Wednesday, April 22, 2009

நானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன்னது (சங்கமம் போட்டிக்காக)

சிவா கந்தசாமி அண்ணனுடன் சேர்ந்து ஊருக்கு போவது என்று முடிவெடுத்து விட்டான், இனியுமிங்கு வேலை செய்வது என்பது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தான்.என்ன இவர்கள் நாம் படிக்க வில்லை என்பதாலேயே இவர்கள் இப்படி நடத்துகிறார்கள், ஆனால் எனக்கு படிக்க பிடிக்கவில்லை என்பதே உண்மை. கந்தசாமி அண்ணன் கம்பனியிலேயே சூப்பர்வைசர் வேலை இருக்கிறதாம் அதில் சேர்த்துவிடுவதாக சொல்லியிருந்தார்.

சிறு வயதில் இருந்தே அவனுக்கு பாடத்தில் கவனம் செல்ல வில்லை, படிப்பான் ஒரு அம்பது அறுவது மதிப்பெண் எடுத்து தேறுவான், சில சமயம் பெயில் ஆகி விடுவான். கணக்கு என்பது அவனுக்கு வரவே வராதது. எப்படியோ 12 வகுப்பு வரை வந்துவிட்டான். தேர்வு முடித்து காத்திருந்தவனுக்கு பேரிடி வந்தது ஆமாம் அவன் தந்தையும் மாமாவும் பேருந்து விபத்தில் பலி ஆயினர்.

குடும்பத்தையே புரட்டி போட்ட நிகழ்வு அது, அதுவும் இரண்டு குடும்பத்தை, அன்றில் இருந்து சிவா ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தான், கல்லூரி கல்வியை தொலைதூர கல்வியில் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அருகில் இருந்த கடைக்கு வேளையில் சேர்ந்தான், கணக்கு எழுதும் வேலை, வரவுசெலவு கணக்கு எல்லாம் இல்லை ஒரு ஸ்டோர் கீபர் வேலை போல. அது பிடிக்காமல் பின்னர் ஒரு இரு சக்கர வாகனம் சரி செய்யும் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை செய்தான், என்றோ படித்து வைத்த கம்பியுட்டர் வேலை தேடி கொடுத்தது.

அவனுக்கு சர்வீசுக்கு வரும் வாகனத்தை என்ட்ரி போடும் வேலை. என்ட்ரி போட்டு பின்னர் சூப்பர் விசர் சொல்லுவதை சோப் கார்டில் என்டி போடா வேண்டும், பின்னர் மெக்கானிக் எழுதி வைக்கும் பொருட்களை என்ட்ரி போட்டு ஸ்டோருக்கு அனுப்ப வேண்டும்.
சாதாரண வேலை என்றாலும் அவனுக்கு பிடித்தமான வேலை, ஆமாம் மதியமே எல்லா என்ட்ரி வேலையும் முடிந்துவிடும் மதியத்துக்கு பிறகு மற்றவரிடம் பேசி அவர்கள் வேலை செய்வதை பார்ப்பான். பிடித்து போய்விடும். இப்படியே போகும்போது சிறிது சிறிதாக அவனும் வேலை கற்றுக்கொண்டுவிட்டன் ஆனால் அப்போது அவனுக்கு முன்னேற வேண்டும் என்று வெறி இருந்தது அதனால் அவன் அடுத்து ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை சேர்ந்தான், அப்போதுதான் அவனுக்கு இந்த வேலை பிடிக்காமல் இருந்தநேரம் வேலை அதிகம் குறைந்த சம்பளம், அங்கு சர்வீஸ் கொண்டு வரும் கார் diraivargalukku அவனை விட சம்பளம் அதிகம்.

ஒரு நாள் வேலையை முடித்து வெளியே சென்று பேருந்தை பிடித்து வீட்டுக்கு செல்ல நினைத்து பேருந்தில் நின்று கொண்டு இருக்கையில் ஒரு லாரி அவனது பேருந்தை இடிக்கும் போல வந்து நின்றது, பயணியர் அலறிவிட்டனர், இரண்டு ஓட்டுனருக்கும் சண்டை முற்றி பேச்சு தடித்தது.

'ஏண்டா உன் வண்டி அடிபட்டா ரெண்டு உசுருதான் அதிலும் ஒன்னு எப்படியும் எட்டி குதிச்சு ஓடிரும், அறிவிருக்கா இங்க அம்பது உசுரு இருக்குடா, பாத்து வரமாட்டியா' என்று இவனும் பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாய் குரல் கொடுத்தான். யாரும் உதவிக்கு வராத நிலையில் பேருந்து ஓட்டுனருக்கு இவன் குரல் பிடித்து போய்விட அவனிடம் பேசி பழக ஆரம்பித்தார். தினமும் அந்த பேருந்திலேயே கிளம்பி வீடு திரும்பும் அளவுக்கு நட்பு வலுத்தது.

