Wednesday, June 11, 2008

ஜாதகம் நம்பலாமா??

எனக்கு மனதுக்குள் மிகப்பெரிய கேள்வி, ஜாதகத்தை நம்பலாமா? சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த ஜாதகம், ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, வயசு அதிகமாக அதிகமாக கோவிலுக்கு செல்வதும் குறைந்தது, பரீட்சை காலங்களில் எலோரும் போல கோவிலுக்கு செல்வது என இருந்தேன்.

இப்பொது கோவிலுக்கு செல்வதும் குறைந்து விட்டது, சென்னை வந்து 2 முறை பெசென்ட் நகரில் உள்ள புதிதாக கட்டப்பட்ட முருகன் கோவிலுக்கு மட்டுமே சென்றுள்ளேன். எனக்கோ கூட்டம் என்றால் ஒத்துக்காது அப்புறம் எங்க கோவிலுக்கு செல்வது.

சரி ஜாதகத்துக்கு வருவோம், நான் ஒரு எட்டாவது படித்துக்கொண்டு இருப்பேன் அப்போ எல்லாம் வீட்டில் அம்மா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்று விடுவார்கள். ஒரு நாள் எங்க மாமா வீட்டிற்க்கு ஒரு ஆள் ஜாதகம் பார்க்க வந்தார், பின்னர் அவரை எங்க வீட்டிற்க்கு கூட்டி வந்து பார்க்க சொன்னார்கள். அவர் சொன்னதிலிருந்து முதலில் அண்ணன் ஜாதகம், அண்ணன் சுமாராக படிப்பார் என்று சொன்னார், எங்களுக்கு அதிர்ச்சி என்னடா மருத்துவம் படிப்பவரை சுமாராக படிப்பார் என்று சொல்கிறாரே என்று, இருந்தாலும் அதில் மற்றவர்களை விட எதோ சுமாராக படிப்பார் போல என்று சமாதான படுத்திகொண்டோம். பின்னர் பையன் இரும்பு சம்பந்தப்பட்ட படிப்பு மற்றும் தொழில் தான் இருப்பார் என்றார். எங்க அப்பா குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் பையன் காதல் திருமணம் செய்ய போகிறான் என்று சொன்னார். அதையும் குறித்து வைத்துக்கொண்டோம்.

பின்னர் அக்கா ஜாதகம் (அக்காவும் விடுமுறையில் வந்திருந்தார்) ஜாதகத்தை பார்த்த உடன் இந்த பெண்ணிற்கு படிப்பு வராது, 12 வரை மட்டுமே படிக்க வாய்ப்பு உள்ளது என்று அடுத்த குண்டு போட்டார், பின்ன அவரும் மருத்துவம் படிக்கும்போது அப்படி சொன்னா?? உண்மையில் எங்க வீட்டில் அவர்தான் ரொம்ப நல்லா படிப்பார். அவரிடம் என்னங்க சும்மா மாத்தி மாத்தி சொல்றீங்க என்று சொன்னா அவர் அதற்கு பையன் மருத்துவம் படித்தால் ஊசி இரும்பு தான இரும்பு சம்பந்தமான தொழில் தானனு முடக்கினார், காதல் கல்யாண மேட்டர் பொறுத்து இருந்து பார்த்தாயிற்று, எனக்கு தெரிந்து என் அண்ணன் கல்லூரியில் மௌனம் பேசியதே சூரியா மாதிரி இருந்தார், பொண்ணுங்கன்னா ஒத்துக்காது. அக்கா படிப்புக்கு பதில் பேசவே இல்ல இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பலாமா?

