எனது முதல் சென்னை பயணம்
உண்மைய சொல்லனும்னா இதன் என்னோட முதல் நெடுந்தூர பயணம். மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தேன், எனது அக்கா பனிரெண்டாம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு எழுத சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பள்ளி விடுமுறை வேறு, அப்பாவிற்கோ அவரது சலுகைகளான வருடத்திற்கு 4500 கிலோமீட்டர் குடும்ப இலவச பயணத்திட்டத்தை ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும் என்று ஆசை. எப்படியோ என்னையும் சென்னை கூடிப்போகிறேன் என்று சொல்லிவிட்டனர்.
அது என்ன கிழமை என்று தெரியவில்லை கரூரில் இருந்து சென்னைக்கு பேருந்துப்பயணம். அரசுப்பேருந்து, நீண்டதூரம் செல்ல வேண்டும், என் அப்பா விடுமுறையில் எங்களுடன் பயணம் மேற்கொண்டார், அவர் ஓட்டுனர் இருக்கையை விட்டு பயணியர் இருக்கையில் பயணிப்பதை அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். எனக்கு ஜன்னலோர இருக்கை.
அப்போதெல்லாம் பேருந்துக்கு திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்று பெயர், ஒவ்வொரு இருக்கைக்கு பின்னால் ஒரு திருக்குறள் எழுதப்பட்ட பட்டை ஒட்டப்பட்டிருக்கும். இப்போ அதை எல்லாம் மறந்து விட்டிருக்கின்றனர். ஒரே ஒரு குறள் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் எழுதப்பட்டுள்ளது சில பேருந்துகளில். (காலம் மாறிபோச்சு போல)
விடிய விடிய தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன், பேருந்து எத்தனை லாரிகளை முந்திக்கொண்டு சென்றது, எத்தனை பேருந்துகளை முந்திச்சென்றது என்று எண்ணிக்கொண்டு வந்தேன். இடையில் நிறுத்தி சாப்பிட சென்றபோது அங்க வந்த பேருந்துகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். அப்பாவின் நண்பர் பிரபு அண்ணா வந்து வீட்டுக்கு கூட்டிச்சென்றார்.
அன்று மாலை வரை ஓய்வு, எனக்கு சென்னையை பார்த்தாலே ஒரு மலைப்பு அப்போது, அன்று மாலை வழக்கம் போல அண்ணா சமாதி, M.G.R சமாதி எல்லாம் குட்டிச்சென்ற்ரார்கள், பின்னர் கடற்கரை (என்னடா எல்லாமே அங்கதான இருக்குன்னு சொல்லக்கூடாது, எனக்கு அப்போ அதெலாம் தெரியாது) முதல் முதலாக கடலைப்பார்த்தேன், நெஜமா ரொம்ப பயமா இருந்துச்சு, பெரிய பெரிய அலை, அப்பா கையா பிடிச்சுகிட்டு தண்ணில ஆடுனேன். கடற்கரைல சுண்டல் வாங்கித்தந்தாங்க, அதெல்லாம் எனக்குப்புதுசு, அதுவரை வெளி திண்பண்டங்களை (பள்ளிக்கு வெளியிலோ, இல்லை வேறு எங்கும் சாலையோரமாக உள்ள கடைகளிலோ வாங்கி திங்க அனுமதி இல்லை எனக்கு) சாப்பிட்டது இல்லாததால் ஆசையாய் நிறையா சாப்பிட்டேன்.
அக்காவிற்கு அடுத்த நாள் நுழைவுத்தேர்வு, ஏதோ ஒரு கல்லூரியில் எழுதினார்கள், எழுதி முடித்து விட்டு வந்த உடனே வீட்டுக்கு வந்தாயிற்று. அன்று எங்கும் கூட்டிச்செல்லவில்லை. எனக்கும் பெரிதாக ஏதும் தோணவில்லை வீட்டிலேயே விளையாட, தொலைக்காட்சி பார்க்கவே நேரமில்லை அப்ப எங்க வெளிய போறது. அடுத்த நாள் V.G.P கோல்டன் பீச் சென்றோம், அந்த அசையா மனிதன், அங்குள்ள ராட்டினங்கள், சிறு ரயில் வண்டிகள் எல்லாமே புதுசு எனக்கு. மாலை வரை அங்கு சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தோம்.
