Tuesday, April 14, 2009

ஐ பி எல் Vs தேர்தல்

எத்தனையோ பேர் இதைப்பற்றி எழுதிட்டாங்க நாமும் எழுதிடுவோம்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வரும், அதுவும் இந்த முறை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வரும் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தெரியும். ஐ பி எல் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு முன்னாடியே இதை முடிவு செய்தாகிவிட்டது. ஆனாலும் நம்ம பணக்கார ஆட்டம் எல்லவற்றையும் மாற்ற துணிந்ததே. ஏங்க தேர்தல்தான் வருதுன்னு தெரியும்தான அப்புறம் எதுக்குங்க ஏப்ரல்ல போய் போட்டிய வைக்கறீங்க?? மத்த வீரர்களோட கால்சீட் கிடைக்காதுன்னு என்றுதான. அப்ப மற்ற நாடுகள்ல என்ன நடந்தாலும் அத மாத்த சொல்ல மாட்டீங்க ஆனா நம்ம ஊர்ல ஜனநாயக கடமை என்று ஒன்னு அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை வருது அத மாத்தனும் என்று நினைப்பீங்க.

அய்யா நீங்க கிரிக்கெட விளையாடலாம் எப்படி வேண்டும் என்றாலும் விளையாடலாம் ஆனா நாட்ட பத்தியும் நாட்டு மக்களை பத்தியும் யோசிக்கணும். போட்டிய தேர்தல் முடிஞ்சப்புறம் மாத்தி வச்சா குறைஞ்சு போய்டுவீங்களா??

ஏங்க போட்டி ஆரம்பிக்கும்போது இளம் இந்திய வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்பாக இருக்கும்னு சொன்னீங்க ஆனா இப்ப பார்த்தா ஒரு அணில இந்திய வீரர்கள் அதும் புதுமுகங்கள் எண்ணிக்கை ஒன்றை தாண்டாது போல இருக்கே?? வெளிநாட்டுகாரன் சம்பாதிக்க எங்க வரி பணத்துல நடத்துற தேர்தல தள்ளியா வைக்க முடியும். நாங்க தொலைகாட்சில பார்த்தால் வரும் வருமானத்த எங்க நாட்டிலேவா செலவு பண்ண போறீங்க? வெளிநாட்டுக்காரனுக்கு விளையாட சம்பளமா தரீங்க. எங்க காச வெளிநாட்டுக்கு கொண்டு போக நாங்க துணை போகனுமா?

எல்லாம் சரிதானுங்க எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கா இருக்கும் ஆனால் தேர்தல் என்பது அதை விட பொழுதுபோக்கு நிறைந்தது. தேர்தலிலும் அனைத்து வித போட்டி பொறாமைகள் விறுவிறுப்பு என்று எல்லாமே உண்டு. வெளிநாட்டில கொண்டு போய் வச்சு வெளிநாட்டுகாறன விளையாட சொல்லிட்டு எதுக்கு இந்திய பிரிமியர் லீக் என்று பேர் வைக்கணும்??

சரி இந்தியா என்ற நாட்டுக்காக விளையாடி இவ்வளவு சொத்த சேர்த்த வீரர்கள் இந்த போட்டிக்காக வெளிநாட்டில் போய் விளையாட போறாங்க. இந்தியால நடக்கற தேர்தல்ல அனைத்து குடிமகனும் ஓட்டு போடுறது தலையாய கடமை, இந்த வீரர்கள் அந்த கடமையை அப்போ செய்ய மாட்டாங்க தானே? ஏங்க இந்தியா பேர்ல விளையாண்டு இவ்வளவு சம்பாதிச்சுட்டு இந்தியாவுக்கு தேர்தல் என்றல் ஓட்டு போட மாட்டீங்க? இதை எதிர்த்து எவனும் கேள்வி கூட கேட்க மாட்டான்.

இனி எதிர் பக்கம் வருவோம்.

மிக பெரிய ஜனநாயக நாடு உலகின் ஐந்தாம் ராணுவம் என்று எல்லாம் சொல்றாங்க ஆனா தேர்தல் சமயத்துல ஒரு விளையாட்டு போட்டிக்கு பாதுகாப்பு வழங்கறது கஷ்டமாம்.

சாதாரண மக்களுக்கே பாதுகாப்பு வழங்காதவங்க எப்படி வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கமுடியும்??? இதுக்கெல்லாம் காரணம் பொது மக்கள் தான். எவன் எப்படி போனால் நமக்கு என்ன என்ற மனநிலை தான்.

எனக்கு கிரிக்கெட் விளையாட்டு பிடித்திருந்தாலும் வெளிநாட்டில் பொய் விளையாடுவது பிடிக்கவில்லை, ஓட்டு போடாமல் விளையாடும் இந்த வீரர்கள் இனி இந்தியாவிற்காக விளையாடக்கூடாது என்பது என் நிலை. அப்படி சொன்னால் ஒழுங்காக ஓடிவந்து கடமையை செய்வார்கள் இவர்கள்.

7 comments:

Insignia said...

I liked the first line. Hahahahaha. Ethanayo per ithapathi ezuthitaanga, nammalum ezuthuvoam...hahahaha

DHANS said...

வருகைக்கு நன்றி
i thought of writing this for a long time back but atlast i did it yesterday.

Karthik said...

ட்வென்ட்டி 20 யை நான் சீரியஸாக எடுத்துக்கவே இல்லை. ஐபிஎல் பத்தி எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை.

I just say they do not deserve the attention they get. we shudn't care much, i think.

DHANS said...

நானும் 20-20ஐ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, இத்தகைய பெயருக்கும் புகழுக்கும் இந்த வகை கிரிக்கெட் தகுதியல்லை

என் கேள்வி எல்லாம் இந்தியா என்ற பெயரில் விளையாடி சம்பாதித்து, இப்போது அதே இந்தியாவிற்கு தேர்தல் நடக்கும்போது இவர்கள் அதை மறந்து சம்பாதிக்க போறங்களே என்பது தான். நாட்டுக்காக விளையாட சென்றால் பரவாயில்லை பணத்துக்காக மட்டுமே இப்போது செல்கிறார்கள்.

DHANS said...

I AM CARING ABOUT THE ELECTIONS NOT ABOUT IPL

Karthik said...

//I AM CARING ABOUT THE ELECTIONS NOT ABOUT IPL

well, im not caring about that either. i know i shud. :)

yeah, its a concern that cricketers fail to do their national duty due to the IPL. :(

DHANS said...

exactly correct.....lets see who all are do their national duty