இன்னொரு விஷயம் உள்ளது, என் ஜாதகம் தப்பா எழுதி இருக்காங்க என்று சொல்லி மறுபடியும் ஒருத்தர் எழுதி குடுத்தார், அஅதில் அடுத்து வரும் 80 வருடங்களுக்கு சிறு சிறு குறிப்பாக குறிப்பு எழுதி உள்ளார். நான் எதையும் நம்பவில்லை அவர் குறிப்புப்படி 2002-2003 படிப்பில் மந்தமா இருக்கும் என்றார், நான் இரண்டாம் வருடம் படித்துகொண்டிருந்தேன், 5 பேப்பரில் கப்பு.
2003 இறுதியில் காவல்நிலையம் செல்வேன் என்று எழுதி இருந்தார், அதன்படி செல்ல வேண்டியதாயிற்று. அதிலிருந்து சிறிது நம்பிக்கை ஏற்ப்பட்டது.

இப்ப சொல்லுங்க ஜாதகத்தை நம்பறதா வேண்டாமா?

அனாலும் எப்பலம் மனசு கஷ்டப்படுகிறதோ அப்போ ஜாதகத்தை நம்பலாமா என்று சஞ்சலம் மனதில், அம்மா வழக்கம் போல ஜாதகம் பார்த்துவிட்டு வந்து டைம் சரி இல்ல பார்த்து இருந்துக்கோ என்பார்கள், நானும் சரி என்று விட்டு உங்களுக்காக பாத்துக்கறேன் ஆனா ஜாதகம்லாம் நீங்களே பாத்துக்கோங்க எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வேன்.

டைம் நல்லா இருக்கிறது என்று சொன்னால் அதே வரிகளை பொய்யாக சொல்லி வைப்பேன். நல்லது நடக்கும் என்றால் நம்பலாம் தான?

கடவுள் நம்பிக்கையுமுண்டு அனாலும் கோவிலுக்கு செல்ல பிடிக்கவில்லை, நான் கடவுளை வணங்கும் பல பேரை பார்த்து இருக்கிறேன் எல்லோரும் தங்களுக்க்காகவும் குடும்பதிர்க்காகவும் வேண்டுகின்றனர், எவரும் அனைவரும் நல்லா இருக்கணும் என்றோ, தனது நாடு நல்லா இருக்கணும் என்றோ வேண்டுவது இல்லை, இதுவே எனது கோவில் வெறுப்பை குடுத்தது. என்ன இருந்தாலும் நானும் சராசரி மனிதன் தானே, நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல அதான் நல்லதுன்னா நம்பலாம், கெட்டதுன்னா நம்ப தேவை இல்லைனு முடிவெடுத்துள்ளேன் இது சரியா?

5 comments:

கோவி.கண்ணன் said...

நம்புவதால் என்ன சாதகம்,
நம்பாததால் என்ன பாதகம் ?

என்று யோசித்துப் பார்த்தீர்களா ?

நம்புகிறவர்கள் காசு செலவு பண்ணி பரிகாரம் பண்ணுவாங்க, நம்பாதவர்களுக்கு காசு செலவு இருக்காது.

:)

DHANS said...

நம்புவதால் சாதகம் ஏதும் இருப்பதாக தெரிவில்லை எனக்கு
நம்பாததாலும் பாதகம் இருப்பதாக தெரியவில்லை,

பரிகாரம் பண்ண செலவு செய்யும் காசை யாரவது இல்லாதவர்க்கு குடுக்கலாம் :)

தருமி said...

இதையும் வாசித்துப் பார்த்து ஏதாவது பரிகாரம் கிடைக்குதான்னு பாருங்கள்.

அதோடு தொடர்புள்ள என் எல்லா பதிவுகளையும் வாசிச்சா பத்து மண்டலப் பலனும் ஒரு யோகம் வளர்த்த பலனும் கிடைக்கும்.

ததாஸ்து ..

Anonymous said...

Wat to comment on this!i'm a believer of God...no faith in all such things....life is a gratuituos gift of supreme god...the fate is not decided by any human being in the name of jathagam....so its a total waste..

கூடுதுறை said...

உங்களுது அனைத்துக்கேள்விகளுக்கு இப்பதிவில் உள்ள லிங்க்களில் பதில் உள்ளது

http://scssundar.blogspot.com/2008/06/blog-post_28.html

படித்து தெரிந்து கொள்ளுங்கள்