Tuesday, April 21, 2009

மூன்று மாதத்தில் உங்களுக்கு உலகில் இடம் இல்லை என்றால்?

இன்னும் மூன்று மாதத்தில் நீங்கள் இல்லை என்றால் என்ன எல்லாம் செய்வீர்கள் என்று ஒரு todo லிஸ்ட் போட்டால் எப்படி இருக்கும். இந்த கேள்வியை இன்று பார்த்த இந்த வலைப்பூவில் பார்த்தேன் அதை பார்த்து எழுதிய பதிவு

கடந்த மாதம் இந்த கேள்வி கேட்கப்பட்டு இருந்தால் என்னலன்ன பதில்.

1. Ford Mustang கார் வாங்க வேண்டும்

2. எதாவது ஒருகம்பனிக்கு MD ஆகவேண்டும்

3.குடும்பத்தோடு ஒரு வாரம் ஊர் சுற்ற வேண்டும்

4.ஒரு நெடுந்தூர பயணம் மேற்க்கொள்ள வேண்டும் எனது காரில், அதில் தாஜ் மகாலை பார்க்க வேண்டும்

5.கல்லூரி நண்பர்களை ஒன்றிணைத்து சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

6. Australia மற்றும் Denmark செல்ல வேண்டும் ( டென்மார்க்கில் உள்ள எனது நண்பருடன் ஒரு நாளை கழிக்க வேண்டும் )

7. ஒரு முறையேனும் காதல் பண்ண வேண்டும்

8. ஒரு மாதமேனும் ஏதாவது ஒரு கல்லூரியில் MBA படிக்க வேண்டும்

9. எதாவது ஒரு வாலிபருக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையோ அல்லது சாதிக்க சிறு துரும்பையோ கிள்ளி போட வேண்டும்

10. எனது வாழ்வில் என்னால்மறக்க முடியாத அளவுக்கு பணத்துக்காகவும் சொத்துக்க்காகவும் எங்களை துன்பப்படுத்தின எனது ஒரு உறவினரை எனது காலில் விழ வைக்க வேண்டும்

இதுவே இப்போது கேட்டால்

மூன்று மாதத்திற்கு அப்புறமும் இருக்க போராட வேண்டும் என்று பத்து முறை சொல்வேன். ஆமாம் எனது தேவை எனது குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் எப்போதும் தேவை. இந்த போராட்டத்திலேயே மேற்கொண்ட பத்து செயல்களையும் அடைந்து அதையும் மீறி பல செயல்களை அடையலாம் ஏன்று நினைக்கிறேன் .

10 comments:

Karthik said...

well, interesting list. :)

can i say something?

7. ada!

8. liba is best in chennai. and chances of you falling in love is great there. :)

9. i'm all urs. :)

10. this is really great. even me also wish this one. :)

ச.பிரேம்குமார் said...

தனா, கடைசி வரி ரொம்பவே மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. உங்களுக்கும் யாவும் நலமாகவே நடக்க வாழ்த்துகள்

DHANS said...

என்ன கார்த்திக் அட சொல்லிடீங்க..

LIBA நல்ல இடம் தான் அதன் இந்த வார இறுதியில் சென்று விண்ணப்பம் வாங்கி வர போகிறேன். வேலைய விட்டுட்டு படிக்க முடியாது ஆனா executive diplamo படிக்கலாம் என்று இருக்கிறேன். காதல் பண்ண சந்தர்ப்பம் கிடைக்குமா? நமக்கு காதல் எல்லாம் பெண்களின் மேல் இல்லை.

எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்நோக்குகிறேன்.

DHANS said...

வாழ்த்துகளுக்கு நன்றி பிரேம். எல்லோருக்கும் நலமாக நடக்கவேண்டுகிறேன் :)

மதிபாலா said...

அட போட வைக்கிற பதிவு. சமீபத்தில் நிக்கோலஸ் கேஜ் நடித்த நோயிங் திரைப்படத்தில் 50 ஆண்டுகள் படிக்க ஒரு பள்ளியில் ஒரு பேப்பரில் எழுதி புதைத்து விடுவார்கள்.

அதைப் போல

DHANS said...

நன்றி திரு மதிபாலா

நானும் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்த இன்னொரு பதிவை படிக்கும்போதுதான் இதை எழுதனும் என்று நினைத்து எழுதினேன்.
நினைக்கும்போதே நாம் சாதிக்க இன்னும் அவ்வளவு இருக்கிறது என்று யோசிக்க தூண்டுகிறது

விக்னேஷ்வரி said...

மூன்று மாதத்திற்கு அப்புறமும் இருக்க போராட வேண்டும் என்று பத்து முறை சொல்வேன். //

இது பாயிண்ட்.

ச.பிரேம்குமார் said...

//நமக்கு காதல் எல்லாம் பெண்களின் மேல் இல்லை.
//

தெளிவா சொல்லுங்க தனா.... மக்கள்ஸ் தப்பா எடுத்துக்க போறாங்க ;-)))

DHANS said...

மன்னிக்க, நமக்கு காதல் எல்லாம் இப்போது பெண்களின் மேல் இல்லை கார்களின் மீது.

மக்களை பத்தி நமக்கு என்ன அக்கறை, இருந்தாலும் நம்ம தகவல் தவறாக சென்றடைய கூடாதல்லவா?

DHANS said...

இது பாயிண்ட்.
//

உண்மைய சொல்லணும் என்றால் இதற்கும் பத்து தேவைகளை வைத்திருந்தேன் ஆனால் அவை எல்லாத்துக்கும் அடிப்படையாய் இருந்தது இது மட்டுமே அதான்.