Thursday, April 30, 2009

பெண்களை பற்றிய என்னுடைய எண்ணம்

பெண்களை பற்றிய ஆண்களின் எண்ணங்களை பதிவெழுதிய எனக்கு மறுபடியும் இதே தலைப்பில் எழுத வேண்டிய ஒரு நிலைமை.

பொதுவாக பெண்களை பற்றி நினைக்கும் போதே முதலில் ஒவ்வொருவர் நினைப்பில் வருவது பெண்கள் என்றால் மென்மையானவர்கள், வலிமையற்றவர்கள், அமைதியானவர்கள், போன்ற மென்மையான, சிறுபான்மையான எண்ணங்களே தோன்றுகின்றன. ஆண்களின் மனதில் மட்டுமல்ல பெண்களின் மனதில் கூட இதே நிலைமை தான்.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகின்றனர், நல்ல செய்தி அவர்களும் வாழ்வில் மேலே வர வேண்டும் என்று ஆனால் நம்மில் எத்தனை பெண்கள் அவர்களுக்கு என்று இருக்கின்ற உரிமைகளை சரியாக பயன்படுத்துகின்றனர்? எங்கும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டே வருகிறது.

பேருந்தில் பெண்களுக்கு என்று தனியாக இருக்கைகள் ஆண்களின் இருக்கையில் அவர்கள் அமரலாம் ஆனால் இடம் காலியாக இருந்தாலும் பெண்களின் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் உடனே பெண்ணுரிமை எண்ணம் தோன்றிவிடும் சிலருக்கு.

வரிசையில் கூட பெண்களுக்கு என்று தனி வரிசை, ஆண்களுடன் சேர்ந்து நிற்க கூடாதாம், இல்லை நிற்க விருப்பம் இல்லையாம்.

கல்லூரிகள், பள்ளிகள் பெண்களுக்கென்று தனி ஏனென்றால் பெண்களுக்கு என்று தனி கல்விக்கூடங்கள் இருந்தால் மட்டுமே அவர்களால் மேல் எழும்பி வர முடியும்.நன்றாக் படிக்க முடியும், இப்படி வளரும்போதே இருபாளர் மனதில் இப்படி ஒரு பிரிவு எண்ணத்தை வளர்த்தால் எப்படி??

மகளிர் தினம் என்று வேறு கொண்டாட்டங்கள்.பெண்கள் சிறப்பிதழ்கள், மங்கையர் மலர், அவள் என்று தனி புத்தகங்கள்.

சாலையில் ஒரு பெண் அடிபட்டுவிட்டால் உடனே மக்கள் கருணை பொங்கி விடும். பெண்களும் சளைத்தவர்கள் இல்லை அவர்கள் எங்கெல்லாம் பெண்கள் என்ற பெயரை உபயோகிக்க முடியுமோ அங்கே எல்லாம் உபயோகித்து விடுவார்கள். எனக்கு தெரிந்து சிறு வயதில் சினிமா டிக்கெட் எடுக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடியும்.

இப்பொது விசயத்துக்கு வருகிறேன், ஏங்க இப்படி நீங்களே பெண்கள் என்றால் இலக்காரமானவர்கள், மென்மையானவர்கள் சில வேலைகளுக்கு முன்வர மாட்டார்கள், இல்லை சில வேலைகள் பெண்களுக்கானது அல்ல என்று வரையருத்துக்கொள்கின்றீர்கள்.
என்னைப்பொறுத்தவரை பெண்களை பிரித்து பார்க்கவில்லை, சமுதாயத்தில் பெண்கள் என்றால் பெண்கள் அவ்வளவுதான், அவர்களுக்கென்று எந்த சலுகையும் இருக்கக்கூடாது, பெண்கள் என்றால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிறு சிறு சலுகைகளால் மனதளவில் எல்லா ஆண்களுக்கும் ஒரு எண்ணம் வந்துவிடுகிறது. பெண்ணாக இருந்தால் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும், போன்ற எண்ணங்கள்.

