Friday, April 24, 2009

ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் மறுபடியும் சேர்ந்தன (கண்டிப்பாக பிரியாணிக்காக அல்ல)

ஒரு மகிழ்ச்சியில் உடன் இருக்காத நிலையில் நண்பனை விட்டு சிறிது காலம் விலகி இருந்தேன் ஆனால் எனக்கு தெரிந்த வரையில் எங்கள் இருவருக்கும் உள்ளான நட்பு ஒரு வித்தியாசமானது மற்றவர்கள் பார்வைக்கு.

மூன்று வருடத்தில் நான்கு முறை பிரிந்து ஒட்டிய எங்கள் நட்பு, என்ன விசேசம் என்றால் எப்போது பிரிந்தாலும் அதற்கு எதுவும் சண்டை காரணமாக இருக்காது. இரு முறை எங்கள் இருவரின் நலன் கருதியே பிரிந்தோம்,ஒரு முறை பிரிந்தால் மட்டுமே எங்கள் நட்பு பலப்படும் என்பதால் பிரிந்தோம், ஒரு முறை காரணமே இல்லாமல் பிரிந்தோம். சேரும்போது எங்களுக்குள் எந்தவிதமான சங்கடங்களோ கேள்விகளோ இல்லாமல் முன்பு பிரிவதற்கு முன் எப்படி இருந்தோமோ அப்படியே சேருவோம். இப்போதும் அப்படித்தான். என்னிடம் இருந்து அவன் எதை கற்றானோ இல்லையோ அவனிடம் இருந்து நான் கற்றது நிறைய. நல்லதோ கெட்டதோ அந்த தைரியத்தை, தன்னம்பிக்கையை என்னால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு என்னுள் விதைத்தவன்.

எனக்கு கஷ்டம் வரும் வேளையில் எல்லாம் நீ என்னுடன் இருந்தாய், இப்போதும் கூட, எனக்கு தெரியும் நீ கண்டிப்பாக கணித்திருப்பாய் எனக்கு உன் அருகாமையும் நட்பும் இப்போது தேவை என்று. உனக்கு நன்றி என்று சொல்லி அந்த சொல்லையும் அதற்க்கு உள்ள மரியாதையையும் காயப்படுத்தவில்லை.

எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தால் கண்டிப்பாக சிலருக்கு ஆற்றாமையும் கோபமும் வரும் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எதிர்ப்புகள் இருந்தால்தான் முன்னேற்றம் சாத்தியம். எதிர்ப்புகளை எதிர்க்க சேர்ந்து வருகிறோம். தடைகள் எப்போதும் எங்களுள் ஒரு விவாதப்போருளே, அதை தாண்ட எத்தகைய பயணங்கள் தேவை என்பதை தீர்மானிக்க என்றுமே நாங்கள் தயங்கியது இல்லை. இருவருக்கும் குறிக்கோள் ஒன்றாக இருப்பினும் அதை அடையும் பாதை வேறாக உள்ளது.அதற்காக என்றுமே நாங்கள் கவலைப்பட்டது இல்லை, அவரவர் பாதை அவரவர்க்கு.

13 comments:

கோவி.கண்ணன் said...

//"ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் மறுபடியும் சேர்ந்தன (கண்டிப்பாக பிரியாணிக்காக அல்ல)"//

மீண்டும் காணாமல் போகும் கருப்பு ஆடுகளாக இருந்தால் சரி.

*****

நட்புக்குள் ஊடல் தேவைதான். ஆனால் அதுவே தொடர்ந்தால் மன நோய் ஆகி, அடுத்தவர் எப்படி செயல்பட வேண்டும் என்ற முடிவு செய்வதில் முதலில் அன்பாகவும், பிறகு கட்டளையாகவும் அதன் பிறகு அவரது சிந்தனை அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்யும் ஆபத்தாக மாறிவிடும்.

உண்மையான நட்பு என்பது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உறவினர் அல்லாது பிறரில் கிடைக்கும் ஒரு மாற்று மட்டுமே.

DHANS said...

மீண்டும் காணாமல் போகும் கருப்பு ஆடுகளாக இருந்தால் சரி.//

அவ்வப்போது காணாமல் போகும் கருப்பு ஆடுகளே இவை.

