பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிப்போச்சு ஆனாலும் நம்ம கடைய பார்த்த ஏதூ பேருக்கு கடை வச்சுட்டு விக்க தெரியாம இருக்க மாதிரி இருக்கு.
ஆமா இன்னிக்கு நேத்து வந்தவங்க எல்லோரும் அவங்க கடைய நிறைய அலங்கரிச்சு வச்சுருக்காங்க அனா நமக்கு அப்படி எதுவுமே தெரிய மாட்டேங்குது. இந்த blog counter கூட சமீபத்துல இன்னொருத்தர் கடைல இருந்து சுட்டு போட்டு வச்சுருக்கேன்.
எனவே மக்களே நம்ம கடைய renovate பண்ணலாம் என்று இருக்கேன், தங்களால முடிஞ்ச உதவிய செஞ்சு நம்ம கடைய அலங்கரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்போதைக்கு என் கடைல என்ன என்ன மாத்தனும், இன்னும் என்ன என்ன விசயங்கள சேத்துக்கலாம், இந்த அலங்காரம் செய்யற ஐட்டம் எல்லாம் எங்க எப்படி சேர்க்கணும்னு யாராவது டியுசன் எடுத்தா நல்ல இருக்கும்.
எதோ நாம நட்டு ஸ்பானர் புடிச்சு வளந்தாலும் கம்பியுடரையும் கத்துகிட்டு போலப ஓட்டறோம், அத ஒழுங்கா ஊட்ட வேணாம்??
மக்களே வாங்க உங்க அறிவுரைய, அனுபவத்த, முயற்சிய எதனாலும் சொல்லுங்க. இன்னிய பதிவ எப்படியோ போட்டுட்டோம் அப்பாடா :)
4 comments:
ம்ம்ம் நானே சின்ன பொண்ணு... வந்து பிரசண்ட் சொல்லிக்கிறேப் :)
HTML Coding மூலமா உங்க பக்க layout la coding change பண்ணி அலங்கரிக்கலாம்...
நமக்கு HTML எல்லாம் தெரியாதுங்க, இருந்தாலும் கொஞ்சம் படிச்சு முயற்சி பண்றேனுங்க ...
வருகைக்கு நன்றி
ஒரு வாரத்துல கடைய கொஞ்சம் மாத்தலாம் என்று இருக்கேன் இல்லடி கூட கொஞ்சமா மெருகேத்தலாம் என்று இருக்கேன்
நானும் சின்னப்பையன். டெம்ப்ளேட் கலர்புல்லா மாற்றலாம். :)
நானும் மாற்றலாம் என்று நல்ல நேரம் பார்க்க சொல்லியிருக்கிறேன். ;)
சின்ன பசங்க தான்பா இப்பலாம் நல்ல பண்றீங்க. கலர்புல்லா மாத்திடலாம்னு தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்
Post a Comment