவிடுகிறது, இனியாது சோம்பேறியாய் இல்லாமல் அடிக்கடி பதிவெழுத முயற்சி செய்கிறேன்.

நாளை கொல்கத்தா சென்று நாளை மறுநாள் பர்கர் ( நீங்க  KFC  ல சாபிடுற பர்கர் இல்ல, இது  Bargarh  என்ற ஊர்) செல்ல வேண்டும். அன்று மாலையே கிளம்பி ஜம்செட்புர் செல்ல வேண்டும் இரண்டு நாளில் மறுபடியும் கொல்கத்தா, துர்காபூர் மறுபடியும் கொல்கத்தா நிறைவாய் சென்னை. எட்டுநாளில் ஏழு நாள் பயணப்பட வேண்டும்.

இன்னும் துணி காயவில்லை, அலுவகத்தில் எதையும் எடுத்து வைக்கவில்லை, பயணத்துக்கு வேண்டிய பெட்டி இல்லை, போதாதா காலத்துக்கு மொபைல் வேறு தண்ணியில் குதித்து தற்கொலை செய்துவிட்டதால் எல்லா தொலைபேசி எண்களும் தூக்கத்தில் உள்ளன. 

ஆரம்பமே அட்டகாசமாய் இருக்கிறதே, சூப்பர் பயணமாய் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

நண்பர்களே மறுபடியும் சந்திக்கிறேன் 

Tuesday, October 26, 2010

ஒரு நட்பு, ஒரு ஷாப்பிங், ஒரு டின்னர், ஒரு காதல் (?) பின்னர் ஒரு விபத்து

ஞாயிறு நல்லாத்தான் போச்சு சோம்பேரித்தனமா, மாலை தோழியிடம் தொலைபேசினேன்,  அவர் மற்றும் ஒரு நண்பர் வருவதால் அவருக்கு ஷாப்பிங் செய்ய போவதாக சொல்ல, நானும் சோம்பேறி என்ற அவப்பெயரை துடைக்க கிளம்பிபோவதாக முடிவு.

அவர்களுக்கு சொல்லாமல் நண்பன் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றேன். அடையாரில் உள்ள style one  என்ற கடைக்கு. ஏற்கனவே அங்கு சென்ற அனுபவம் இருப்பதால் நன் எதையும் வாங்கும் எண்ணத்துடன் போகவில்லை. நண்பன் மட்டும் ஷாப்பிங் செய்ய நான் சும்மா வேடிக்கை பார்த்தேன்.

எல்லாமே விலை அதிகம் மேலும் அங்கு தோழி வாடிக்கையாளர் சலுகை அட்டை வைத்திருந்தாலும் அதில் இரண்டு சதவிகிதம் மட்டுமே தள்ளுபடி, என்னிடம் உள்ள rex  வாடிக்கையாள அட்டையில் பத்து சதவிகிதம் தள்ளுபடி. மேலும் விலையும் இதைவிட குறைவு.  ஷாப்பிங் முடித்து கிளம்பும்போது பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த ஒரு பெண்மணி எங்களை கேவலமாக பார்த்தார். ஆமா நாங்க அடித்த கமெண்ட் ஏலத்தையும் கேட்ட அவர்  இதுங்கல்லாம் எங்க உருப்பட போகுது என்று நினைத்திருக்கலாம். அதும் குறிப்பாக ஒரு செர்வானி ஒன்றை பார்த்து அதன் விலையை கேட்டவுடன் நான் இதை வாங்கணும் என்றால் நல்ல வசதியான மாமனாரத்தான் தேடனும் என்று சொல்லியபோது அவர் பார்வை கேவலமாய் இருந்தது. ( அவர் என்னைத்தான் கேவலமாய் பார்த்தார் என சொலவும் வேண்டுமா? அவர்க்கு கண்டிப்பாய் ஒரு பெண் இருக்க வேண்டும்.)


கடையை விட்டு வெளியே வந்து KFC யில் கொஞ்சம் கொறித்துவிட்டு கிளம்பலாம் என்று சென்றோம். அங்கு ஒரு பையன் அஞ்சு பொண்ணுங்களுடன் சும்மா வறுத்துகிட்டு இருந்தான். பின்னர் தெரிந்தது அவன் பெயர் சதீசாம், மானாட மயிலாடல டான்ஸ் ஆடி இருக்கானாம். நடத்துப்பா நடத்து.

தோழியை விட்டுவிட்டு மத்திய கைலாசில் இருந்து டைடல் பார்க் வழியாக வேளச்சேரி செல்லலாம் என்று இடப்புறம் திரும்பினேன். சாலை காலியாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள், இரவு நேரம், மெல்லிய சில்லென்ற காத்து, அனுபவித்து வண்டியை விரட்ட. 


கொஞ்ச தூரத்தில் என்னை விட அதிகமா ரசிக்க வேண்டிய, ரசித்துக்கொண்டு இருந்த ஒரு ஜோடி பைக்கில் எனக்கு முன்னாடி. வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும், கண்டிப்பா ஒருநாள் நாமும் இப்படி செல்ல வேண்டும் என நினைத்துகொண்டு அவர்களை முந்தி செல்ல முயன்றேன்.

அவர்களை கடக்கும்போது அந்தப்பெண் திடிரென்று தனது ரசனை அதிகமாக, இரண்டு கையையும் விரித்து லேசாக எழுந்து நின்று ரசிக்க முயல, நான் அவர்களை முந்த முயல. அவரின் கை என் கழுத்தை பதம் பார்த்தது. அனிச்சையாக நான் வலப்புறம் உடம்பை நெளித்து வண்டியை திருப்ப, ஒரு வழியாக பாலன்ஸ் செய்து நிறுத்தும்போது பின்னால் வந்த காரைப்பற்றி நினைத்தேன். நினைத்துகொண்டு திரும்பி பார்த்தால், பின்னால் வந்த கார் பிரேக் போட்டு வழுக்கிக்கொண்டு எனக்கு பின்னல் வேகமாக வந்தது. உயிர் பயம் இரண்டாவதுமுறையாக வந்தது எனக்கு.(முதன்முறை வேறொரு இடத்தில் வேறொரு ரோபத்தில் அதை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்) இன்றுகதை முடிந்தது என நினைத்து கண்ணை மூடும் முன்னர் அந்த கார் வலப்புறம் திரும்பி நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் முட்டியது.