//நட்புக்குள் ஊடல் தேவைதான். ஆனால் அதுவே தொடர்ந்தால் மன நோய் ஆகி, அடுத்தவர் எப்படி செயல்பட வேண்டும் என்ற முடிவு செய்வதில் முதலில் அன்பாகவும், பிறகு கட்டளையாகவும் அதன் பிறகு அவரது சிந்தனை அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்யும் ஆபத்தாக மாறிவிடும்.//

உண்மைதான், எங்களுக்குள் ஊடல் எப்போதும் வந்தது இல்லை, பிரிவது என்பது எங்கள் நடப்பை பாதுகாக்கவே. சேர்ந்தாலும் பிரிந்தாலும் அடுத்தவருக்கென்று ஒரு இடைவெளி இருக்கிறது அந்த இடத்தை பறிப்பது இல்லை.

உறவினரிடம் கூட ஒரு உண்மையான நடப்பு கிடைக்கிறது... நட்புக்கு உறவு, சொந்தம், என்று எதுவுமில்லை.

பிரேம்குமார் said...

எனக்கு கொஞ்சம் புரியவில்லை தனா. நட்புக்குள் ஊடல்கள் இருக்கலாம்.. ஆனா பிரிஞ்சு பிரிஞ்சு சேர முடியுமா? நட்புக்குள் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனா அது அப்பப்போ பிரியற அளவுக்கு வரனுமா? கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு

DHANS said...

//நட்புக்குள் ஊடல்கள் இருக்கலாம்.. ஆனா பிரிஞ்சு பிரிஞ்சு சேர முடியுமா? //
எங்க நபில் அப்படித்தான் ஊடல்கள் என்று இல்லை, பிரிவுக்கு காரணமும் ஊடல்கள் இல்லை, எண்களின் நலன் கருதியே இந்த பிரிவுகள், ஒரு வகையில் விசித்திரமானது இந்த நட்பு. இத்தகைய உணர்வை புரிதலை மற்ற எந்த நட்பிலும் நான் கண்டது இல்லை.

இடைவெளி என்று நான் கூறியது அவரவர்க்கு உள்ள எல்லையை. i have given enough space to him and he too. என் விசயத்தில் அவனும் அவன் விசயதில்நானும் என்றுமே தலையை நீட்டியது இல்லை. எனக்காக எதையும் அவனுக்காக நானும் எதையும் விட்டுக்கொடுத்து இல்லை.

Karthik said...

:))))

DHANS said...

why are you laughing karthik?

Karthik said...

hey, i'm not laughing. i just smiled. :)

DHANS said...

haaa... i expected this answer, am sorry i have to repy fast so i am using english.

Karthik said...

you can use english dude. i'm not mulayam singh. :)

பிரேம்குமார் said...

//இடைவெளி என்று நான் கூறியது அவரவர்க்கு உள்ள எல்லையை. i have given enough space to him and he too. என் விசயத்தில் அவனும் அவன் விசயதில்நானும் என்றுமே தலையை நீட்டியது இல்லை. எனக்காக எதையும் அவனுக்காக நானும் எதையும் விட்டுக்கொடுத்து இல்லை.
//

அப்போ சரி, இந்த Personal Space எல்லா உறவுகளில் முக்கியம். நட்பு, காதல், கணவன் மனைவி என எல்லா உறவுகளுக்குமே பொருந்தும் :)

DHANS said...

கண்டிப்பா எல்லா உறவுகிலும் முக்கியம் தான், அதை கொடுத்து விட்டால் வாழ்க்கை இனிக்கும்


@கார்த்தி

கண்டிப்பா நீங்க முலாயம் இல்ல

அருண்மொழிவர்மன் said...

நட்பின் பாதையில் இது போன்றா தருணங்களை நாம் எல்லாருமே கடந்து வந்திருப்போம்....

நாமே உணார்ந்தது என்றாலும் படிக்கும்போது இன்னும் நன்றாக இருந்தது

DHANS said...

ஆனாலும் இந்த நட்பு எனக்கு புதுசு
சண்டை வந்து பிரியலாம் சண்டை வராமல் இருக்க பிரிவோம், இது போல பல

நன்றி தங்கள் வருகைக்கு