அடுத்த நாள் இரவு கிளம்பி சென்னையில் இருந்து கரூர் வந்து சேரத்திட்டம். மறுபடியும் பேருந்துப்பயணம், நீண்ட பயணம், மறுபடியும் அதே லாரி, பேருந்து எண்ணிக்கை, வேடிக்கை என்று வந்து சேர்ந்தேன், இருந்தாலும் கரூர் வந்து சேர சேர மனதில் ஒரு சோகம், அவ்ளோதானா பேருந்துப்பயணம் என்று மனது எண்ணியது. இப்படித்தாங்க என் முதல் சென்னைப்பயணம் இருந்துச்சு. இன்றுவரை எனக்கு எங்கு செல்வதானாலும் சாலை வழியே செல்லவே இன்றும் மனதுக்குப்பிடிக்கிறது.
அதுக்கப்புறம் பள்ளியில் வகுப்பு தோழர்களிடம் சென்னை சென்றேன், அங்கு அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று ஒரு வாரம் முழுக்க சொல்லித்திரிந்தேன்.
இந்த ஒரு பயணம்தான் எனக்கு நான் என்ன குறிக்கோளில் படிக்கப்போகிறேன் என்பதை எடுத்துக்காட்டியது. ஆம் அக்கா மருத்துவக்கல்லுரியில் சேரப்போகிறார், நாமும் அது போலத்தான் என்று அப்போதே முடிவு எடுத்தாயிற்று. (நான் இல்லீங்க அப்பாதங்க)
சென்னையில் இருந்த அத்தனை நாளிலும் எங்களுக்கு விதவிதமாக சாப்பாடு போட்ட பிரபு அண்ணா தம்பதியர் மற்றும் அவர்கள் வீடு. இன்னைக்கும் அவர் வீடுக்குச்செல்வது என்றால் அவர்களின் உபசரிப்பும் சாப்பாடும் முதலில் மனதில் வரும்.
இலவச பயணத்திட்டம் பற்றி எழுதினேன் அல்லவா, நான் கல்லூரி வந்தவுடன் அதுவரை உபயோகிக்காமல் விட்ட அந்த திட்டத்தை நான் மட்டுமே காலி செய்தேன் நான்கு வருடமும்.
அந்த திருக்குறள் எழுதப்பட்ட பட்டையை நான் கோடு போட பயன்படுத்தி இருக்கிறேன். அப்பா ஒரு பத்து இருபது குறள் எடுத்து கொண்டு வந்து தந்தார்கள். தினமும் ஒரு குறளாக பயன்படுத்துவேன். வகுப்பு ஆசிரியர்க்கு அதனாலேயே என்மீது தனி பிரியம்.(வித்தியாசமா scale பயன்படுத்தறேன் என்று, எங்க வாங்கினது இது என்று கேட்டு வர வேறு சொல்லி இருகாங்க ஒரு தடவ என்கிட்ட).
அப்போதெல்லாம் கேமரா இல்லாததால் இந்த பயணங்களில் போட்டோ எடுக்கவே இல்லை :(
சென்னையில் எங்கு சென்றாலும் பல்லவன் பேருந்துகளையே உபயோகப்படுத்தினோம். அப்பா ஊழியர் என்பதால் உடன் வந்த குடும்பத்தினர்க்கு பயணசீட்டு வாங்கும்போது அனைத்து நடத்துனரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்தனர் அப்போது.
10 comments:
நல்ல ஒரு பயணக்கட்டுரை....
குறள் என்பதை சில இடங்களில் சரியாக பயன்படுத்தியும் சில இடங்களில் தவறாக குரல் என்றும் எழுதி இருக்கீங்களே..சரிபார்க்கவும்..
க். ச் ட் பிழைகள் குறைக்க முயற்சிக்கவும்..
//கூடுதுறை //
மிக நன்றி
//குறள் என்பதை சில இடங்களில் சரியாக பயன்படுத்தியும் சில இடங்களில் தவறாக குரல் என்றும் எழுதி இருக்கீங்களே//
குறள் எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டுள்ளது. அப்போது என் டேமேஜர் அவசர வேலை குடுத்தால் எழுத்துப்பிழைகளை சரிபார்க்க சிறிது அவகாசமே இருந்தது.