என்ன செய்ய என நான் திகைத்து நிறைக்க, அந்த ஜோடியும் வண்டியை நிறுத்தி என்னை பார்க்க, கார் அப்படியே நிற்க. என் பின்னால் வந்தவர் அந்த ஜோடியை திட்டினார், நன் அவர்களை பார்த்து நிற்க சொல்லும் முன் அவர்கள் கிளம்பி விட்டனர். நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு காரை நெருங்கி பார்த்தேன். ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் திகைத்து பயந்து அமர்ந்திருந்தார். அவர்க்கு அடி இல்லை என உறுதி செய்துகொண்டு மெல்ல வண்டியை ஓரங்கட்டினோம். எனது நன்றியை அவர்க்கு தெரிவித்தேன். அவர் மட்டும் வண்டியை நிறுத்த வில்லை எனில் இன்று இந்தப்பதிவு இல்லை. அவர் வருத்ததுடன் என்னைப்பார்த்து "நல்ல வேலைங்க நான் பயந்துட்டேன் இனி வண்டிய வேகமா ஓட்ட மாட்டேன்" என கூறினார்.
 
காருக்கு சேதம் அதிகம், பம்பர், ஹெட் லைட், வலது புறம் கொஞ்சம் என அடி அதிகம். எனது தொலைபேசி எண்ணைக்கொடுத்து, எனது கார் இன்சூரன்சில் கிளைம் செய்துகொள்ள சொன்னேன் அவரிடம். அவர் மறுத்து விட்டார், ஏதும் உதவி வேண்டும் எனில் என்னை தொடர்பு கொள்வதாகவும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறிவிட்டார்.

அந்த பன்னாடை ஜோடி இளம்பி சென்று விட்டனர், அவள் மட்டும் நின்று இருந்தா அவ்வளவுதான், அம்மா உங்க காதலுக்கு எவன் சாவது? காதலுக்கு கண் இல்லை,  காதல் ஒரு உயிர்க்கொல்லி என இப்பொது தெரிந்தது. அசிங்க அசிங்கமாய் வருது,இதுக்கு மேல எழுதினா அப்புறம் அண்ணன் ஜாக்கி போல கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியதுதான் நமக்கும் வேலை வெட்டி இருக்குதுல்ல. (எப்படி பதிவுலக அரசியல கோர்த்துட்டோமல) 

பைக் வாங்கும் கனவில் இருந்தேன் இதற்குப்பிறகு பைக்கை எடுக்கவே கூடாது என முடிவு செய்துவிட்டேன். கடந்த இரு மாதத்தில் அலுவலக நண்பர்கள் இருவரை விபத்தில் ஏற்கனவே இழந்தாயிற்று, இன்னொரு எண்ணிக்கை கூட வேண்டியது எப்படியோ தப்பி விட்டது. எப்போதும் காரில் போவதால் அன்றைக்கு பைக்கில் போகலாம் என சென்றேன், இனி எவ்வளவு செலவானாலும் கார் மட்டுமே.

நண்பர்களே தயவு செய்து பைக்கில் செல்லும்போது மெதுவாக கவனமுடன் செல்லவும், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

Wednesday, October 20, 2010

முடிவு

பெங்களூர் அழைக்கிறது செல்லலாமா வேண்டாமா 

இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. பேருந்தில் சென்று பழக்கம் இருந்தாலும் பிடிக்கவில்லை 

காரில் செல்ல நிதி நிலைமை சரி இல்லை செல்லாமல் இருக்க மனதும் இடம் கொடுக்கவில்லை.

என்னதான் செய்வது குழப்பத்தின் உச்சகட்டத்தில் எந்த முடிவும் உறுதியாக வராது என்பது முடிவேடுக்கத்தெரிந்த எவனும் சொல்வான்.

எந்த முடிவும் தீர யோசித்தாலும் திடீரென்று மட்டுமே எடுக்கப்படும் இதுவும்
பார்ப்போம் இரு நாட்களில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் 

வாரக்கடைசி திரைப்படங்கள்

.இந்த வார இறுதியில் நான் பார்த்த திரைப்படங்கள் இரண்டு அவை i, robot  மற்றும் Ta Ra Rum Pum 

இதில் i robot  பற்றி முதலில் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் பின்னர் வேண்டாம் என்று நினைத்து விட்டுவிட்டேன் 

த ர ரம் பம் இந்திப்படம், இந்தப்படம் 2007 இல்  வெளிவந்தது  என்று நினைக்கிறேன், ஒரு நாள் மாயாஜாலில் படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது இந்தப்படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்ட தட்டி வைத்திருந்தனர். கார் ரேஸ் ஓடும் உடை, நாஸ் கார் எல்லாம் இருந்ததால் கண்டிப்பாக கார் ரேஸ் பற்றிய படம் என்று நினைத்தேன். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், இந்தியாவில் இதுபோன்ற முழுக்க முழுக்க கார் ரேஸ் கார்கள் பற்றிய படம் எதுவும் வந்தது இல்லை 

ஆனால் சிறிதுகாலம் கழித்து படம் வெளிவந்தபோது வேலைப்பளு அதிகமான காரணத்தால் படத்தை பார்க்க முடியவில்லை, சில இணைய தளங்களில் வேறு படத்தைப்பற்றிய விமர்சனங்களும் அவ்வளவாக இல்லாததால் பார்க்காமல் விட்டுவிட்டேன் ஆனால் ஏனோ அந்த படத்தைப்பார்க்க வேண்டும் என தோன்றிக்கொண்டே  இருந்தது 

ஒரு வழியாக இன்று கலையில் பார்த்து முடித்தேன், கதைப்படி பெரியதாக ஒன்றும் இல்லை, வழக்கமான ஆங்கிலத்திரைப்படக்கதை தான். ஆனால் இந்திய நடிகர்கள் வசனம் இந்தியில் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டது சுருக்கமா சொல்லணும் என்றால் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்தியத்திரைப்படம்.

