Wednesday, April 15, 2009

பெண்கள் பற்றிய ஆண்களின் எண்ணங்கள்

இந்த பதிவு முழுவதும் பெண்களை பற்றி ஆண்களின் நினைப்பு பற்றித்தான். எனக்கு தெரிந்து ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணை பற்றி ஒவ்வொரு ஆணும் எப்படி நினைக்கிறான் என்பதை எளிதாக கண்டுபிடித்து முடிந்துவிடுகிறது. உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும், ஆமாம் இந்த உண்மையும் கூட.

எனக்கு தெரிந்து நமது சமூகத்தில் நம்முடன் இருக்கும் ஆண்களில் மிக குறுகிய சதவீதத்தினரே பெண்களை பற்றி ஒரு நல்ல எண்ணம், பார்வை வைத்துள்ளனர். பெரும்பாலானோர் ஒருவிதமான தாழ்வான, மோசமான, அயோக்கியமான பார்வையே கொண்டுள்ளனர். இதில் படித்தவர் படிக்காதவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல்.

இந்த பதிவை எழுத காரணம் எனது இதனை ஆண்டு கால வாழ்க்கையில் இவாறன ஆட்களை பார்த்து பழகி பின்னர் விலகி சலிப்படைந்து ஒதுங்கி இருந்த நேரத்தில் மறுபடியும் ஒரு வெறுப்பு. ஆமாம் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பையன். சிறு வயது இப்போதுதான் பயிற்சியில் இருக்கிறன் ஆனால் நல்ல படிப்பு, அறிவு அதனால் தான் அலுவலகத்திலேயே அவனை மேல்படிப்புக்கு அனுப்புகின்றனர். அவனிடம் ஒரு நல்ல மதிப்பு வைத்திருந்தேன், அவனுக்கும் காதல் இருந்தது, தினமும் அலுவலகத்திலிருந்து செல்கையில் போகும் வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுவான், அவனுக்காக அந்த பெண் நின்றுகொண்டு இருக்கும். அத்தகைய பையனின் எண்ணங்கள் நன்றாக இல்லை, அவன் பெண்கள் மீதான எண்ணங்கள் மிக மோசமானவை. முன்பே சிறிது சிறிதாக அவனின் பேச்சகளில் இருந்து இவனும் சராசரி மனிதன் போல இந்த சமூகத்தின் போக்கினால் மாற்றப்பட்டவன் இருந்தாலும் இந்த படிப்பாலும் பழக்கத்தாலும் அதில் இருந்து வெளி வந்துவிடுவான் என்று இருந்தேன். நேற்று அவன் கூறிய சில பேச்சுக்கள் அவன் எப்போதும் மாறப்போவது இல்லை என்று தெரிந்துவிட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அவன் பேச்சு இருக்கிறது. மறுப்பு கூறி அவன் பேசுவது தவறு என்று சொல்ல முற்பட்டாலும் அவன் எனக்குபுத்தி சொல்கிறான்.

பெரும்பாலான ஆண்கள் பெண்கள் என்பவர்கள் ஆண்களுக்கு அடிமை என்ற நினைப்பிலேவே வளர்ந்துவிடுகின்றனர் இல்லை வளர்க்கப்படுகின்றனர். காலம் மாறிவரும் வேளையிலும் இவர்கள் படித்து பெரிய வேலையில் பன்னாடு நிறுவனத்தில் இருந்தாலும் மனதை மட்டும் மாற்றாமல் வைத்துள்ளனர்.

ஒரு பெண் மற்றவர்களை போல ஆண்களிடமும் நன்றாக பேசினால் அது மற்ற ஆண்களுக்கு தவறாக தெரிகிறது. அப்படி பேசாமல் தனியாக சென்றாலும் அதுவும் தவறாக தெரிகிறது.
இவர்கள் பார்வையில் அனைத்து பெண்களும் ஒழுக்கம் கேட்டவர்கள், ஆனால் இவர்கள் வீட்டு பெண்கள் மட்டும் ?????

இப்படி பேசும்போது தங்கள் வீட்டு பெண்களை ஒரு நிமிடம் நினைத்தால் இப்படி பேசும் எண்ணம் வருமா??

