Friday, June 13, 2008

இவங்களையும் என்ன செய்யறது

பொது இடத்தில்குப்பை போடுவது பற்றி இந்த பதிவை படித்தேன், இன்று காலையில் தான் நானும் இது போன்ற பிரச்னையை பற்றி எழுதலாம் என்று நினைத்தேன், நான் எழுத நினைப்பது சாலை விதிகளையும் நாம் அதை எப்படி மதிக்கின்றோம் என்பதையும்.

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் தினமும் சாலை விதிகளை மதித்து நீங்கள் என்றாவது வண்டி ஒட்டி உள்ளீர்களா? பெரும்பாலான பதில் இல்லை என்று வரும்.நான் சொல்வது மிக மிக அடிப்படை சாலை விதிகள் பற்றி.
பொதுவாக இடது பக்கமாகவே செல்ல வேண்டும், ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு 300, 400 மீட்டர் செல்ல வேண்டும் என்பதற்க்காக எதிர் திசையில் வண்டி ஒட்டுகின்றோம், யோசித்து பாருங்கள் இது நன்றா?

நிறுத்த கோட்டிற்கு முன்னால் வண்டியை நிறுத்த வேண்டும், எனக்கு தெரிந்து சென்னை சாலைகளில் அப்படி ஒரு பழக்கம் இருப்பதாக தெரியவில்லை, குத்து மதிப்பாக சிக்னல் முன் நிறுத்துவார்கள் பின்னர் இன்ச் இன்சாக நகர்ந்து (சில நேரங்களில் அடி அடியாக ) பாதி தூரம் சென்று விடுவார்கள். யோசியுங்கள்

சாலை சந்திப்பில் உள்ள சிக்னல், நம்மில் பாதி பேர் மதிப்பது அங்கு போக்குவரத்து காவலர் நிற்பதால், ஏன்னுங்க இன்னும் கொஞ்சம் பேர் முன்னாடி நிக்கறவன் நின்னா நிப்பாங்க.

சிக்னல் குடுக்காமல் கண்டபடி திரும்புவது, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்க மறுப்பது, அடிபட்டா இருவருக்கும் தான் ஆனால் அதை யோசிப்பதே இல்லை. தான் மட்டும் நல்ல இருந்தா போதும், நான் மட்டும் போன போதும் நீ எப்படி போன எனக்கென்ன.

ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிக்கு வழி விடுவதில்லை இல்லை என்றால் அவர்கள் கூடவே செல்வது, அப்பத்தான அவர்கள் வழியில் நாமும் சென்று விடலாம்.

தலை கவசம் அணிவது கிடையாது கேட்டா முடி கொட்டுகிறது தலையில் வேர்க்கிறது என்று, உண்மை தான் ஆனால் கொஞ்சம் யோசி எதாவது ஒன்னுன தலையே போய்டும் அப்புறம் முடி கொட்டி என்ன ஆக போகிறது??? (இது தனி நபர் விருப்பம் அனாலும் யோசியுங்கள் )

நண்பர்களே! இதெயெல்லாம் செய்வது படிக்காத பாமரன் இல்லை அனைவரும் இல்லை இல்லை பெரும்பாலும் படித்தவர்கள் மட்டுமே, லைசென்ஸ் வாங்க அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்று மாற்றம் கொண்டு வந்தாயிற்று அதனால் கண்டிப்பாக வண்டி ஓட்டும் அனைவரும் இனி படித்து இருபபர்.

சிக்னலில் நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பதனால் என்ன ஆகிவிட போகின்றது?? பத்து அடி முன்னால் சென்று நிற்பதனால் என்ன பயன்?? மாறாக கோட்டிற்கு பின்னால் நின்றால் சாலையை கடப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும். நான் வழக்கமாக நிறுத்த கோட்டிற்கு முன்னால் நிற்பேன், ஆனால் இதுவரை ஒரு முறை கூட பின்னால் இருப்பவர் ஒலிப்பானை அடித்து என்ன நகர சொல்லாமல் இருந்தது இல்லை. நானும் ஒரு முறை கூட நான் நகர்ந்தது இல்லை, காரணம் என்னபார்த்தாது ஒருத்தன் திருந்தனும் என்றுதான்.