நாயகனின் மகள் கதை சொல்லுவது போல அமைக்கப்பட்ட கதை, அக ஆரம்பிக்கும்போதே நமக்கு முடிவு நல்ல பொசிடிவ் முடிவு என்று தெரிந்து விடுகிறது அதனால் ஒரு சந்தூசத்துடன் படம் பார்க்க முடிகிறது. நாயகன் அமெரிக்காவில் ஒரு கார் ரேஸ் டீமில் ரசுக்கு நடுவில் வண்டிக்கு டயர் மாற்றும் ஆளாக அறிமுகம் ஆகிறார்.  எதைப்பற்றியும் , நாளை ஏன்டா ஒரு பயமும் இல்லாமல் வாழும் ஒரு இளைஞர். ஒரு நாள் அவசரமாக ஒரு இடத்துக்கு போக வடகைக்கரில் ஏறுகிறார், அவர் என்றுமே அவசரமாக போக வேண்டும் என்றால் அதிக பணம் கொடுத்து வடகைக்கரை தானே ஓட்டி செல்வார். அன்று அது போல செல்லும்போது நாயகி பின்னர் ஏறிவிடுகிறார். அவ்வளவு வேகமாகவும் அதே போல விவேகமாகவும் கார் ஓட்டுபவனை பார்த்து வாடகைக்கார் ஓட்டுனர் ஆச்சரியப்படுகிறார். 

அதன் பின்னர் படம் ஆரம்பம் இடைவேளைகுல்லாக ஹீரோ பெரிய கார் ரேஸ் வீரனாக மாறிவிடுகிறார். 

இடைவேளையில் ஹீரோ ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டுவிடுகிறார், விபத்துக்கு காரணம் இன்னொரு போட்டியாளர். விபத்தில் இருந்து ஒரு வருடத்தில் மீண்டு வந்தாலும் அடுத்தடுத்த ரேசில் ஜெயிக்க முடியவில்லை. விபத்தின் பாதிப்பு அவரை மனதளவில் நெருக்குகிறது, இதனிடையில் அவரின் ரேஸ் டீம் அவரை வேளையில் இருந்து தூக்கிவிட்டு அந்த போட்டியாளரை நியமிக்கிறது. 

பலவித இடையூறுகளுக்கிடையில் பலவித வேலைகள் செய்தி தன காதல் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுகிறார், இதற்கிடையில் கஷ்டம் வந்தால் என்ன என்ன விசயங்களை விட்டுகொடுக்க தோன்றும் என்பது தெளிவாகத்தெரிய சில காட்சிகள்.

இறுதியில் ஒரு ரேசில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் அதுபோல ஜெயித்துவிடுகிறார். இது வழக்கம் போல  இந்திய மசாலாப்படம் போல இருந்தாலும் கண்டிப்பாக ஒரு படி மேல். ஆங்கிலப்படங்களுக்கு இணையாக எடுத்துள்ளனர் ஆனாலும் வழக்கமான இந்தியப்படத்தின் காதல் செண்டிமெண்ட் எல்லாம் கலந்ததனால் நல்ல ஒரு motivational  படம் கொஞ்சம் சிதைக்கப்பட்டுள்ளது.

பார்க்கலாம் இயக்குனரின் முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு சபாஸ். இது போன்ற முயற்சிகள் தமிழில் துவங்கவே இல்லை, ஒரு கார் ரேஸ் அல்லது இது போன்ற வித்தியாசமான முயற்சி எப்போது வருமோ. இது தக்க சமயம் என்று நினைக்கிறேன் ஆனால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என தெரியாததால் யாரும் முயலவில்லை.

இதை அஜித் தமிழில் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் பின்னர் கைவிடப்பட்டது, எடுத்திருந்தால் கண்டிப்பாக நன்றாக இருந்து இருக்கும்   

Saturday, October 16, 2010

எதுவும் சொல்லத்தேவை இல்லை

சிலருக்கு சொல்லாமலே புரியும்
சிலருக்கு சொன்னால் புரியும்
சிலருக்கு பார்த்தல் புரியும் 




எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல

எந்திரன் எந்திரன் எந்திரன்

ஊரெல்லாம் ஒரே பேச்சு, இந்தப்படம் அவ்ளோ செலவு பண்ணி எடுத்த படம் அது இது என சொன்னாங்க, அவ்ளோ செலவு செஞ்சவன் சும்மா இருப்பா?னா  செஞ்ச செலவ எப்படியும் கறக்க என்ன வேணா பண்ணுவான்.

எனக்கென்னமோ மனசுல ஒரு பயம் வருது, இப்பத்தான் i-Robot  படம் பார்த்தேன், எந்திரன் பார்கறதுக்கு இத பாக்கலாம், இதிலும் சில லாஜிக் மீறல் இருந்தாலும் படம் முடியும்போது நம்ம பயமுறுத்தாம விடல.

 ரோபோட் அதும் சிந்திக்கும் அறிவோட இருந்தா என்ன ஆகும்?  i-robot  படம் பாருங்க, கண்டிப்பா எனக்கு தெரிஞ்சு ஐஸ்வரியா பின்னாடி போகாது, ஆனா நம்ம ஊர் ரோபோட் போனாலும் ஆச்சரியம் படறதுக்கு இல்ல.