//. ச் ட் பிழைகள் குறைக்க முயற்சிக்கவும்//
க். ச் ட் பிழைகள் ஓரளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளது, அடுத்தடுத்த இடுகைகளில் பிழைகளை குறைக்க முயற்ச்சிக்கிறேன்.
//அப்பாவிற்கோ அவரது சலுகைகளான வருடத்திற்கு 4500 கிலோமீட்டர் குடும்ப இலவச பயணத்திட்டத்தை ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும் என்று ஆசை//
:-))
//அவர் ஓட்டுனர் இருக்கையை விட்டு பயணியர் இருக்கையில் பயணிப்பதை அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்//
மனசை தொட்டுட்டீங்க
//ஒரு திருக்குறள் எழுதப்பட்ட பட்டை ஒட்டப்பட்டிருக்கும். இப்போ அதை எல்லாம் மறந்து விட்டிருக்கின்றனர்//
இப்ப எல்லாம் சனி ஞாயிறு னு கலைஞர் குறள் தான் :-)))
//விடிய விடிய தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன், பேருந்து எத்தனை லாரிகளை முந்திக்கொண்டு சென்றது, எத்தனை பேருந்துகளை முந்திச்சென்றது என்று எண்ணிக்கொண்டு வந்தேன்//
பழைய நினைவை கொண்டு வந்துட்டீங்க
//அப்பா ஊழியர் என்பதால் உடன் வந்த குடும்பத்தினர்க்கு பயணசீட்டு வாங்கும்போது அனைத்து நடத்துனரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்தனர் அப்போது. //
இப்போதும் அனுமதிப்பார்கள் என்றே நினைக்கிறேன்..
நல்ல இருந்துதுங்க உங்க கட்டுரை
// மனசை தொட்டுட்டீங்க //
உண்மையா அத ஆச்சரியமாத்தான் பார்த்தேன்.
//இப்ப எல்லாம் சனி ஞாயிறு னு கலைஞர் குறள் தான் :-)))//
என்ன செய்ய காலம் மாறிப்போச்சு, திருவள்ளுவர் சிலையாய் நிற்கின்றார் அது போதும் என்று நினைத்து விட்டார்கள் போல.
//பழைய நினைவை கொண்டு வந்துட்டீங்க //
எனக்கு இப்பயுமே அப்படித்தாங்க தூங்கவே மாட்டேன் :))
//இப்போதும் அனுமதிப்பார்கள் என்றே நினைக்கிறேன்//
இப்போ ரொம்பநாளா பணியில் இருப்பவர் மட்டுமே அனுமதிப்பதாக கேள்வி, புதிதாக வந்தவர்கள் அனுபதிப்பது இல்லை
//நல்ல இருந்துதுங்க உங்க கட்டுரை //
மிக நன்றி :))
//இருந்தாலும் கரூர் வந்து சேர சேர மனதில் ஒரு சோகம்
நல்லா எழுதியிருக்கீங்க.
நானும் இந்த மாதிரி ஃபீல் பண்ணியிருக்கேன். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போய் ஆறு, யானை, புது ட்ரெஸ், கோயில் பிரசாதம்னு ரெண்டு நாள் ஆட்டம் போட்டுட்டு கோயம்புத்தூர்க்கு வந்தாலே சோகமாக இருக்கும். இப்பதான் கோயம்புத்தூரோட அருமை புரியுது.
//நல்லா எழுதியிருக்கீங்க//
மிக நன்றி :))
//நானும் இந்த மாதிரி ஃபீல் பண்ணியிருக்கேன்//
எப்போதும் எனக்கும் அப்படித்தான், நேத்து உட்கார்ந்து பீல் பணினப்புரம் இன்னிக்கு எழுதின பதிவு இது :))
Unga Mudhal Chennai payanam padikaiyil, romba interesting and touching a irundhuchu......
U made me to go back to my childhood too.....
Athu mattum all, ungal katturaya padikumbothu, padipavargalaiyum kooda kootichendrathu maadhiri oru feeling.
Really nice.....
//Unga Mudhal Chennai payanam padikaiyil, romba interesting and touching a irundhuchu......
U made me to go back to my childhood too.....//
மிக நன்றி.
Post a Comment