பணம் மக்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள ஒற்று மரணம் தேவைப்படுகிறது. நண்பர்களாக பழகுவர், உறவினர்களாக பழகுவார்கள், வாடிக்கையாளராக பழகுவார்கள், இனிக்க இனிக்க பேசுவார்கள் அனால் எல்லாம் ஒரு உயிரின் மதிப்பு தெரிந்து அல்ல அந்த உயிரின் மூலமாக அவர்களுக்கு ஆகும் ஆதாயம் பற்றிய மதிப்பு தெரிந்து தான்.
குடும்பத்தின் முக்கிய அங்கத்தை இழந்துவிட்டால் அவரிடம் வியாபார தொடர்பு வைத்திருந்தவர்கள், அனைவருக்கும் உள்ளூர மகிழ்ச்சி இருக்கும். ஒருவர் ஒரு தொழில் செய்து கொண்டிருக்கிறார் மிக குறுகிய காலத்தில் மிக வேகமான வளர்ச்சியில் இருக்கிறார், திடிரென்று அவரை அவர்கள் குடும்பத்தினர் இழந்துவிட அடுத்து நடப்பவை எல்ல்லோரையும் நிலை குலைய செய்கிறது. அவரின் சக தொழில் போட்டியாளர்கள் முடிந்த வரை அவரின் வாடிக்கையாளர்களை எவ்வாறு தன்னிடம் அழைப்பது என்று தொடங்கி எவ்வளவு குழி பறிக்கின்றனர். அலுவலகத்தில் இருந்த கணக்குகளை அந்ந்தந்த வாடிக்கையாளரின் கணக்காளரிடம் பேசி ஒரு கணக்குக்கு இரண்டாயிரம் தருவதாக சொல்லி சை இவர்கலேலாம் மனிதர்களா?? இறந்தவர் வீட்டுக்கு துக்கம் விச்சாரிக்க வரவில்லை என்றாலும் பரவாயில்லை அவரின் அலுவலகத்தை சூறையாட நினைத்தீர்களே .
அவர் செய்து கொடுத்த வேலைக்கான கூலியை கொடுக்க மறுக்கின்றனர் வாடிக்கையாளர்கள். நேர்மையாய் இருக்க எங்களை கத்துக்கொடுத்த அவரின் கொள்கைப்படி அவர் செலுத்த வேண்டிய எல்லா தொகையையும் செலுத்திவிட்டோம், நண்பர்களின் உதவியுடன் அலுவலகத்தை காத்து உரியவரிடம் ஒப்படைத்து விட்டோம். இந்த சூழலில் எந்த ஒரு உறவும் உதவிக்கு வராத நிலையில் நண்பர்கள் உடனிருந்து எல்லாவற்றையும் கவனித்து கொண்டனர். நண்பர்களை ஒரு அளவோடு வைத்திரு என்று சொன்ன குடும்பத்தில் இப்போது அவர்கள் மட்டுமே உதவிக்கு.
இதில் கோயம்புத்தூரில் அவர்க்கு சிகிச்சை செய்த பிரபல மருத்துவமனை இன்னமும் discharge summary கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர், இதற்க்கு முழு காரணம் அவர்கள் தரும் அந்த காகிதத்தால் பின்னாடி ஏதும் தப்பு இருந்து அவர்கள் மாட்டிக்கொள்ள வேண்டி இருந்தால்?? ஒரு நோயாளி என்ன காரணம் என்று தெரியாமலே இறந்து விட்டார், பணத்தை கட்டி அவர்கள் கிளம்பும்போது கொடுக்க வேண்டிய discharge summary கொடுக்கவில்லை, இரண்டு நாள் கழித்து கொடுக்கிறோம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதால் நாங்களும் வந்துவிட்டோம்.
மருத்துவர்களின் பிரச்சனைகளை புரிந்து விட்டுகொடுத்து தப்பாயிற்று, ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட மருத்துவரை பார்க்க சென்றால் அவ மரியாதை, இவர்கள் யாரென்று தெரியாதது போல பேசியிருக்கின்றனர். ஒரு நோயாளி காரணம் தெரியாமலே இறந்திருக்கிறார் அந்த நோயாளி சம்பதபட்டவற்றை ஒரு வாரத்துக்குள் மறந்து விடிருக்கின்றனர். பார்க்க சென்றது இரண்டு மருத்துவர்கள் அவர்களையும் மூன்று மணி நேரம் காக்கவைத்து அப்போதும் discharge summary கொடுக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இவர்கள் நினைக்கலாம் மருத்துவமனை பெயர் கெட்டுவிடும் என்று ஆனால் என்ன செய்தாலும் மருத்துவமனை பெயர் கேட்டுவிட்டது.
