Friday, June 6, 2008

நேற்றிலிருந்து நான் கோபப்பட்ட தருணங்கள்

நேற்றிலிருந்து நான் கோபப்பட்ட தருணங்கள் மற்றும் ஆட்கள்.


வண்டியில் சென்றபோது signal லில் நிறுத்த கோட்டுக்கு முன் நின்று கொண்டிருக்கையில் பின்னால் நின்ற வாகன ஓட்டிகள் விலகி முன் சென்று நிற்குமாறு சொன்ன போது.


சொன்ன தேதியில் வண்டியை சரி செய்து தராமல் நண்பனிடம் வண்டி ஓசி வாங்க வைத்த மெக்கானிக் மீது.


கடற்கரையில் நண்பர்களுடன் வந்திருந்த பெண்களை சில காலி பையன்கள் கிண்டல் செய்து மோசமான வார்த்தைகளில் கிண்டலடித்த பொழுது.


வீட்டிற்க்கு திரும்புகையில் இரவு வண்டி நிறுத்தும் இடத்தில் கொசுவலை கட்டி தூங்கி என்னை மிகுந்த சிரமத்துகிடையில் என் வண்டியை நிறுத்த நிர்பந்தித்த வீட்டு காவலாளி மீது.


காலையில் வெளியே செல்லும்முன் மின்விசிறியை நிறுத்தாமல் சென்ற அறை நண்பன் மீது.


தொலைபேசி வசதி இருந்தும் சொல்லாமல் சமைக்க வராத என் வீட்டு சமையல் கார பெண்.


சாப்பாடு வாங்க செல்கையில் பில் போட்டுவிட்டு எவனிடமோ குருவி திரைப்படத்தை விமர்சித்து கொண்டு பணம் வாங்காமல் இருந்த சிப்பந்தி மீது.


இரவில் படுக்கும்முன் எதற்கு எடுத்தாலும் புலம்பும், கோவப்படும் என் பழக்கத்தின் காரணமாக என்மீதும்.


காலையில் அலுவலக பேருந்தில் செல்கையில் மற்றுமொரு எனது அலுவலக பேருந்து அச்சுறுத்தும் முறையில் அருகில் வந்தபோது.


காலையில் இருந்து என்னை ............................................................................................................................. மீது.


எந்த நடிகர் மீதும் நடிகை மீதும் அபிமானமில்லாமல் இருப்பதால் என்னை ஓட்டிய எனது சக ஊழியர் மீது.


எனது அம்மாவிற்கு போன் செய்யும் போது ஒருவாரமாக ரிப்பேர் ஆகி இருக்கும் வீட்டு போனை சரி செய்யாத BSNL நிறுவனத்து செயலை நினைக்கையில்.


எப்பவுமே பெண்களை மிக மோசமான பார்வையிலும் , மிக மோசமான பேச்சிலும் கொச்சைப்படுத்தும் என் சக ஊழியர் இன்றும் அவ்வாறே செய்த போது.


குடிப்பதற்காகவே நாளை அலுவலகத்தில் என் குழு மேற்கொள்ளும் பயணத்தில் என்னையும் வர சொல்லி கட்டாயபடுத்தும் என் குழு நண்பர்கள் மற்றும் எதிரிகள் மீது.


இன்று காலை நடக்க இருந்த என் பள்ளி நண்பனின் திருமணத்தை மறந்த என் நியாபக சக்தி மீதும்....


என் கோவத்தை குறை என்று என் நண்பர்கள் எப்போதும் சொல்லும் போது...


இந்த மிக சிறிய தருணங்களில் நான் கோபப்படுகிறேன்.


நான் விரும்பி படித்த தமிழை இப்போ எழுத்துப்பிழை இல்லாமல் எழுத தடுமாறும்போது என்மீதே எனக்கு கடுங்கோவம்.

3 comments:

Unknown said...

கோபத்தைக் குறை :)

யாருக்குடா திருமணம்?

DHANS said...

விவேகானந்தால என் கூட படிச்சா பிரசன்னா திருமணம். பசுபதி டியூஷன்ல பூபதி அண்ட் பிரசன்னா சேர்ந்து வருவாங்க, உனக்கு தெரிந்துருக்கலாம்.

கோபத்தை குறைக்க நாரொம்ப மேனகேடுகிறேன், இந்த தருணங்களிலும் எனக்கு கோவம் வந்தாலும் அதை வெளிகாடுவதில்லை (ஒரு சில தருணங்களை தவிர்த்து)

DHANS said...

விவேகானந்தால என் கூட படிச்ச பிரசன்னா திருமணம்//
கோபத்தை குறைக்க நான் ரொம்ப மேனக்கெடுகிறேன்//