Friday, April 10, 2009

டேமேஜருடனான எனது அனுபவங்கள் பகுதி ஒன்று.

சில நாட்களுக்கு முன் (சில நாட்கள் இல்லங்க மாதங்கள்) சொல்லியது போல இந்த பதிவை ஆரம்பிக்கிறேன், இது ஒரு பதிவோடு முடிந்து போவது இல்லை, எனக்கு நினைவு வரும் போதெல்லாம் அவ்வப்போது ஒவ்வொரு பகுதியாக வெளிவரும்.

இந்த பதிவு எனது டேமேஜருடன் என்னுடைய முதல் அனுபவம். அது என்னுடைய வேலைக்கான இன்டெர்வியு. என்னுடைய பெரிய டேமேஜர் முதலில் என்னை ஒரு மூன்று மணி நேரம் காக்க வைத்தார் (அவரை டேமேஜர் என்று சொல்லக்கூடாது, மானேஜருக்கு அனைத்து தகுதியும் உள்ளது அவர்க்கு) பின்னர் என்னை சில கேள்விகளை கேட்டார். இதற்கு முதல் நாள் வேறு ஒரு இன்டெர்வியு அதற்கு படித்த பகுதிகளில் இருந்து அவர்கள் ஒன்றுமே கேட்கவில்லை ஆனால் இவர்கள் இங்கு நான் அன்று படித்ததை மட்டுமே கேட்டனர், என் வாழ்நாளில் முதல் முறையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி நானே அசந்து போனேன்.( நெசமாதாங்க முதலும் கடைசியுமா இந்த ஒரு முறை தான் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிருக்கேன்)

அப்புறம் என்னை இன்னும் ஒரு மணி நேரம் காக்க வைத்தனர் ஏனென்றால் என் டமாஜர் என்னை கேள்வி கேடகணுமாம். அப்போது ஆரம்பித்தது எங்கள் நட்பு.

பெருசா எதும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை ( ஆமா ரெண்டு பேருக்கும் தெரிஞ்சாதான கேக்கறது சொல்றது எல்லாம் ), ஆனா அதுதான் அவனுக்கும் முதல் இன்டெர்வியு என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன். என் ப்ராஜெக்ட் பத்தி கேள்வி கேட்டான். நான் ஒழுங்கா பண்ணின குளிர்சாதன வசதி ப்ராஜெக்ட் பத்தி கேட்டிருந்தா சொல்லிருப்பேன், சும்மாதான இருக்கோம் என்று காசு குடுத்து வாங்கின ரோபோட் ப்ராஜெக்ட் பத்தி கேட்டா??. அவன் எதோ ஒரு பெயர்ல ஒரு கேள்வி கேட்க எனக்கு நீங்க கேட்கறது புரியல என்று சொல்லிட்டேன். அப்புறம் நீ பண்ண ரோபோட்கு கை கால் இருக்கா என்று கேட்டான், நான் அதெல்லாம் பண்ண வசதி இல்ல ரெண்டு வீல் வச்சுருக்கோம் அப்படின்னு சொன்னேன், இன்டெர்வியு முடிஞ்சுது. எனக்கும் வேலை குடுத்துடாங்க. (என் வாழ்நாள் சாதனை)


அடுத்த திங்கள் வந்து வேலைல சேர்ந்த மூணு மணிநேரம் காக்க வச்சுட்டாங்க அப்புறம் கடைசியா எங்க ஆளுகிட்ட சேர்த்து விட்டாங்க, வாழ்க்கைல முதல் வேலை, பேந்த பேந்த முழிச்சுகிட்டு உட்கார்ந்தேன், என்னை எங்க உட்கார வைக்க என்று பெரிய திடமே தீட்டினான், அங்க இருந்தது மூணு சீட்டு அது ஒன்னு ஒரு பொண்ணுக்கு பக்கத்துல இருந்துச்சு, இன்னொன்னு அவனுக்கு புடிக்காதவன் பக்கதுலயாம் அதனால பிரிண்ட் மெசின வேற பக்கம் மாத்திட்டு என்ன அங்க உட்கார வச்சான். (அந்த பொண்ண அவன் அப்போ ரூட் உட்டுகிட்டு இருக்கான் அதான் நம்மள அங்க உட்கார வைக்கலனு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன் )

சிஸ்டம் குடுக்க ரெண்டு நாள் ஆச்சு அதுவரை ரொம்ப கடி. இவன் அப்பப்ப கூப்பிட்டு என்ன பத்தி படிச்சா (என்னது படிச்சவா?? ) கல்லூரி பத்தி நிறைய கேட்ப்பான். இப்படியே வாழ்க்கை ஓடுச்சு

என்னடா மரியாதை குடுக்காம இப்படி அவன் இவன்னு சொல்றான்னு நெனைக்காதீங்க, படிக்க படிக்க புரிந்து கொள்வீர்கள்.

மீதிய அடுத்த பகுதில பார்க்கலாம்

4 comments:

Karthik said...

//என்னடா மரியாதை குடுக்காம இப்படி அவன் இவன்னு சொல்றான்னு நெனைக்காதீங்க

நான் அப்படி நினைக்கல.

என்னடா மரியாதை குடுக்காம இப்படி அவன் இவன்னு சொல்றார்னுதான் நினைச்சேன்.

//படிக்க படிக்க புரிந்து கொள்வீர்கள்.

right. :)

DHANS said...

கலக்கிட்டயே காப்பி (கார்த்தி)

விடுமுறை எல்லாம் சுகமா?

Karthik said...

//விடுமுறை எல்லாம் சுகமா?

not exactly. loads of stuff to study. but ,you know, its like tat always. :)

DHANS said...

yeah its always like that...