ரோட்டில் போக்குவரத்து அதிகம் இல்லை என்றால் சிக்னலை மதிப்பது இல்லை, உன்னை பார்த்து பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே செல்வார்கள் இதுவே நீ நின்று பார் கண்டிப்பாக உன் பின்னால் வருபவர்கள் நிறுத்துவார்கள்.

ஒரு போக்குவரத்து காவலரிடம் கேட்டேன் ஏன் இப்படி கடுகடுப்பாகவே பெரும்பாலும் இருகிறீர்கள் என்று, அவர் பார்வையில் சொல்கிறார், தினமும் 8 மணிநேரம் பணி, அதுவும் ரோட்டில்தான், காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த புகையில் நின்று பாருங்கள் அதும் போக்குவரத்தை ஒழுங்கு செய்து பாருங்கள் என்றார். இதில் சாலையை கடப்பவர்க்கு கண்டிப்பாக போக்குவரத்தை ஒதுக்க வேண்டும் என்பது எங்கள் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஆனால் அதற்குள் இரண்டு நிமிடம் காத்திருக்காமல் வாகனங்கள் செல்லும்போது கடப்பவர்கள் எத்தனைபேர், அனைவரும் படித்தவர், அப்போது நாங்கள் கோபப்படுவது தப்பாக தெரிகிறது என்றார். நம்மவர்கள் வண்டி ஓடும் லட்சணத்தில் எங்கே நாங்கள் நிம்மதியாய் இருப்பது, காவலாளி இல்லை என்றால் பத்தில் 6 பேர் சிக்னல் மதிப்பது இல்லை என்கிறார்.

வண்டி ஓட்டிகள் நாங்கள் செல்வதால் என்ன வந்துவிட போகிறது என்று நினைக்கின்றனர் , ஒலிப்பானை தேவையான இடத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் ஆனால் நம்மவர்கள் அவர்கள் கைக்கு வேலை இருக்கும்போது மட்டும் ஒலிக்க மறுக்கிறார்கள். வண்டியில் செல்லும்போது எச்சில் துப்புவது, அய்யா உங்கள் வீட்டில் துப்பினால் என்ன சொல்வீர்கள், இந்த சாலையை நீங்களும்தான பயன் படுத்துகிறீர்கள், அப்புறம் எதுக்குங்க இப்படி? போக்குவரத்துக்கு இடையுறாக வண்டியை நிறுத்துவது, நோ பார்க்கிங் என்றாலும் பத்து நிமிடத்தில் வந்துடலாம் என்று நிறுத்தி செல்வது.

நான் மட்டும் தப்பு செய்யாமல் நல்லவனாகவே இருக்கிறேன் என்று சொல்ல வில்லை, சில சமயம் நானும் போக்குவரத்து விதி மீறலை செய்ய வேண்டயுள்ளது, ஆனால் என்னை பொறுத்தவரை அடிப்படை விதிகளையும் பாதசாரிகளையும் மதித்தே செல்கிறேன். ஒரு நாள் எந்த விதி மீறலையும் செய்யாமல் வண்டி ஒட்டி பாருங்கள் அதில் எவ்வளவு திருப்தி கிடைக்கின்றது என்று பின்னூட்டம் இடுங்கள், திருப்தி இல்லை என்றால் நீங்கள் உங்க மனதிற்கு பட்டவாறு செல்லுங்கள்.

அடிப்படை விதிகளை கடை பிடித்து செல்கையில் மற்றவர் உங்களை விதி மீறல் செய்ய சொன்னால் இது விதிக்கு புறம்பானது செய்ய மாட்டேன் என்று கம்பீரமாக சொல்லுங்கள். அப்போது மற்ற சில உங்களை பார்க்கும்போது பெருமையாய் உணர்வீர்கள். நான் நிறுத்த கோட்டை தாண்டாமல் நின்று பின்னால் வரும் வாகனம் வழி கேட்ட போது மறுத்தேன் இதற்க்கு ஒரு போக்குவரத்து காவலர் வாழ்த்து தெரிவித்தார் (அந்நேரம் அருகில் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார், இப்போது உங்கள் மதிப்பை பற்றி யோசித்து பாருங்கள்) இதெல்லாம் சிற்சில நல்ல பழக்கங்கள். இந்த பதிவை படித்து ஒருவராவது மாறினால் கூட எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி.

