Tuesday, June 24, 2008

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

இது பழைய நிகழ்வு, சென்ற வருடம் தீபாவளியின் போது நான்கு நாட்கள் விடுமுறை வந்தது, விடுமுறைக்கு முதல் நாள் எனது தந்தையின் அலைபேசி தொலைந்து போனது. நாங்களும் தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காமல் போகவே சரி வாடிக்கையாளர் சேவை மையத்தில் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தோம்.

எதற்கும் தொலைந்த நம்பர்க்கு அழைத்து பார்ப்போம் என்று அழைத்தால் யாரோ எடுத்தார்கள், எங்களுக்கோ மகிழ்ச்சி, அவரிடம் அலைபேசி எங்களுடையது, தவற விட்டுவிட்டோம், நீங்கள் எங்கு உள்ளீர்கள் வந்து வாங்கிகொள்கிறோம் என்று கூறினோம். அவரோ நான் வெளியூரில் உள்ளேன் தர முடியாது என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். பின்னர் எங்களது நெருங்கிய நண்பர் ஒருவரது பெண்ணிற்கு என் தந்தை நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியது வேறு யாரோ இருக்கவே அவர்கள் செய்ய என்னிடம் கேட்க அவர்களுக்கு அலைபேசி தொலைந்ததை சொன்னோம்.

இனிதான் ஆரம்பம் நம்ம பிஎஸ்என்எல் சேவை, வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்பு கொண்டு சொல்லலாம் என்று நினைத்தால் முதல் கேள்வி, வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளதா என்று, இருதால் என்ன நம்பர்? ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நம்பர் கண்டு பிடித்து அழைத்தோம், நம்பரை சரி பார்க்கவும் என்று வந்தது, பின்னர் பல முறை தொடர்பு கொண்டும் தங்கள் நம்பரை சரி பார்க்கவும் என்று மட்டுமே வந்தது, பின்னர் வேறு தொலைபேசியில் இருந்து அழைத்தால் அழைப்பு போயிற்று, யாரோ ஒரு பெண் எடுத்தார், தகவலை சொல்லி தந்தையின் நம்பரை துண்டிக்குமாறு வேண்டினோம். அவர் அதற்க்கு அசால்டாக இது தமிழ்நாடு சரக நம்பர் நீங்கள் அதற்க்கு தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி தொடர்பை துண்டித்தார் . அப்பா சென்னை தமிழ் நாட்டில் இல்லையா என்று மனதில் கேள்வி எழுந்ததுலாம் சொல்லனுமா??

கஷ்டப்பட்டு சேவை மைய நம்பரை கண்டுபிடித்தால் இப்படி சொல்றாங்க என்று நினைத்து மறுபடியும் அதே நம்பர்க்கு அழைக்க, அந்த பெண்ணுக்கு கோவம் வந்துவிட்டது, "இப்போது தான சொன்னேன் இங்க சொல்ல கூடாதுன்னு, ஏங்க மறுபடியும் பண்றீங்க" என்று கேட்டார், அம்மா எனக்கு தமிழ்நாடு சேவை நம்பர் தெரியாது நீங்க உதவி செஞ்சா நல்லார்க்கும் என்று கேட்டால் கடுகடுப்புடன் எப்படியோ ஒரு நம்பரை கூறினார்.. அவரிடம் ஏனிந்த நம்பர்க்கு வேறு தனியார் நம்பரில் இருந்து அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கேட்டோம் அதற்க்கு அவர் இது எங்கள் சேவைக்கு மட்டும் மற்றவர் தொடர்பு கொண்டால் அப்படிதான் அடிக்கடி நடக்கும் என்று சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் :)