ஒரு விடுமுறை நாளில் வெளியூர் சுற்றுலா செல்ல அவர் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார்.தனியாக செல்வதால் அவனையும் அவர் அழைக்க இவனும் கிளம்பினான். குற்றாலம் சுற்றுலா சென்ற பேருந்து, கல்லூரி மாணவ மாணவியர் இருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அவன் பேருந்தை பற்றி ஓரளவிற்கு அறிந்திருந்தான், அங்கு அந்த பேருந்தில் சில மாற்றங்களை செய்து அழகு படுதியிருந்தான்.சிவாவிற்கு இதெல்லாம் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. முன்னால் உள்ள கிரில்லில் கயிறை மாற்றி மாற்றி கட்டுவது, லைட்டை அங்கங்கு மாடி அழகு பார்ப்பது என்று அழகு படுத்துவான். பேருந்து பயணமும் அவனுக்கு பிடித்த பயணம் ஆகியது, எப்போதும் ஒரு பரபரப்பாக இருக்கும்.

ஒவ்வொரு பயணமும் வித வித மனிதர்களை கொண்டு இருக்கும் , ரயில் பயணங்களை போல இலாமல் ஒரே மாதிரியான பயணிகள் ஏறியவுடன் படுத்து தூங்குவது, கீழ் படுக்கைக்கு சண்டை போடுவது என்று இல்லாமல். எப்போதும் வெளியே வேடிக்கை பார்க்கலாம், இரவிலும் பார்க்கலாம், ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் பேருந்து பயணங்களில். ஜன்னலில் அழும் குழந்தைகள், ஊருக்கு செல்லும் மனைவிகள், வெளியூர் செல்லும் மாணவர்கள் என்று எலோருக்கும் பேருந்து பயணம் என்பது பிடித்தமான ஒன்று. அதுவும் நல்ல ஓட்டுனரும் பேருந்தும் கிடைத்து விட்டால்.

அன்று அப்படியே அந்த கல்லூரி மாணவ மாணவியரை அழைத்து சென்று திரும்பிக்கொண்டு இருந்தனர். ஹ்ம்ம் சிவாவிற்கு தானும் படித்திருந்தால் இப்படி தானும் வந்திருப்போம் என்று நினைத்தான். தவிர்க்க முடியாமல் அவனுக்கு தந்தையின் நினைவும், பேருந்து விபத்தும் நினைவுக்கு வந்தது. மனதே சரி இல்லை.அப்போதுதான் அவன் தந்தை அடிபட்ட விபத்து நினைவுக்கு வந்தது.இதுபோல ஒரு சுற்றுலா பேருந்துதான், வேண்டும் என்றே தவறாக வந்து தந்தை பயணம் செய்த வண்டியின்மேல் இடித்து விட்டது. அவன் அன்றிலிருந்து பேருந்து விபத்துகளை பார்த்தாலே ஒரு வித பதட்டத்துக்கு உள்ளாவான்.தந்தைமேல் கோவம் வரும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி ஊராரின் பேச்சுக்கு இடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக சென்று விட்டார் என்று.

அன்றும் அப்படியேதான் திரும்பி வந்தனர்.மாணவ மாணவியர் சந்தோசமாக இருந்தனர், அவனுக்கு தெரிந்து அந்த பேருந்தில் மூன்று காதல் ஜோடிகளும் இருந்தனர். கந்தசாமி அண்ணனிடம் சொல்லியிருந்தான். இதில் 'எத்தனை ஒன்னு சேர போவுதுன்னு யாருக்கு தெரியும்' என்று சிரித்தார் அவர். பேருந்து ஊரை நெருங்கி இருந்தது, ஒரு சிலர் அவரிடம் பேசிக்கொண்டே வந்தனர்,அப்படி ஒருவன் பேசும்போது அடுத்து வரும் ஆளில்லா பகுதியில் நிருந்துங்க அண்ணே வெளியே போகணும் என்று கேட்டான். அவரும் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த கும்பல் வழிமறித்தது. பேருந்தை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்க அவர்கள் அடுத்த ஊரில் கலவரம் நடக்குது அதனால் இந்த வழியா போங்க என்று வேறு வழி காட்டினர். அதன் வழியே செல்லும்போதுதான் சிவாவிற்கு உரைத்தது, இந்த வழி அவன் அப்பா இறந்து போன சாலை. கந்தசாமி அண்ணனிடம் அவன் அப்பா இறந்த இடத்தை கூறி அந்த வளைவில் பார்த்து போங்க வண்டி வந்தால் தெரியாது என்றான். அதுபோல அந்த இடமும் வந்தது அவரும் பார்த்துதான் சென்றார்,எதிரே அதுபோலவே ஒரு இரு சக்கர வாகனம். நல்ல வேலை ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது. சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாவதை தடுத்து விட்டோம் என்று.

சிறிது தூரம் சென்றிருப்பார்கள் ஒரு பாலத்தின் அருகே வண்டியை நிறுத்தி இயற்கை உபாதையை கழிக்க அந்த பையன் இறங்கினான். சிவாவும் இறங்கி நின்று கொண்டிருக்க, அவர்களை கடந்து ஒரு இஸ்கார்பியொ சென்றது. கந்தசாமி அண்ணனிடம் சொன்னான், ஒரு நாள் அரசியல்வாதி ஆகி இந்த காரை வாங்க வேண்டும் என்று கூறி முடிக்கும் முன், டொம் என்ற சத்தம், அந்த கார் அப்படியே உருண்டது. பாலத்தில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து அவ்வழியே சென்ற அரசியல்வாதி கார் சேதம். இருவர் உயிர் இழந்தனர்.

ஒரு வருடத்தில் நடந்தது: அன்று அந்த காரை பார்த்து சிவா ஓடியிருக்க அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை தூக்கி பின்னால் வந்த காரில் எடுத்து போட்டு அசுர வேகத்தில் சென்று ரத்தம் கொடுத்து காப்பாற்றினான். பின்னர் அப்பழக்கம் அவரிடம் அவனை வேலைக்கு சேர்த்தது, அவனும் சேர்ந்தான், அவரின் வலதுகை ஆகிவிட்டான். அரசியல்வாதியாக இருக்கும் அவர் அவனை அரசியல் வாரிசு என்று அழைக்கும் அளவுக்கு நெருங்கி விட்டான். ஆமாம் அவனும் அரசியல் வாதி இன்று, அதே காரை வாங்கி விட்டான். இந்த வருடம் தேர்தலில் நிற்கிறான். இந்த நாள் நினைத்து பார்க்கிறான், வீட்டுக்கு வரும் வழியில் அவன் பண்ணை வீட்டை சென்று பார்க்கிறான் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அந்த பேருந்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டான். அது இல்லை எனில் அவன் இல்லை இன்று.

சராசரி அரசியல்வாதி ஆகிவிட்ட அவனுக்குள் அவ்வப்போது அந்த சம்பவம் வந்து மனத்தை உறுத்தும், ஆமாம் அன்று பாலத்திற்கு குண்டு வைத்தது அந்த வண்டியில் வந்த இருவர்தான். அவர்களின்மேல் பேருந்தை ஏற்றாமல் தடுத்த சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாகாம தடுத்துவிட்டோம் என்று, இன்றும் அதே நினைத்துகொண்டான் இன்னொரு சிவா உருவாக வேண்டாம் என்று.அவனுக்கும் கொஞ்சூண்டு மனசாட்சி இருக்கும் போல. இன்னும் எவ்வளவு நாளைக்கோ என்று அந்த பேருந்து அவனை பார்த்து சிரித்தது போல இருந்தது அவனுக்கு.

17 comments:

திருச்சிகாரன் said...

நன்றாக உள்ளது. தொடர்ந்து உங்களின் பதிவுக்கு வருகிறேன்

ILA (a) இளா said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

DHANS said...

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி திரு திருச்சிக்காரன் மற்றும் இளா அவர்களே.

DHANS said...

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி திரு திருச்சிக்காரன் மற்றும் இளா அவர்களே.

Divya said...

கதை அருமை:)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

DHANS said...

வாழ்த்துக்களுக்கு நன்றி திவ்யா

Venkatesh Kumaravel said...

நல்ல முயற்சி.. தொடர்ந்து எழுதுங்கள்.. ஊக்கப்படுத்த நாங்கள் இருக்கிறோம்!

Venkatesh Kumaravel said...

கதையின் போக்கு கொஞ்சம் குழப்புகிறது, ஆனாலும் சிறந்த படைப்பு. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். :D

வினோத் கெளதம் said...

நல்லா எழுதி இருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்..

விக்னேஷ்வரி said...

நல்ல முயற்சி. இன்னும் நிறைய எழுதுங்க. பின், உங்கள் எழுத்தின் மாற்றம் உங்களுக்கே தெரியும்.

DHANS said...

நன்றி விக்னேஸ்வரி நானும் நிறைய எழுத பழகுகிறேன் கண்டிப்பாக நிறைய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்போடு.

அவ்வப்போது இந்த பக்கம் வந்து எதாச்சும் கருத்துகளை சொல்லி வந்தால் மிக்க மகிழ்ச்சி

DHANS said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வினோத் கெளதம்

DHANS said...

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி வெங்கி ராஜா . இது புது முயற்சி போகப்போக சரி ஆகிவிடும் என்று தோன்றுகிறது.

Suresh said...

நல்லா இருக்கு

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

DHANS said...

தங்கள் வருகைக்கும் வரவேற்ப்புக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

Nithi said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

DHANS said...

thanks nithi....