நண்பர்களே சிந்தியுங்கள், வெளி நாட்டில் இருப்போர் அங்கு உள்ள வெளிநாட்டினர் நம்ம நாட்டு போக்குவரத்தை பற்றி என்ன நினைக்கின்றனர் என கேட்டு பாருங்கள் பின்னர் முடிவெடுங்கள்.

நன்றி

6 comments:

சிவபார்கவி said...

மவனே பிச்சு பிடுவேன் பிச்சு... ரோடுன்னா அப்படித்தான் ... இதை மாத்த முதல்ல மனுசங்க மனசு மாறனும்... தெரியுதா..

கிரி said...

//ஒரு நாள் எந்த விதி மீறலையும் செய்யாமல் வண்டி ஒட்டி பாருங்கள் அதில் எவ்வளவு திருப்தி கிடைக்கின்றது என்று பின்னூட்டம் இடுங்கள்//

நம்ம ஊர்ல ஒழுங்க ஓட்டினா தான் பிரச்சனையே...நேரா நம்ம மேலேயே விட்டுடுவாங்க :-)

//அடிப்படை விதிகளை கடை பிடித்து செல்கையில் மற்றவர் உங்களை விதி மீறல் செய்ய சொன்னால் இது விதிக்கு புறம்பானது செய்ய மாட்டேன் என்று கம்பீரமாக சொல்லுங்கள்//

நம்மளை கேன பய ஆக்கிடுவாங்களே.. முட்டாள்கள் ஊரில் புத்திசாலியாக இருந்தால் ரொம்ப பிரச்சனை

//நான் நிறுத்த கோட்டை தாண்டாமல் நின்று பின்னால் வரும் வாகனம் வழி கேட்ட போது மறுத்தேன் இதற்க்கு ஒரு போக்குவரத்து காவலர் வாழ்த்து தெரிவித்தார் (அந்நேரம் அருகில் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார், இப்போது உங்கள் மதிப்பை பற்றி யோசித்து பாருங்கள்)//

ஆமா இவரு அப்படியே டிராபிக் ராமசாமி ..ரூல்ஸ் மதிச்சு நடந்துக்கிராறு ..நகுறியா மொதல்ல ...இப்படின்னு சொல்ற மக்கள் கிட்ட என்னத்தை விளக்க முடியும். அப்ப இதுக்கு என்ன தான் முடிவு என்றால் என்னிடம் பதில் இல்லை..நம் மக்களின் எண்ணம் உயரும் வரை இந்த மாற்றம் நடக்க வாய்ப்பில்லை.

இதற்க்கு வற்றாஇருப்பு சுந்தர், வைகறை வேலன், ஸ்ரீதர் போன்றவர்கள் நல்ல பதிலை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

அருமையான பதிவு தன்ஸ். உங்களை போலவே எனக்கும் இதை போல ஆசைகள் உண்டு..ஆனால் கோபம் தான் வருகிறது..ஒன்றும் செய்ய முடியவில்லை..நீங்கள் விதிமுறையை தொடர்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதை நீங்கள் இன்னும் ஒரு வாரம் பொறுத்து வெளியிட்டு இருக்கலாம், பலர் காண படிக்க வாய்ப்பாக இருக்க இருந்து இருக்கும். உங்களுடைய இந்த நல்ல பதிவு தசவாதாரம் பற்றிய பதிவுகள் சுனாமியால் காணாமல் போக இருக்க என் வாழ்த்துக்கள்.

DHANS said...

//மவனே பிச்சு பிடுவேன் பிச்சு... ரோடுன்னா அப்படித்தான்...

இதை மாத்த முதல்ல மனுசங்க மனசு மாறனும்... தெரியுதா//

மனசு மாறனும் என்றுதான் எழுதியிருக்கிறேன், எடுத்துக்கொள்வதும் மறந்து போவதும் அவரவர் விருப்பம்.

Bleachingpowder said...