ஏன் ரோபோட் போகிறது? என்னிக்கு நம்ம எல்லாம் பொண்ண பார்த்து அவ பின்னாடி போகாம இருந்து இருக்கோம் ? அப்புறம் நம்ம கண்டு புடிச்சு இருக்க ரோபோட் மட்டும் போகாம இருக்கனுமா?


இப்படி பட்ட நூறு மனுஷன் அளவுக்கு திறமை இருக்க ரோபோட் கண்டிப்பா ஐஸ்வர்யாக்கு எத்தன வயசுன்னு கண்டு புடிக்காத?  ரத்தத்த பார்த்த உடனே அது என்ன குரூப் நு சொல்ற ரோபோட் அந்த அம்மா ஆன்ட்டி என்று கண்டுபிடிக்க எவ்ளோ நேரம் ஆகும், கருமம் இது கூட ஆண்டி பண்டாரமா இருக்கு? நம்ம தோனி கல்யாணம் செஞ்ச  பொண்ண தன்னோட பள்ளித்தோழி என்று சொன்னாரே அப்படியா? அவர்க்கு 28  வயசு அந்த பொண்ணுக்கு 21  ஆம் அப்படின்னா பண்ணண்டாவது படிக்கும்போது அஞ்சாங்கிளாஸ் படிச்ச சின்ன பொண்ண ரூட் விட்ருக்கான்.

அந்த மாதிரி இந்த ரோபோட்கூட அப்படித்தான் போல (டாபிக் விட்டு எங்கயோ போய்டேன்ல?) அத விடுங்க, ஆமா நம்ம ரோபோட் இப்படிப்பட்ட அறிவோட இருக்கும் போது ஏன் அந்த ஐஸ்வர்யா பொண்ண போய் தேடனும்? அத விட அழகா இளமையா இருக்க பொண்ண பார்த்து தேடலாம், சரி அத விடுங்க இதகேட்டா நம்மள எதாவது சொல்லி திட்டுவாங்க. காதல் தெய்வீகமானது எந்த வயசுலயும் வரும் அப்படி இப்படி சொல்வாங்க.

நானும் பார்க்கறேன் எந்திரன் பார்க்காதவன எதோ கொலை பண்ணிட்ட மாதிரி பார்க்கறாங்க? நமக்கு இப்ப திடிர்னு ஒரு பாலிசி தோணிச்சு, இத முப்பெரும் வீரர்கள் எடுக்கும் எந்த படத்தையும் திரை அரங்கில் சென்று பார்க்க கூடாது என்று. இத எப்படியோ தெரிஞ்சுகிட்ட எங்க ஊர் திரை அரங்கு உரிமையாளர்கள் என்கூட சேர்ந்துகிட்டாங்க   

அட ஆமாங்க எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல, நெசமாத்தான் சொல்றேங்க எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல. எங்க ஊர் எங்க ஊர் ன்னு சொல்றியே எந்த ஊர்டான்னு கேட்கறது எனக்கும் கேட்க்குது. கரூர்ல தாங்க,  விநியோகிப்பாளர்க்கும் திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் சண்டை. ஆமா பின்ன இந்த படத்துக்கு ஒன்றரைக் கோடி  கேட்ட தேட்டர்காரங்க நோட்டடிச்சா கொண்டுவந்து கொடுக்க?   அதுவும் நாலு திரை அரங்கில் வெளியிடனுமாம். அப்படி வெளியிட்ட போட்ட பணத்த எடுக்கு கண்டிப்பா அதிக விலைக்கு டிக்கெட் விக்கணும் அப்படி வித்தா ஆள் வராது அப்படி வந்தாலும் இடைவேளைல ஏதும் வாங்க மாட்டாங்க.இப்படி பல பிரச்சன இதனால எங்க ஊர்ல படம் ரிலீஸ் அகல.

நம்ம கேபிள் அண்ணன் இத விசாரிச்சு ஊருக்கு உண்மை என்னனு வெளியிட்ட நல்லார்க்கும். எனக்கு காத்துவாக்குல வந்த சேதி சொல்லிட்டேன் உண்மை என்னான்னு அண்ணன் சொன்னா சரிதான்.

அமெரிகால ரிலேசு ஆப்ரிக்கால ரிலீசு ஆனா நம்ம ஊர்ல இல்லியா??? அப்ப பணம் ரொம்ப இருக்கவன் மட்டும் படம் பார்த்தா போதுமா?

இன்னொரு விஷயம் பல பதிவுல பார்த்துட்டேன் நிறையப்பேர் சுஜாதாவோட கதைய சங்கர் சூப்பரா எடுத்துருக்கார், கதை சுஜாதா அப்படினு எழுதி இருந்தாங்க ஆமா எனக்கு ஒரு டவுட் படத்துலயும் கதை சங்கர்னு போட்ருந்தாங்க சுஜாதவ மறந்துட்டாங்க அது நம்ம ஊர் மனித இயல்பு ஆனா கதை சங்கர் தானா, பாத்து வருசமா உருவாகின கதை டிரீம் பிராஜக்ட் அப்படின்னு எல்லாம் சொல்லிருந்தாரே அப்ப விமர்சனம் எழுதிய பதிவர்கள் எல்லோரும் உண்மையே தெரியாம எழுதிடாங்களா?  இல்ல உண்மைய மறைச்சு எழுதிட்டாங்களா? எனக்கு தெரியல ஆனா இப்படி எழுதிய பதிவர்கள் விமர்சனம் எந்த அளவுக்கு தரமானதா இருக்கும் ?? 

இந்த கதை சுஜாதாவோட கதையா இருந்தா கண்டிப்பா கத இப்படி இருந்து இருக்காது, பத்து வருஷம் முன்னாடியே இப்ப இருக்க  எந்திரன் கத மாதிரி எழுதினவரு அதாங்க ஜினோ, பாத்து வருஷம் கழிச்சு இந்த காலத்துல எப்படி எழுதி இருப்பார், தயவு செஞ்சு கதை சுஜாதாவோடது என்று சொல்லி அவர கேவலப்படுத்தாதீங்க. 

எனக்கொரு டவுட்டு ஆமா எந்திரன் அந்த தீப்புடிச்ச கட்டடத்துக்குள்ள  ஓடும்போது அதன் தோல் எல்லாம் எரிஞ்சு எலும்புக்கூட போயிரும் அந்த மெட்டல்  heat resistant  மெட்டல் அப்படின்னா அது  தூக்கிட்டு  ஓடும்போது மனுசங்க மட்டும் எரிய மாட்டாங்கள? இல்ல மெட்டல் மண்டையன் தோள்ல தூக்கிபோட்டு ஓடும்போது அந்த மெட்டல் மண்டையன் சுட மாட்டானா? ஏன் என்றால் இரும்பு தீக்குள்ள போட்டா  ஒரு அளவுக்கு வரை ஹீட் தாங்கும் அப்புறம் உருகிடும் அது உருகும் முன்னாடி அத தொட்ட கை பழுத்துடும், அது போல இருந்த அது தோள்ல தூக்கி பொத்துக்கொண்டு வரும்போதே மனுசங்க சாவ மாட்டாங்களா? எனக்கு அறிவியல் அறிவு கொஞ்சம் கம்மி அதான் கேட்கறேன், 

இன்னும் நிறைய கேள்விங்க ஆனா   படத்த பார்த்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது , நம்ம ஆள் உலகத்தரத்துல ஒரு படம் எடுத்திருக்கார் அவர பாராட்டாம பொறாமைல பேசாத என்று சொல்லலி விடுவார்கள்.

உண்மைலேயே ரோபோட் எல்லாம் இந்த அறிவோடயும் நூருபெர்க்கான பலம் கொண்டதாகவும் இருந்திருந்த அது கண்டிப்பா ஐஸ்வர்யா பின்னாடி போயிருக்காது இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்க முயற்சி செஞ்சு இருக்கும்.

விடுங்க எல்லாம் ஒரு காமெடி தான், I-ROBOT  பார்த்துட்டு இத பார்த்தா ஒண்ணு சிரிப்பாவும் அதே நேரம் எரிச்சலாவும் வருது.

எங்க ஊர்ல எதிரான் ரிலீஸ் ஆகல




Friday, October 8, 2010

வீடியோ கேம்

கடந்த 5  நாட்களாக கண்ணில் வலி வந்தமையால் எதையும் பார்க்க முடியாமல் இருந்தேன், ஓரளவுக்கு சரியான உடனே கணினிப்பக்கம் வந்தாச்சு (எங்க போய் முடியுமோ) 

வீடியோ கேம்:

கண்டிப்பா இந்த வார்த்தைகள் எல்லோருடைய வாழ்விலும் என்றாவது எட்டிப்பார்திருக்கும், நம்மில் பலருக்கு ரொம்ப பிடித்தவையாகவும் சிலருக்கு ஒரு காலத்தில் பிடித்தவையாகவும் மேலும் சிலருக்கு ஒரு காலத்தில் ஏக்கம் கொடுத்தவையாகவும் இருந்து இருக்கும்.


எனக்கு வீடியோ கேம் அறிமுகம் ஆனது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்கையில் வெளியே கடை போட்டிருக்கும் ஒருவர் அப்போது வீடியோ கேம் வாங்கி வாடகைக்கு விட்டுக்கொண்டு இருந்தார். அப்போதே அதன்மேல் ஆர்வம் ஆனால் அதை வாடகைக்கு எடுத்து வந்து வீட்டில் வைத்து விளையாடுவது என்பது முடியாது காலம் அது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்லலாம் என முடிவெடுத்து நண்பன் ஒருவனுடன் ஒரு இடத்தில சேர்ந்தேன்.  அப்போது நமக்கு கம்ப்யூட்டர் மேல் ஒரு விதமான காதல், மேலும் கம்ப்யூட்டர் என்றால் கண்டிப்பாக கேம்ஸ் இருக்கும். வகுப்பு சேர்ந்து முதலில் basic programming  சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது ஞாயிற்று கிழமைகளில் சென்டர் காலியாய் இருக்கும் மதியத்துக்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள். சேர்ந்த உடன் அங்கு சொல்லிக்கொடுக்கும் இருவரை நட்பு பிடித்தாயிற்று, அவர்களுக்கு பிடித்தவனாகி இரண்டாவது வாரமே கேம்ஸ் போட்டுக்கொடுக்க சொல்லியாயிற்று.

நான் முதன் முதலில் விளையாடிய கேம் Dave.  அந்த குள்ள மனிதனை பலவித தடைகளைத்தாண்டி இறுதிப்பக்கம் எடுத்து செல்ல வேண்டும். எனக்கு தெரிந்து நம்மில் பலர் முதன்முதலில் விளையாடிய கேம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் அதில் இருக்கும் பல குறுக்கு வழிகளைகண்டு பிடித்து செல்வது மிகவும் ஆச்சரியமாய் இருக்கும். அப்போதெலாம் கம்ப்யூட்டர் மானிட்டர் எல்லாம் கருப்பு வெள்ளை மட்டுமே அந்த சென்டரில் ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே கலர் மானிட்டர் கொண்டது அதில் விளையாட பசங்க சண்டைபோட்டுக்கொண்டு இருப்பாங்க.