தண்ணி அடித்தும் புகை பிடித்தும் கெட்ட பல ஆண்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் அவர்களில் கூட சில பேர் பெண்களைப்பற்றி நல்ல எண்ணம். வைத்திருக்கின்றனர், ரவுடித்தனம் செய்து கல்லூரியில் கெட்ட பெயர் எடுத்த என் சீனியர்கள் பலர் பெண்களை பற்றி நல்ல எண்ணம் வைத்துள்ளனர் ஆனால் நன்றாக படித்து கேட்ட பழக்கமில்லாமல் இருக்கும் பலபேர் பெண்களை பற்றி மோசமான எண்ணங்களை வைத்திருக்கின்றனர்.

உடன் படிக்கும், வேலை செய்யும் பெண்களிடம் நன்றாக இனிக்க பேசிவிட்டு பின்னர் அவர்கள் அகன்றதும் அவர்களை பற்றியும் அவர்களின் அங்க அவயங்களைபற்றியும் மோசமான எண்ணங்களை பேசும் பலரை பார்த்து மனம் வெம்பியுள்ளேன். இவங்களும் திருத்த போவது இல்லை சம்பந்தப்பட்ட பெண்களிடம் ஒரு விதமாக தெரியப்படுத்தியும் பயன் இல்லை அவர்கள் புரிந்து கொள்வதாய் இல்லை. நன்றாக தெரிந்த பெண்ணிடம் இப்படி கூறுகையில் அதையும் அவன் possesiveness வந்து பேசுகிறானென்று தட்டை திருப்பி போட்டு நம்மை காலி செய்து விட்டனர்.

எப்போதும் ஒதுங்கியே இருக்கும் என்னை மனதை மாற்றி மறுபடியும் மற்றவர்களுடன் சகஜமாய் பழக சொல்லி ஒரு நண்பர் வற்புறுத்தினார். ஆனால் இரண்டு மாதத்திலேயே மனது வெறுத்து விட்டது, உண்மையாய் சொல்கிறான் இந்த சமூகம் ஆணாதிக்க சமூகம் மட்டுமல்ல, பெண்களை அற்ப்பமாய்,புழுவாய் மிக கேவலமாய் எண்ணும் ஒரு கேவலமான சமூகம். மெத்த படித்து இந்த வேளையில் வந்தமரும் இவங்களும் இப்படித்தான் இருக்கிறாங்கள். நீங்கலாம் என்னடா படிச்சீங்க?? ஒழுக்கமும்,நல்ல எண்ணமும் இல்லாவிடில் நீ உன்னை மட்டுமே மட்டுமே சந்தோசப்படுத்தி மற்றவரை துயரத்தில் கொண்டு விடுவாய், காலங்கள் கடந்தால் பின்னர் வருத்தங்களே வரும்.


ஒரு சாரர் இப்படி என்றால் இன்னொரு பக்கம் பெண்கள் என்றால் உடனே வந்துவிடும் இறக்கம். வண்டியில் அடிபட்டு விழுந்தாலும், வரிசையில் நின்றாலும், பேருந்தில் நின்றாலும், என்ன செய்தாலும் பெண்கள் அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று. பேருந்தில் ஏறினால் முதல் மூன்று வரிசை பெண்களுக்காம், அடேய் இது எல்லாம் முன்னுரிமை இல்லையடா என்று கத்தலாம் போல இருக்கிறது.விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து வெறுத்து போயாச்சு பாஸு. இந்த பதிவை படிக்கும் பெண்களுக்கு உங்களிடம் பழகும் ஆண்களில் பெரும்பாலானோர் மோசமான எண்ணத்துடனே பழகலாம் எச்சரிக்கையாய் இருங்கள். இந்த பதிவை படிக்கும் ஆண்களுக்கு. நீங்கள் இந்த பதிவில் கூறியுள்ள வகையை சேர்ந்தவராக இல்லாவிடில் வாழ்த்துக்கள், நீங்கள் இந்த மோசமான எண்ணத்துடன் இருபவராயின் உங்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வழி ஏதும் இல்லை.

படிக்கும் பலர் நீ என்ன யோக்கியனா? என்று கேட்க நினைக்கலாம் என்னைப்பொருத்த வரையில் நான் யோக்கியன்தான், மற்றவர் பார்வைக்கு எப்படி வேண்டும் என்றாலும் நான் தெரியலாம், தனி மனித ஒழுக்கத்துடன் என்னால் முடிந்த வரை நேர்மையாகவும் இல்லாவிடில் ஒதுங்கியும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவன். நீ பண்றது தப்பு, நினைப்பது தப்பு என்று தெரியாத அளவுக்கு உன் எண்ணங்கள் இருந்தால் உன்னை விட்டு விலகுவதை தவிர வலி இல்லை, உன்னை திருத்துவது என் வேலை இல்லை, அதை உன் அனுபவம் பார்த்துக்கொள்ளும். இந்த பதிவை படித்து நான் ஒரு பழம், சோம்பு என்று நினைத்தால் அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை.