சிறிய நிகழ்ச்சி, அலுவலக பேருந்தில் கடைசி வரிசையில் அமர்ந்ந்தால் முதுகு வலி வருகிறது என்று சில நாட்களாக (மூன்று நாட்களாக) முதல் வரிசையில் அமர்ந்து பயணம் செய்கிறோம், இன்று காலையில் பேருந்துக்கு என்று பொதுவாக உள்ள மேற்பார்வையாளர் கூப்பிட்டு நீங்கள் பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள் முன் இருக்கைகள் பெண்களுக்கு என்று கூறினார்கள். ஏன் என்றால் முன் இரண்டு இருக்கைகள் பெண்களுக்கானதாம். அவர்களுக்கு வேண்டும் என்று பயணம் செய்யும் பெண்கள் மெயில் அனுப்பி எங்களை உட்க்கார வேண்டாம் என்றார்களாம். எனக்கு சிரிப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஏங்கடா எந்த காலத்தில் இருக்கிறீர்கள், பேருந்தில் எங்கு அமர்ந்தால் என்ன என்று கேட்டால் பதில் இல்லை. அவ்வாறு மெயில் அனுப்பிய யுவதிகளை நன்கு தெரியும், என் மனதில் அவர்களை பற்றி இருந்த உயர்வான எண்ணம் தகர்ந்தது. பின்னே என்னை பொறுத்தவரையில் எங்கள் பேருந்தில் வரும் பெண்களில் சுயமான சிந்தனையுடன், சுதந்திரமான பெண்கள் என்று நினைத்திருந்த இருவர் தான் அவ்வாறு கேட்டுள்ளனர்.

ஒரே ஒரு கேள்வி, இதே பெண்கள் சில காலங்களுக்கு முன் வழக்கமாக நாங்கள் அமரும் பின் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர் அப்போது நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அவரவர் விருப்பம் எங்கு வேண்டுமோ அங்கு அமரலாம். எனக்கும் கூட முன் இருக்கையில் அமரலாம் என்று எண்ணம் இல்லை அதென்ன பெண்கள் என்பதால் நாங்க விட்டுக்கொடுக்க வேண்டுமா? அப்படியே அவர்களுக்கு அசவுகரியமாக இருந்தால் எங்களிடம் சொல்லி இருக்கலாம். தெளிவாக சொல்லிவிட்டேன் அலுவலகத்தில் இருந்து எனக்குதனியாக எதுவும் அறிவிப்பு வரவில்லை, நான் எங்கு உட்க்கார வேண்டும் என்பது நான் முடிவு செய்ய வேண்டும். இல்லை அதை மற்றவர் முடிவெடுத்தால் அதை பின்னர் பார்க்கலாம் என்று கூறினேன்.

அப்புறம் இந்த மகளிர் தினம் பெண்களுக்கு என்று ஒரு தினம், அன்று பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த என்னை போன்ற ஆண்கள் எல்லோரும் எதாவது செய்ய வேண்டும் என்று, இல்லை ஒரு மொக்கை பதிவு எழுதி வாழ்த்து செய்ய வேண்டும்.

சில தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கும். அவை என்ன என்றால் கோலப்போட்டி, சமையல் சிறப்பு நிகழ்ச்சி, சிறப்பு பட்டி மன்றம் இன்று இந்த காலத்தில் வீட்டை பராமரிப்பது எப்படி போன்ற மொக்கையான நிகழ்ச்சிகள். இவர்களே பெண்கள் என்றால் இவ்வளவுதான் சமையல் நிகழ்ச்சி,கோலப்போட்டி, அழகுப்போட்டி, மேக் அப் செய்வது எப்படி போன்ற மிக சிறந்த நிகழ்ச்சிகள் மட்டுமே தர வேண்டும் என்று எப்படி நினைக்கலாம். பெண்களுக்கு என்று எதற்கு தனியாக நிகழ்ச்சிகள்? தனியான சமையல் நிகழ்ச்சி போன்று ஒதுக்கி கொடுப்பது எதற்கு யார் இதை முடிவெடுப்பது?? முதலில் இப்படி இவர்களே தனியாக பிரித்துக்கொள்வதை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் பொதுவாக கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பெண்கள் மலர் என்றால் அதில் பெண்களுக்கென்று செய்திகள் இருக்க வேண்டும். சரி ஆனால் அவை எல்லாம் சமையல், அழகு சாதனைகள், கோலங்கள், இவை தவிர்த்து வேறு எதுவும் ஏன் இருப்பது இல்லை, இவைகள்தான் பெண்களுக்கென்று எதற்கு ஒரு வரைமுறை?
எல்லோரையும் குறை சொல்லவில்லை ஆனால் சராசரி பெண்கள் மனதில் சுய உரிமை என்றால் ஆண்களை எதிர்த்து பேசுவது, பெண்கள் குழு அமைப்பது என்ற எண்ணங்களை தவிர்த்து எல்லோரும் சாதாரணம் பாகுபாடுஇல்லை என்ற நினைப்பை எப்போது வளர்ப்பது?