இந்த dangerous dave  போரடிக்க ஆரம்பிச்சப்ப மற்றொரு  கேம் அறிமுகம் ஆச்சு அதான் "பிரின்ஸ் ஒப் பெர்சியா"  எனக்கு அது அறிமுகம் ஆனது 1998 ஆம் ஆண்டு அன்றில் இருந்து இன்று வரை சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு புடிக்கவில்லை இந்த கேம். இருந்தும் foxpro வில் cheat code  போட்டு அடுத்த லெவல் போவது எல்லாம்  அப்போதே கண்டுபிடித்தாயிற்று.

அடுத்த் அறிமுகம் ஆனது "hocus pogus"   என்ற கேம், நான் முதன் முதலில் கலர் மானிட்டரில் விளையாடிய கேம், அதனாலேயோ என்னவோ மிகவும் பிடித்து போய்விட்டது. அந்த மூன்று மாதங்கள் நான் படித்த basic programming, Forpro, Dos  விட இந்த கம்ப்யூட்டர் கேம் தான் நன்றாக நினைவில் உள்ளது.

அதன் பிறகு டிவியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம், ஒரு வழிய காசு சேர்த்து அத வாடகைக்கு எடுத்து நண்பன் வீட்டில் டிவியில் இணைத்து விளையாடினோம். அப்போது "contra"   கேம் பிரபலம், அதில் இரண்டுபேர் விளையாடலாம் ஆனால் ஒருவர் வேகமாய் விளையாண்டாலும் மற்றவர் காலி அதனால்  சொல்லி வைத்துகொண்டு விளையாட வேண்டும். பலவித லெவல் எல்லாம் உண்டு இந்த கேமை இரண்டாவது வாடகையில் முடித்துவிட்டோம் 

மரியோ கேம் அடுத்து, குதித்து குதித்து விளையாடும் அந்த கேம் எல்லோருக்கும் பிடிக்கையில் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை ஆனாலும் அதையும் முடித்துவிட்டேன். அதை அடுத்து பல கேம் விளையாண்டோம், கார் ரேஸ் உட்பட. இருந்தாலும் கிராபிக்ஸ் எல்லாம் கொஞ்சம் மொக்கையாய் இருந்ததால் கொஞ்ச காலத்திலேயே அதன் மேல் இருந்த விருப்பம் குறைய துவங்கியது. இந்த காலத்தில் எங்கள் ஊரில் அறிமுகமாகி இருந்த வீடியோ கேம் கடையில் குடி இருந்தேன். "titanic Video Games"  என்ற கடை, பெயர் பலகை வைக்கும் காலத்துக்கு முன்பிருந்தே அங்கு சென்று விளையாடியதால் மிகப்பழக்கம், அந்த பழக்கமே    பின்னாளில் பல நாட்களில் கடையை திறந்து நடத்தி காசு வங்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து, அதே கடை கால ஓட்டத்தில் வீடியோ லைப்ரரி அக உருவெடுத்து அதிலும் காலை முதல் இரவு வரை பழியாய் கிடந்தது எல்லாம் இன்னமும் மலரும் நினைவுகள். அங்கு கிடைத்த நண்பன் ஹரி பின்னாளில் அந்த நடப்பு  எங்களுக்குள் மிகப்பெரிய நட்பாக உருவான பொது பெருமிதம் அடைந்தேன். 

 Turtles  கேம் விளையாடும்போது இன்று வரை அவனை என்னால் ஜெயிக்க முடியவில்லை, எனக்கு பிடித்த Leo  எடுத்து நன் விளையாண்டால் அவன் எந்த ஆளை வைத்தும் ஜெயித்துவிடுவான். வீடியோ கேமில் ஆரம்பித்து வீடியோ கடை வரை வளர்ந்தது எங்கள் நட்பு.

பின்னர் இன்டர்நெட் அறிமுகம் ஆனது (1999-2000)   கரூரில் இன்னும் இருக்கும் galaxy  இன்டர்நெட் சென்டர் தான் அப்போது எங்களுக்கு அடுத்த புகலிடம். சாட், இன்டர்நெட், யாஹூ மெயில், MIRC chat, Desibaba  என்று இன்னும் பல அறிமுகம் ஆகியது, அப்போது அங்கும் நட்பு வட்டம் பெருக நாளடைவில் காலையில் கடை தொறந்து இரவில் மூடும் வரை உடன் இருக்க ஆரம்பித்தேன். நெட் கனக்ட் பண்ணுவது, மோடம் இன்ஸ்டால் பண்ணுவது சின்ன சின்ன trouble shoot  என்று கத்துகொண்டது அங்குதான். அந்த சென்டரில் வேலை பார்த்த பையன்( பெயர் மறந்துவிட்டது, பின்னாளில் மஞ்சள் கமலையில் இறந்துவிட்டான், பக்கத்துக்கு கடை அக்கா, தையல் கடை சேகர், கம்ப்யூட்டர் வேர்ல்ட் கடை அண்ணன் எல்லோரும் இன்னும் மனதில் இருக்கிறார்கள்)

இப்படி போகும்போது எதேட்சையாக ஒரு சிஸ்டத்தில் கமாண்டோ என்று ஒரு கேம் கண்டுபுடிதேன். யாரோ இன்ஸ்டால் செய்துவிட்டு போயிருக்க  நான் விளையாட ஆரம்பித்தேன். எதோ ஒரு லெவெலில் இருந்து ஆரம்பிக்கும், ஒரு ரயில்வே ஸ்டேசனில் தீவிரவாதிகளை சுட்டு புடிக்க வேண்டும். அப்போது தான் கம்ப்யூட்டர் கேம் மற்றும் அதன் கிராபிக்ஸ் பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் F1 ரேஸ், MOTO GP  ரேஸ் என்று களை  கட்டியது கொஞ்ச நாள்.  அதுவும் கொஞ்ச நாள் தான். ஆனால் கம்ப்யூட்டர், இன்டர்நெட், கேம் எல்லாம் நன்றாக கற்றுக்கொண்ட நேரம் அது. (Mirc சாட்டில் நட்பான அந்த ஜப்பான் பொண்ணும் அது அனுப்பிய பின்னால் பனி படர்ந்த போட்டோவும்   இன்னும் மறக்க முடியாதது).