வேறு நம்பரை தொடர்பு கொண்டு விசயத்தை சொன்னால் அவர் அப்படிங்களா, சரிங்க நீங்க பக்கத்துல இருக்க ஆபிஸ் போய் ஒரு எழுத்துபூர்வமான புகார் குடுங்க தொடர்பை துண்டித்து விடுவார்கள் என்றார். எல்லாம் என் நேரம் என்று நினைத்து அருகில் இருக்கும் ஆபிஸ் தேடினால் கிண்டில இருந்தது, அங்கு சென்றால் தீபாவளி அரசாங்க விடுமுறை நான்கு நாட்கள் என்று சொல்லி மூடி இருந்தனர், பின்னர் சென்னையை அலசியதில் அனைத்து அலுவலகமும் விடுமுறை, மறுபடியும் சேவைமையம் , இந்த முறை வேறு அதிகாரி மறுபடியும் முதலில் இருந்து விளக்கி என்ன பண்ண என்று கேட்டோம், திங்கட்கிழமை சென்று புகார் குடுங்க என்றார். அய்யா அதில் மீத தொகை 3200 ரூபாய் இருக்கு, மற்றும் எடுத்த நபர் அதை தவறான முறையில் உபயோகிக்கறார் அதனால் தான் சொல்கிறோம் என்று சொல்ல, அப்படிலாம் தொடர்பை துண்டிக்கும் வசதி இல்லை என்றார். என்ன மறுபடியும் ஷாக் ஆகிட்டேன் :)

ஏர்டெல் நம்பரை பல முறை இப்படி பண்ணின அனுபவம் எனக்கு இருந்தும் நம்ம பிஎஸ் என் எல் ல ஒன்னும் பண்ண முடியல. அடுத்து அவரிடம் "அய்யா அதுவரை அவர் தவறான முறையில் அதை உபயோகித்து அதற்கு பின்னால் எங்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன பண்ண" என்று கேட்டோம். அதற்க்கு நாங்கள் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார். சரி நாங்கள் அழைத்ததுக்கு பதிவு என் குடுங்க, பின்னால் நாங்கள் புகார் குடுக்கும்போது இதையும் சொல்லி விடுகிறோம் எங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கட்டும் என்றால் அதெல்லாம் முடியாது என்று தொடர்புதுண்டித்தது.

இதற்கிடையில் அலைபேசியில் சேமித்து வைத்த நம்பர்களில் பலருக்கு அழைப்பு போயிருந்தது , பலர் அலறி அடித்து எங்களை தொடர்புகொள்ள விஷயம் மிக சீரியஸ் ஆனது. மறுபடியும் சேவை மையம்,இந்த முறை வேறு நபர் எடுத்தார், விசயத்தை மறுபடியும் சொல்லி புரிய வைத்து உதவி கேட்க அவர் இங்க அந்த வசதி ஏதும் இல்லை, நீங்கள் எழுத்து பூர்வ புகார் குடுக்க வேண்டும் என்றார்,சரி நீங்கள் நாங்கள் அழைத்து சொன்னதற்கு ஆதாரமாக பதிவு எண்குடுங்க என்றால் அதற்கும் வழி இல்லை என்றார். பின்னர் அவரே ஒரு விஷயம் சொல்லி எங்களை ஓரளவிற்கு மகிழ்ச்சிபடுத்தினார். அது நீங்கள் பேசியது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆகையால் பயப்பட வேண்டாம் ஏதும் பிரச்சனை ஆகும் பட்சத்தில் இது உதவும் என்று கூறினார்.

அடுத்து என்ன செய்ய என்று யோசித்து நண்பர் ஒருவரின் உறவினர் ஒருத்தர் காவல் அதிகாரி, அவரிடம் உதவி கேட்டோம். அவரும் எண் தந்தை நம்பர்க்கு அழைக்கவே அவரிடமும் ஏகதாளம் பேசி உள்ளான் அலைபேசியை வைத்திருந்தவன். பின்னர் அவரே ஒரு யோசனை சொன்னார், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் குடுத்து நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள், திங்கள் கிழமை அலுவலகம் திறந்தவுடன் அவன் எங்குள்ளான் என்று கண்டு பிடித்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். அதன் படியே செய்தோம்.

திங்கட் கிழமை, புகார் குடுத்து ஆளை தேடினால் அதற்க்கு நிறைய நேரம் ஆகும் என்று செய்தி... சரி மீதம் உள்ள தொகை எவ்வளவு என்று பார்த்தால் 1200 ரூபாய். அதாவது மிஞ்சட்டும் என்று தொடர்பை துண்டித்து வேறு சிம் வாங்கினோம். இதற்க்கு இடையில் பிஎஸ்என்எல் இணைய சேவை மூலம் புகார் குடுக்கலாம் என்று முயற்சித்து பார்த்தேன், அதை எழுதினால் இன்னும் ஒரு பதிவுவரும்.

இவர்கள் சேவை இப்படி இருக்க இவர்கள் நாங்கள் முதல் இடத்தில் இருந்தூம் இப்போ ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று புலம்புகிறார்கள் .

