Tuesday, June 3, 2008

என்னோட விடுமுறை ரொம்ப நல்லா முடிந்தது

சரியாக 11 நாட்கள் விடுமுறை, வழக்கம் போல திட்டம் போட்டு பயணங்களை துவக்கினால் எல்லாம் கெட்டு போகும் என்பது நிஜமாகியது. வியாழன் மதியம் கோயம்புத்தூர் செல்வதாக இருந்து கடைசியில் அன்று மாலை சென்றேன். அன்று நண்பன் ராஜாவை சந்திப்பதாக ஏற்பாடு, அப்படியே சந்தித்து அன்று இரவு பழைய கதைகளை பேசி முடித்து தூங்கும்போது மணி 1. நம்ம ஆள் எதோ மேல்படிப்பு படிக்கிறார். வீட்ல கம்பெனிக்கு MD அக இருந்தார் கொஞ்ச நாள் முன்னாடி, அப்புறம் படிக்க வந்து இப்ப படிப்ப முடிச்சுட்டார். எல்லாம் பேசி முடிச்சு காலைல என்ன பஸ் ஸ்டாப்ல கொண்டு வந்து விடுடா னு சொன்னா, பையன் காலைலன்னா 10 மணிக்கு ஓகே வா னு கேட்கறான். காலைல கல்யாணம் 6 மணிக்கு போகணும் என்று சொல்ல, அவன் எனக்கு காலைலனா 9 மணிக்கு மேல தான்னு சொல்லி அதிர வச்சான். எப்படியோ அவன எழுப்பி என்ன கொண்டு வந்து பஸ் ஸ்டாப் ல விடும்போது மணி 6. அப்புறம் பஸ் புடிச்சு, கால் டாக்ஸி புடிச்சு மண்டபத்துக்கு போய் நின்னா நமக்கு தெரிந்த பசங்க யாரும் இல்ல. அப்புறம் சந்தீப் வந்து சேர்ந்தான். மற்றவர்கள் தாமதமாக சென்னையில் இருந்து வருவார்கள் என்று தெரிவிக்கபட்டிருந்தது... கடைசியில் எல்லோரும் ஊட்டி செல்வதாக ஏற்பாடு.. இப்பதான் நம்ம திட்டம் அட்டம் கான ஆரம்பித்தது, சென்னையில் இருந்து யாரும் வரவில்லை காரணம் அவர்கள் ஏறவேண்டிய பேருந்து சரியான நேரத்துக்கு கிளம்பியது தான். அப்புறம் அது இதுன்னு திட்டம் போட்டு எல்லாம் சொதப்ப நான் வெள்ளி இரவே கரூர் வரவேண்டியதாயிற்று. சனி கிழமை லேட்டா எழுந்து அக்காவுடன் புடவை எடுக்க கிளம்பினேன். முதலில் K.P.N போனோம், அப்போதே சொன்னாங்க போய் உட்கார் நான் எடுத்துட்டு வரேன்னு நல்ல வேலை 30 நிமிடத்தில் ஒரு புடவை முடிஞ்சது, அடுத்த புடவைக்கு தைலா. அந்த கடை நமக்கு புடிக்கும் சரி நீ புடவை பாரு நான் போய் எது சட்டை கிடைக்குமான்னு பார்க்கிறேன்னு சொல்லிடு போய் 2 சட்டை எடுத்தேன். கடை பையன் சும்மா சொல்ல கூடாது நம்மள எங்க நல்ல சட்டை எடுத்து விடுவானோ என்று பிளான் பண்ணி சார் என்ன சட்டை என்ன கலர் னு torture செஞ்சு கவிழ்த்தான். ஒரு வழியா எடுத்து வந்து வழக்கம் போல card எடுத்து தேச்சுக்க சொல்லி நீட்ட, அவங்களும் தேய் தேய் னு தேச்சாங்க.

நம்ம card ஏற்கனவே ஒரு மாதிரி, உடனே அவர் card சரி இல்ல வேற குடுங்க சொன்னார், கரூர் ல card வாங்கற கடையே ரொம்ப கம்மி அதுலயும் இப்படியா னு நெனச்சு இருந்த எல்லா கார்டு, விசிடிங் கார்டு உட்பட குடுக்க அவர் தன் கடமையை செய்தார். நல்ல மெஷின் என்ன செலவு பண்ண விடவில்லை. தப்பிச்சம்னு சொல்லி வந்தா அக்கா புடவை எடுத்து முடிசுட்டங்க சந்தோசத்துல வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் பள்ளி நண்பர்கள் சந்திப்பு அனா கிளம்பும்போது மாமா சொன்னார் 12 மணிக்கு வந்திரு ஊட்டி கிளம்பல்லாம்ன்னு. அஹா மறுபடியும் ஆரம்பம் டா நமக்கு சனினு நெனச்சு சரி சரி தலை ஆடிகிட்டே கிளம்பினேன். 10 மணின்னு சொல்லிடு ஒரு பயலும் கிளம்பல... அப்படி இப்படி னு 10.30 க்கு வர ஆரம்பிச்சாங்க அப்படியே பழைய நண்பர்கள பார்த்து பேச ஆரம்பிச்சா மணி 11.30. அப்புறம் எங்க எல்லோருக்கும் ஒரு வணக்கம் சொல்லிட்டு கிளம்பிட்டேன். சரியா 12.30 க்கு வண்டி ஊட்டி கிளம்பியது, நான், அண்ணா, மாமா அப்புறம் மோகன் அண்ணா.



கிளம்பின அப்புறம் தான் தெரியும் கார்ல பாடு கேட்கறதுக்கு FM தவிர வேற எதுவும் இல்லன்னு। அப்பயே நெனச்சேன் நமக்கு சனி சாணி எடுத்து அடிச்சுட்டான்னு.
பத்து நாள் விசயங்கள ஒரு நாள்ல எழுத முடியாது அதனால மற்றது அப்புறம்

No comments: