Wednesday, June 25, 2008

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு


என்னங்க பாக்கறீங்க திடிர்ன்னு குண்ட தூக்கி போடுறேன்னா? உண்மை தாங்க, விலை ஏற்றம் செய்து ஒரு மாதம் ஆக போகின்ற நிலையில் இந்த நாட்களில் நான் கண்ட உண்மை.


சென்னையில் கடந்த ஒரு மாதமாக வழக்கமாக நான் பெட்ரோல் போடுகிற நிலையங்களில் ஆகட்டும், இல்லை மற்ற எல்லா நிலையங்களில் ஆகட்டும் பெட்ரோல் விலை 60 ரூபாய் ஒரு லிட்டர்க்கு.


ஒவ்வொரு முறையும் நான் பெட்ரோல் போடும்போது சாதரண பெட்ரோல் போடுவது வழக்கம், கடந்த மாதங்களில் அது எங்கேயும் கிடைப்பதில்லை. சாதரண பெட்ரோல் விலை 55 ரூபாய் அனால் சூப்பர் பெட்ரோல், எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல் விலை 60 ரூபாய். எங்கேயும் சாதரண பெட்ரோல் கிடைப்பது இல்ல.


கூட்டி கழிச்சு பாருங்க விலை ஏற்றம் 5 ரூபாய் இல்லை 12 ரூபாய். எப்போதும் கிடைத்த சாதரண பெட்ரோல் இப்போ கிடைப்பதில்லை, 60 ரூபாய் போட்டு பெட்ரோல் போடும் நிலை. இரண்டு சக்கர வண்டிகளில் இந்த சூப்பர் பெட்ரோல் போடுவதால் எந்த பயனுமிருக்கப்போவது இல்லை. அப்படியே இருந்தாலும் 2 -3 கிலோமீட்டர் அதிகம் ஓடும் அதற்கு 5 ரூபாய் அதிகம் குடுக்க வேண்டும்.


அதும் என்னோட யமாஹா எல்லாம் லிட்டர்க்கு 30 கிலோமீட்டர் குடுத்தாலே அதிகம் அதையும் அடிச்சு பிடிச்சு கெஞ்சி ஓட்டி 40 கிலோமீட்டர் குடுக்க வைக்கறேன். முடியலப்பா சாமி. இதுல சூப்பர் பெட்ரோல் வேறயாம் அய்யா என் வண்டி எத போட்டாலும் 30 தான் குடுக்கும் என்று கெஞ்சியும் எவனும் மசிய மாட்டேங்கிறான்.


இதுல இவங்க சூப்பர்னு சொல்லி சாதரண பெட்ரோல்ல கலப்படம் செஞ்சு வித்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஏதும் இல்லை. ஏற்கனவே ஒரு நிலையத்தில சாதரண பெட்ரோல் போடும் இடத்தில் சூப்பர் என்று ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியிருந்தனர். அதான் டவுட்டு...


இதெல்லாம் மாறனும்னா ஒரே வலி (வழின்னு தான் டைப் பண்ணுனேன் அனா அதுவா இப்படி வலின்னு மாறிவிட்டது) நம்ம தலைவர் விஜயகாந்த் ஆட்சிக்கு வரணும். ( ஒரு காமெடி வேனாமாங்க....)


ஆட்சிய மாத்துங்க (மாத்துன மட்டும் குறைய போகுதா இல்லபா ஒரு சேஞ்க்குதான். மாத்தின நம்ம மக்கள் இதையெல்லாம் மறந்துடுவாங்க தான.)
அணையைப்போற விளக்கு இவ்ளோ நாள் பிரகாசமா எரிஞ்சுக்கிட்டு இருந்த மாதிரி இருக்கு.

2 comments:

Udhayakumar said...

//அதும் என்னோட யமாஹா எல்லாம் லிட்டர்க்கு 30 கிலோமீட்டர் குடுத்தாலே அதிகம் அதையும் அடிச்சு பிடிச்சு கெஞ்சி ஓட்டி 40 கிலோமீட்டர் குடுக்க வைக்கறேன்.//

பாஸ், இது நம்ம பிரச்சினை இல்லையா? லிட்டருக்கு 100 கீமீ தர்ர வண்டியா வாங்கி ஓட்டுங்க. சுகமா இருப்பீங்க.

DHANS said...

லிட்டர்க்கு 150 கிலோமீட்டர் ஓடும் வண்டி ஓட்டுவதும் 15 கிலோமீட்டர் ஓடும் வண்டி ஓடுவதும் அவரவர் விருப்பம்.

ஆனால் விலையேற்றம் 5 ரூபாய் என்று சொல்லிவிட்டு அந்தவகை பெட்ரோலை விற்காமல் ஏன் அதிக விலையில் உள்ள பெட்ரோலை விற்க வேண்டும் என்றுதான் கேள்வி. இரண்டையும் விற்கட்டும் அவரவர் விருப்பத்திற்கு வாங்குபவர் வாங்கிக்கொள்ளட்டும். இதற்க்கு முன்னாடி இப்படித்தான இருந்தது. இல்லை விலையேற்றம் 12 ரூபாய் என்று அறிவிக்கட்டும்.

ஒரு காமெடி கலந்து (?????) எழுதியதால் உங்களுக்கு இப்படி தோன்றி இருக்க வேண்டும். (காமெடி என்று நானே சொல்லிகொள்கிறேன்)