ஏங்க நான் கேட்கறேன், இந்த நான்கு நாட்களில் இதே அலைபேசி வேறு எதாவது தேசவிரோத, சமூகவிரோத கூட்டத்திடம் சிக்கி இருந்து அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது??

அலைபேசி இணைப்பு குடுப்பதில் அக்கறை காட்டும் இவர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும். சமீபத்தில் வேறு ஒரு பிரச்சனைக்காக இணையத்தில் குடுத்த சேவை மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் LIC ஆபிஸ் என்று தொடர்பை துண்டித்தனர். ~!!! ஒண்ணுமே புரியல.

நண்பர்களே நீகள் பிஎஸ்என்எல் அலைபேசி வைத்திருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.

19 comments:

Anonymous said...

Welcome to the club!!!

Please read this....
http://masivakumar.blogspot.com/2007/12/blog-post_3933.html#comment-1092960417223115859

கூடுதுறை said...

மிகச்சரியாக கூறியுள்ளீர்கள்....

அரசு bsnl பங்குகளை விற்று விடலாம்...

அதன் ஊழியர்கள் இன்னும் அரசு பணியாளர்கள் கோதாவில் இருந்து வெளியே வரவில்லை...

bsnl அலைபேசி வைத்துருப்பவர்களுக்கு கோவில் கட்டிவைத்து கும்பிடவேண்டும்

DHANS said...
This comment has been removed by the author.
DHANS said...

//கோவில் கட்டி கும்பிட வேண்டும்//

உண்மை தான்,

வாடிக்கையாளர் சேவையில் அரசாங்க அலுவலகத்தில் எங்குமே இப்படித்தான்

அரசு பணியாளர் நம்மள கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்பில் அவர்கள் நடத்தும் ஆட்டம் மிக அதிகம்.

தனியாருக்கு விற்றால் மட்டும் இவர்கள் ஒழுங்கா வேலை பார்ப்பார்கள்?? கண்டிப்பாக கோடி பிடிப்பார்கள்.

கூடுதுறை said...

//தனியாருக்கு விற்றால் மட்டும் இவர்கள் ஒழுங்கா வேலை பார்ப்பார்கள்?? கண்டிப்பாக கோடி பிடிப்பார்கள். //

அதேல்லாம் சும்மா...உறுதியான அரசாங்கம் எதையும் செய்ய இயலும்..

ஏன் டெலிகாம் டிபார்ட்மெண்ட் bsnl company ஆக்ககூடாது என்று கூடத்தான் கொடி தூக்கினார்கள்...

அதைச் செய்யவில்லயா? உடனடியாக் public issue (IPO) கொண்டுவந்தாலே போதும்...

DHANS said...

மொத்தத்தில் தனியாரிடம் இருக்க வேண்டிய துறைகள் எல்லாம் அரசிடமும்,
அரசிடம் இருக்க வேண்டிய மருத்துவம், கல்வி போன்றவை தனியாரிடமும் இருக்கின்றன.

உறுதியான அரசு எதையும் செய்ய இயலும், அதற்க்கு உறுதியான அரசு வேணும் முதல்ல :) இங்கதான் எப்படா கவிழும் என்று இருகிறதே.

BSNL கம்பெனி ஆகிய பிறகு சேவை சிறிது மேம்பட்டது அனால் மற்றவர்கள் இவர்களை முந்திக்கொண்டு எங்கோ சென்று விட்டனர்.

IPO கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் கண்டிப்பாக இல்லாவிட்டால் நஷ்டத்தில் இயங்கும் கம்பெனி என்று மூடிவிடுவார்கள் சீக்கிரம்.

மங்களூர் சிவா said...

நல்லா சொல்லிருக்கீங்க அவங்க மெத்தன நடவடிக்கைகளை.

DHANS said...

நன்றி சிவா,

வடுவூர் குமார் said...

ஹூம்,படிக்க ஜாலியாக இருந்தாலும் உங்கப்பாட்டை நினைத்தால் கஷ்டமாக இருக்கு.
:-((

DHANS said...

ரொம்ப கஷ்டம் அது அன்னிக்கு காலைல இருந்து மதியம் 3 மணி வரை சாவடிசுடாங்க.
எழுதறப்ப எளிதா எழுதிட்டேன், அனா வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு எப்படியும் இருபது அலைப்பாது பண்ணிருப்பேன் இவ்வொரு முறையும் வேற வேற ஆள் எடுத்து, அவர்க்கு முதல்ல இருந்து சொல்லி, அய்யோ இப்ப நினைச்சாலும் கொடுமை அது

puduvaisiva said...