எங்களுக்கு தெரிந்த எந்த மருத்துவரும் இனி அவர்களுக்கு refer செய்ய மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர். அண்ணா அக்காவுடன் படித்தவர் அவர்களுடன் வேலை செய்தவர் என்று அனைவரும் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர், இப்போது மட்டும் எப்படி பெயர் இருக்க போகிறது, ;பொதுமக்களுக்கு வேண்டும் என்றால் பெயர் கேட்டது இல்லாமல் இருக்கலாம் மருத்துவ துறையில் இருப்பவரிடம் ஏற்கனவே கேட்டுவிட்டது.
இது நாள் வரை மருத்துவருக்கு மருத்துவ மனைகளுக்கு support செய்துவந்தேன் ஆனால் இனிக்கு தெரிந்துகொண்டேன். கார்பொரேட் மருத்துவமனைகள் என்றுமே மாறவில்லை அவர்கள் கொள்ளை அடிக்கும் செயல்கள் தெளிவாக தெரிகின்றது. காய்ச்சல் என்று சென்ற ஒருவர் இறந்து வெளிவருகிறார் அவருக்கு அப்படி ஆக காரணம் என்ன என்று ஆராயவில்லை ஆனால் அவர் பற்றிய அனைத்தையும் ஒரு வாரத்துக்குள் மறந்து விட்டிருக்கின்றனர், நாளைக்கு இதே காரணத்துக்காக வேறு ஒரு நோயாளி வந்தால் எப்படி மருத்துவம் செய்வார்கள்?? மருத்துவ துறையில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு ????
இக்கட்டான நேரத்தில் உதவிய அனைவருக்கும் நிக நன்றி. இந்த நேரத்தில் உண்மையான அன்புள்ளவர்கள் யார் என்று தெரிந்து கொண்டோம். சிலருக்கு பணமிருப்பதால் செருக்கு இருக்கலாம் இன்று சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கிறேன். இன்றுவரை உங்கள் ஆட்டத்தை ஆடிவிட்டீர்கள் ஆடிக்கொண்டு இருக்கிறீர்கள், இன்று முதல் என்னுடைய ஆட்டத்தை காணப்போகிறீர்கள். என்னுடைய பட்டியலில் சில பெயர்கள் ஏறியுள்ள உங்களுக்கு எந்த விதத்தில் பதிலடி கொடுப்பது என்பதை காலமும் நானும் முடிவு செய்வோம். அதுவரை நீங்கள் உங்கள் வழியில் ஆடிக்கொண்டு இருங்கள்.
எந்த மருத்துவமனை என்று கூறவில்லை, தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தனியாக தொடர்பு கொள்ளலாம்.
எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்.
2 comments:
hospital la ippadi ellam kuda seyraangala?! ithukku onnum panna mudiyaatha? :(
hope everything is okay, now.
சிகிச்சை அளித்து வரை எந்த பிரச்சனையுமில்லை, அவர்களால் முடிந்த வரை சிகிச்சை அளித்தனர் இருந்தாலும் எங்களுக்கு ஒரு சந்தீகம் இருந்து வருகிறது. தவறான diagnoss ஆகா இருக்குமோ என்று. இறுதியில் நாங்கள் கேள்விப்பட்ட வரை இல்லாத ஒரு நோய் இருந்ததாக கூறி அதனால் தான் மரணம் என்று discharge summary கொடுக்கப்படலாம் என்று சேதி. நாங்கள் மருத்துவமனை மேல் வழக்கு தொடர வாய்ப்புள்ளதால் இவ்வாறு வழங்கப்படலாம், அனால் எங்களுக்கு அத்தகைய எண்ணம் இல்லை,
மருத்துவர்கள் தான் அவர்கள் சக மருத்துவர்கள் அதிலும் கணவனை இழந்த ஒருவர் அவரை பார்க்க வந்துள்ளபோது, அவர்களை மூன்று மணிநேரம் காக்க வைத்து பின்னர் எதுவுமே தெரியாத மாதிரியும், ஒரு வாரம் முன் நடந்த ஒரு சிகிச்சையை மறந்த மாதிரியும் பேசியது எங்கள் மனதை காயப்படுத்தியுள்ளது. இதுவரை பலரை அந்த மருத்துவமனைக்கு சிபாரிசு செய்த என் அண்ணன் இப்போது எதற்கு செய்தோம் என்று நொந்து கொள்கிறார்.
எல்லாம் ஓரளவிற்கு அறி செய்தாகிவிட்டது, இப்போது மருத்துவமனை கொடுக்கும் discharge summary வைத்து தான் ஆயுள் காப்பீட்டு தொகை பெற விண்ணப்பம் செய்ய வேண்டும் ஏற்கனவே இருபது நாட்கள் ஆகிவிட்டது இன்னும் பத்து நாட்களுக்குள் அதை செய்தாக வேண்டும்.
Post a Comment