Thursday, April 30, 2009

வழக்கம் போல இந்த வாரக்கடைசி செய்க்கிரம் வந்துவிட்டது, இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. வழக்கமாக வார இறுதியில் பதிவு எழுவது ல்லை, அதற்க்கு மாற்றாக இந்த வாரம் எழுதலாம் என்று இருக்கிறேன்.. இந்த வாரம் பட்டியலில் இருக்கும் வேலைகளை முடிக்க வேண்டும். எப்பயும் சோம்பேறியாக இருந்து வீடு முழுக்க குப்பை ஆகிவிட்டது, இனி அதை மாற்ற வேண்டும்.

வாரக்கடைசி என்கிறது வெளியே செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தோம் எங்கு செல்வது?? எனக்கு தெரியவில்லை அனால் சென்னையிலேயே இருந்தால் பைத்தியம் புடித்துவிடும்.
ஏலகிரி செல்லலாமா என்று யோசிக்கிறேன் ஆனால் இந்த வெயில் காலத்தில் அங்கு ஒன்றும் பெரிதாக இருந்துவிடப்போவதுமில்லை.
இந்த சென்னை ஒரு மொக்கையான ஊர், எங்காவது இரண்டு நாள் விடுமுறைக்கு வெளியே செல்லலாம் என்றால் பெரிதாங்க எந்த இடமும் இல்லை,

நண்பன் பாண்டிச்சேரி கூப்பிடுகிறான் எனக்கு போவதற்கு விருப்பம் இல்லை.
பேசாமல் வீட்டிலேயே இருந்து நல்ல படங்களை பார்த்துக்கொண்டு பொழுது போக்கிற்கு need for speed most wanted விளையாண்டுகொண்டு இருக்கலாம்.
சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு எதாவது உருப்படியாய் செய்யலாம் என்று இருக்கிறேன். கார் வேறு சரி செய்ய வேண்டும், பேசாமல் மூன்று நாட்களும் மேக்காநிக்கே கதி என்று கிடந்தது கற்றுக்கொள்ளலாமா?
இந்திய பொழுது மிக நீண்டு கொண்டே செல்கிறது, அலுவலக வேலைகள் முடியவில்லை.

மூன்று நாட்களை வெள்ளிக்கிழமை பசங்க படம் போலாம் என்று இருக்கிறேன், வருபவர்கள் இரவுக்காட்சிக்கு வரலாம்.
சனிக்கிழமை நண்பர்களுடன் மரியாதையாய் ஒரு படம் பார்க்க போகலாம் என்று இருக்கிறோம். நிறைய சிரித்து நெகு நாட்கள் ஆகின்றன.

2 comments:

ச.பிரேம்குமார் said...

வாரயிறுதி ஆனவுடனே ஏன் இத்தனை எழுத்துப்பிழை? ஏதுனா விசேசமா நண்பா :)

DHANS said...

அலுவலகத்தில் எழுதியது அவசரமாக, எழுத்துப்பிழைகளை நானும் கவனித்தேன், பதிவை நீக்கிவிடலாம் என்று நினைத்தேன் மாற்றாக நீங்கள் பின்னூட்டம் thanthuvitteergal