Monday, April 13, 2009

வார இறுதி

இந்த வார இறுதியில் மூன்று படங்களை பார்த்தேன்.

முதலில் fast and furious 4 : இந்த பட வரிசையில் நான்காவது படம். முதல் மூன்றைபோல இல்லை. படம் முழுவதும் செண்டிமெண்ட் காட்சிகளும் பாதி படத்துக்கு வசனங்களும் மட்டுமே வருகின்றன. அடிப்படை கார் வெறியனான எனக்கு கார்கள் வரும் காட்சிகளோ, சேசிங் காட்சிகளோ அதிக இல்லாதது குறை. முதலில் வரும் கடத்தல் காட்சி மிக அருமை.. மூன்றாம் பகுதியே அவ்வளவாக இல்லாமல் இருந்தது நான்காம் பகுதி ஏமாற்றம் அளித்தது. vin diesel மட்டும் மின்னுகிறார் அதுவும் அவர் அந்த muscle காரில் பண்ணும் வீலிங் அருமை.

தற்போது நண்பரின் maruti esteemஐ ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறோம் அதற்கு ஏற்ற கலர் இந்த படத்தில் கிடைத்துவிட்டது. மற்றேபட்ட படி சொல்லிகொள்ளும்படி ஒன்னும் இல்லை.

இந்த படம் தந்த ஏமாற்றத்தில் வீட்டுக்கு வந்து இதன் இரண்டாம் பாகமான 2fast anf 2 furious படத்தை பார்த்தேன். இதை பார்த்து முடித்ததும் தான் படம்பார்த்த ஒரு நிறைவு வந்தது. அந்த கார்களின் custom டிசைனும் அதை டியூன் செய்திருந்த விதமும் அட்டகாசம். அதிலும் முதலில் வரும் ரேசில் அந்த பாலத்தில் பறக்கும் காட்சி. ஹ்ம்ம் அப்பப்ப இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டும். நான்காம் பாகம் போகும்போது நண்பருடைய இரவல் காரில் சென்றிருந்ததால் பத்திரமாக ஓட்டி வந்து சேர்க்கும் வண்ணம் மெதுவாக வந்தோம். பெட்ரோல் வேறு இல்லை அந்த வண்டியில்.

வழக்கம் போல என்னுடைய காருக்கு சில உதிரி பாகங்களை மாற்றி வண்டியை இன்னும் டியூன் செய்யலாம் என்று இருக்கையில் நண்பனின் அவசரத்தால் அடிபட்டு விட்டது, இப்போது அந்த செலவை வண்டியை சரி செய்ய செய்தாகிவிட்டது. எல்லோருக்கும் ஒரு விண்ணப்பம் வண்டியை ஓசி மட்டும் எப்போதும் கொடுக்காதீர் மன(பண) கஷ்டம் வரும்.


சரி நாமும் நல்ல படம் பார்ப்போம் என்று நேற்று shawshank redemption படம்பர்த்தேன், அற்புதமான படம், ஆரம்ப காட்சியில் கோர்ட்டில் நடக்கும் காட்சியை வைத்து படம் ஒரு விசாரணை படம் போல என்று நினைத்தேன் ஆனால் என் எண்ணத்தை முற்றிலும் ஒளித்துக்கட்டியது. பின்னர் நடக்கும் ஜெயில் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தாலும் அடுத்து நடக்கப்போவதை மனதுக்குள் அடிக்கடி நினைவு வந்துவிட்டது. . சுரங்கம் அமைத்து தப்பிப்பது பற்றி நினைக்க வில்லை, ஆனால் அந்த சினிமா நடிகை படத்துக்கு பின்னால் என்னமோ இருக்கும் என்று நினைத்தேன். படம் தந்த பாடம் எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர். என்ன அற்புதமான செய்தி. மிக நல்ல படம், எப்போதும் நண்பர்களுக்கு சிபாரிசு செய்யும் அளவிற்க்கு நல்ல படம்.

படத்தில் வரும் ஒரு நல்ல வசனம் "நான் நேர்மையான வங்கி அதிகாரி ஜெயிலுக்கு வரும் முன்னர், அனைத்து திருட்டு தனத்தையும் ஜெயிலுக்கு வந்த பிறகே செய்கிறேன்".

"நான் ஏன் ஜெயிலுக்கு வந்தேன்?? வக்கீல் சரியில்லாததால், இங்கு வந்த அனைவரும் அப்பாவிகள்"

7 comments:

ச.பிரேம்குமார் said...

//வண்டியை ஓசி மட்டும் எப்போதும் கொடுக்காதீர் மன(பண) கஷ்டம் வரும்//

Never Hesitate to Say NO when you want to say NO

ச.பிரேம்குமார் said...

ஆனா நெருங்கிய நண்பனா இருந்தா இந்த பிரச்சனையே இல்லையே

ஒன்னு கண்டுக்காம விட்டுடலாம், அல்லது அவரையே சரிசெய்து கொடுக்க சொல்லலாம் :)

DHANS said...

நெருங்கிய நண்பன் தான் அதனால் பிரச்சனை இல்லை

Karthik said...

செமஸ்டர் வந்துட்டதால மூவிக்கு ஸ்பெல்லிங்கே மறந்துபோச்சு. :( இனிமேல் தான் பார்க்கனும்.

அப்புறம், எனக்கு நீங்க முன்னாடி கொடுத்த வீக் என்ட் ஐடியாஸ் ஞாபகம் வந்தது. :)

ராஜ நடராஜன் said...

கார் சேஸிங்க் இல்லாம எனக்கு ஒரு படம் பேரு சொல்றது:)

DHANS said...

செமெஸ்டர் தான் எங்களுக்கு சினிமா பார்க்க சரியான டைம். தினமும் பரீட்சை எழுதிவிட்டு படம் பார்க்காவிட்டால் அடுத்த பரீட்சைக்கு தயாராக முடியாது.

உங்களுக்கு ஐடியா குடுத்த எனக்கு இப்போ என்ன செய்வது என்று தெரியவில்லை.

DHANS said...

நன்றி ராஜ ராஜன்
கார் சேசிங் இல்லாம எந்த மாதிரியான படம்

சண்டை படமா? சிரிப்பு படமா?? தன்னம்பிக்கை படமா?

எனக்கு தெரிந்த சில படங்கள்
shawshank ridemptin
green mile
the terminal
forrest gump
anger management
persuit of happiner
taken