Whatt a too late issue you write this becoz next Deepavali come soon yaaa

plz write everything in time

I have difference exp in BSNL office they are now introduced one wireless net card so I plane use my lab top the new card that name
1.EVDO CARD
2.NIC CARD
the speed is differece 2 one is 150 to 200kbps
and Ist one is give 200 to 256kbps

but both card not give the speed
so I return the 2nd one card last month still they are ready my refund amont.

what a super service BSNL :-(((





puduvai siva.

Anonymous said...

I'm planning to surrender my DSL/land-line connection.
I couldn't find the address of the exchange in the BSNL website.

While googling I found this link.

http://www.mouthshut.com/review/BSNL-77317-1.html

Now the thought of surrendering the phone itself give me jitters.

DHANS said...

சிவா,

தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும், நான் பதிவுலகத்துக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகின்றன, அதனால் தான் இந்த தாமதமான பதிவு.

DHANS said...

சரண்டர் பண்ண மட்டுமல்ல, எதுக்குமே அவர்களிடம் தொல்லையான முறைகள். விதிகள் ஏதும் தொல்லை இல்லை அனால் அவர்கள் கேட்கும் தகவல்களை சான்றுடன் தர நாம் மிக மெனக்கெட வேண்டி உள்ளது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. ரொம்ப பாவம் தான்.
ஆனாலும் நீங்க .. ரொம்ப கற்பனை செய்யறீங்க.. பொண்ணுப்பக்கத்துல விள்க்கு இருக்கு அது பட்டு தீயாகி அவ இறந்து ன்னு கற்பனையை நாகேஷ் ஏத்திட்டே போற மாதிரி போனை எடுத்துட்டு போனவன் என்னென்ன பண்ணலாம்ன்னு பெரிய லிஸ்ட் போடுவீங்க போல..

DHANS said...

இது கற்பனை இல்லைங்க கயல்விழி உண்மைதான், அவன் அந்த லிஸ்ட்ல இருந்த பேர்ல பொண்ணுங்க பேரா பாத்து கால் பண்ணினான், காவல் அதிகாரி பேசினப்புறம் தான் நிறுத்தினான்.

மற்றவை எல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளது, கற்பனையாக இருக்கும் வரை நல்லதே இல்லையெனில் தொலைத்த அப்பாவிகளின் நிலையை காவல் அதிகாரிகள் விசாரிக்கும் முறையை பற்றி யோசித்து பாருங்கள். (சமீபத்தில தசாவதாரம் பாதுருபீங்க அதிலபலரம் நாயுடு எப்படி விசாரிப்பார் பாருங்க)

Anonymous said...

BSNL சங்கமம் என்ற சேவை சிறப்பக இருக்கிறது. அதை நீங்கள் பயன் படுத்தியிருக்கலாம். விடுமுறை நாட்களிலும் இச்சேவை இயங்குகிறது.

DHANS said...

இப்போது தான் சங்கமம்செவையை பற்றி கேள்விப்படுகிறேன். இப்படிஒரு சேவை இருக்கின்றது என்பதே விளம்பரபடுத்தப்படாமல் இருக்கிறது.
நான் இணையத்தில் தேடும்போது (இப்பதாங்க) 1500 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் வாடிக்கையாளர் சேவை கிடைக்குமாம்.

இருந்தாலும் எனக்கும் வாடிக்கையாளர் சேவை மையம் எண் கிடைத்தது. சேவையும் கிடைத்தது ஆனால் எனது தேவை நிறைவேற்றப்படவில்லை.

எனது தேவை தொடர்பை துண்டித்தல் அனால் அது எழுத்துபூர்வமான கடிதம் தந்தால் மட்டுமே முடியும்.

நான்கு நாட்கள் விடுமுறை, எழுத்துபூர்வ கடித்ததை வாங்க ஆள் இல்லை. (நான் தேடியவரை, எங்கோ ஒரு அலுவலகம் விடுமுறையில் இயங்கி கொண்டு இருக்கலாம் அனால் அந்த தகவல் குட சேவை மையம் தர முடியவில்லை )

நன்றி உங்கள் தகவலுக்கு.

உண்மைத்தமிழன் said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ஸார்..!