13 comments:

ச.பிரேம்குமார் said...

என்ன செய்யுறது தனா? This society has got a lot of morons. அவர்களிடமிருந்து விலகுவதை விட அவர்களுடன் இருந்து அவர்கள் போக்கை கவனித்தால் நமக்கும் சில சமயம் பயனுள்ளதாக இருக்கும். Just see to that they dont Influence you

முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்தலாம்

DHANS said...

அப்படிப்பட்டவர்களிடமிருந்து எந்த பயனுமிருக்கபோவது இல்லை, அப்படி பயன் என்று நினைத்தாலும் அது கண்டிப்பாக ஒரு வக்கிரத்துடன் மட்டுமே இருக்கும்.

என்னைப்பொறுத்தவரை விலகி இருப்பது நமக்கு நல்லது. நல்வைப்படுத்துதல் என்பது தேவை இல்லாதது, அவர்களை மாற்ற முடியாது

Insignia said...

Hmm.. I took a loooooooooooong time to read. Tamil is tough! But I wanted to read this post.

As you say, its the society, our culture, the bringing up. There are lots of guys who haven't had a formal education but are respectful towards women. At the same time, there are heck a lotta guys who are smart, intelligent, know the world yet are narrow minded and don't see women more than a piece of flesh. Shun them all!

DHANS said...

i dont think it took you a long time, since u have completed in 3 hourss i beleive.

yeah its all about what you understand, there are number of guys are like that, they speak with a women with a vulgarity in their mind.

Karthik said...

இந்த மாதிரி இருப்பவர்களைப் பார்த்து எனக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. சில சமயம் நம் ப்ரெண்ட்ஸே அப்படி பேசும்போது என்ன பண்றதுன்னே தெரியாது. :(

DHANS said...

வருகைக்கு நன்றி கார்த்திக்

இத்தகைய அதிர்ச்சிகள் பழகிப்போய்விட்டது, என் நண்பர்களும் (???) பலர் அப்படி இருந்தனர், அவர்களை விட்டு விலகவே வேண்டி இருந்தது, என்னால் அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை :(

ச.பிரேம்குமார் said...

தனா, அவர்களுடன் பேசும் போது எப்படிப்பட்ட வக்கிரங்கள் நிறைந்த உலகம் இது என்று உங்களால் அறிய முடிகிறதே. அதவே ஒரு பயன் தானே. இந்த பதிவும் கூட அப்படிப்பட்ட ஒரு பயன் தானே

நாம் பூனையாகி போய் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. ஆக, என்னவெல்லாம் நடக்குதென்று தெரிந்து வைத்து கொண்டால் நல்லது தான்

DHANS said...

அவர்களுடன் பேசி அவர்களை பற்றி தெரிந்து கொண்டால் மட்டுமே அவர்களிடம் இருந்து விலகுகிறேன்.

வெறுமெனே கண்ணை மூடிக்கொள்வது என்பது தவறுதான் ஆனால் தவறானவர் என்று தெரிந்தும் பழகுவது மிக தவறு

பட்டாம்பூச்சி said...

என்ன செய்வது?
இப்படியும் சிலபேர் இருக்கும் உலகம்தான் இது .

அமுதா கிருஷ்ணா said...

yes....100% your statements are correct ....but we are seeing some nallavargal like you...coins have two sides...

அமுதா கிருஷ்ணா said...

yes....100% your statements are correct ....but we are seeing some nallavargal like you...coin have two sides...

DHANS said...

நன்றி அமுதா கிருஷ்ணா

என்னை நல்லவன் என்று சொன்னதற்கு :)

ஆனால் அந்த நல்லவர்கள் சதவிகிதம் மிக மிக குறைவு. அந்த எண்ணிகையும் இந்த பெரும்பான்மையானவர்கலாய் குறைக்கப்படுகிறது.

DHANS said...

நன்றி பட்டாம்பூச்சி

இப்படியும் சில பேர் இல்லை இப்படியும் பலபேர் என்றுதிருத்தி சொல்லுங்கள்