பெண்களை பற்றி தவறாக என்னும் ஆண்கள் அதிகமுள்ள இந்த ஊரில் பெண்களை பற்றி பெண்களே தவறாக எண்ணும் நிலைமையும் இருக்கின்றது, இவர்களே ஒரு வேலி அமைத்துக்கொண்டு அதில் வெளியே வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்.பெண்களே தயவு செய்துகுருகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள், ஆண்களே அவ்வாறு வெளியே வரும் பெண்களை வரவேற்க தயாராக இருங்கள் ஆனால் தயவு செய்து மறுபடியும் அவர்களை வட்டத்துக்குள்ளே தள்ள முயற்சி செய்யாதீர்கள்.

இந்த பதிவு எழுதப்பட்ட நோக்கம் யாரையும் குறை கூறுவதற்கு அல்ல மேலாக குறைகளை தெரிந்து மேலே வருவதற்கு. சொல்ல வந்த முறையில் சொல்ல வந்த கருத்துகளை சரிவர கொண்டு சேர்க்கவில்லை என்றால் மன்னிக்கவும். எனக்கு தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்த மட்டுமே இந்த பதிவு, யாரையும் புண்படுத்தவோ இகழ்ந்து பேசவோ அல்ல.

மேற்கூறிய நிகழ்வுதான் என்னை இந்த பதிவை எழுத தூண்டியது. மிக சிறிய நிகழ்வு ஆனால் என்னுள் இவை எழுப்பிய கேள்விகள் எத்தனை? பெண்கள் என்றால் முன்னாள் உட்க்கார வேண்டும் என்று முடிவு செய்வது செய்தது யார்?

ஆண்கள் என்றால் பின்னால் உட்க்கார வேண்டும், பெண்கள் சொன்னால் உடனே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்க சொன்னது யார்?
எதற்கு பெண்களுக்கு சலுகைகள்?

அவர்களும்படிக்கிறார்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் சிறப்பு சலுகைகள்.

வருமானத்தில் கூட வரி பிடிப்பதில் சலுகைகள்.
சமையல் என்றால் பெண்கள் செய்ய வேண்டும் என்பது யார் முடிவெடுத்தது??
கேள்விகள் ஆயிரம் பதில் ஏதும் இல்லை.

ஒரு சுய புலம்பல் போன்ற பதிவு இது, முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அளவுக்கு பெருசா ஒன்னும் இல்லை

4 comments:

Karthik said...

//கல்லூரிகள், பள்ளிகள் பெண்களுக்கென்று தனி

சென்னையில சொல்லவே வேணாம். :(

இந்த பதிவின் பல இடங்களில் எ.கொ.சா இது? என்று தோன்றியது.

DHANS said...

//இந்த பதிவின் பல இடங்களில் எ.கொ.சா இது? என்று தோன்றியது.
//

புரியல கார்த்திக் எ.கொ.சா என்றால், ) எதுக்கு கொலைவெறி சகா என்று அர்த்தம் பண்ணிகொள்ளலாமா?

ஸ்ரீ said...

காந்தி சொன்னது போல் இரவில் தனியாக ஒரு அழகான பெண் நகையுடன் எந்தவொரு பயம் இல்லாமல் வந்தால் அன்றுதான் உண்மையான சுதந்திரம். ஆனால் இன்று சென்னையில் பெண் தனியாக வரலாம், தவறில்லை. ஆண்கள் வரக்கூடாது. வந்தால் போலீசாரிடம் சிக்குவோம். நானே பலமுறை மாட்டியுள்ளேன்.

அதேபோல் பலமுறை பார்த்துள்ளேன், பெண்கள் helmet இல்லாமல் வரலாம், தவறில்லை. ஆனால் ஆண்கள்?

DHANS said...

//இன்று சென்னையில் பெண் தனியாக வரலாம், தவறில்லை. ஆண்கள் வரக்கூடாது. வந்தால் போலீசாரிடம் சிக்குவோம்//

உண்மைதான், சில சமயம் நானும் கூட.... நிண்டு இரவு என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் நேரத்தில் பொழுது போகாமல் வெளியே கிளம்பி சென்றால் பல கட்ட விசாரணை, இதற்காக நான் எப்போதும் தகுந்த பேப்பர்களுடன் செல்கிறேன்

//பெண்கள் helmet இல்லாமல் வரலாம், தவறில்லை. ஆனால் ஆண்கள்?
//
ஆண்கள் helmet போட்டு வந்தாலும் தவறுதான், காசு புடுங்கனும் என்றால் எல்லோரிடமும் புடுங்க வேண்டியதுதான, இதில் எங்கு தவறு ஆரம்பிக்கிறது எல்லாம் இள வயதில் தான், வளர்க்கற விதத்தில் வளர்த்தா எல்லாம் சரியா போகும்