இப்போ நான் என்ன செய்ய்ய்யயய.....ஒ சாரி.... மாதவன் மாதிரி கொஞ்சம் எமோஷ்ன் ஆயிட்டேன்.

இனிமே சிக்னல்ல பச்சை விளக்கு எரிந்தாலும் நான் கோட்டை தாண்ட மாட்டேன் :-))

உங்கள் நேர்மைக்கும்,நோக்கதிற்க்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

DHANS said...

//நம்ம ஊர்ல ஒழுங்க ஓட்டினா தான் பிரச்சனையே...நேரா நம்ம மேலேயே விட்டுடுவாங்க :-)//
உண்மைதான் இதனால் பாதிக்கபட்டிருந்தாலும் ஏனோ என்னால் மாற முடியவில்லை :)

//நம்மளை கேன பய ஆக்கிடுவாங்களே.. முட்டாள்கள் ஊரில் புத்திசாலியாக இருந்தால் ரொம்ப பிரச்சனை //

இதுவும் உண்மைதான் ஆனால் ஒரு சிலரது புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், சிறு பொறிதான் அனாலும் என்றாவது நெருப்பாக பற்றும் ஏன்டா நம்பிக்கையுடன்.

//ஆமா இவரு அப்படியே டிராபிக் ராமசாமி ..ரூல்ஸ் மதிச்சு நடந்துக்கிராறு ..நகுறியா மொதல்ல ...இப்படின்னு சொல்ற மக்கள் கிட்ட என்னத்தை விளக்க முடியும். அப்ப இதுக்கு என்ன தான் முடிவு என்றால் என்னிடம் பதில் இல்லை..நம் மக்களின் எண்ணம் உயரும் வரை இந்த மாற்றம் நடக்க வாய்ப்பில்லை.//

கண்டிப்பாக நான் இந்த வசவுகளையும் வாங்கி உள்ளேன் ஆனால் என்ன நான் நகரவில்லை, பின்னால் இருந்தவன் கடுப்பாகி போனான் அதைத்தவிர அன்று அடுத்த அரைமணி நேரத்துக்கு அவனை கோவப்படுத்திய பெருமை எனக்குத்தான் :)


//அருமையான பதிவு தன்ஸ். உங்களை போலவே எனக்கும் இதை போல ஆசைகள் உண்டு..ஆனால் கோபம் தான் வருகிறது..ஒன்றும் செய்ய முடியவில்லை..நீங்கள் விதிமுறையை தொடர்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.//

எனக்கும் கோவம் அதிகம் வரும், இன்னும் கோவம் வருகின்றது, இதெல்லாம் கோவத்தின் வெளிப்பாடுதான் கிரி. என் கோவத்தை இப்படி வெளிப்படுத்துகிறேன்.

//இதை நீங்கள் இன்னும் ஒரு வாரம் பொறுத்து வெளியிட்டு இருக்கலாம், பலர் காண படிக்க வாய்ப்பாக இருக்க இருந்து இருக்கும். உங்களுடைய இந்த நல்ல பதிவு தசவாதாரம் பற்றிய பதிவுகள் சுனாமியால் காணாமல் போக இருக்க என் வாழ்த்துக்கள்.//

எழுத தோன்றியது எழுதிவிட்டேன், கால நேரம் பார்க்கவில்லை, தசாவதார சுனாமியில் காணமல் போகாமல் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.

DHANS said...

//இப்போ நான் என்ன செய்ய்ய்யயய.....ஒ சாரி.... மாதவன் மாதிரி கொஞ்சம் எமோஷ்ன் ஆயிட்டேன்//

பாத்துங்க ரொம்ப எமொடின் அஹிட்டாலும் நம்மாளுங்க நம்மள ஒரு மாதிரி பாதுடுவாங்க

//இனிமே சிக்னல்ல பச்சை விளக்கு எரிந்தாலும் நான் கோட்டை தாண்ட மாட்டேன் :-))//

நீங்க ரோம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் :))

//உங்கள் நேர்மைக்கும்,நோக்கதிற்க்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.//

தங்கள் வளத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி, இப்படிப்பட்ட வாழ்த்துக்களையும் பாராட்டையும் தங்களும் பெற வாழ்த்துக்கள்