கல்லூரி ஆரம்பித்தது, முதலில் மொக்கையாய் போனது இரண்டு மாதங்களில் சீனியர் பழக்கத்தில் மறுபடியும் கம்ப்யூட்டர் அறிமுகம் மற்றும் கேம். நண்பன் கணேஷ் வாங்கிய சிஸ்டத்தில் நானும் பழனிசாமியும் தூங்காமல்  இரண்டு நாட்கள் விளையாண்ட Project IGI  கேம் மற்றும் NFS2 என சுருக்கமா கூறப்படும் need for speed 2  கேம் மறக்க முடியாதது, இன்றும் need for speed pro street, hot persuit, under cover  என பல முன்னேற்றம் வந்தாலும் என்னால் மறக்க முடிய கேம் NFS2.  அதிலும் அதில் வரும் மகளாரன் கார். நானும் நண்பன் சிவராம கிருஸ்ணனும் அதில் பெரிய ஆட்கள். பின்னாளில் நான் கம்ப்யூட்டர் வாங்கிய பின்னர் என் சிஸ்டத்தில் கேம் மற்றும் படம் மட்டுமே இருக்கும்.     கேமுக்காக autocad ஐ கணினியில் இருந்து அழித்தவன் நான் 

கல்லூரி முடித்த நாட்களில் பிளே ஸ்டேஷன் 2 அறிமுகம் அதில் அதிகம் விளையாண்டது இல்லை ஆனால் நண்பன் ஹரி ஆரம்பித்த கேம் கடையில் கொஞ்சம் விளையாண்டு மறுபடியும் கேம் ஆட ஆரம்பித்தவன், எல்லோரும் வீடியோ கேம் விளையாண்ட சின்ன பையன் என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு நன் சின்ன பையனாகவே இருக்க விரும்புகிறேன், வயசு ஆனாலும் எனக்கு வீடியோ கேம் மேல் உள்ள பிடிப்பு குறைய வில்லை.

நான் லேப்டாப் வாங்கும்போது கிராபிக் கார்டு இருக்கும் மடிக்கணிணியை  வாங்கினேன் காரணம் அப்போதுதான் கேம் விளையாட முடியும் இப்படி ஆரம்பித்த கேம் பைத்தியம் பிளே ஸ்டேஷன் 3 யில் வந்து  நிற்கிறது. நமது பதிவுலக நண்பர்களில் எதனை பேர் என்னைப்போல் வீடியோ கேம் பிரியர்கள் என தெரியவில்லை 

Thursday, September 16, 2010

புல் மீல்ஸ்

எல்லோரையும் போல கலந்து கட்டி அடிக்கறதுக்கு நானும் ஒரு பெயர் வைத்து விட்டேன் -புல் மீல்ஸ்
ஊரெல்லாம் எந்திரனைப்பற்றிய பேச்சு, ஆம் இது ஒரு பெரிய படம் தான், அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ஆனால் ஷங்கர் ஒரு பெரிய இயக்குனர் அப்படி இப்படி என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை



இந்தியன் முதல்வன் வரை அவரைப்பற்றிய பிம்பம் என்னுள் வேறு ஆனால் அவர் matrix  படத்து சண்டைக்காட்சிகளை அப்படியே சுட்டு (சரி inspiration ) தனது அந்நியனில் நுழைத்தாரோ அப்போதே அவர் மீதிருந்த அபிப்ராயம் மாறிவிட்டது. 
ஒரு technologyயை பார்த்து அது போல எடுக்க வேண்டும் என்றால் அதை உபயோகப்படுத்து வேறு மாதிரி எடுக்க வேண்டியதானே அதை விட்டுவிட்டு அப்படியே அதை எடுத்தால்?

அத விடுங்க எந்திரன்  ட்ரைலர் நல்லாத்தான் இருக்கு ஆனா  mask மற்றும் i-Robot  படம் நியாபகம் வருவதை மாற்ற முடியவில்லை.
நல்லா இருந்த சரிதான்.

சென்னை மாநகராட்சி மழை முடியும் வரை சாலைகளை தோண்ட வேண்டாம் என முடிவெடுத்து உள்ளதாக கேள்வி, சரி அதுக்காக தோண்டிய  சாலைகளையும் மூட வேண்டாம் என்று நினைத்து விட்டார்களா? நிறைய இடத்தில தோண்டியது தொண்டியவாறே உள்ளது.
வேளச்சேரி தரமணி சாலையில் திடிரென்று நடுவில் divider  கட்டினர், எதுக்கு என்னனு தெரியவில்லை ஆனால் பாதி  கட்டி முடிக்காமலே அப்படியே விட்டுவிட்டனர். ஒரு பகுதி சாலை பயனில்லாமல் போய்விட்டது, அந்த பகுதியில் சாலையை கடப்பது எவ்வளவு கடினம் என்று தினமும் என்னை மாதிரி யாராவது கடந்து பார்த்தால் தெரியும். அய்யா ஒன்ன செஞ்சா உருப்படியா செய்ங்க இல்லாட்டி செய்யாதீங்க இப்படி நாய் வாய் வச்ச மாதிரி பதிலா விட்டு போனா எப்படி??

பழைய மகாபலிபுரம் சாலையில் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் கண்ணைக்கட்டுகிறது, இதில் போக்குவரத்து காவல்துறை நாடு நடுவில் திடீர் barigadeகளை வைத்து உள்ளனர், இரவில் வேகத்தை குறைக்க வைக்கலாம் ஆனால் பகலில் காலை நேரத்து முக்கிய நேரங்களில் அதுவே போக்குவரத்து நெரிசல்களை உண்டு பண்ணுகிறது, ஒன்றரை லேன் மட்டுமே உள்ள ரோட்டுக்கு சுங்க வரி வேறு, வாயில அசிங்கமா வருது, ஏண்டா ரெண்டு வருசமாவாடா சாலைய  போட்டு முடிக்கறீங்க? ஓரளவுக்கு போடுங்க போட்டு முடிச்ச காச வாங்க ஆரம்பிக்கலாம் என்று சொன்ன ஆறே மாசத்துல இந்த ஒன்றரை சாலையை போட்டீங்க இப்ப?? ஓட்டு  கேட்டு வாங்க பேசிக்கறேன்.....

நண்பேன் டா! இது ரொம்ப பாப்புலர் ஆகிடுச்சு, அடுத்து ஏதும் வரும் வரை இனி அடிக்கடி பலரிடம் இதை கேட்கலாம்.

பெண்ணினம் அவர்கள் சுதந்திரம் என்று பேசறாங்க அதுக்கு எதிர்ப்பு கொடுக்கறாங்க, ரெண்டு பக்கமும் நியாயம் இருக்க மாதிரி இருக்கும் அதான் உண்மையும் கூட, இப்படி ரெண்டுமே இல்லனா வாழ்க்க போர் அடிக்கும்ங்க, அதனால சண்ட போட்டுகிட்டே வாழுங்க.

முரளி இறப்பும். சொர்ணலதா இறப்பும் மனதை பாதித்த விஷயம், எவனோ ஒருவன் யாசிக்கிறான் என அலைபாயுதேவில் வரும் அந்த பாடலை  வேறு யார் பாடி இருந்தாலும் நான் இந்த அளவுக்கு ரசித்து இருப்பேனா தெரியவில்லை, அதே போல காலமெல்லாம் காதல் வாழ்க படம், முரளி நடித்து எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்னு. 

இந்த வீனா போன S.M.S  அனுப்பற வித்தைய  எவன் கண்டுபுடிசான்னு தெர்ல ஆனா கைல கெடச்சான் செத்தான், நாதாரி நைட்டு பகல்னு தெரியாம அனுப்பி தள்றாங்க, வேலை வேணுமா, கரண்டி வாங்கனுமா அது இதுன்னு, டேய்  பொறம்போக்குங்களா எல்லாத்துக்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும் நீங்க. 

கடந்த வாரம் ஊருக்கு செல்ல எங்கயும் டிக்கெட் இல்ல அதனால நண்பர்களுடன் காரில் செல்லலாம் என முடிவு எடுத்து சென்றேன், வீட்டில் பயங்கர திட்டு, எதுக்கு காரில் வந்த பஸ் ல வரவேண்டியது தான என்று. கடந்த மூணு தடவை பேருந்தில் வந்த பொது, மயிரிழையில் பேருந்து விபத்தில் இருந்து தப்பி இருக்கிறது, ரயிலில் தண்டவாளத ஒடைக்கறாங்க  என்று அடிகடி பேப்பர்ல போடறாங்க, எவரையோ நம்பி வானு சொல்றாங்க ஆனா  என்ன நம்பி நான் காரில் வந்த திட்டரங்க. 

கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அதை எதிர்ப்பதனால் வீட்டில் உள்ளவர்களை பிடிக்காமல் போகின்றது, எப்பவும் மிக மிக பிடித்து நமக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்  ஒன்றை செய்யும்போது ஏன் அனைவரும் எதிர்க்கிறார்களோ, ஆனால் என்னால் அவர்களைப்போல இருக்க முடியாது.  அது அவங்களுக்கும் தெரியும் இருந்தாலும் நம்மை கஷ்டப்படுத்தி பார்க்கறதுல அவங்களுக்கு சந்தோசம்.

கஜினி முகமதுவை விட அதிகம் படையெடுத்து விட்டேன் ஆனாலும் வெற்றி கிட்டவில்லை, இப்போது இந்த பழம் புளிக்கும் என முடிவெடுக்காமல் கண்டிப்பா புளிக்கும் என தெரிந்து முயற்சியை கைவிட்டுவிட்டேன். எல்லாம் இந்த www.team-bhp.com  என்ற ஒரு வலைத்தளத்தில் சேரத்தான், இது ஒரு வாகனப்பிரியர்களுக்கான தளம் ஆனால் ஏகப்பட்ட விதிகளுடன் உள்ளது, இதில் சேர "நான் ஏன் இதில் சேர விருப்பப்படுகிறேன்" என எழுதவேண்டும், எத்தனை முறை எழுதினாலும் என்னுடைய ஆங்கில அறிவு கம்மி என சொல்லி துரத்தி விட்டு உள்ளனர், ஆனால் எனக்குமட்டும் இப்படியல்ல, நிறைய பேருக்கு இப்படித்தான், என்ன சொல்ல இவங்கள, இவங்க கிட்ட ஏற்கனவே உள்ளவ்னகள் எல்லாம் எழுதும் செய்திகளை பார்க்கும்போது நமக்கு ஆங்கில அறிவே இல்லாம இருந்தாலும் பரவாயில்ல என்று தோன்றுகிறது. யாகூ க்ரூபில் உள்ள Palio users group  ஒன்றே எனக்கு போதுமானது. என்னைப்போலவே பலரையும் சேர்த்துக்க மாட்டேன் என்று சொல்லியது இங்குதான் எனக்கு தெரிந்தது. 

இன்னிக்கு இது போதும், இதிலும் நிறைய பிழை இருக்கும், மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் 

நான் எழுதினத என்னாலேயே படிக்க முடியல அவ்வளவு எழுத்துப்பிழைகள், எல்லோருக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன்